பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 8 மார்ச், 2011

ஜாதிகள் இருக்குதடி பாப்பா -1

நான் கல்லூரியில் விவசாய பட்ட படிப்பு படிக்கும் பொழுது, தாய் தந்தையை தன் சிறு வயதிலேயே இழந்த ராகுல் ( பெயர் மாற்றபட்டுள்ளது) என்ற மாணவனும் உடன் படித்தான். தன் தாய் மாமன் தான் தன்னை வளர்த்து ஆளாக்கி படிக்க வைப்பதாகவும், அதற்காக தான் மிகவும் நன்றி கடன் பட்டிருபதகவும் அடிக்கடி கூறுவான்.

இந்த நிலையில் விவசாய பட்ட படிப்பின் ஒரு அங்கமாக, மாணவர்கள் அனைவரும், ஒரு மாத காலம் ஏதேனும் ஒரு கிராமத்தில் தங்கி, அவர்களின் சாகுபடி முறைகள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை பற்றி ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை கல்லூரிக்கு அளிக்க வேண்டும்.

எனக்கும் நடராஜன் என்ற என் நண்பனுக்கும் பாண்டிசேரி அருகில் உள்ள ஒரு கிராமத்திற்கு செல்ல வேண்டும் என கல்லூரியில் தகவல் தெரிவிக்க பட்டது. கிராமத்தின் பெயரை கேட்டவுடன் ராகுல் எங்களிடம் வந்து அது தான் தன் சொந்த கிராமம் எனவும், முன்பு அவர்களுக்கு அங்கே விவசாய நிலம் இருந்ததாகவும் தெரிவித்தான். ராகுலுக்கு வேறு கிராமம் ஒதுக்க பட்டு இருந்தது.

நானும் என் நண்பன் நடராஜனும் அந்த கிராமத்தில் இருந்த பொழுது வீடு வீடாக சென்று சில அடிப்படை தகவல்களை சேகரித்தோம். குடும்ப அங்கத்தினர், அவர்கள் வைத்திருக்கும் நில பரப்பு, சாகுபடி செய்யும் பயிர்கள், வருட வருமானம் போன்ற தகவல்களை எடுத்தோம்.

அவ்வாறு ஒரு வீட்டிற்கு சென்ற பொழுது ஒரு பெண்மணி கதவை திறந்தார். நாங்கள் வந்த நோக்கத்தை அவரிடம் தெரிவித்தோம். காரைகாலில் உள்ள விவசாய கல்லூரியில் படிப்பதாக நாங்கள் கூறிய உடனேயே அவர் கண்கள் கலங்கியது. நாங்கள் எதுவும் கேட்காமலேயே அவர் தன் மகன் காரைகாலில் உள்ள ஏதோ ஒரு கல்லூரியில் தான் படிபதாகவும், அவனை பார்த்து பல வருடங்கள் ஆவதாகவும் கூறினார்.

எனக்கு அந்த பெண்மணியை எங்கோ பார்திருபதாக திடீர் என தோன்றியது. குறிப்பாக அவரது கண்கள் நன்கு பரிசியமனதாக தோன்றியது. எனக்கு ராகுலின் கண்கள் நினைவிற்கு வந்தது. ராகுல் நல்ல கருப்பு. இந்த பெண்மணியோ நல்ல நிறம். ஆனால் முக ஒற்றுமை அப்படியே இருந்தது.
நான் அந்த பெண்மணியிடம் உங்கள் மகனின் பெயர் ராகுல் லா என்றேன்.

அந்த பெண்மணியின் முகத்தில் மகிழ்ச்சி. அவனை உங்களுக்கு தெரியுமா, அவன் எப்படி இருக்கிறான் என்றார். நான் பின்பு அவன் எங்களுடன் தான் படிக்கிறான் என்றும் நன்றாக இருக்கிறான் என்றும் சொன்னேன்.

தாய் தந்தை உயிரோடு இருக்கும் பொழுதே இறந்து விட்டதாக ஏன் ராகுல் சொல்லிகொண்டிருகிரான் என்று நானும் என் நண்பனும் வியந்தோம்.

கல்லூரிக்கு சென்றவுடன் ராகுல் அவனாகவே எங்களிடம் வந்து எங்கள் ஊர் எப்படி, யார் யாரை பார்த்திர்கள் என்று கேட்டான்.

என் அம்மாவை பார்த்தீர்களா என்று கேட்கவேண்டியதுதானே என்று கோபத்துடன் நான் சொன்னேன்.

இப்பொழுது அவன் கண்ணில் நீர். பின்னர் மெதுவாக அவன் உண்மையை கூறினான். ராகுல் லுக்கு நினைவு தெரியும் முன்னே அவன் தந்தை இறந்துவிட்டதாக கூறினான். இளம் விதவையான அவன் தாய் தங்கள் ஜாதியை விட கீழான ஜாதியை சார்ந்த ஒருவரை மறுமணம் செய்துகொண்டதாக தெரிவித்தான். அது காதல் திருமணம். Forward Caste ஐ சேர்ந்த அவன் தாய் MBC யை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டது அவன் குடும்பத்திற்கு பிடிக்கவில்லை. அதனால் குழந்தையை தாயிடம் இருந்து பிரித்து, அவன் தாய் மாமன் வளர்த்துள்ளார்.

எதற்கு ஜாதி மட்டும் காரணமா இல்லை குடும்ப சொத்துமா என்று தெரியவில்லை. ராகுலுக்கு விவரம் தெரிந்த பொழுது தாய் உயிரோடு இருக்கும் செய்தி தெரிய வந்தது. இதனால் மனநிலை பாதிக்கப்பட்டு சில களம் தான் சிகச்சை எடுத்துகொண்டதாக ராகுல் சொன்னான். தன்னை வளர்த்து படிக்க வைக்கும் காரணத்தினால் தாய் மாமன் சொல்லை தட்ட முடிவதில்லை என்று சொன்னான்.

விடை தெரியாத கேள்விகள் ?

ராகுலை பார்க்கும் பொழுது அவன் தன் தாயின் இரண்டாம் கணவருக்கு பிறந்ததை போல எனக்கு தோன்றியது. இதனை அவனிடம் கேட்க எனக்கு தைரியம் இல்லை. மேலும் தாய் தவறு எதுவும் செய்யவில்லை. அவரை மணந்து கொண்டவரும் அவரை நன்றாக தான் கவனித்து கொண்டுள்ளார். அப்படியே தாய் தவறு செய்து இருந்தாலும் குழந்தையை ஏன் பிரிக்க வேண்டும் ? ஜாதி பிரச்னை மட்டும் தான் காரணமா ? இல்லை இந்த பிரச்சனைக்கு நியாயமான காரணம் ஏதேனும் உண்டா ?


ஆனால் பாதிக்கபட்டது தாயும் செயும் தான்

தாயும் மகனையும் பிரித்த இந்த சமுதாயம் என்ன சமுதாயம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக