பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 11 மார்ச், 2011

தேசத்திற்கு எதிரானவர் யார் ?- பினாயக் சென்னா A.ராஜா வா ?

சட்டிஸ்கர் முக்தி மோர்ச்சா ஷஹீத் மருத்துவமனை (The Chattisgarh Mukthi Morcha’s Shaheed Hospital ) ஒரு சமுதாயம் சார்ந்த தொண்டு நிறுவனத்தால் நடத்தபடுகிறது. அந்த நிறுவனத்தின் பெயர் RUPANTAR.  மலை வாழ் மக்களுக்கு மருத்துவ உதவிகளை செய்ய மருத்துவர் பினாயாக் சென் (Binayak Sen ) மற்றும் அவர் மனைவி இல்லினா சென் (Ilina Sen ) அவர்களது முயற்சியால் தொடங்கப்பட்ட மருத்துவமனை அது. ஏழை எளிய மக்களுக்காக தங்கள் வாழ்கையை அற்பனித்து கொண்டு மலை கிராமங்களில் தங்கி சேவை புரிந்து வரும் இவர்களின் பணி போற்றத்தக்கது   

நமது நாட்டில் மருத்துவ பணி வியாபாரமாக தான் செய்ய படுகிறது. அரசு மருத்துவமனையில் பணி புரியும் மருத்துவர்கள் கூட தங்கள் பணி நேரத்தில், அரசு மருத்துவமனையில் இல்லாமல் தங்கள் சொந்த கிளினிக்கில் பணி புரிவது சர்வ சாதரணமாக நடக்கும் ஒன்று. கிராமத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு நகரத்தில் இருந்து தான் மருத்துவர்கள் வருகிறார்கள். கிராமத்தில் தங்க விருப்படுவதிலை. நகரத்தில் தான் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பும் அதிகம். எத்தகைய சுழலில் பினாயக் சென் போன்றோரின் பணி மகத்தானது.     

பினாயக் சென்னால் மருத்துவ சேவை செய்வதோடு நிற்க முடியவில்லை. வளர்ச்சி பணிகள் என்ற பெயரால் நடக்கும் சில விஷயங்களால், மலை வாழ மக்கள் புலம் பெயர்ந்து போக நேரிடுவதை கண்டார். சில வளர்ச்சி நடவடிக்கைகளால் மலை வாழ மக்கள் பாதிப்பு அடைவதை நக்சலைட் இயக்கத்தினராலும் பொறுத்துக்கொள்ள முடிய வில்லை. நக்சலைட்டுக்கள் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு தங்கள் உரிமையை நிலை நாட்ட முயற்சித்தனர். பினாயக் சென்னுக்கு அரசின் மக்கள் விரோதா நடவடிக்கைகள் பிடிக்கவில்லை என்றாலும் நக்சலைட்டுகளின் தீவிரவாத போக்கை என்றும் அவர் ஆதரித்தது இல்லை. பல முறை தீவிரவாதிகளின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து பேசி இருக்கிறார். மலை வாழ் மக்களின் உரிமைகள் பாதுகாக்க பட வேண்டும். ஆனால் தீவிரவாதம் அதற்கு தீர்வு அல்ல என்பது அவருக்கு நன்றாக தெரியும். அவர் 2009 ஆம் ஆண்டு அளித்த ஒரு பேட்டியில் நக்சலைட்டுகள் பற்றிய தன் கருத்தை தெளிவாக கூறியுள்ளார். தான் வன்முறைக்கு எதிரானவன் என்பதை ஆழமாக பதிவு செய்துள்ளார்.

ஆனால் அவர் நக்சலைட்டுகளை ஒடுக்க சல்வா ஜுடம் ( அமைதி பேரணி - Salwa Judam ) என்ற பெயரில் அரசு எடுத்த நடவடிக்கைக்கும் எதிராக குரல் கொடுத்தார். Salwa judam ஒரு மக்கள் இயக்கம் என அரசு கூறினாலும், அது உருவாகவும், அதற்கு பயிற்சியளிக்கவும், நிதி உதவி செய்யவும் அரசு தான் பின்புலமாக இருந்து செயல்படுகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. பினாயக் சென் Salwa Judam என்ற அமைப்பு மலை வாழ மக்களிடையே பிரிவினை வாதத்தை உண்டாக்குவதாக கருதினார். நக்சலைட்டுகளை ஒடுக்க மலை வாழ மக்களை கொண்டே அரசு அமைத்த Salwa Judam அமைப்பால் அமைதிக்கு பதிலாக மலை வாழ மக்களே ஒருவரை ஒருவர் அடித்து கொண்டு சாகிறார்கள் என்பது அவர் வாதம். ஒரு அமைப்பு அரசுக்கு எதிரானது. மற்ற்றொரு அமைப்பு அரசு ஆதரவுடன் செயல்படுவது. இரண்டுமே ஆயுதம் தாங்கி சண்டை போட்டு கடைசியில் மலை வாழ இனமே பாதிகபடுகிரார்கள் என்று கவலைப்பட்டார். மனித உரிமைக்கான அவரது கரிசனம், PUCL (  Peoples union for  civil Liberties ) என்ற அமைப்பின் தேசிய உப தலைவராக அவரை ஆக்கியது. சட்டிஸ்கர் மாநிலத்தில் இருந்த PUCL இன் பொது செயலாளராகவும் அவர் இருந்தார்.            
 இந்த  PUCL அமைப்பு, சட்டிஸ்கரில் நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் Salwa Juadam அமைப்பு செய்யும் மனித உரிமை மீறல்களை வெளி உலகின் கவனத்திற்கு கொண்டு வந்தது.Salwa Judam அமைப்பு அரசால் நடத்தபடுவதுடன், அனைத்து அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பு மற்றும் கார்பரட் (Corporate ) நிறுவங்களின் உதவியுடன் செயல் படுவதாக PUCL குற்றம் சாட்டியது. இதற்கு சில சுயநல காரணங்கள் இருந்தாகவும் கூறியது. ஆனால் தேசிய மனித உரிமை ஆணையம் Salwa Judam ,  நக்சலைட்டுகளுக்கு எதிராக மலை வாழ மக்கள் சுயமாக எழுச்சி அடைந்ததினால் ஏற்பட்ட அமைப்பு என்றும் தீவிரவாதத்தை முறியடிக்க மக்களே எடுத்த முயற்சி என்றும் தொடர்ந்து கூறி வருகிறது.                   
Salwa Judam க்கு எதிராக வைக்கப்படும் கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை என்றும், நடந்த நிகழ்வு மிகை படுத்தி சொல்ல படுவதாகவும் தேசிய மனித உரிமை ஆணையம் கூறியது (National Human Rights Commision -NHRC ). 
ஆனால் உண்மை என்ன வென்றால் நக்சலைட்டுகள் மற்றும் Salwa Judam அமைப்பு இருவருமே தீவிரவாதத்தை கடைபிடிக்கும் அமைப்புகள். ஒன்றுக்கு அரசு ஆதரவு உண்டு. மற்றொன்றுக்கு இல்லை. இருவர்க்கும் இடையே சிக்கி தவிப்பது அப்பாவி மலை வாழ் மக்கள் தான். 

இந்த மாதிரி யுத்தங்களில் அப்பாவி பொது மக்கள் கொல்லபடுவதும், பெண்களின் கற்பு சூறையாட படுவதும், அவர்களது பொருட்கள் கொள்ளியடிகபடுவதும் தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிடுகிறது. யுத்த நடவடிக்கைகளின் பொது, கூட்டாக இணைந்து வன்முறையில் ஈடுபடும் பொழுது மனித மனம் வக்கிரத்தின் எல்லையை தொடுகிறது. உண்மையான நோக்கம் மறைந்து மிருக வெறியும் மறைந்திருக்கும் பசியும் வெளிபடுகிறது.         
 இந்திய ராணுவம் அமைதி படை என்ற பெயரில் இலங்கையில் LTTE க்கு எதிராக எடுத்த நடவடிக்கைகளிலும், சந்தன கடத்தல் வீரப்பன்னுக்கு எதிரான அதிரடி படி நடவடிக்கையின் பொழுதும் இது வெளி பட்டது.   
  
உலக அளவிலும் இது போன்ற சம்பவங்களில் அப்பாவி பொது மக்கள் பாதிக்க பட்டதற்கு பல சான்றுகள் உள்ளன. பினாயக் சென் அப்பாவி மக்கள் பாதிக்க பட கூடாது என்று நினைத்தார்.

Salwa Judam அமைப்பிற்கு அரசு ஆதரவு இருந்ததால், அந்த அமைப்பில் உள்ளவர்கள் எத்தகைய கேவலமான செயல்களையும் தீவிரவாத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டாலும் அவர்கள் மீது ஒரு நடவடிக்கையும் இருக்காது. பற்றாக்குறைக்கு அரசு சிறப்பு காவல் படை என்ற பெயரில் மலை வாழ் இளங்கர்களை நான்காயிரம் நபர்களை, தேர்வு செய்து அவர்களுக்கு மாதம் ருபாய் ஆயிரத்து ஐநூறு ஊதியம் தந்ததுடன் .303 ரக துப்பாக்கிளையும் அவர்களுக்கு தந்தது. நக்சலைட்டுகளை ஒடுக்கவே இந்த நடவடிக்கை என்று அரசு கூறியது. நக்சலைட்டுகள் கையில் மட்டும் அல்ல, இப்பொழுது மலை வாழ் இளங்கர்களை பலரின் கைகளிலும் துப்பாக்கி. பணம், ஆயுதம் மற்றும் அதிகாரம்.  என்ன நடக்கும் என யோசித்து பாருங்கள். வன்முறை தான் தலைவிரித்து ஆடும்.

ஆச்சிரியம் என்னவென்றால் சட்டிஸ்கர்ரை ஆண்ட  BJP அரசாங்கம் நக்சலைட்டுகளை ஒடுக்க இந்த சிறப்பு காவல் படை தான் சரியான வழி என்றும், தாங்கள் ஆளும் மற்ற மாநிலங்களில் உள்ள தீவிரவாதத்தை அடக்க இந்த வழியையே பின்பற்ற போவதாகவும் கூறியது. நம் ப. சிதம்பரமும் சிறப்பு காவல் படையினரின் பணியை பாராட்டி, தீவிரவாதத்தை ஒடுக்க எங்கு எல்லாம் தேவையோ அங்கு எல்லாம் சிறப்பு காவல் படை அமைக்க படும் என்றார்.
ஆனால் நம் உச்ச நீதி மன்றம், சிறப்பு காவல் படை அமைப்பதற்கு கண்டனம் தெரிவித்தது. April 2008 இல், உச்ச நீதி மன்ற பெஞ்ச், சட்டிஸ்கர் மாநில அரசாங்கத்திற்கு கண்டனம் தெரிவித்து Salwa Judam அமைப்பிற்கு ஆதரவு தெரிவிப்பதையோ அல்லது உதவி செய்வதையோ நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் இது சட்டம் ஒழுங்கு சம்மந்த பட்ட விஷயம் என்றும் கருத்து கூறியது. ஒரு குடிமகன் கையில் ஆயுதம் கொடுத்து அவனை கொலை செய்ய அனுமதிக்க கூடாது என்று கூறியது. அவ்வாறு செய்தல் அரசாங்கமே இந்திய அரசியல் சட்டம் Section 302 ஐ மீறியது ஆகும். நீங்கள் மீறவில்லை என்று கூறினாலும் அது தான் உண்மை என்று தீர்ப்பு கூறியது. Salwa Judam அமைப்புடன் மாநில அரசின் பாதுகாப்பு படை இணைந்து செயல்பட்டதை NHRC உம் ஒத்துகொண்டது.  


December 2008, இல் உச்ச நீதி மன்றத்தில் கொடுக்கப்பட்ட பெட்டிசன்னுக்கு பதில் அளித்த சட்டிஸ்கர் அரசு Salwa Judam அமைப்புடன் இணைந்து அரசு பாதுகாப்பு படையும் மலை வாழ் மக்களின் வீடுகளை சூறையாடியதும், வீட்டை கொளுத்தியதும் உண்மை தான் என்று ஒத்துகொண்டது. ஆனால் NHRC யின்  விசாரணையில் பொது மக்கள் யாரும் கொல்லபடவில்லை என்று தான் தெரிய வந்தது என்று கூறியது.    
இதில் இருந்து அரசாங்கமே தீவிரவாதத்திற்கு எதிராக தீவிரவாதத்தை கட்டவிழ்த்து விட்டது தெளிவாக தெரிகிறது.  

பினயாக் சென் இதை தான் எதிர்த்தார். அப்பாவி பொது மக்களை தீவிரவாதி ஆக்கி அவர்களை மாவோஸ்டுகளுக்கு ( Maoist ) எதிராக பயன்படுத்துவது நியாயம் இல்லை என்பது தான் அவர் வாதம். மேலும் கொள்கையின் அடிப்படையில் பார்த்தால், அரசின் கொள்கை தான் மலை வாழ் மக்களை பாதிக்கிறது என்றும், நக்சலைட்டுகளின் சில கொள்கைகளில் நியாயம் இருக்கிறது என்பதும் அனுபவ பூர்வமாக அவர் கண்ட உண்மை.

மலை வாழ் மக்களின் உரிமைகள் பாதுகாக்க பட வேண்டும் என்பதில் அவருக்கு மாற்று கருத்து இல்லை.

கொள்கை ரீதியாக நக்சலைட்டுகளுக்கு ஆதரவாக இருப்பதால், நக்சலைட்டுகளுடன் இணைந்து அரசுக்கு எதிராக செயல்படுவதாக, பினாயக் சென்னை மாநில அரசு குற்றம் சாட்டியது.  

பினாயக் சென்னை கடந்த 14th May,2007 , சட்டிஸ்கர் மாநில அரசாங்கம் கைது செய்தது. பின்னாயக் சென் சிறைச்சாலையில் இருந்த எழுபத்தி நான்கு வயதான நக்சல் தலைவர் நாராயண் சன்யால் ( Narayan Sanyal ) என்பவருக்கும் நக்சல் ஆதரவு தொழிலதிபர் பியுஷ் குஹா ( Piyus Guha ) என்பவருக்கும் இடையே தகவல் பரிமாற்றத்திற்கு உடந்தையாக இருந்தார் என்பது குற்றசாட்டு. பினயாக் சென் நாராயண் சன்யாலை 33 முறை சிறை அதிகாரிகளின் அனுமதியுடன் தான் சந்தித்தார். பினாயக் சென்னிடம் இருந்த சில கடிதங்கள், கணினியில் இருந்த சில குறிப்புக்கள், நக்சல் ஆதரவு சிறு புத்தகங்கள் மற்றும் 83 தயார் செய்யப்பட்ட சாட்சிகள் ( அவர்களில் 61 நபர்கள் ராய்பூர்  நீதிமன்றத்தில் சாட்சி சொன்னார்கள்) அடிப்படையில் ஆயுள் தண்டனை விதிக்கபட்டது 
20th December,2010, அன்று ராய்பூர் நீதிமன்றம் பினாயக் சென், நாராயண் சன்யால் மற்றும் பியுஷ் குஹா ஆகியோருக்கு சட்டிஸ்கர் சிறப்பு பொது பாதுகாப்பு சட்டம், 2005 மற்றும் Unlawful Activities Prevention act, 1967. சட்டத்தின் கீழ் மூவருக்குமே ஆயுள் தண்டனை விதித்தது .
கைது செய்த  14th May, 2007 முதல் 25th May, 2009, வரை பினயாக் சென் சிறைச்சாலையில் தான் இருந்தார். 25th May, 2009 அன்று தான் அவருக்கு உச்ச நீதி மன்றம் பெயில் வழங்கியது. மீண்டும்  20th Dec,2010 தீர்ப்பிற்கு பிறகு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ராய்பூர் நீதிமன்றம் இறுதி தீர்ப்பு வரும் முன்னே ஏற்கனவே இரு முறை அவருக்கு பெயில் தர மறுத்துவிட்டது -  15th May, 2007 மற்றும் 25th May, 2007. பின்னர் Dec, 2007 இல்  உச்ச நீதி மன்றமும் அவருக்கு பெயில் தர மறுத்தது. வெளியில் விட்டால் சாட்சியங்களை கலைத்து விடுவார் என்று அதற்கு காரணம்  கூறியது. 
கடந்த 25th March,2009 அன்று பினாயக் சென்னுக்கு இருதய நோய் ( Cornonary Heart Disease )   இருப்பது உறுதி செய்யப்பட்டு அவருக்கு Angiogram மற்றும் Angioplasty செய்யப்படவேண்டும் என்று மருத்துவ பரிசோதனை முடிவில் தெரிவிக்க பட்டது. அவருக்கு வேலூர் CMC மருத்துவமனயில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று
பினாயக் சென் விரும்பினார். CMC இல் தான் பினாயக் சென் தன் மருத்துவ பட்ட படிப்பை முடித்தார் என்பது கூறிபிடதக்கது. பின்னர் ஒரு வழியாக 25th May, 2009 பெயில் கிடைத்தாலும் 20th Dec,2011 தீர்ப்பிற்கு பிறகு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.
கடந்த 10th Feb ,2010 இல் சட்டிஸ்கர் உயர் நீதி மன்றம் பினாயக் சென்னுக்கு பெயில் மறுத்துள்ளது. திரும்பவும் பெயில் கேட்டு பினாயக் சென் சார்பில் போடப்பட்ட மனு உச்ச நீதி மன்றத்தில் 11th மார்ச், 2011 விசாரணைக்கு வருகிறது.

அமர்தியா சென், மனித உரிமை ஆர்வலர்கள், சட்டிஸ்கர் மலை வாழ் மக்கள் முதல் பல ஊடகங்களும் பினாயக் சென்னுக்கு ஒருதலை பட்சமாக தீர்ப்பு வழங்க பட்டுள்ளது என்று கூறி வருகிறர்கள். பினாயக் சென்னுக்கு ஆதரவாக வாதாடி வரும் ராம் ஜெத்மெலானி ஒரு படி மேலே பொய் பினாயக் சென்னுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக சமூக பணிக்கு  தன்னை அர்பணித்த பினாயக் சென்னுக்கு எதிராக அரசு மிக வேகமாகவும் மிக உறுதியாகவும் நடவடிக்கை எடுத்துள்ளது. 

பினாயக் சென் தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவராக அரசால் கருத படுகிறார்.

சரி. பினாயக் சென் செய்தது தேச விரோத நடவடிக்கை என்றால் நம் மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு. ஆண்டிமுத்து  ராஜா அவர்கள் செய்தது தேச நலம் கொண்ட செயலா?
2GSpectrum  ஊழல் பற்றி கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டாலும், பல விதிமுறைகள் மீறப்பட்டது ஆதார பூர்வமாக தெரிந்தாலும்  அவரை மதிய அமைச்சர் பதவியிலிருந்து எடுபதர்கே இரண்டு ஆண்டுகள் பிடித்தது. இந்தியாவிலேயே மட்டும் அல்ல உலக அளவிலேயே மிக பெரிய ஊழல் சர்வசாதரணமாக செய்யபட்டிருந்தாலும் ராஜா, ராஜா மாதிரி தான் வெளி உலகில் உலவிகொண்டிருந்தார்.  ராஜா வை கடைசியில் வேறு வழி இல்லாமல், உச்ச நீதி மன்றம் தொடர்து கண்டனம் தெரிவித்த காரணத்தால் அரசு கைது செய்து சிறையில் வைத்துள்ளது. வெளியில் விட்டால் சாட்சியங்கள் கலைத்து விடுவர் என்று பினாயக் சென்னுக்கு ஒரு நியாயம். சாட்சியங்களை கலைக்க வசதியாக இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ராஜா வெளியிலே தான் இருந்துள்ளார்.

அவர் 2GSpectrum lincense வழங்கிய உரிமையை பெற்ற DB realtity என்பது Dawood Ibrahim மின் பினாமியின் நிறுவனம் என்பதும், அதன் துணை நிறுவனமான Etisalat என்ற நிறுவனத்திற்கு பாகிஸ்தான் நாட்டின் தொலைதொடர்பு நிறுவனத்தின் 26% பங்கு உள்ளது என்பதும் கூறிபிடதக்கது. நம் நாட்டின் தொலைதொடர்பு உரிமை பாகிஸ்தான் நாட்டின் தொலைதொடர்பு துறையை சார்ந்த, நபர்கள் நிர்வாக  பொறுப்பில் இருக்கும் Etisalat நிறுவனத்திற்கு விலை போனது தேச துரோகமாக கருதபடாதது விந்தையே 
 இதில் முக்கியமான விஷயம் கலைஞர் தொலைகாட்சிக்கு DB ரியாலிட்டி நிறுவனத்தில் இருந்து வந்த இருநூற்றிபதி நான்கு கோடி ருபாய். அது நேராக வராமல் கிழ்கண்ட நிறுவனங்கள் வழியாக வந்து சேர்ந்தது CBI யால் உறுதி செய்ய பட்டுள்ளது 
DB ரியாலிட்டி-Dynamix ரியல்ட்டி- Kusegaon ரியாலிட்டி Pvt Ltd - சினியுக் (Cineyug Films Pvt Ltd ) -கலைஞர் தொலைக்காட்சி 

இன்று (11 .03 .2011 )CBI கலைஞர் தொலைகாட்சியின் பங்குதாரர்கள் ஆன நமது தமிழக முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழியையும் அவர் மனைவி  தயாளு அம்மாளையும் எது குறித்து விசாரனைக்கு அழைத்துள்ளது.

சரி யார் தேச துரோகி ? பினாயக் சென்னா அல்லது A.ராஜா, கருணாநிதி உள்ளிட்ட அரசியல் வாதிகளா?

தேசத்திற்கு எதிரானவர் யார் ?- பினாயக் சென்னா A.ராஜா வா ?       


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக