பிரபலமான இடுகைகள்

வியாழன், 10 மார்ச், 2011

தேர்தல் வருகிறது. இப்படி எல்லாம் கூட வாக்குறுதிகள் தரலாம்

தேர்தல் வருகிறது. இப்படி எல்லாம் கூட வாக்குறுதிகள் தரலாம் 
  1. விட்டுக்கு வீடு இலவச செல் போன் ( கை குழந்தை முதல் எண்பது வயது முதிவர் வரை. காது கேட்கிறது என்று மருத்துவ சான்றிதழ் அவசியம்)
  2. ஞாயிற்று கிழமை வீடு தோறும் ஒரு கிலோ இலவச மட்டன், சிக்கன் அல்லது கடல் உணவு டோர் டெலிவரி செய்யப்படும். NV சாபிடாதவர்களுக்கு அந்த வாரத்திற்கு தேவையான காய்கறிகள் வழங்கப்படும்.
  3. ரேஷன் பொருள் வீடு தேடி வரும்
  4. கல்லூரி மாணவர்களுக்கு பாகெட் மணி மாதம் ருபாய் 1000௦௦௦  / வழங்கப்படும். சிகரட்டே மது போன்றவை வழங்கபடமாட்டது . இதை தவிர செல் போன் Top Up   ருபாய் 300௦௦ / செய்துதரப்படும். கல்லூரி மாணவர் அடையாள அட்டை உள்ளவர்களுக்கு மட்டும் இந்த சலுகை    
  5. அரசு அலுவலகத்தில் தினமும் சீரியல் பார்க்க மூன்று மணி நேரம் ஒதுக்கப்படும். அலுவலகத்தில் பணி புரியும் பெண்கள் எதனை பயன்படுத்தி கொள்ளலாம். இதற்காக இலவச LCD 50௦" தொலைக்காட்சி பெட்டி home theatre வசதியுடன் தனி அறை அமைத்து தரபடும் 
  6. அரசு அலுவலர்கள் லஞ்சம் வாங்கலாம் என்று சட்டம் கொண்டுவரப்படும். ஆனால் பொது மக்கள் அதிகம் லஞ்சம் கொடுத்து ஏமாறாத வகையில் லஞ்ச தொகை வெளிப்படியாக ஒவ்ஒரு வேலைக்கும் அலுவலக வாசலில் எழுதிவைக்க படும்.
  7. வேலை கிடைக்காமல் சும்மா இருக்கும் பட்டதாரிகளுக்கு மாதம் ருபாய் ஐந்தாயிரம் வழங்கப்படும்.
  8. தினமும் குடிக்கும் குடிமக்களுக்கு இலவச இருதய, நுரையீரல் ஆபரேஷன் செய்ய படும். ஆனால் அவர் தினமும் குடித்ததாக பதிவு அரசு மது கடையில் இருக்க வேண்டும்.
  9. காதலி கிடைக்காத காதலர்களுக்கு, காதலன் கிடைக்காத காதலார்களுக்கு காதலன் காதலி ஏற்பாடு செய்யப்படும். இதற்காக பதினெட்டு வயதிற்கு மேல் உள்ள திருமணம் ஆகாதவர்கள் பதிவு செய்ய வேண்டும். இதில் அரசு தேர்ந்து எடுத்து கொடுபவரை நீங்கள் மறுத்தால், பிறகு மேலும் இரண்டு ஆண்டுகள் காத்து இருக்க வேண்டும்.
  10. கள்ள காதலர் தினம் அறிவிக்கப்படும். அதனை கள்ள காதலர்கள் அனைவரும் கொண்டாடலாம்.
  11.  பள்ளிகளில் லஞ்சம் ஊழல் செய்வது எப்படி என்பதை பற்றி புதிய பாடம் நடத்தப்படும். இதன் syllabus ஐ Spectrum ராஜா மற்றும் நீரா ராதியா இணைந்து தயாரிப்பர்.
  12. தொப்பை உள்ள அனைவரும் காவலர் வேளைக்கு தேர்ந்து எடுக்க படுவர். வேறு இந்த வித தகுதியும் தேவையில்லை.
  13. பொது மக்கள் யாரும் வரும் ஏப்ரல் மாதம் முதல் மின்சார கட்டணம் கட்ட தேவையில்லை. ஏன் என்று உங்கள்ளுக்கே தெரியும்.
  14. உங்கள் விட்டு காது குத்து, திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு Flex Banner இலவசமாக அரசே வைத்து தரும்.       
  15. நீங்கள் வீட்டில் வேலை எதுவும் செய்யாமல் சும்மா இருந்தால் ஆண்டு இறுதியில் அரசே உங்களுக்கு பாராட்டு விழா நடத்தும்
  16. Spectrum ராஜாவின் பிறந்த நாள் உலக ஊழல் தினமாக அறிவிக்க பட்டு அதிக ஊழல் செய்த நபர்கள் கௌரவிக்க படுவார்கள்  
  17. நீங்கள் எந்த ரூபத்தில் கடன் வாங்கி இருந்தாலும் தள்ளுபடி கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும். நீங்கள் நண்பரிடம் கடன் வாங்கி இருந்தால் கூட திருப்பி தர வேண்டாம். அரசு தள்ளுபடி செய்துவிட்டது என்று கூறுங்கள் 
என்ன நான் தேருதலில் நின்றால் ஒட்டு எனக்குதானே ?    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக