பிரபலமான இடுகைகள்

புதன், 16 மார்ச், 2011

யார் பலசாலி ?

ஒரு ஊருல மூணு எலி இருந்துச்சாம். மூணுக்கும் யார் பலசாலின்னு வாக்குவாதம் நடந்தது.

முதல் எலி சொல்லுச்சாம் " அங்க பாருங்க அந்த பெரிய  தேக்கு மரக்கட்டையை என் பல்லாலேயே கடிச்சி, தூள் தூள் ஆக்கிருக்கேன்.  என் பலம் என்னா என்று இப்பவாவது தெரிஞ்சிக்குங்க"

உடனே இரண்டாவது எலி " இது என்னா பிரமாதம். நான் ஒரு பெரிய இரும்பு பலகையையே, பல்லால கடிச்சி தூள் தூள் ஆக்கிருக்கேன்.' அப்படின்னு சொல்லுச்சாம்.

மூணாவது எலி எதுவுமே பேசலை. உடனே மத்த இரண்டு எலியும் " என்னா பேசாம இருக்க ? நீ எதாவது சாதனை பண்ணி பலத்த காட்டி இருந்த சொல்லு " அப்படின்னு கேட்டுதாம்.

மூணாவது எலியும் சரின்னு " அங்க ஒரு பூனை இருக்கே அதை பாருங்க " அப்படின்னு சொல்லுச்சாம் "
மத்த இரண்டு எலியும் " பார்த்தோம். அதுக்கு என்னா இப்போ ? அப்படின்னு கேட்டுசிங்கலாம்.

சரியா பாருங்க. அந்த பூனை கர்ப்பமா இருக்கு அப்படின்னு மூணாவது பூனை சொல்லுச்சாம்

ஆமாம் அதுக்கு என்னா இப்போ ? மத்த இரண்டு பூனையும் கடுப்பாகி இப்படி கேட்டுதாம்.

அந்த கர்ப்பத்திற்கு காரணமே நான் தான் என்று மூணாவது எலி சொல்லுச்சாம் 

குமுதத்தில் படித்தது      

2 கருத்துகள்:

jaisankar jaganathan சொன்னது…

கதைய ஒரு தடவை படிச்சு பாருங்க

//அந்த கர்ப்பத்திற்கு காரணமே நான் தான் என்று மூணாவது பூனை சொல்லுச்சாம்
//

இது எலியா இல்லை பூனையா?

Layman சொன்னது…

அன்பர் ஜெய்சங்கர் சொன்ன திருத்தம் சரி செய்யப்பட்டது

கருத்துரையிடுக