பிரபலமான இடுகைகள்

வியாழன், 3 அக்டோபர், 2013

விஷமாகி போன சமூகம்

காந்தி ஜெயந்தி ...மது மூலம் கூடுதல் வருமானம் பார்க்கும் வாய்பை சிலருக்கு எற்படுத்தி தருகிறது...நம் நாட்டு குடிமகன்கள் மேல் அபார நம்பிக்கை வைத்து , முன் கூட்டியே மதுபானங்களை அதிகம் வாங்கி பதுக்கி வைத்து, குவார்டர் 150 முதல் 200 ருபாய் வரை விற்று...கொள்ளை லாபம் பார்த்து...இதில் போலிஸ் கும் பங்கு மற்றும் சரக்கு கொடுத்து.....காற்றுல்ல போதே தூற்றிக்கொள்ளும் இவர்கள்...சமூக விரோதிகளா? கை தேர்ந்த வியாபாரிகளா? நாம் காந்திக்கு கொடுக்கும் உண்மையான மதிப்பு இது தான். போலி அரசியல் வாதிகள், போலி வியாபாரிகள், போலி சமூதாய சேவகர்கள் காந்தியின் பெயரை அவர் பிறந்த நாள் அன்று தங்கள் பிழைப்பிற்காக பயன்படுத்திக்கொள்கிறனர்...உணமையாக காந்தியின் வழியில் நடக்க விழைபர்களுக்கு தடைக்கல்லாக இந்த சமூகமே இருப்பது அதனிலும் கொடுமை.காந்தியின் அறவழிபோராட்ட முறை தற்கால்த்திற்கு பொருந்தாத முறையாகவே தோன்றுகிறது. சமூகத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்ற உறுதிகொண்டவர்கள் கூட சகுனித்தன யுக்திகளை கையாண்டால் மட்டுமே ஒரளவு வெற்றி பெற முடியும். நல்லவர்களாகவே இருந்தால் காணாமல் போய்விடுவார்கள்.

என் மனதும் சிறிது சிறிதாக கெட்டுக்கொண்டு வருவதை உணருகிறேன். யாருக்கும் கெடுதல் செய்யாமல் வாழநினைத்தால், இளிச்சவாயன் என்று நினைத்து காலைவாரிவிட்ட நபர்கள் , காலைவாரிவிட முயர்ச்சி செய்யும் நபர்களிடம் தோற்றுப்போவதை விட, அவர்களுக்கு கெடுதல் செய்தால் என்ன என்று தோன்றுகிறது. நான் மாறுவதும் மாறாததும் என்னை சுற்றியுள்ள சமூகத்தின் கையில் தான் இருக்கிறது. இப்படி தான் பலர் மாறி சமூகமே சீர்க்கெட்டு போயுள்ளது என்பதையும் உணர்கிறேன். டார்வினின் " Survival of the fittest" தத்துவத்தில் ‘Fittest" என்பதற்கு தற்கால உலகத்தில் உள்ள அர்த்த்ம் “ எய்த்து பிழை” என்பதாகவே உணர்கிறேன். வெளிப்படையாக திருட்டு தொழிலை செய்பவர்களை விட "white collar criminals" தான் இந்த சமூகத்தை அதிகம் சீர்குலைய செய்பவர்களாக இருக்கின்றனர். இந்த சமூகதில் நல்லவர்களாக வாழ்பவர்களை விட நல்லவர்களாக வேஷம் போடுகிறவர்களே நிறைந்து காணப்படுகின்றனர். பணமும் பதவியையும் பெற்றுவிட்டால்...பிறகு தெரிந்தே கூட தவறு செய்யலாம். எவராலும் அவர்களை எதுவும் செய்ய்முடியாது.இன்றைய அரசியல்வாதிகள் நமக்கு உணர்த்தும் பாடம் இது. ரவுடிகள் அரசியலுக்கு வரும் உளவியல் காரணமும் இது தான்.

அநியாத்தைக்கண்டு பல தடவை பொங்கி இருக்கிறேன். ஒங்கி கதரினாலும், போராடினாலும் ஒருவரும் உதவ வரமாட்டார்கள் என்பதை உண்ர்திருக்கிறேன். தங்களை தற்காத்துக்கொண்டு சமூகம் எப்படி போனால் என்ன என்று வாழ்பவர்களே அதிகம் என பல சம்பவங்கள் உணர்த்திருக்கின்றன. நான் குடியிருக்கும் நகரின் நலசங்கத்தை கைபற்றும் நோக்கில் நடந்த பிரச்சனையில் நான் தலையிட்டதால் எனக்கு அடியும் உதையும் விழுந்தது. இப்பொழுது பலமாதங்களாக நிர்வாக செலவிற்கு வாங்கிய பணத்திற்கு கணக்கு காட்டாமல் அவர்களுக்கு உள்ளேயே அடிதடி பிரச்சனை நடந்து வருகிறது. அன்று ரவுடியிசத்திற்கு பயந்து வாய் திறக்காத குடியிருப்பை சார்ந்தவர்கள் இன்று என் உதவியை கேட்கின்றனர். தனிபட்டமுறையில் நான் போராடிக்கொண்டுயிருந்த நான் இப்பொழுது போராட விருப்பம் இல்லாமல் இருக்கிறேன்.

என் மாமனார் எனக்கு அடிக்கடி தரும் ஆலோசனை “ பாம்பு திங்கற ஊருக்கு போனால் நடுத்துண்டு எனக்கு” என்று இருக்கவேண்டும் என்பதே. எல்லோரும் நடுத்துண்டிற்காக தான் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறோம். சமூகமே விஷம் ஆகிக்கொண்டிருப்பதை உணராமல்

சனி, 16 மார்ச், 2013

பரதேசி


பரதேசி. இன்னும் சில மாதங்களுக்கு ப்ல விவாதங்களை எழுப்ப போகும் படம். ரெட் டீ என்ற நாவலை அடிபடையாக வைத்து பின்னப்பட்ட இந்த படம் பாலா இயக்கதில் வந்ததிலேயே சிறந்த படம் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. படத்தின் முதல் அரை மணி நேரத்தை ஜாலியாக எடுக்கிறேன் என்ற பெயரில் பாலா செய்துகொண்ட வியாபார ரீதியான சமரசத்தை தவிர்த்து பார்தால் இது மிக அருமையான படம். மிக நுணுக்கமாக அமைக்க பட்ட பாத்திர அமைப்புகள் (வேதிகா மட்டும் திருஷ்டி), மனதை தொடும், பிசையும் காட்சிகள், அருமையான ஒளிப்பதிவு  - மற்ற் பாலா படங்களில் உள்ள அனைத்து அம்சங்களும் இருந்தாலும், ஒரு உண்மை சம்பவத்தை இதை விட அழகாக யாரும் பதிவு செய்ய முடியாது( எனினும் ரெட் டி யின் தமிழ் வடிவம் எரியும் பனிக்காடு என்னுள் எற்படுத்திய பாதிப்பு இன்னும் அதிகம். படத்தின் முதல் அரை மணி நேர  சமரசம் நாவலில் இல்லை). என் நண்பர் ஜானகிராமன் அவர்கள் முதல் அரை மணி நேரம் நாஞ்சில் நாடான் எழுதிய ”இடாலாக்குடி ராசா” என்ற கதையை தழுவியே எடுக்கப்பட்டது. அந்த கதையை படித்தவர்களுக்கு முதல் அரை மணி நேரமும் பிடித்தது என்ற தகவலை கூறினார். இன்னொரு நண்பர் ரெட் டீ அப்படியே எடுத்திருந்தால் முற்றிலும் அழுகாச்சியாக இருந்திருகும் என்று கூறினார். படம் பார்க்கும் நமக்கே அப்படி என்றால்....தேயிலை தோட்டத்தில் கொத்தடிமைகலாக உண்மையில் வாழ்ந்த மக்களுக்கு?.

படத்தின் பலம்

பாலாவின் இயக்கம், அதர்வாவின் நடிப்பு, செழியனின் ஒளிப்பதிவு, சிறு சிறு நடிகர்களின் நடிப்பு பாத்திர தேர்வு (அதர்வாவின் பாட்டி யின் எதார்த்த நடிப்பு மிக சிறப்பு)

இடைவேளையின் பொழுது சாக கிடக்கும் தருவாயில் தன்னை விட்டு முன்னேரும் கூட்டத்தை நோக்கி நீளும் கை...அதை காட்சி அமைத்த விதம்

மதமாற்றம் செய்ய கிருத்துவர்கள் செய்யும் தந்திரத்தை நக்கல் அடித்த விதம்

வசனம் குறைவாக  இருந்தும் காட்சிகள் மூலமே சொல்ல வந்ததை மிக அழுத்தமாக சொல்லியது

மிக உருக்கமானா முடிவும், அப்போழுது அத்ர்வாவின் நடிப்பும், காட்சிஅமைப்பும்

படத்தின் குறை

பட ஆரம்பிக்கும் பொழுது Steady cam shot சரியாக எடுக்கபடவில்லை. மேலும் சாலுர் கிராமத்து மக்கள் குறுக்கும் நெடுக்குமாக  நடந்துகொண்டே இருந்தது எதார்தமாக இல்லை

வேதிகாவின் நடிப்பு

பின்னனி இசை..... மிக மோசம். இளையராஜா இல்லாத குறை நன்றாக  தெரிந்தது

வியாழன், 17 ஜனவரி, 2013

தானம் அறக்கட்டளையின் 8ஆவது குறும்பட விழா போட்டி

தானம் அறக்கட்டளையின் 8ஆவது குறும்பட விழா போட்டி


'மேம்பாட்டு குறும்பட விழா' எனும் தலைப்பில் ஒவ்வொரு ஆண்டும் தானம் அறக்கட்டளை குறும்படம் மற்றும் ஆவணப்படங்களுக்கான போட்டிகளை நடத்தி வருகிறது. 1.வறுமை (2005), 2.தண்ணீரும் வாழ்க்கையும் (2006), 3.தண்ணீரும் மக்களும் (2007), 4.கலாச்சாரமும், பாரம்பரியமும் (2008), 5.வறுமைக்கு எதிரான ஆயிரமாண்டு வளர்ச்சி இலக்கு (2009) 6.மக்கள் ஜனநாயகமும், மேம்பாடும் (2010) 7.வாழ்வாதாரம் (2011) என்ற தலைப்புகளில் கடந்த ஏழாண்டுகளாக தானம் அறக்கட்டளையின் மேம்பாட்டு குறும்பட விழாக்கள் நடைபெற்றன. அதன் தொடர்ச்சியாக இவ்வாண்டு 'உணவுப்பாதுகாப்பும் பருவநிலைமாற்றமும்' எனும் தலைப்பில் ஜனவரி 28-30, 2013 தேதிகளில் நடைபெறவுள்ளது. சுற்றுச்சூழல், உணவு, பருவநிலை, நீர்நிலைமேம்பாடு, வேளாண்மை, வறுமை போன்ற கருத்தமைவுகளில் உள்ள குறும்படம் மற்றும் ஆவணப்படங்களை இப்போட்டிக்கு அனுப்பலாம். சிக்கலுக்கான தீர்வினை முன்மொழிவது அவசியம்.

உலகின் எந்த மொழிகளில் தயாரானதாக இருப்பினும், உரையாடல்கள் ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். கடந்த ஐந்தாண்டுகளுக்குள் வெளியாகியிருப்பதோடு, படைப்பாளியின் தனிப்பட்ட சிந்தனையின் வெளிப்பாடாக இருப்பது மிக அவசியம். போட்டிக்கு அனுப்பப்படும் படங்கள் ஏதேனும் விருதுகளோ, பாராட்டுகளோ பெற்றிருக்கும் பட்சத்தில் அவை குறித்த விபரங்களையும் இணைத்தல் வேண்டும். இயக்குநர், தயாரிப்பாளர் அல்லது தயாரிப்பு நிறுவனங்கள் படைப்புகளை அனுப்பலாம். விசிடி, டிவிடி அல்லது வி.ஹெச்.எஸ் வடிவங்களில்தான் அனுப்ப வேண்டும். ஒருவர் எத்தனை படைப்புகள் வேண்டுமானாலும் அனுப்பலாம். தாங்கள் அனுப்பும் படங்கள், எக்காரணத்தை முன்னிட்டும் திரும்ப அனுப்ப இயலாது. படைப்புகள் 45 நிமிடங்களுக்கு மிகாமலிருப்பது சிறப்பு. ஒவ்வொரு படைப்பையும் தனித்தனி விண்ணப்பங்களோடுதான் அனுப்ப வேண்டும். விண்ணப்பம் மற்றும் போட்டி குறித்த விரிவான விளக்க அறிக்கைகள் http://www.dhan.org/dff என்ற இணைய தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது. தங்களது படங்கள் (இரண்டு பிரதிகள்) மற்றும் விண்ணப்பத்தையும் ஒருங்கிணைப்பாளர், 8ஆவது மேம்பாட்டுக் குறும்பட விழா (2012), தானம் அறக்கட்டளை, மேம்பாட்டிற்கான தொடர்பியல் மையம், 7இ, வால்மீகி தெரு, சோமசுந்தரம் காலனி, மதுரை - 16 என்ற முகவரிக்கு வருகின்ற ஜனவரி 22, 2013ஆம் நாளுக்குள் எங்களுக்குக் கிடைக்குமாறு அனுப்ப வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம். கூடுதல் விபரங்களுக்கு 0452 4353983 / 9443572724 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

முதல் கட்டமாகத் தேர்வு செய்யப்படும் ஒன்பது படங்கள் பொதுமக்கள் மத்தியிலும், கல்லூரிகளிலும் திரையிடப்படுவதுடன், இறுதியாக வெற்றி பெறும் முதல் மூன்று படைப்புகளுக்கு பரிசுத்தொகையும், சான்றிதழும் வழங்கப்படும். படங்களுக்கான தேர்வுகளில் குறும்பட மற்றும் திரைப்பட இயக்குநர்கள், பேராசிரியர்கள், இதழாளர்கள் என பல்துறை விற்பன்னர்கள் பங்கேற்கின்றனர்.