பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 8 மார்ச், 2011

சிறுவர்களை பாழாக்கும் போதை பழக்கம்

நம் நாடு மனித வளம் மிகுந்தது. இங்கு பல வெளிநாட்டு கம்பெனிகள் தொழில் தொடங்க வருவதற்கு காரணம் இங்கு உள்ள இளைகர்களின் எண்ணிக்கை. ஆனால் நம்முடைய இளைஞர் சமுதாயம் எப்படி இருக்கிறது? ஒரு பக்கம் அறிவுள்ள சமுதாயமாக இளைங்கர்கள் மாறி கொண்டு இருந்தாலும், மறுபுறம் தவறான பழக்க வழக்கதிற்கு பாதை மாறி செல்வதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதில் ஊடகங்களும், திரைப்படங்களும், தொலை தொடர்பு வசதிகளும்  பெரும் பங்கு வகிக்கின்றன.

முன் எப்பொழுதும் இல்லாத வகையில் தெரியாததை தெரிந்து கொள்ள இவை வழி வகுக்கின்றன. நல்லது கெட்டது எதுவும் அறியாத சிறுவர்களும் இந்த தகவல் பரிமாற்றத்திற்கு உட்படுத்த படுகின்றன. 

பள்ளிக்கு செல்லாமல் இளம வயதிலேயே குப்பை பொறுக்குவது, டேபிள் சுத்தம் செய்வது போன்ற செயல்களை செய்யும் சிறுவர்களிடையே ஒரு வித  போதை பழக்கம் இருப்பதாக செய்தி தாள்களின் வந்ததை நான் படித்தது உண்டு. பஞ்சர் ஓடும் ஒரு வித பசை மற்றும் Whitener என்று எழுதியதை திருத்தும் திரவம் முதலியவற்றை சிறுவர்கள் போதைக்காக பயன்படுத்துகிறார்கள் என்ற தகவல் அதிர்ச்சி ஊட்டியது. பள்ளி மாணவர்களுக்கும் இந்த பழக்கம் பரவியுள்ளது என்ற செய்தி மேலும் அதிர்ச்சியை தந்தது.

கிராமபுரங்களின்  பெரும்பாலான பள்ளிகளின் இந்த பழக்கம் வேகமாக பரவுவதை நேரில் கண்டதும், பல மாணவர்களிடம் பேசிய பொழுது தெரிய வந்ததும் இன்னும் வருத்ததை அளித்தது. காலையில் பள்ளிக்கு வரும் வழயில் முன்பு தின்பதற்கு எதாவது வாங்கிய சிறுவர்கள் இப்பொழுது பாண் பராக் வாங்குவது சகஜமாக உள்ளது. பான் பாராக் விற்கும் பெட்டி கடைகளில் விசாரித்த பொழுது, இருபது வயதுக்கு உட்பட்டவர்கள் தான் இதனை அதிகம் வாங்குவதாகவும் தெரிவித்தனர். பள்ளி சிறுவர்கள் இதை பயன்படுத்துவதும் அதிகம் ஆகிகொண்டுவருவதாக கூறினர். ஒரு பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரின் அனுமதியுடன். ஆறாவது - ஒன்பதாவது வரை படிக்கும் மாணவ மாணவியருக்கு, போதை பொருட்காளால் உண்டாகும் தீமை பற்றி பேசியபொழுது ஒரு மாணவன் எழுந்து " இப்ப புள்ளைங்களும் ( பெண்களும் ) பாண் பாராக் போட ஆரம்பிச்சுடாங்க சார் என்றான்". 
பள்ளிக்கு வரும் பொழுதே சில மாணவர்கள் ஒரு வாட்டர் பாக்கெட்டையும் பஞ்சர் ஓட்டும் பசையையும் வாங்கி கொண்டு வருவதாகவும், வாட்டர் பாக்கெட்டில் உள்ள நீரை பருகிவிட்டு, அந்த பாக்கெட்டில் பஞ்சர் ஓட்டும் பசையை சில துளிகள் விட்டு, பின்னர் அதனை மூக்கில் வைத்து இழுபதாக  ஒரு ஆசிரியார் கூறினார். பள்ளியின் பின்புறம் உள்ள மாந்தோப்பில் சில மாணவர்கள் இவ்வாறு செய்து விட்டு மயக்கத்தில் இருந்ததாகவும், அவர் கூறினார்.
இது ஒரு பள்ளியில் மட்டும் நடக்கும் விஷயம் அல்ல. அரசு பள்ளி பலவற்றில் இது நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதனை தவிர பள்ளி அருகில் உள்ள ஒரு ருபாய் தொலைபேசியில் பள்ளிக்குள் வருவதற்கு முன்னரோ அல்லது பள்ளி விட்டு செல்லும் பொழுதோ, மாணவியர் தங்கள் ஆண் நண்பர்களின் செல்பேசிக்கு தொடர்பு கொண்டு பேசுவதும் நடந்து கொண்டு இருக்கிறது. ஒரு சிலரே இவ்வாறு செய்தாலும், அது பின்னால் பள்ளிக்கு அவபெயரை உருவாக்க காரணமாக அமையும்.

வேறு வழி இல்லை. அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு பல விதமான கட்டுபாடுகளை விதிக்க வேண்டும். பள்ளிக்குள் செல்பேசி, பாண் பாராக் மற்றும் பிற போதை தரும் பொருட்களை மாணவர்கள் கொண்டு வராமல் தடுக்க வேண்டும். சிறுவர்களுக்கு போதை பொருட்களை விற்கும் நபர்களை தண்டிக்க கடுமையான சட்டம் வேண்டும். இந்த பொருட்களை பள்ளி அருகில் உள்ள கடைகளில் விற்க முழுமையான தடை விதிக்க வேண்டும்.

இந்த வகை பொருட்களை முழுமையாக தடை செய்தால் இன்னும் நன்றாக இருக்கும். ஆனால் அரசாங்கமும் அரசியல் வாதிகளும் சமுதாயத்தை பற்றி கவலை படுவதில்லை. அரசாங்கமே மது விற்கிறது. பாண்டிச்சேரி அரசாங்கமோ இன்னும் ஒரு படி மேலே போய்விட்டது. ஏற்கனவே அங்கு மது மீதான வரி மிகவும் குறைவு. அங்கு சாராய கடைகளும், மது கடைகளும் முன்பே அதிகம் உண்டு. அரசு மது கடைகளும் உண்டு. என்ன இருந்தாலும் தமிழாக அரசு பாண்டிசேரி அரசுடன் மது விற்பனையில் எப்படி போட்டி போடலாம்? தாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை தெரியபடுத்த பாண்டிச்சேரி அரசு வெளிநாட்டு மது விற்க என்றே தனியாக கடை திறந்துள்ளது. ஒரு full  ருபாய் இரண்டு ஆயிரம்திற்கு மேல். என்ன ஒரு போட்டி.

தாய்லாந்து நாட்டில் விபச்சாரத்தை அரசாங்கமே ஊக்குவிக்கிறது. தன் நாட்டு  சுற்றுலா வருமானத்தை பெருக்க அந்த நாடு கடை பிடிக்கும் வழி இது. என்னை கேட்டால் குடி குடியை கெடுக்கும் என்பதால், அரசாங்கமே குடியை கெடுக்கும் வேலையை செய்கிறது என்பேன். தாய்லாந்து அரசுக்கும் நம் அரசாங்கத்திற்கும் வித்தியாசம் இல்லை. இன்னும் கேட்டால் தாய்லாந்து அரசு எவ்வளோவோ மேல். அதனால் சில பெண்களாவது வாழ்கின்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக