பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 8 மார்ச், 2011

ஜாதிகள் இருக்குதடி பாப்பா -2

மதுரை மாவட்டத்தில் கிராமபுரத்தில் உள்ள ஒரு அரசு உயர் நிலை பள்ளியில் நடந்த சம்பவம். அந்த பள்ளியை சார்ந்த ஆசிரியர் ஒருவரிடம் பேசிகொண்டிருந்த பொழுது வருத்ததுடன் இந்த செய்தியை பகிர்ந்து கொண்டார். ஆறாம் வகுப்பு பாட புத்தகம் ஒன்றில் அம்பேத்கர் படமும் தேவர் படமும் இருப்பதாகவும், ஒரு குறிப்பிட்ட ஜாதியை சார்ந்த மாணவர்கள் அம்பேத்கர் படத்தின் மீது காம்பஸ் முனையை கொண்டு குத்தி படத்தை கிழித்து விடுவதாகவும் கூறினார். இதை  போல தேவர் படத்தை வேறு ஜாதியை சார்ந்த மாணவர்கள் தங்கள் புத்தகத்தில் கிழித்து வைத்துள்ளதாகவும் கூறினார்.

பள்ளி சென்று படிப்பது எதற்கு? பள்ளி கூடங்கள் நல்லோழுகங்களை கற்று தரும் கூடாரங்களாக இருக்க வேண்டும் என்பதற்காக. ஆனால் ஜாதி வெறியை போக்க வேண்டிய நம் சமுதாயம், அதனை பல காரணங்களுகாக ஊதி பெரிது படுத்திக்கொண்டே வருகிறது. தங்களுடைய சுயநலத்திற்காக அப்பாவி மக்களை ஜாதி அமைப்புகள் மற்றும் ஜாதி கட்சிகள் பயன் படுத்திகொள்கிறது. சிறுவர்களின் நெஞ்சும் ஜாதி என்னும் நஞ்சால் மாசுபட்டுள்ளது.

இனி எத்தனை பெரியார் வந்தால் இந்த நிலைமை மாறும்? நம் அரசாங்கம் இந்த ஜாதிய வேறுபாடுகளை குறைக்கவோ அல்லது தடுக்கவோ முயற்சிக்குமா? பள்ளி கல்வி துறையாவது வருங்கால சந்ததியினர் ஒருங்கினைந்த சமுதாயமாக வளர வழி வகுக்குமா?
மனித மனம் ஏன் கூறுகிகொண்டே போகிறது ? படிக்க படிக்க அறிவு வளர வளர சுயநலமும் கூட வளருவதை தான் காண முடிகிறது. அறிவு அழிவுக்கு தான் துணை போகிறது. ஒழுக்கம் சார்ந்த அறிவை போதிக்க நம் கல்விக்கூடங்களும்  ஏன் பெற்றோரும் தவறிவிடுகிறோம். பொருள் ( Material ) சார்ந்த வாழ்க்கைக்கு பிள்ளைகளை தயார் படுத்தும் நாம் அறம் சார்ந்த வாழ்க்கைக்கு அவர்களை தயார் படுத்துவதில்லை. வலியதே வெல்லும் என்னும் Charles Darwin இன் தத்துவும் மிருகங்களை விட மனிதர்களுக்கு மிகவும் பொருந்துகிறது. ஒரு மனிதன் தான் வளர, சக மனிதனை அடக்கி வாழவே விரும்புகிறான்.

        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக