பிரபலமான இடுகைகள்

திங்கள், 23 மே, 2011

ஆசிரியர்கள்

விவசாய கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் பொழுது நிகழ்ந்த நிகழ்வு இது. கல்லூரியில் நான் சேர்ந்த உடனேயே சீனியர் மாணவர் ஒருவர் வந்து " நீங்கள் கொடுத்துவைத்தவர். உங்களை தான் தன் மாணவனாக ஏற்றுகொள்வது என கே. ஆர் ( K.ராமசாமி) முடிவு செய்திருக்கிறார். அதனால் நீங்கள் செய்ய போகும் Thesis இற்கு அவர் தான் சரிமன்" என்று சொன்னார். என்னக்கு மிக ஆச்சிர்யமாக இருந்தது. என்னை பற்றி அவருக்கு தெரியாது. அனால் வேறு ஒஉர் கல்லூரியில் படித்த என்னை பற்றிய தகவலை அவர் அறிந்து கொண்ட பிறகே இந்த முடிவை எடுத்துள்ளார் என்பதை கேள்விபட்டதும் மேலும் வியப்பு. கே. ஆர் மாணவர் என்றால் கண்டிப்பாக வெளிநாடு சென்று விடுவர் என்ற பேச்சும் கல்லூரியில் உண்டு. மேலும் அவர் பரிசோதனை கூடம் மிகவும் நவீன மயமாகபட்டது.கல்லூரியிலேயே மிக சிறந்தது என்ற பெயரும் இருந்தது. 

முதுகலை சுற்றுபுற சூழலியலில் ஐந்தே ஐந்து மாணவர்களை தான் வருடத்திற்கு சேர்ப்பர். அந்த ஐந்தில் மூவர் பெண்கள். இருவர் ஆண்கள். இதில் எனக்கு மட்டும் தான் இந்த வாய்ப்பு. என்னை தவிர பிறருக்கு அந்த பரிசோதனை கூடத்தில் கே. ஆர் அனுமதியிலாமல் நுழைய முடியாது. அதனால் என்னை பொறாமையோடு தான் சக மாணவர்கள் பார்பர். என் மீது அவர் வைத்த நம்பிக்கையை பொய் ஆக்க கூடாது என்று லேபிலேயே கிடந்தேன். மாலை மற்றும் இரவு நேரங்களிலும் விடுமுறை நாட்களிலும் என் பொழுது ஆராய்ச்சியில் கழிந்தது. இதற்கு உறுதுணையாக நாகமணி என்ற உதவி பேராசிரியரும் இருந்தார்.     

ஒரு முறை என் பிறந்த நாள் அன்று 5 ஸ்டார் சாக்லேட் வாங்கி எங்கள் துறையில் இருந்த 15 நம்பர்களுக்கு கொடுத்தேன். பேராசிரியர் கே. ஆர் அவர்களுக்கும் ஒன்று கொடுத்தேன். மதிய உணவு உண்ண Hostel லுக்கு சென்று விட்டு லேபிற்கு சென்று என் இருக்கைக்கு சென்ற பொழுது ஒரு ஆச்சிர்யம் காத்திருந்தது. ( ஆசிர்யர்களுக்கு மட்டும் அல்ல தன் மாணவர்களுக்கும் ஒரு இருக்கை லேபில் இருக்கும் மாறு கே. ஆர் பார்த்துகொண்டார் ). என் மேசையின் மேல் ஒரு பெரிய கேக் இருந்தது. நான் யார் இதை இங்கு வைத்து என்று கேட்டேன். அதற்கு லேபில் சிறப் ஆக  பணி புரியும் பெண் ஒருவர் " கே. ஆர் தான் வாங்கி உன் டேபிள் இல் வைக்க சொன்னார். நான்கு மணிக்கு அவர் வருகிறாராம். உன்னை கேக் வெட்டி லேபில் அனைவர்க்கும் தர சொன்னார் என்றார். நான் அடைந்த மகிழ்சிக்கு அளவேயில்லை. இது வரை வீட்டில் கூட அந்த பழக்கம் இல்லை என்பதால்  கேக் வெட்டியதில்லை. 

கே. ஆர் என்றாலே அனைவரும் பயந்து நடுங்குவர். ஆனால் அவர் என் மீது வைத்திருந்த பிரியம் அனைவர்க்கும் ஆச்சிரியம் அளித்தது. அவரிடம் என்னை கவர்தது நிர்வாக திறனுடன் கூடிய எளிமை. 

அவர் மட்டும் அல்ல. அப்பொழுது  உதவி பேராசிரியராக பணி புரிந்த நாகமணி அவர்களும், ஒரு சிறந்த நண்பனை போல பழகினார்.

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தன் மாணவனை நல்ல நிலைக்கு உயர்த்த அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

எனக்கு பதினொன்றாம் மற்றும் பனிரண்டாம் வகுப்பு எடுத்த நாவலர் நெடுஞ்செழியன் அரசு மேல்நிலை பள்ளியின் (பாண்டிசெரி)ஆசரியர்கள் அனைவருமே ( இரண்டு சாமிநாதன் ( physics அண்ட் Botany ), பார்த்தசாரதி ( ZoologY ) மற்றும் Chemistry ஆசிர்யர்களும் தங்கள் ஆசிரியர் பணியை மிக சிறப்பாக செய்தனர். 

என்னை நல்வழி படுத்திய ஆசிரியர்  அனைவர்க்கும் நன்றிகள் 

இத்தகைய நல்ல மனிதர்களுக்கு எதிர்மறையான மோசமான மனிதர்களை தான் நான் பிறகு சந்திக்க நேர்ந்தது. இருந்தாலும் நல்ல ஆசிரியர்களிடம் இருந்து நான் கற்ற நற்பண்புகள் எனக்கு இன்றும் உதவியாக இருகின்றது 


ஞாயிறு, 22 மே, 2011

அழுகாச்சி காவியம்

தமிழர்களே தமிழர்களே என்னை நீங்கள் கடலில் தூக்கி போட்டாலும் கட்டுமரமாக தான் மிதப்பேன். அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம்.
படுபாவிங்க இப்படி காலுல பாறங்கல்ல கட்டி தூக்கி போட்டுடிங்களே . இனி நான் இப்படி உங்களுக்கு உதவி செய்வேன் ? ஐயகோ 
-------------------------------------------------------------------------------------------------------

வைரமுத்துவின் புதிய படைப்பு அழுகாச்சி காவியம் - கருணாநிதி, ராஜாத்தி மற்றும் கனிமொழியின் உருக்கமான காட்சிகள் கொண்ட படைப்பு  
----------------------------------------------------------------------------------------------------------
ஒட்டு எண்ணிக்கை நாளன்று வடிவேலுவின் "Reactions "

காலை 9.30௦ மணி 

உஸ். அப்பா. இப்பவே கண்ணா கட்டுதே   

காலை 11.30௦ மணி 

பில்டிங் Strong கு . பேஸ்மட்டம் Weak கு  

காலை 12.30.௦ மணி 

நானா தான் வாய கொடுத்து மாட்டிகிட்டனா 

மதியம் 3.30௦ மணி 

எவளவு  நேரம் தான் வலிக்காத மாறியே நடிக்கிறது 

மாலை 5.30௦ மணி 

மாப்பு வச்சுடாங்கையா ஆப்பு.


அம்மா என்ன மன்னிசுடுங்கம்மா. எல்லாம் சும்மா பில்ட் up தாம. உள்ள எதுவும் இல்லமா 
  சனி, 21 மே, 2011

மின் சிக்கனம்
மின்சார சிக்கனம் விட்டுக்கும் நாட்டுக்கும் அவசியம். நம் தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக நாம் மின் தட்டுபாடால் அவதியுற்று வருகிறோம்.  வீட்டில் இரவில் மின்விசிறி சுழலவில்லை என்றாலோ AC நின்றுவிட்டாலோ நாம் தூக்கமும் அதனுடன் போய்விடுகிறது. இன்னொரு பக்கம் மின்கட்டணமும் எகிறியுள்ளது. எனவே மின்சாரத்தை  வீணாகாமல் சிக்கனமாக பயன்படுத்தும் சில முறைகள் இங்கு தரபட்டுள்ளது. இது பலருக்கு தெரியும் என்றாலும் இதனை பின்பற்றினால் மிகவும் நல்லது.
  


 கணினி : பெரும்பாலும் கணினியை பயன்படுத்திய பிறகு CPU வை மட்டும் அனைத்து விட்டு மானிட்டரை அணைக்காமல் விடுவது பலரது வழக்கம். வேறு வேலை பார்த்து கொண்டிருந்தாலும் அரகில் இருக்கும் கணினியை அணைக்க மனசு வராது. இதனை தவிர்கவேண்டும். மேலும் Tube Monitor ரை விட LCD monitor நான்கில் ஒரு பங்கு தான் மின்சாரத்தை பயன் படுத்தும் என்பதால் லகத் கு மாறிவிடுவது நல்லது 

மின்விளக்குகள் : குண்டு பல்புகளை முற்றிலுமாக பயன்படுத்த வேண்டாம். சற்று விலை அதிகம் என்றாலும் கபில் பல்புகளை ( Compact fluorescent bulbs) பயன்படுத்துங்கள். வீட்டில் பகல் நேரத்தில் தேவை இல்லாமல் மின்விளக்கை போடா வேண்டாம். இருட்டாக இருந்தால் ஜன்னலை திறந்து வைக்கவும். மாலை நேரத்திலும் ஆள் இல்லாத அறைகளில் விளக்கு எரியவேண்டாம். பூஜை அறையில் கூட zero watts பல்பு போதும். CFL பல்புகளை பயன்படுத்தினால் மின்சிக்கணம் வெகுவாக ஏற்படும்.     

AC :அதிக குளிர் ஊட்டும் நிலையிலோ அல்லது மிக குறைந்த குளிர் ஊட்டும் நிலையிலோ AC யை பயன்படுத்தவேண்டாம். மின் சிக்கனம் தரும் ஐது நாட்சதிரம் கொண்ட AC யை அதன் தயாரிப்பாளர்கள் தரும் சிக்கன பரிந்துரையை பின்பற்றி இயக்கலாம். அரை குளிர்தவுடன் இனி அச தேவை படாது என்ற நிலையில் AC யை அனைத்தும் விடலாம் . உங்கள் அறைக்கு தகுந்தவாறு சரியான AC (1.0.௦ டன், 1.5 டன் ) யை நிறுவவேண்டும். அறை AC  பயன்பாட்டிற்கு ஏற்றவாறு முழுமையாக மூடப்பட்டு இருக்க வேண்டும் . AC யை மறைக்குமாறு எந்த பொருளையும் வைக்க வேண்டாம்   

துணி துவைக்கும் இயந்திரம் :அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்கவும். கூடுமானவரை  முழு load உடன் இயக்கவும். Hot Mode இல் இயக்கினால் அதிகஅளவு மின்சாரம் செலவாகும். ஓர் இரண்டு துணிகள் இருந்தால் கைகளால் துவைத்து விடவும். துணியில் உள்ள அழுக்குக்கு தகுந்தவாறு துவைக்கும் நேரத்தை குறைத்து வைத்து கொள்ளவும். நல்ல இயந்திரமாக பார்த்து வாங்கவும்        

தொலைக்காட்சி : தொலைக்காட்சி பெட்டிக்கு செல்லும் மின் இணைப்பையே பயன்படுத்தத பொழுது எடுத்து விடவும் . இது மிக கஷ்டமான காரியமாக தோன்றும். பழக்கபட்டால் சரியாகிவிடும். இரவில் Cable Wire ரையும் ஒரு பாதுகாபிர்காக எடுத்துவிடுங்கள்    

வாட்டர் ஹீட்டர் : தேவையான அளவு மட்டும் தண்ணீரை சூடாக்கி கொள்ளவும். அஹிகமாக கொதிக்கும் நிலைக்கு சூடாக வேண்டாம். அடுத்தவர் குளிக்க செல்லும் வரை ஹீட்டர் ரை ON செய்து வைக்க வேண்டாம். Theromostat உள்ள ஹீட்டர் ராக வாங்கவும் 

குளிர்சாதன பெட்டி : சூடான பால், சூடான சமைத்த பொருட்களை சற்று ஆரிய பிறகே Fridge இல் வைக்க வேண்டும்   
நீர் மோட்டார் : தண்ணீர் மேல் நிலை தொட்டி இருந்தால் தண்ணீரை மிக சிக்கனமாக பயன்படுத்தவும். அதனை நீர் விரயத்தை தடுபதுடன் அடிக்கடி மோட்டார் பயன்படுத்துவதையும் தடுக்கலாம் 

மின்விசிறி : தேவையான பொழுது  மட்டும் பயன்படுத்தவும் 

வியாழன், 19 மே, 2011

என்டோசல்பான்- தடை தேவையா ? சிந்திப்பீர்


C9H6Cl6O3S


எண்டோசல்பான் என்ற பூச்சிகொல்லி மருந்தை தடை செய்ய கூக்குரல் எழுந்த பொழுதே மனதில் ஒரு சந்தேக விதை தோன்றியது. ஒரு விவசாய பட்டாதாரியாகவும் ஒரு உர நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதியாகவும் வேலை பார்த்த அனுபவம் இப்படி நினைக்க சொன்னது.

இன்று விவசாய பயன்பாட்டிற்கு எண்ணற்ற பூச்சிகொல்லிகள் வந்துவிட்டன. அதுவும் பன்னாட்டு கம்பனிகள் இந்தியாவில் தங்கள் விற்பனையை தொடங்கியவுடன் சந்தைக்கு புதிது புதிதாக பூச்சிகொல்லிகள் வர ஆரம்பித்தன. புதிய ரசாயன கூறுகளுடன் உள்ள பூச்சி கொல்லிகள். இரண்டு அல்லது மூன்று ரசாயனகளை கொண்ட பூச்சி மருந்துகள் ( பாரசிட்டமால் மற்றும் nimusulide இரண்டும் கலந்த மாத்திரையை போல ) வித விதமான Brand Name ( சந்தை பெயர்) களில் சந்தையில் விற்பனைக்கு வந்தன. உர மற்றும் பூச்சிமருந்து கடைகளில் வித விதமான கவர்சிகரமான வண்ணமிகு  டப்பாக்கள் மற்றும் பாட்டில்களில் அடைகபட்டிருக்கும் இந்த பூச்சிமருந்துகளை கண்டு நான் வியப்படைந்ததுண்டு. வருடா வருடம் புதிய புதிய பூச்சிமருந்துகள். எவ்வளவு தான் தாங்கும் இந்த தேசம் ?  


ஆனால் எத்தனை இரகங்கள் வந்தாலும் காய்கறி மற்றும் நெல் போன்ற உணவு பயிர்களுக்கு சர்வரோக நிவாரணி போல செயல்பட்டு வந்தவை மோனோ க்ரோடோபாஸ் ( Monocrophos - இது ஊடுருவிபாயும் தன்மை கொண்ட அர்கனோ போஸ்பராஸ் வகையை சார்ந்தது ) மற்றும் தற்பொழுது பிரச்சனைக்கு உண்டாகியுள்ள எண்டோசல்பான் ( தொடு நஞ்சு  வகையை சார்ந்த அர்கனோ க்ளோரின் பூச்சிமருந்து ). விவசாயிகளுக்கு இதன் ரசாயன பெயர் தெரியாவிட்டாலும், தங்கள் பகுதியில் பிரபலமாக இருக்கும் இந்த பூச்சிகொல்லிகளின் சந்தை பெயர் தெரியும் ( Monocil , Nucacron Endocel , thiosulfan ). மற்ற பூச்சிமருந்துகளை  விட விளையும் குறைவு. 

எனக்கு சந்தேகம் எழுந்தது இதனால் தான். எனவே இது குறித்து கொஞ்சம் வலைபதிவுகளை யும் செய்திகளையும் கணினியில் பார்த்த பொழுது சந்தேகம் உறுதியானது.
இதன் பின்னால் வழக்கம் போல வளர்ந்த நாடுகளை சார்ந்த பன்னாட்டு நிறுவனங்களின் சதி உள்ளது. 
கடந்த ஏப்ரல் 29 , 2011  இல் Geneva வில் நடந்த Stockholm Convention இல் என்டோசல்பான் தயாரிப்பு மற்றும் பயன்பாட்டை நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது. மேலும் என்டோசல்பானுக்கு மாற்றாக புதிய மருந்தை கண்டுபிடிக்க வளரும் நாடுகளுக்கு நிதி உதவி அள்ளிகவும் முடிவு செய்யப்பட்டது . இந்த மாநாட்டில் கலந்து கொண்ட 173 நாடுகளும் இந்த முடிவுக்கு கட்டுப்படவேண்டும். ஆனால் அதற்கு ஐந்து வருடவிதிவிலக்கு (அவகாசமும்) தரபட்டுள்ளது. இந்த விதிவிலக்கின் படி ௪௪ பூச்சிகளுக்கு எதிராக 22 பயிர்களில் மட்டும் இதனை பயன்படுத்த அனுமதியளிகபட்டுளது. பருத்தி, சணல், காப்பி, டி, புகையிலை, கொத்தவரை , பீன்ஸ் , தக்காளி , வெண்டை, கத்திரிக்காய், உருளை, மிளகாய், ஆப்பில், மா, பயிறு வகை செடிகள் , மக்கா சோளம், நெல் , கோதுமை , நிலகடலை மற்றும் கடுகு ஆகிய பயிர்களுக்கு இதனை பயன்படுத்தலாம்.

இருந்தாலும் என்டோசல்பான் தடை குறித்து நம் நாடு தான் முடிவெடுக்க வேண்டும். அத்தகைய முடிவை எடுக்க வற்புறுத்தியே சில நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன   
வானுர்தி மூலம் என்டோசல்பான் 

            


முதன் முதலாக ஒரு தொண்டு நிறுவனம் ( Centre for Science and Environment ) வட கேரளா மாநிலத்தில் உள்ள காசர்கோடு மாவட்டத்தை சார்ந்த சில கிராமங்களில் என்டோசல்பான் பாதிப்பு பற்றி செய்தி வெளியிட்டது.  அதன் சொந்த பத்திரிக்கையான Down to Earth (28 .02 .2001 ) இதழில் இந்த செய்தி வெளியானது. கேரளா அரசின் Plantation Corporation of Kerala (PCK )விற்கு சொந்தமான முந்திரி காடுகளில் வானூர்தி மூலம் என்டோசல்பான் தெளிக்கபட்டதால் அருகில் இருந்த கிராம மக்களுக்கு உடல் குறைபாடு மற்றும் மன நோயுடன் குழந்தைகள், கான்செர் , குழந்தை இறப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டதாக செய்தி வெளியிட்டது. பின்னர் பல செய்தி தாள்கள் மற்றும் தொலைகாட்சிகள்  இது குறித்து செய்தி வெளியிட்டன.

தேசிய மனித உரிமை கழகம் இதன் அடிப்படையில் இந்திய மருத்துவ கழகம் உள்ளிட்ட பல நிருவனகளை இது குறித்து ஆய்வு மேற்கொள்ள செய்தது. இந்திய மருத்துவ கழகம் தனக்கு கீழ் செயல்படும் National Institute Of Occupational Health (NIOH )என்ற நிறுவனத்திடம் ஆய்வை ஒப்படைத்தது   

காசர்கோட்டில் தனியார் முந்திரி தோப்புகளை தவிர கேரளா வனதோட்ட நிறுவனத்திற்கு சொந்தமாக மூன்று முந்திரி தோட்டங்கள், மொத்தமாக 4500 ha பரப்பளவில் இருந்தன,. இந்த முந்த்ரிகாடுகளில் என்டோசல்பான் கடந்த இருபது வருடாங்களாக பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்த முந்திரி காடுகளை சுற்றியுள்ள கிராமங்களில் முக பக்கவாதம், மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள், கை கால் ஊனமுட்ட்ற குழந்தைகள், இரத்த மற்றும் ஈரல் புற்று நோய்கள் , மலட்டுத்தன்மை உடையவர்கள், ஹோர்மோன் பிரச்சனை, தோல் வியாதிகள் போன்றவை வழக்கத்துக்கு மாறாக அதிக அளவில் இருந்தன    
Center for Science and Research தன் ஆராய்ச்சியில் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தத்தில் 108 முதல் 196 ppm வரை என்டோசல்பான் இருந்ததை காஸ் Chromotography பரிசோதனை மூலம் உறுதி செய்ததாக கூறியது ( ஆனால் அந்து என்டோசல்பான் தான் என்று காஸ் Chromotography மூலம் உறுதி செய்ய  முடியாது என்பது இதை எதிர்பவர்களின் வாதம். அதில் உண்மையும் உண்டு. ஆனால் Fredrick Institute of Plant Protection and Toxicology (FIPPAT) என்ற அரசால் நியமிக்கப்பட்ட நிறுவனம் ௦.001 ppm முதல் ௦.012 வரை மண்ணிலும் முந்திரி இலைகளில் ௦.04 முதல் 2.8 ppm வரை தான் என்டோசல்பான் இருந்ததாக அறிக்கை அளித்தது.

NIOH அமைப்பு இது குறித்து ஒரு முழுமையான ஆய்வை தாங்கள் மேற்கொண்டதாகவும், அதன் அடிப்படையில்  கீழ்கண்ட முடிவுகளையும் பரிந்துரைகளையும் அரசுக்கு செய்வதாகவும்  ஒரு அறிக்கை அள்ளிதது

 1. கேரளா அரசின் முந்திரி தோட்டம் மலைப்பாங்கான இடத்தில உள்ளது. தொடர்ச்சியாகவும் இல்லை. இடையிடையே மக்கள் வாழும் குடியிருப்புகள் கிராமங்கள் உள்ளன , இது வானுர்தி மூலம் பூச்சிமருந்து தெளிக்க சாதகமான அம்சம் இல்லை 
 2. முந்திரி தோட்டங்களை சுற்றி பல கிணறுகள் உள்ளன. உயர்வான பகுதியில் உள்ள முந்திரி காடுகளில் இருந்து மழை நீர் பொது மக்கள் பயன்படுத்தும் கிணற்றை அடைகிறது. மேலும் காசர்கோடு டவுன் மற்றும் பஞ்சாயத்துகளுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் சந்திரகிரி ஆறுக்கு இந்த முந்திரிகாடுகளின் வழியே வரும் கிளை நதிகளின் நீர் தான் ஆதாரம். இதுவும் வானுர்தி மூலம் பூச்சிமருந்து அடிக்க இயலாது என்பதையே தெரிவிக்கிறது.  
 3. மனித குடியிருப்பு பகுதிகள் முந்திரிகாடுகளுக்குள்ளும்  அமைந்துள்ளன. பள்ளிகூடங்களும் அமைந்துள்ளன. கால்நடைகளும் மேய்ச்சள்ளுக்கு முந்திரிகாட்டை தான் பயன்படுத்துகின்றன. அனைத்து பூச்சி மருந்து உற்பத்தியாளர்களும் இந்த கருத்தை ஏற்று கொண்டனர் 
 4. PCK வானுர்தி .பயன்புத்தியதிலும் எந்த விதிமுறையையும் பின்பற்றவில்லை என்று தெரிய வந்தது. பூச்சிமருந்து தெளித்தல் சரியாக மேற்பார்வையிடபடவில்லை. முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை 
 5. 1981 தில்  இருந்து என்டோசல்பான் மட்டுமே பயன்படுத்தபட்டுளது . சுழற்சி முறையில் பூச்சிமருந்துகளை பயன்படுத்தவேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப்படவில்லை. இதற்க்கு அதன் குறைவான விலையே காரணம் என PCK சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது 
 6. மட்டற்ற எந்த பூச்சிமருந்தை போலவே என்டோசல்பானும் அதிக பயன்பாட்டின் காரணமாக மனிதனுக்கும் விலங்கிற்கும் Acute Toxicity யை  ஏற்படுத்தும். ஆனால் நீண்ட கால பயன்பாட்டின் காரணமாக Chronic Toxicity என்டோசல்பான் பயன்பாட்டினால் வரும் என்பது இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்றாலும்,அப்படி நிகழ கூடிய வைப்பு இருகின்றது என்பதை நாம் நிராகரிக்க கூடாது.   
 7. முந்திரி தோட்டத்தை ஒட்டிய கிராம பஞ்சாயத்துகளில் சுகாதார பிரச்சனை இருக்கின்றது என்பது உண்மை. ஆனால் அதற்கு என்டோசல்பான் தான் காரணம் என்று உறுதிபட  சொல்லமுடியாது . ஆனால் அதை மறுக்கவும் முடியாது. இந்த இடங்களில் சுற்று சுழலை மாசு படுத்தும் தொழிற் சாலைகளோ அல்லது வாகன போக்குவரத்தோ இல்லை. நீண்ட காலமாக ஒரே பூச்சிமருந்தை எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் தவிர்கபடவேண்டிய வானூர்தி மூலம் தெளிக்க பட்டதே தவறான ஒரு விசயமாக இருக்கின்றது. நேரடி  ஆதாரம் இல்லை என்ற காரணத்திற்காக  இதனை ஒதுக்கிவிடமுடியாது . எனவே என்டோசல்பான் காரணமில்லை என்றால் அதனை நிரூபிக்கவேண்டிய பொறுப்பு பூச்சிமருந்து தயாரிபாளர்களுக்கு தான் உண்டு. பொதுமக்களுக்கு என்டோசல்பான் தான் கரணம் என்று நிருபிக்கும் பொறுப்பு இல்லை .
மேற்கண்ட முடிவுகளின் அடிப்படையில் கீழ்கண்ட பரிந்துரைகள் செய்யபடுகிறது

 1. வானூர்தி மூலம் பூச்சி மருந்துகளை முந்திரி காடுகளில் தெளிப்பதை பக் காசர்கோடு மாவட்டத்தில் முழுவதுமாக நிறுத்த வேண்டும்.
 2. PCK தோட்டங்களில் என்டோசல்பான் பயன்பாட்டை ஐந்து வருடங்களுக்கு முற்றிலுமாக நிறுத்த வேண்டும் 
 3. அதிகம் பாதிக்க பட்ட Enmakaje Panchayath இல் உள்ள முந்திரி காடுகளில் எந்த பூச்சு மருந்தும் பயன்படுத்த படகூடாது . இந்த காலகட்டத்தில் முந்திரியை தாக்கும் தேயிலை கொசுவை பற்றியும் அதனால் உண்டாகும் உற்பத்தி பாதிப்பை பற்றியும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படவேண்டும் 
 4. PCK யின் பிற முந்திரி தோட்டங்களில் விவசாய ஆராய்ச்சி நிலையங்களின் பரிந்துரை மற்றும் ஆலோசனை படி என்டோசல்பான் பயன்படுத்தலாம் .
 5. பூச்சி மருந்து நிர்வாகம் மற்றும் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மிகவும் விஞ்ஞான பூர்வமாக PCK செய்யவேண்டும் 
 6. ஒருங்கிணைந்த பூச்சி கட்டுப்பாடு குறித்த ஆராய்ச்சிகளை PCK மேற்  .கொள்ள வேண்டும்.   
 7. தேயிலை கொசு எதிர்ப்பு தன்மை கொண்ட முந்திரி இரகங்களை உருவாக்க முயற்சிகள் எடுக்கப்படவேண்டும் 
 8. என்டோசல்பானுகும் அங்கு நிலவும் சுகாதார கெடுக்கும் ஆதாரபூர்வமான உறவை நிரூபிக்க மிகவும் பாதிக்க பட்ட Padre கிராமம் மற்றும் பிற கிராமங்களில் அறிவியல் பூர்வமான பல ஆராய்சிகளை நிபுணத்துவம் கொண்ட விஞ்ஞானிகளை கொண்டு செய்ய வேண்டும். அங்கு நிலவும் சுகாதார சுழல் குறித்து முழுமையான அடிப்படை தகவலை எடுக்க வேண்டும். முந்திரி காடுகளில் பணிபுரிவோரையும் இதில் உள்ளடக்க வேண்டும்.
 9. சுகாதார பிரசானை உள்ளவர்கள் ஏழைகளாக இருபதால் அவர்களுக்கு சிறப்பு மருத்துவ உதவிகளை அரசாங்கம் செய்ய வேண்டும்  
 10. மேற்குறிப்பிட்ட அனைத்து நடவடிக்கைகளையும்  எடுத்து பூச்சி மருந்து குறித்து மக்களிடம் உள்ள பயத்தை போக்கவேண்டும் . 
 11. பூச்சிமருந்து பயன்படுத்துதல் சம்மந்தமான அனைத்து விவரங்களையும் கிராம பஞ்சாயதுகள் அறியும் படி செய்ய வேண்டும்  
NIOH ஆராய்ச்சி முடிவு என்டோசல்பான் பயன்படுத்திய  முறையில் உள்ள தவறை தான் மீண்டும் மீண்டும் சுட்டிகாட்டுகிறது. தவறு என்டோசபானில் இல்லை. அதனை பயன்படுத்திய முறையில் தான் என்றும் முடிவுக்கு வர இந்த அறிக்கையே சான்று. மேலும் மனித உடல் பாதிப்பிற்கும் என்டோசல்பானுகும் உள்ள நேரடி தொடர்பு நிரூபிக்க படவில்லை.

நம் தமிழ்நாட்டிலும் விழுப்புரம் மாவட்டத்தில் பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிராமங்களில் என்டோசல்பான் தான் பெரும் அளவிற்கு முந்திரி காடுகளில் அடிக்க படுகிறது. மேலும் மா மரங்களுக்கும் பூக்கும் தருணத்தில் என்டோசல்பான் பயன்படுத்த படுகிறது. பூச்சை கட்டுபடுத்துவதுடன் பூ உதிர்வதை தடுத்து அதிக மகசூல் எடுக்க உதவுகிறது என்பதே பூக்கும் தருணத்தில் என்டோசல்பானை பயன்படுத்துவதற்கான காரணம். பயன்படுத்துவது எளிது, விலையும் குறைவு, நீண்ட காலமாக   நல்ல பலனை தருகிறது என்பது என்டோசல்பான் பயன்படுத்த விவசாயிகள் உணர்ந்த காரணம். இந்த பகுதிகளில் எல்லாம் காணப்படாத உடல் நல குறைப்பாடு காசர்கோடு மாவட்டத்தில் மட்டும் இருகின்றது என்றால் குறை என்டோசல்பான் என்ற பூச்சி மருந்தில் இல்லை. இதற்கு எந்த வித ஆராய்ச்சியும் தேவையில்லை. கண்முன்னே தெரியும் தகவல்களை சரியாக சேகரித்து சரி பார்த்தால் போதும்.

இருந்த போதிலும் இதற்கு முன் என்டோசல்பான் குறித்து செய்த சில ஆராய்ச்சிகளின் முடிவு என்ன சொல்கிறது என்று பாப்போம்  
The EFSA Journal (2005) 234, 1 - 31 என்ற விஞ்ஞான இதழில் உணவு சங்கிலியில் மாட்டு தீவனத்தில் என்டோசல்பான் இருபதால் ஏற்படக்கூடிய பாதிப்பை பற்றிய ஆராய்ச்சியில் கீழ்கண்ட முடிவுகள் வெளிவந்தன 
 1. மற்ற அர்கனோ க்ளோரின் வகையை சார்ந்த பூச்சு மருந்துகளை விட என்டோசல்பான் கொழுப்பு சத்துடன் எளிதில் இணையாது. அதனால் உணவு சங்கிலியில் அது சேர்வதோ கூடிகொண்டே இருப்பதோ ( Bioaccumulation and Biomaginification ) பெருமளவு சாத்தியம் இல்லை 
 2.  என்டோசல்பான் நம் குடல் பகுதியில் இருந்து எளிதில் உறிஞ்சப்பட்டு கிட்னி மற்றும் லிவர் ஆகிய இடங்களுக்கு அதிகளவிலும் பிற இடங்களுக்கு குறைவாகவும் செல்லும்.
 3. என்டோசல்பான் உணவிலும் தீவனதிலும்  மிக குறைவான அளவே காணப்படும் 
 4. என்டோசுல்பான் அதிக அளவில் இருந்தால் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் லிவர் கிட்னி பாதிப்பு ஏற்படும், நோய் எதிர்ப்பு சக்தியில் மாறுதல் ஏற்படும் என்பது நிரூபிக்க பட்ட உண்மை   எண்டோ சல்பான் எந்த அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை சில ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன 
எலிகள் : 30௦ ppm உணவில் அல்லது 1.5 mg/kg bw

 நாய் :0.75 mg/kg bw day

 மனிதன் : 0.008 mg/kg bw 

கேன்சர் உருவாகும் தன்மை என்டோசல்பானுக்கு இல்லை IPCS, 1998a)

நன்மை செய்யும் தேனீக்களுக்கு என்டோசல்பான் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை 

உலக சுகாதார நிறுவனம் பூச்சிமருந்துகளின் நச்சு தன்மையை பொருத்து அவைகளை வகைபடுத்தியுளது. அதன் படி என்டோசல்பான் மிக நச்சு தன்மை வாய்ந்த பூச்சிகொல்லி இல்லை. மிக நச்சு தன்மை வாய்ந்த பூச்சிகொல்லி மருந்து பாட்டிலில் சிவப்பு நிற முக்கோணமும் ( class 1), class 2 ரக பூச்சிகொல்லி வகையை சார்ந்த என்டோசல்பான் பாட்டிலில் மஞ்சள் நிறமும், பாதுகாப்பான பூச்சிகொல்லிகளின் பாட்டிலில் பச்சை நிற முக்கனமும் இருக்கவேண்டும். அதன் படி என்டோசல்பான் பாட்டிலில் இது நாள் வரை மஞ்சள் நிற முக்கோணமே இடம்பெற்று இருக்கிறது.

Pesticide Manufacturers and Formulators Association of India (PMFAI ) என்டோசல்பானை முடக்க Eurpeon Union சதி செய்கிறது என்ற குற்ற சாட்டை முன்வைக்கிறது. உலக அளவில் என்டோசல்பான் உற்பத்தி மற்றும் விற்பனையில் 70௦ % பங்கை இந்திய கம்பனிகளே வைத்திருகின்றன. என்டோசல்பானை விட விஷ தன்மை வாய்ந்த பல பூச்சிமருந்துகள் இருந்தும் என்டோசல்பான் மட்டும் குறிவைக்கபடுவது நிதர்சனமான உண்மை.  
என்டோசல்பான் தடை செய்யப்பட்டுவிட்டால் பன்னாட்டு கம்பனிகளின் விலை அதிகமான பூச்சிமருந்துகளை தான், தாங்கள் இது வரை பயன்படுத்தி வந்த என்டோசல்பானுக்கு மாற்றாக விவசாயிகள் பயன்படுத்த நேரிடும். 

அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. நாம் பூச்சிகளுக்கு நஞ்சாக  இருக்கும் பூச்சி மருந்தை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் ஏன் கெடுதல் வராது ? 

நான் பருத்தி தோட்டத்தில் பூச்சி மருந்தை தெளித்துக்கொண்டே செல்லும் மருந்து அடிபவர்கள் சிலர், மருந்து அடித்து கொண்டிருக்கும் பொழுதே விஷம் தனக்குள் ஏறி மாண்டு போன செய்தி பலவற்றை கேள்விபட்டு இருக்கிறேன்.

ஒரு பக்கம் அவரை கையை பறித்து கொண்டே மறு பக்கம் பூச்சி மருந்தை தெளிக்கும் செயலை செய்யும் விவசையை கண்டிருக்கிறேன்.

நாம் உண்ணும் அனைத்து காய்கறிகளிலும் ஏதோ ஒரு பூச்சி மருந்தின் மிச்சமும் எச்சமும் இருந்துகொண்டு தான் இருக்கும் 

இயற்கை விஞ்ஞானி என்று சொல்லப்படும் நம்வாழ்வார் போன்றவர் கூட இந்த பொய்யை நம்பியது எப்படியோ ?

ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்லுங்கள். அது எத்தகைய பெரிய பொய்யாக இருந்தாலும் சரி. மக்கள் கண்டிப்பாக அதனை உண்மை என நம்ப ஆரம்பிப்பார்கள். இது ஹிட்லரின் மந்திரியான Henry Gobbells அனுபவம் தந்த படிப்பினை.


          
   என்டோசல்பான்- தடை தேவையா ? சிந்திப்பீர் 

புதன், 18 மே, 2011

இது தான் அந்த ஜோசியர் சொன்ன விபத்தா ? என்ன கொடுமை டா சாமி


சும்மா ஒரு விளக்கத்திற்கு இது என் படம் இல்லை 

பொதுவாக நான் ஜோசியத்தை நம்புவது இல்லை. ஒரு நாள் காலை நான் அலுவலகம் கிளம்பிகொண்டிருக்கும் பொழுது காழியூர் நாராயணன் ஏதோ ஒரு தொலைக்காட்சி சேனலில் ராசி பலன் சொல்லிகொண்டிருந்தார். எத்தேச்சையாக நான் அதை பார்த்த பொழுது என் ராசிக்கு அன்றைய தினம் வாகன விபத்து நடக்க வாய்ப்பு உள்ளது என்றும் வாகனத்தில் செல்லும் பொழுது கவனமாக செல்ல வேண்டும் என்றும் கூறினார். ஹ்ம்ம் எப்படி எல்லாம் சொல்றாங்கபா என்று எண்ணியபடி என் இருசக்கர வாகனத்தை எடுத்து கொண்டு கிளம்பினேன். நூறு மீட்டர் தூரம் வரை கூட சென்றிருக்க மாட்டேன். சாலை ஓர மரத்தில் இருந்து புறப்பட்டு வந்த ஒரு கரு வண்டு நேராக என் உதட்டை நோக்கி வந்தது. சற்று உரசி விட்டு போனது போல தான் இருந்தது. ஆனால் சிறிது நேரத்தில் என் மேல் உதட்டில் பயங்கரமான வலி. என்னையும் அறியாமல் என் கண்களில் நீர். உடனே வீட்டுக்கு திரும்பினேன். முக கண்ணாடியில் பார்த்த பொழுது மேல் உதடு வீங்கி இருந்தது தெரிந்தது. சிறிது நேரத்தில் பல மடங்கு வீங்கி மேல் உதடு மட்டும் முகத்தில் இருந்து தனியாக தொங்கியது போல இருந்தது.  அலுவலகத்திற்கு விடுமறை சொல்லிவிட்டு மருத்துவமனை சென்று ஒரு TT ஊசி போட்டுக்கொண்டேன். கிறுத்துவ மருத்துவமனை அது. அங்கு இருந்த மருத்துவர் இரண்டு நட்ட்களுக்கு மாத்திரைகளும் எழுதி தந்தார். ஒரு நாள் முழுவதும் இருந்த வீக்கம் மறு நாள் தான் சரியானது.

இது தான் அந்த ஜோசியர் சொன்ன விபத்தா ? என்ன கொடுமை டா சாமி 

               

மின்சாரம்

நேற்று எங்க ஏரியாவில் பவர் Shut down . காலையில் ஒன்பது மணிக்கு போன கரண்ட் மாலை எட்டரைமணிக்கு தான் வந்தது. என் மகள் கரண்ட் வந்தவுடன் தொலைகாட்சியை போட்டு சுட்டி டிவி பார்க்க ஆரம்பித்தாள். நான் சிறிது நேரம் கழித்து என் பெண்ணிடம் ஜெயலலிதா பற்றி என்ன நியூஸ் என்று பார்த்துகொள்கிறேன். கொஞ்சம் சேனலை மாற்று என்றேன். அவள் உடனே " ஜெயலதிதா வந்ததில் இருந்து சுத்தமா கரண்டே வரலன்னு சொல்ல போறாங்க' என்று சொல்லிவிட்டு முந்தியாவது கொஞ்சம் கரண்ட் வந்தது அப்பா. இன்னைக்கு full லா கரண்ட் இல்லை என்றாள்.

நான் சிரித்துவிட்டேன். ஹ்ம்ம் ஆறு வயது மகளுக்கு கூட அரசியலை புரியவைத்து விட்டது இந்த கரண்ட் பிரச்சனை

               

செவ்வாய், 17 மே, 2011

அரசியல் மாற்றம்

தமிழகத்தில் ஒரு அரசியல் மாற்றம் வந்துள்ளது. மிகவும் அவசியமான மாற்றம் சரியான தருணத்தில் வந்துள்ளது. மக்கள் இலவசதிற்கும் பணத்திற்கும் விலை போக மாட்டார்கள் என்பதை நெத்தியடியாக மக்கள் உணர்தயுள்ளர்கள்.

தான் செய்யும் தவறுகளை பற்றி கேள்வி கேட்டால் அல்லது பத்திரிகைகளில் எழுதினால் மிக கேவலமாக பேசுவதையும் பிரச்சனையை தன் நா வன்மையின் மூலம் திசைதிருப்புவதையும் கருணாநிதி செய்து வந்தார். பணத்தின் மீதும் பதவியின் மீதும் அவருக்கு இருந்த ஆசை தள்ளாத வயதிலும் கூடி கொண்டே இருந்தது பதவியும் பணமும் எவ்வளவு ஆபத்தான விஷயம் என்பதை உணர்த்தியது. தமிழகத்தையே தன் குடும்ப சொத்தாக கருதி பதவி அதிகாரம் பணம் முதலியவற்றை பயன்படுத்தி அனைத்து பணம் கொழிக்கும் துறையிலும் மூக்கை நுழைத்து அனைவரின் எதிர்ப்பையும் சம்பாதித்துக்கொண்டார். Spectrum ஊழலில் கலைஞர் டிவி கு நேரடி பங்கு வந்ததை சகித்துகொள்ளவே  முடியவில்லை. இது கருணாநிதி குடும்பம் செய்த ஊழலில் ஒரு (௦.0001 % ?)சதவிகிதம் தான்.

மதுரையில் ஒரு ரௌடி ராஜ்யமே நடந்தது. கடந்த ஐந்து வருட காலத்தில் நான்கு கலக்டர்கள் மாற்றப்பட்டனர் ( சகாயத்தை தவிர்த்து). அழகிரியின்  அடிமையாக செயல்பட முடியாத காரணத்தினால்.

அனைத்துக்கும் ஒரு முற்றுப்புள்ளி.

ஜெயலிதா ஒரு சிறந்த நிர்வாகி. கடந்தகாலத்தில் அவசர பட்டு சில முடிவுகளை எடுத்து பல இழப்புகளை சந்தித்தார். தற்பொழுது அந்த தவறை உணர்துள்ளார் என்று நம்புவோம். அவர் பதவி ஏற்றதில் இருந்து நடந்த சில நிகழ்வுகள் அவர் பக்குவம் அடைதுள்ளதை காட்டுகிறது. சரியான நபர்களை நம்பி சரியான முடிவுகளை எடுத்தால் இந்த ஆட்சி தமிழர்களுக்கு மிக சிறப்பாக அமையும் என்று நம்புவோம்    
    

ஒரு குழந்தையின் பக்குவம் -2

ஒரு முறை என் குழந்தை நக பூச்சை ( நைல் போலிஷ்) எடுத்து விளையாடிகொண்டிருந்த பொழுது அது கீழே சிந்திவிட்டது. உடனே அவள் தன விரல் கொண்டு சிந்திய நக பூச்சை எடுத்து தரையில் முன்று முகங்களை வரைந்தாள். முகத்திற்கு ஒரு வட்டம், கண்களுக்கு இரண்டு புள்ளிகள் மூக்கிற்கு ஒன்று. வாய்க்கு இரண்டு முகங்களுக்கு Upward Curve . ஒரு முகத்திற்கு downward Curve. இது என்ன படம் என்று நான் கேட்டேன். உடனே அவள் உன் படம் அம்மா படம் மற்றும் என் படத்தை வரைந்திருக்கிறேன் என்றாள். பிறகு smiling faces நீயும் அம்மாவும் sad face நான் என்றாள். ஏன் அப்படி என்று கேட்டேன் நான்.

முன்னாடி அம்மாகிட்ட நீ சண்டை போட்டுக்கிட்டு இருப்பே. இப்ப சண்டை போடுறது இல்லை. அதனால் அம்மா Smiling face உடன்   இருக்கிறாள் என்றாள்.

அதே போல அம்மா உன்கிட்ட முன்னாடி சண்டை போடுவாங்க. இப்ப சண்டை போடுறது இல்லை அதனால நீயும் சந்தோஷமா இருக்கே என்றால் என் மகள்.  

சரி நீ ஏன் சோகமாக இருக்கே என்றேன்.

நான் சுட்டி டிவி பார்க்க விடாமல் ஆபீஸ் விட்டு வந்ததும் remotai நீ எடுத்து சேனல மாத்துறே அதனால நான் சோகமாக இருக்கேன் என்றது.

நாங்கள் சண்டையிட்டது குழந்தையின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது என்பது தெரிந்தது. மேலும் அலுவலகம் விட்டு வந்ததும் தொலைகாட்சியை பார்க்கும் எண்ணத்தை விட்டோழிதேன். அனால் வெகு நேரம் தொலைகாட்சியை பார்க்க கூடாது என்பதை அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக உணர்த்தி வருகிறேன்.அவளிடம் நான் செலவிடும் நேரத்தையும் அதிகரித்துளேன்.
                             

வழிகாட்டும் புத்தகம்Tao Te Ching என்பது சீனாவில் 2500 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட எண்பத்தி ஒரு பாடல்களை கொண்ட ஒரு தொகுப்பு.  இதில் சொல்லப்பட்ட கருத்துகள் "Taoism " என்ற பெயரில் வழங்கபடுகிறது. TAOஎன்பது " The Way" என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்கபட்டுள்ளது. இந்த வழி என்பதை, நாம் கடவுளின் வழி என்றும், இயற்கையின்  வழி என்றும் வாழ்வதற்கான வழி என்றும் எப்படி வேண்டும் என்றாலும் நம் விருப்பபடி அர்த்தம் கொள்ளலாம்.அத்தனையும் இதில் கூறப்பட்டுள்ள கருத்துகளுக்கு  பொருந்தும். The Book Of The Way and Virtue" என்று ஆங்கிலத்தில் நாம் அர்த்தம் கொள்ளலாம். Virtue என்பதற்கு நல்லொழுக்கம், இரக்கம், பொறுமை, அன்பு மற்றும் ஆற்றல் என்று பல அர்த்தங்கள் உண்டு. இது அனைத்தும் கூட இதில் சொல்லப்பட்டுள கருத்துகளுக்கு பொருந்தும். TAO Te Ching என்ற புத்தகம் ஒன்று Rupa publishing company ஆல் ஆங்கிலத்தில் வெளியிடபட்டுளது. இதனை எழுதியவர் Derek Lin. சீன மொழியின் மூல நூலின் சாரம் குறையாமல் அதன் பாடல்களை அப்படியே தகுந்த அர்த்தத்துடன் மொழிபெயர்கப்பட்டு வெளிவந்துள்ளது. பெரும்பாலும் கடினமான, பல பொருட்களை தரும் ஆன்மீக நூல்களை மொழிபெயர்க்கும் பொழுது மொழிபெயர்ப்பு என்ற பெயரில் தான் புரிந்துகொண்ட அர்த்தங்களை தெரிவிப்பது பலரது வழக்கம் என்று ஆசிரியர் கூறுகிறார்.   ஆனால் இந்த நூலில் பாடல்கள் அப்படியே மொழிபெயர்க்கப்பட்டு அதன் எதிரே உள்ள  பக்கத்தில் அதன் விளக்கம் தரபட்டுள்ளது. அதனால் நாம் குழப்பம் இல்லாமல்  படிக்கலாம்.

எந்த மதத்தையும் சாராமல் பொருள் சார்ந்த புற உலகத்தின் தன்மையையும் மனிதனின் அக உலகத்தின் தன்மையையும் எடுத்து சொல்கின்றன இந்த பாடல்கள்.  
இதனை இயற்றியவர் யார் என்று சரியாக தெரியாத காரணத்தினால் இது பலர் எழுதிய பாடல்களின் தொகுப்பு என்று ஒரு சிலரும் LAO TZU என்பவர் தான் இதனை முதலில் எழுதினார் என்றும் இரு வேறு கருத்துகள் நிலவினாலும் 2500 ஆண்டுகள் தாண்டி யாரும் இதனை விளம்பரபடுத்தாமல் நிலைத்து நிற்கின்றது இந்த பாடல்கள். இதற்கு காரணம் இந்த கவிதைகளின் பொதுவான அம்சம்,அனைவருக்கும் பொருந்தும் என்பதே. உலக பொதுமறையாம் திருக்குறளுக்கும் இந்த பெருமை உண்டு. 

இந்த புத்தகத்தில் உள்ள கருத்துகளை கேட்டோ படித்தோ புரிந்துகொள்வதை விட நம் வாழ்வோடு பொருத்தி உணர்துகொண்டால் அதிக பலனை அடையலாம் என்று இதன் முதல் பாடலிலேயே சொல்லப்பட்டுள்ளது.

வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த பாடல்களை படித்து வாழ்வோடு பொருத்தி பார்த்தல் ஒவ்வொரு முறையும் புதிய அர்த்தத்தை உணரலாம். 

ஒரு பாடல் 

ஒரு கோப்பையை அது நிரம்பி வழியும் வரை நிரப்புவதை விட 

வழியாதவாறு சிறிது இடம் விட்டு நிரப்புவது சிறந்தது 

ஒரு கூர்மையான ஆயுதத்தை தொடர்ந்து பட்டை தீட்டி கொண்டே இருக்கமுடியாது 

தங்கமும் பவழமும் நிறைந்த அறையை 

எப்பொழுதும் பாதுகாத்து கொண்டே இருக்க முடியாது 

ஒருவனுக்கு அகந்தையை ஏற்படுத்தும் பணமும் பதவியும் 

பின்னர் அவனுக்கு பேரழிவை ஏற்படுத்தும்  

செயலை முடித்து வெற்றியும் புகழும்  அடைந்தபின் விலகி நில் 

இது தான் சொர்கத்தை அடையும் வழி 

போதும் என்ற மனம் இல்லாமல் நம் வாழ்கை என்னும் கோப்பையை இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்ற ஆசையால் நிரப்பிக்கொண்டு இருந்தால் வாழ்கை சிறக்காது. ஒரு தேநீர் கோப்பையில் தேநீரை வழிய வழிய ஊற்றினால், தேநீர் வழிந்து கோப்பையும் அந்த இடமும் அசுத்தமாகிவிடும். மேலும் விளிம்பு வரை நிற்கும் தேநீர் கோப்பையை தூக்கி நாம் தேநீரை அருந்த நினைத்தால் நம் மீதே ஊற்றிகொள்வோம். அதன் சுவை உணர்து பருக முடியாது. வாழ்கையின் சுவையையும் அது போல பேராசைபட்டால் நம்மால் உணரமுடியாது. இது முதல் வரிக்கு என் மனதில் தோன்றிய விளக்கம்.

நாம் எதையாவது சாதித்தால் அதன் வெற்றியும் பெருமையும் புகழும் நம்மை பாதிக்காமல் அதில் இருந்து விலகி நிற்க வேண்டும். புகழுக்கு அடிமையான ஒருவன் சொர்கத்தை அடைய முடியாது  

ஒரு சிறந்த நிர்வாகத்தை எப்படி செய்யவேண்டும் என்று மற்றும் ஒரு பாடல் சொல்கிறது  

சாதனையாளர்களை புகழ்துகொண்டே இருக்காதீர்கள் 
அவர்கள் தடம் புரள நேரிடும் 
அரிதில் கிடைக்கும் பொருட்களை பொக்கிஷமாக நினைக்காதீர்கள் 
மக்கள் திருடர்களாக மாறமாட்டார்கள் 
இது தான் சிறந்தது என்று எதனையும் சுட்டி காட்ட வேண்டாம் 
அவர்கள் மனது குழம்பி விடும் 

புனித  தன்மை வாய்ந்தவர்கள் தங்கள் நிர்வாகத்தின் கீழ் உள்ள மக்களின் 
இதயத்தை வெறுமையாகவும் 
வயற்றை நிரப்பியும் 
தேவைகளை  குறைத்தும்
எலும்புகளை வலிமையாகவும் வைத்திருப்பர் 
மக்கள் சகுனிதனமும் பேராசையும் இல்லாமல் இருக்கட்டும் 
அப்படியிருந்தால் திட்டங்களுக்கு இடையூறு ஏற்படாது 

சூழ்ச்சி இல்லாமல் செயல்படுங்கள் 
எதுவும் கட்டுப்பாட்டை மீறி போகாது  

விளக்கம் :

சாதனையாளர்களை புகழ்ந்து கொண்டே இருந்தால் அவர்கள் தங்கள் சுய கட்டுபாட்டை இழப்பர். அவர்களை உயர்ந்த இடத்தில வைத்து போற்றினால் அவர்கள் தலைகனம் பிடித்து அடுத்தவர்களை பற்றி கவலை படாமல் அவர்களை ஏறி மிதித்து முரட்டுத்தனமாக செயல்படுவர்  

இதயத்தை  வெறுமையாக என்றால் - ஆசைகள் இல்லாமல் 

வயிற்றை நிரப்பியும்  என்றால்   - மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்தும் 

என் தமிழாக்கத்தில் பிழை இருந்தால் பொறுத்து கொள்ளவும்.  

படித்து உணர மிக அருமையான புத்தகம் 


திங்கள், 16 மே, 2011

ஒரு குழந்தையின் பக்குவம்

ஒரு பெண் "Parnoid Schizophrenia " என்ற மனநல பாதிப்புக்கு உண்டானவர். தனக்கும் தன் குடும்பத்திற்கும் யாரோ கெடுதல் செய்வதாக ஆரம்பித்த இந்த எண்ணம் போக போக அதிகரித்து தன் தாய் தந்தை கணவன் ஆகியோரை கூட தனக்கு கெடுதல் செய்கிறார்கள் என்று நினைக்க ஆரம்பித்தாள். இது இன்னும் அதிகமாகி- தன் கணவன், தந்தை உருவத்தில் வேறு யாரோ வீட்டுக்குள் வருகிறார்கள் என்று எண்ணி அவர்களிடம் சண்டை இடுவது தொடர்கதையானது.
பொதுவாக இத்தகைய மனச்சிதைவு உள்ளவர்களுக்கு தான் நன்றாக தான் இருக்கிறோம் என்ற எண்ணம் ஆழமாக இருக்கும். தனக்கு மன நல பாதிப்பு இருகின்றது என்பதை உணரவோ ஏற்று கொள்ளவோ மாட்டார்கள். இதன் காரணமாக மன நல மருத்துவரிடம் சிகச்சை எடுத்தாலும் மருந்துகளை தொடர்ச்சியாக எடுத்துகொள்ள மாட்டார்கள். மருந்து மாத்திரைகளை எடுத்துகொள்வதை பாதியிலேயே விட்டால், அடுத்த முறை இந்த பாதிப்பு இன்னும் அதிக சேதத்தை ஏற்படுத்தும். மன நல ஆலோசனகளும் சில நபர்களிடம் எடுபடாது 

தன் கணவனுக்கு பதில் வேறு யாரோ விட்டுக்குள் வருகின்றார்கள் என்ற எண்ணத்தால் யார் நீ ? என்று வினவி சண்டை இடுவதும், அவன் தூங்கும் பொழுது விளக்கை போட்டு அவனை உற்று பார்பதுமாக இருந்தார். இந்த குழப்பம் தன் ஆறு வயது குழந்தையிடமும் ஆரம்பித்தது. பள்ளிக்கு சென்றது ஒரு குழந்தை ஆனால் விட்டுக்கு வந்ததோ வேறு குழந்தை என்று நினைக்க ஆரம்பித்தாள். தன் குழந்தைக்கு உணவு ஊட்டிய பிறகு சமையல் அறைக்கு சென்று திரும்பிய நேரத்தில் குழந்தை மாறிவிட்டதாவும் உணர்தாள். சந்தேகத்தில் குழந்தையின் கையை முகர்து பார்பதும் நீ என்ன இப்பொழுது சாப்பிட்டாய் என்று கேட்பதும் வழக்கமாயிற்று. ஒரு முறை பூஜை அறைக்கு குழந்தையை அழைத்து சென்று உண்மையை சொல். நீ என் மகள் தானே என்றதும் அந்த பிஞ்சு குழந்தை தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தது. 

இதனை கண்ட அவள் தன் கணவன் வீடு திரும்பியதும் நடந்ததை சொன்னாள். இது நம்ப குழந்தை தானா ?  நான் தான் குழப்பி கொள்கிறேனே என்று கூறி அழுதாள் . கணவனும் "பல முறை நான் எடுத்து சொல்லியும் நீ கேட்பதில்லை. மன நல மருத்துவரிடம் சென்று வாங்கிய மாத்திரைகளை நீ எடுத்து கொள்ளவில்லை . இன்றாவது மருத்துவமனைக்கு வா" என்று கோபப்பட்டதும்  அவளும் வர சம்மதம் தெரிவித்தாள். மருத்துவமனைக்கு சென்று வீடு திரும்பியதும் ஒரு ஆச்சிரியமான சம்பவம் நடந்தது.

அவளின் ஆறு வயது மகள் "அம்மா ஒரு பேப்பர் கொடு என்றாள்"

அவள் அம்மாவும் ஒரு பேப்பரை எடுத்து வந்தாள்

ஒரு பேனாவை எடுத்து நான் சொல்லுவது போல எழுது என்றது குழந்தை 

அவள் அம்மாவும் இசைந்தாள்

முதலில் " நான் (அதாவது அந்த குழந்தை ) எங்கேயும் போகவில்லை " என்று எழுது என்றது குழந்தை 

அவளும் எழுதினாள்

அடுத்ததாக " அப்பாவும் எங்கேயும் போகவில்லை " என்று எழுது என்று சொன்னது குழந்தை 

அவளும் எழுதினாள்

அடுத்ததாக " நான் உனக்கு ஒரே குழந்தை. வேறு குழந்தை இல்லை " என்று எழுது என்றது குழந்தை 

மீண்டும் " வேற அப்பா இல்லை "என்று எழுது என்றது 

கடைசியாக " இந்த மாத்திரை உனக்கு வழிகாட்டாவிட்டால் இந்த பேப்பர் வழிகாட்டும் " என்று எழுது என்றது குழந்தை ( வழிகாட்டாவிட்டால் என்ற இந்த சொல்லை தான் குழந்தை சொன்னது. )

முடிந்ததா? ஒரு கோடு போடு என்றது குழந்தை 

அவள் அம்மாவும் செய்தால் 

பின்னர் அந்த குழந்தை " அம்மா உனக்கு எப்பலாம் குழப்பம் வருதோ இந்த பேப்பர்ர எடுத்து படி என்றது. மேலும் குழப்பம் வரும் போது அந்த கோட்டிற்கு கீழே என்ன குழப்பம் ? என்று எழுதிக்கொண்டே வா என்றது 

பின்னர் அந்த பேப்பரை எடுத்து நான்காக மடித்து ஒரு சின்ன பிளாஸ்டிக் பெட்டியில் வைத்து அவள் அம்மாவின் " Bedside table இல்" வைத்தது     

அந்த குழந்தை தன் தாய் மீது எவ்வளவு அன்பு செலுத்துகிறது ? தன் தாய்க்கு பிரச்சினை இருக்கின்றது என்பதையும் தெளிவாக உணர்து தன்னால் ஆனா உதவியை செய்ய நினைக்கிறது. 

அவள் தன் மன நல பிரச்சனையினால் என்னை நீ யார் ? என்று கேட்கும் பொழுது நான் எவ்வளவு பக்குவமாக நடந்து இருக்க வேண்டும். அதற்கு பதில் மருத்துவமனைக்கு வர வில்லையே என்று கோபபட்டேனே? இந்த சின்ன குழந்தையிடம் உள்ள பக்குவம் எனக்கு இல்லையே என்று வருத்தப்பட்டேன் 

ஆம். அது என் குழந்தை.

வாழ்கையை பற்றிய புதிய நம்பிக்கையையும் அந்த குழந்தை எனக்கு ஏற்படுத்தியது.         
  

சனி, 14 மே, 2011

திருமணமும் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவும் -2


சமிபகாலமாக திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகளை பற்றிய செய்திகளும் அதனால் ஏற்படும் குடும்ப வன்முறைகள் மற்றும் கொலைகள் பற்றிய செய்திகள் அதிர்ச்சியை தருவனவாக இருக்கின்றன. ஆனால் எதார்த்தமாக சிந்தித்து பார்க்கும் பொழுது இத்தகைய உறவுகள் சூழ்நிலைகள் காரணமாகவும், நிறைவேறாத எதிர்பார்ப்புகள் காரணமாகவும் ஏற்படுகின்றன என்பது புரியும். ஒரு கொலையை செய்தவனுக்கு கூட தன் தரப்பு வாதங்களை கூற சட்டம் அனுமதி தருகிறது. அனால் இத்தகைய தவறுகள் செய்யும் பெண்களுக்கு சமூகம் அந்த அனுமதியை அளிபதிலை. நம் கலாசாரம், குடும்பம், சமூகம் மற்றும் சட்ட திட்டங்களையும் மீறி ஒரு பெண் இத்தகைய முடிவை எடுபதற்கு காரணம் வெறும் காம இட்சையாக பல நேரங்களில் இருக்க முடியாது. திருமணம் என்ற உறவில் கணவன் மற்றும் மனைவி சமூக கலாச்சாரா விதிமுறைகளால் கட்டுண்டு இருக்கின்றார்கள். கணவன் தனக்கு மட்டுமே சொந்தம். மனைவி தனக்கு மட்டுமே சொந்தம். அவர்கள்   திருமணத்திற்கு பிறகு தாய் தந்தையிரடம் கூட இடைவெளி விட்டு பழகவேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. ஒரு மேசை, நாற்காலி, நகை, பணம் முதலியவற்றை எப்படி நமக்கு சொந்தமாக பார்கிறோமோ அதுபோல தான் கணவன் மனைவியையும் மனைவி கணவனையும் பார்க்கிறான். பெண்களுக்கு அதுவும் தன்னம்பிக்கை இல்லாத மற்றும் கணவனை மட்டுமே முழுமையாக சார்திருக்கும் பெண்களுக்கு இத்தகையே எண்ணம் அதிகம். கணவன் தன் தாயிடம், தந்தையிடம், சகோதர சகோதரிகளிடம் அன்பு கொண்டிருந்தால் இத்தகையே பெண்களுக்கு பிடிக்காது. கணவன் அவர்களிடம் கொண்டிருக்கும் உறவை துண்டிக்க  முற்படுவார்கள்.   இது கணவனுக்கு தன் மீது வெறுப்பை ஏற்படுத்தும் என்பதைகூட உணரமாட்டார்கள்.ஒரு பாதுகாப்பில்லாத உணர்வின் காரணமாக செய்யப்படும்   இத்தகைய செயல்கள் கணவன் மனைவி இருவரிடம் உள்ள பரசபர அன்பை குறைத்து காலபோக்கில் வெறுப்பை ஏற்படுத்திவிடும். பிறகு உண்மையான அன்பை நினைத்து மனது எங்கும். இத்தகையே சுழலில் இருவருமே பாதை மாறி போக நேரிடும். தன தேடும் அன்பு வேறு ஆண் அல்லது பெண் மூலம் கிடப்பது போல் தெரிந்தால் அவர்கள் மனம் மாறக்கூடும்.


வாழ்வில் பாதுகாப்பாக உணர சில ஆண்கள் பணத்தை தேடி அலைவர். தன வேலையில் தொழிலில், அதனால் அதிக அக்கறையும் ஈடுபாட்டையும் செலுத்துவர். இத்தகையே சுழலில் குடும்பத்தின் மீது செலவிடும் நேரம் குறையும். கலைத்து போய் வேலையிலிருந்து வீடு திரும்பும் அவர்களுக்கு மனைவிடம், தங்கள் குழந்தைகளிடம் அன்பாகவும் அக்கறையாகவும் பேச எண்ணம் இருக்காது. சற்று இளைபாறிவிட்டோ, அல்லது தொலைகாட்சியை பார்த்து விட்டு பின்னர் உணவருந்திவிட்டு தூங்க செல்வர். உண்மையில் மனைவி குழந்தைகள் மீது அவர்களுக்கு அக்கறை இருந்தாலும் கூட அதனை வெளிபடுத்த முடியாத சுழல் நிலவும். குடும்பம் நன்றாக இருக்க தான் பொருள் ஈட்டுவார். ஆனால் குடும்பம் வேலை இரண்டையும் சமன் படுத்தி வாழ தெரியாத காரணத்தால், மனைவி தானும் தன் குழந்தைகளும் தனித்து விடப்பட்டதை போல உணருவார். பணமும் ஆடம்பர வாழ்கையை விரும்பும் பெண்களுக்கு இது ஒரு பொருட்டாக தெரியாவிட்டாலும், அன்பையும் அக்கறையும் விரும்பும் பெண்களுக்கு இந்த வாழ்கை பெரும் சுமையாக அமையும். தன் கருத்தை காதுகொடுத்து கேட்க கூட நேரமிலாத கணவனை நினைத்து வருந்துவர். தன் தொழிலில் வேலையில் ஏற்படும் வெற்றிகளினால், அதனால் ஏற்படும் போதையினால், கணவன் குடும்பத்திற்கு செலவிடும் நேரம் குறைந்துகொண்டே போகும். கணவன் மீது மனைவிக்கு அன்பு குறைந்து வெறுப்பு ஏற்படும். தான் குடும்பத்திற்காக கஷ்டப்பட்டு உழைத்தும் மனைவி தன்னை மதிகவில்லையே என்று கணவன் நினைப்பான். இந்த கசப்புணர்வும் அவர்களை பாதை மாற செய்யும்.      


காதல் திருமணம் செய்து கொண்டு வாழும் கணவன் மனைவி இருவருக்கும் இடையே உள்ள அன்புகூட காலபோக்கில் கசந்துபோகிறது. காதலிக்கும் பொழுது தவறாக தெரியாத ஒரு விஷயம், திருமணத்திற்கு பிறகு தவறாக தெரியும். காதலிக்கும் பொது பெருமையாக நினைத்த ஒரு விஷயம் கூட திருமணத்திற்கு  பிறகு கஷ்டமாக தெரியும். திருமணமாகியும் தான் செல்லும் இடமெல்லாம் தானும் கூடவே வந்து உதவி புரிந்த கணவனை நினைத்து பெருமை பட்டு கொண்ட ஒரு பெண், பின்னர் சில ஆண்டுகளுக்கு பிறகு அது கணவன் தன் மீது கொண்ட அக்கறையால் அல்ல, அது சந்தேகத்தால் என்று தெரியவந்ததும் மனம் நொந்த கதை எனக்கு தெரியும். சிறிது காலம் தாழ்த்தி விட்டுக்கு வந்தாலும் ஏன் எதற்கு என்ற கேள்வி, அவளில் பிற நண்பிகளிடம் விசாரிப்பது தெரிந்ததும் அவள் மனம் சுக்கு நூறாகி இருக்கும். மேலும் காதலிக்கும் பொழுது உண்மைத்தன்மையை யாரும் வெளிபடுத்துவதிலை. அருகில் இருந்து பார்க்கும் பொழுது தான் பிற குறைகள் தெரியும். காதலிக்கும் பொழுது சில விசயத்திற்காக விட்டுகொடுத்ததை போல திருமணத்திற்கு பிறகு விட்டு கொடுக்க இயலாது. காரணம் கணவனை மனைவியோ அல்லது மனைவியை கணவனோ ஒரு ' பொருளாக' தான் பார்க்கும் நிலைமையை திருமண பந்தம் ஏற்படுத்திவிடுகிறது. காதலிக்கும் பொழுது மனது வேலை செய்யும். திருமணத்திற்கு பிறகு மூளை வேலை செய்யும். கவர்ச்சி மறைந்து எதார்த்த வாழ்கையை எதிர்கொள்ளும் பொழுது சங்கடம் ஏற்படும். ஒருவனின் பொருளாதார நிலையை வைத்து திட்டமிட்டு காதலிக்கும் பெண்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு கணவன் மீது உண்மையான அன்பு இருக்காது. அதனை உண்மையான அன்பு என்று நினைத்த காதலனும் திருமணத்திற்கு பிறகு உண்மை தெரிந்தால் வெறுதுவிடுவான்.  (நீங்கள் வாங்கும் சம்பளம் நான் குடும்பம் நடத்த பத்தாது என்று சொன்ன பெண்களும் இருக்கிறார்கள் )
                              
பணத்தை தேடிஅதனால் குடும்பத்தை தொலைபவர்களை விட குடும்பத்தின் மீது அக்கறையே இல்லாத கணவர்கள் பலர் இருக்கின்றனர். மாறி வரும் சமூக சுழலில் பெண்கள் மீது பாரம் அதிகமாகிக்கொண்டே வருகிறது. ஏழ்மை நிலையில் இருக்கும் பல குடும்பங்களில் கணவன் கூலி வேலை செய்து ஈட்டும் பணத்தை பெருமளவு குடிபதார்காக பயன்படுத்துகிறான். சரியாக வேலைக்கு செல்லாத கணவர்களையும் பார்த்திருக்கிறேன். இத்தகையே கணவனை கொண்ட கிராமத்து பெண்கள் அவனால் ஒரு பயனும் இல்லை என்றாலும்,  சமூக கட்டுப்பாடு  காரணமாக  விவாகரத்து செய்யாமல் சேர்ந்து வாழ்கின்றனர். தன் குழந்தைகளை முன்னிட்டு, அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பொருத்து கொண்டு வாழ்கின்றனர்.தன் எதிர்பார்பிற்கு மாறாக குடும்பத்தினரின் கட்டாயத்தினால் திருமணம் செய்து கொண்டவர்களின் குடும்ப சிக்கல், கணவன் மூன்று முடிச்சி போடும் போதே தொடங்கிவிடும். திருமணம் சரியில்லை என்றால், விவாகரத்து செய்து விட்டு மறுமணம் செய்து கொள்ளும் பெண்களும் முதல் திருமணத்தால் ஏற்பட்ட பாதிப்பை நினைத்து , தன் மறுமண வாழ்கையையும் சரியாக அமைத்து கொள்ளாமல் தவிகின்றனர்.தன் வருங்கால வாழ்கையை பற்றி ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆணுக்கும் கனவுகள் பல இருக்கும். ஆனால் எதார்த்தம் என்பது வேறு. நம் ஆசைகள் எல்லாம் கனவாகவே போகும் நிலை ஏற்படலாம். அல்லது சில ஆசைகள் பூர்த்தி அடையாளம். அதிலும் கூட ஒரு பெண்ணுக்கு தான் எதிர்பார்த்தபடி கணவன் கிடைத்தாலும், அதே பெண்ணின் கணவன் தான் எதிர்பார்த்தபடி மனைவி இல்லையே என்று நினைக்கலாம் . மிக திருப்த்திகரமாக ஒருவரை ஒருவர் சரியாக புரிந்து கொண்டு, விட்டு கொடுத்து மகிழ்ச்சியாக வாழ்வது வெகு சிலரே. ஆனால் காலபோக்கில் இத்தகைய குடும்பத்தின் எண்ணிக்கை குறைந்துகொண்டே போகிறது.


அன்பும் ஆன்மிகமும் காலச்சாரமும் மிகுந்த நம் நாட்டில், மேற்கத்திய தாகத்தினால் பல மாற்றங்கள் உண்டாகியுள்ளன. இது திணிக்கப்பட்டதாக நாம் எடுத்துகொள்ள கூடாது. தவிர்க்க முடியாத மாற்றம் தான் இது. தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியினால் உலகமே உள்ளங்கையில் இருக்கிறது. பல விசயங்களை தெரிந்து கொள்ள நேரிடுகிறது. மேலும் வாழ்கை மேலும் மேலும் கடினமாகி கொண்டே போகிறது. எதற்கும் போட்டி போட வேண்டிருக்கிறது. அதனால் அன்பு குறைகிறது.


அன்பு குறைகிறது. இது தான் இப்பொழுது நாம் சந்திக்கும் பெரிய பிரச்னை. ஒருவருக்கு ஒருவர் பரசபரம் அன்பு செலுத்துவது குறைந்துவிட்டது. நாம் அன்பை தேடுகிறோம். ஆனால் தர மறுக்கிறோம். அது கணவன் மனைவிக்கும் இடையில் உண்மையான அன்பு இல்லாத  பொழுது, எங்கு அன்பு கிடைக்கிறதோ அங்கு மனம் பாயதொடங்குகிறது. அத்தகைய சுழலில் சமூக, குடும்ப காலச்சார கட்டுபாடுகள் தடையாக தோன்றுவதில்லை. அன்பிற்காக தன் மானத்தை கூட இழக்கும் கேவலமான நிலைக்கு பெண்கள் தள்ள பட்டுள்ளனர் என்பதே உண்மை.


திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு ஏன் ஏற்படுகிறது என்று அலசி ஆராயும் பக்குவம் இதில் சம்மந்தப்பட்டவர்களுக்கு இல்லை.  முதலில் அவன் அல்லது அவன் தனக்கு சொந்தமான பொருள். அதனை எப்படி இன்னொருவன் பயன்படுத்தலாம் என்ற எண்ணம் தான் வருகிறது. அவர்களுக்குள் ஒரு இதயம் இருக்கின்றது, அது எத்தகைய சுழலில் இந்த கடினமான முடிவை எடுக்க தூண்டியது என்று யாரும் யோசிபதில்லை. சமூகமும் யோசிக்கவிடுவதில்லை.இந்த சமூகம் பெண்களுக்கு விதித்துள்ள கட்டுபாடுகள் அதிகம். ஆண்களுக்கு கட்டுபாடுகள் குறைவு. ஆனால் காமத்தின் காரணமாக தப்பு செய்பவர்கள் பெரும்பாலான ஆண்கள். பெரும்பாலான பெண்களுக்கோ காமம் முதன்மையான காரணமாக இருக்காது. அன்பை தேடும் பெண்கள் காமம் வேண்டும் ஆண்களின் போலியான அன்பில் சில சமயம் விழுந்து விடுவதும் உண்டு. வாழ்க்கையில் வெறுப்பு, விரக்தி, நம்பிகைஇன்மை, போலியான அன்பு, நிறைவேறாத சின்ன சின்ன ஆசைகள் அவர்களை தடம் மாற செய்கின்றன.காற்றில் அசைந்தாடும் கொடி ஏதோ ஒன்றை பற்றி கொள்ள துடிப்பது போல துடிக்கும் அவர்கள், ஒரு நம்பிக்கையின் பெயரில் ஏதேனும் ஒன்றை பற்றிகொள்கின்றனர்.  


போட்டிகளும், எதிர்பார்ப்புகளும், அகந்தையும், சுயநலமும் அதிகமாகிக்கொண்டே போகும் சுழலில் இத்தகைய மாற்றம் தவிர்க்க முடியாதது. ஆனால் இதற்கும் வழக்கம் போல பெண்களை மட்டும் குறை சொல்கிறோம்.  


ஒரு ஆணிடம் ஒரு பெண் நட்பாக பழகினால் கூட அதனை தவறாக பார்க்கும் சமூக சுழல் தான் நிலவுகிறது. ஒரு பெண் அப்படி பட்ட சொற்களை தன் காதால் கேட்டுவிட்டால் வேறு வழி இல்லாமல் நட்பை துண்டித்துகொள்கிறாள். அல்லது சமூகமே நம்மை தவறாக பார்க்கும் பொழுது அப்படி நடந்தால் தான் என்ன என்ற எண்ணத்திற்கும் ஆளாகிறாள். நம் இந்திய நாட்டில் தான் மக்கட் தொகை அதிகம். ஆனால் உடலுறவு குறித்தும் ஒழுக்கத்தை பற்றியும் மிகவும் கவலைபடுவது அதனை கொச்சைபடுத்துவதும் நாம் தான். உண்மை தெரியாமல் நட்பையும் கொச்சை படுத்துவோம்.    பெண்களுக்கு விதிக்கப்பட்டுள அதிகபடியான சமூக  கட்டுபாடுகள் அதிகபடியான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இதற்காக கட்டுபாடுகள் தேவையில்லை என்று அர்த்தம் இல்லை. கட்டுப்பாடு என்பது சமூகத்தில் உள்ள அனைவர்க்கும் சமம் என்றால் பெரிதாக எதிர்வினை இருக்காது. ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி. ஏழைக்கு ஒரு நீதி பணக்காரனுக்கு ஒரு நீதி, பதவியும்  அதிகாரமும் உள்ளவனுக்கு ஒரு நீதி சாமானியனுக்கு ஒரு நீதி என்ற சுழலில் எதிர்வினைகள் பெரிதாக ஏற்படும்.   
   


ஒரு திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவில் ஈடுபட்டுள்ள ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே "இவள் எனக்கு சொந்தம்" அல்லது "இவன் எனக்கு சொந்தம்" என்ற நினைப்பு இல்லாவிட்டால் கண்டிப்பாக அது திருமணத்தை விட ஒரு புனிதமான உறவாக இருக்கும் . ஆனால் அங்கேயும் "possessiveness " வரும் பொழுது அன்பு மறைந்து சுயநலம் மேலோங்குகிறது. 


"பதினொரு நிமிடங்கள்" என்ற புத்தகத்தில் "Paulo Coelho " ஒரு விலைமகளின் உண்மையான காதலை வெளிபடுத்தியிருபார். தான் காதலிக்கும் ஓவியன் மீது எல்லையட்ட்ற அன்பை கொண்ட அவள் அந்த அன்பு நிலைக்க அவனை தான் சொந்தமாகி கொள்ள கூடாது என்று எண்ணுவாள். அவனை அன்பின் மிகுதியால் விலகி செல்லவும் நினைப்பாள். உண்மையான அன்பு எதையும் எதிர்பார்க்காது. அப்படி பட்ட அன்பை தேடுகிறோம். ஆனால் தர மறுக்கிறோம். அப்படி பட்ட அன்பு கிடைத்தால் அதற்காக எதுவும் செய்ய முயல்கிறோம். ஒருவன் தன் மீது உண்மையான அன்பை செலுத்துகிறான் என்பதை ஒரு பெண் உணர்துவிட்டால் அதற்காக தடைகள் அனைத்தையும் உடைத்தெறிந்து வெளியேறுகிறாள். மிக கடினமான முடிவுகளையும் எளிதாக எடுக்கிறாள். இதை கள்ள தொடர்பு என்று எளிதில் நாம் கொச்சைபடுத்துகிறோம். அன்பின் மிகுதியால் ஏற்படும் எந்த உறவும் நல்ல உறவே. வெறும் செய்தித்தாளை படித்துவிட்டு அதனை கள்ளஉறவு என்று முடிவு செய்து அவர்களை தூற்றி நம் மன அழுக்குக்கு வடிகால் தேடுகிறோம். 


"Kahil Gibranin" உடைந்த சிறகுகள்" என்ற கதையில் செல்மா என்ற பெண் " தன் தந்தை மற்றும் மதபோதகரின் வற்புறுத்தலால் பணக்காரன் ஒருவனை தன் விருபத்திற்கு மாறாக திருமணம் செய்து கொண்டு கஷ்டபடுவதை அழகாக பதிவு செய்திருப்பார். தான் விரும்பிய காதலன் கிடைக்காமல் பொருள் ஈட்டுவதிலும் பெண் பித்தனாக பல பெண்களுடன் தொடர்பு கொண்ட அன்பில்லாத கணவனுடன் அவள் வாழும் வாழ்கையை சகிக்காமல், அவள் தந்தையும் தவறை உணர்து நோய் வாய் பட்டு இறந்துவிடுவார். சமூகத்தின் மீது கொண்ட பயத்தின் காரணமாக திருமணத்திற்கு பிறகு சில சந்திப்புகளில் " வா ஓடிவிடலாம் " என்ற காதலனின் அழைப்பை புறக்கணித்து நிமதியட்ட்ற வாழ்வை வாழ்து அவள் இறந்துவிடுவாள். அவள் இறப்பு கூட அவள் கணவனிற்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது .


உடைந்த சிறகுகளில் திருமணத்தை பற்றி குறிபிடும்போழுது " திருமணம் என்பது பெண்களை பொறுத்தவரை பெற்றோர்கள் மற்றும் ஆண்களின் கையில் வேடிக்கையான சடங்காகும். பெண் என்பவள் ஒரு வீட்டிலிருந்து மற்றொரு வீட்டுக்கு வாங்கி எடுத்து செல்லும் பொருளாக தான் பார்க்க படுகிறாள். காலபோக்கில் அவள் அழகு   குறைந்து ஒரு பழைய நாற்காலியை போலவோ மேசையை போலவோ வீட்டின் இருட்டான மூலையில் இருக்கிறாள்" என்று "kahlil gibran " கூறுகிறார்     
    
மேலும் தற்கால பெண்களின் நிலையை பற்றி கூறும் பொழுது ' தற்கால நாகரீகம் பெண்களை சற்று புத்திசாலிகளாக  மாற்றியுள்ளது, ஆனால் ஆண்களின் சூழ்ச்சியினால் அவளுக்கு கஷ்டத்தை அதிகபடுத்தியுளது. நேற்றைய பெண் மகிழ்ச்சியான மனைவியாக இருந்தாள். இப்பொழுதோ துன்பத்தில் உழல்பவலாக இருக்கிறாள். நேற்று கண்ணை மூடி கொண்டு வெளிச்சத்தில்  நடந்தாள். இன்று கண்ணை திறந்து கொண்டு இருட்டில் நடக்கிறாள். நேற்று அவள் அறியாமையின் அழகில், எளிமையின் பண்பில், தன் இயலாமையிலும் உறுதியாக இருந்தாள். இன்று அவள் தன் அறிவின் அசிங்கத்தில், மேலோட்டமாக இதயமில்லாமல் இருக்கிறாள். அறிவும் அழகும் , ஞானமும் குணமும், உடலின் உறுதியின்மையும் உள்ளத்தின் உறுதியும் என்று தான் பெண்களுக்கு ஒன்றாக அமையுமோ என்கிறார்             


செல்மா தன்னுடன் வர வற்புறுத்திய தன் காதலனிடம் தன் துயரமான வாழ்வை பற்றி குறிப்பிடும் பொழுது : சொர்க்கம் எனக்கு தந்த கசப்பான பானத்தை சில துளிகள் மட்டும் மிட்சம் வைத்துவிட்டு அதன் முழு கசப்புதன்மையை உணர்வதற்காக குடித்துவிட்டேன். மீதம் இருக்கும் சிறு துளிகளையும் பொறுமையாக பருகுவேன். புதிய அன்பான அமைதியான  வாழ்க்கைக்கு தகுதியானவள் நான் அல்ல. வாழ்கையின் மகிழ்ச்சியையும் சுவையும் உணர்வதற்கான சக்தி என்னிடம் இல்லை. வானத்தில் பறக்கமுடியாத அளவிற்கு என் சிறகுகள் உடைந்து போய்விட்டன. மெழுகுவர்த்தி வெளிச்சத்திற்கு பழக்கப்பட்ட என் கண்கள் சூரிய வெளிச்சத்தை தாங்காது. மகிழ்ச்சியை பற்றியே என்னிடம் பேசாதே. அதனை பற்றிய எண்ணமே என்னை துன்புரசெய்கிறது. அமைதியை பற்றி நீ கூறாதே, அதன் நிழல் என்னை பயமுற செய்கிறது.ஆனால் நீ என் இதயத்தை பார். என் இதயம் என்ற சாம்பல் குவியலில் சொர்க்கம் ஏற்றி வாய்த்த புனித வெளிச்சத்தை பார். நான் உன் தாய் உன் மீது அன்பு செலுத்தியதை போல் அன்பு செலுத்துவது தெரியும். அந்த அன்பு தான் உன்னை என்னிடமிருந்தும் பாதுகாக்க கற்று தந்தது. நெருப்பினால் புனிதபடுத்தபட்ட அந்த அன்பு தான் உன்னை நான் பின்தொடர்து தூர தேசத்திற்கு வர தடையாக இருக்கின்றது. அந்த அன்பு தான் என் ஆசைகளை கொன்று நீ சுதந்திரமாகவும் பண்புள்ளவனாகவும்  வாழ வழிவகுத்துள்ளது. எல்லையுள்ள அன்பு அன்புகொண்டவரை கேட்கும். எல்லை இல்லாத அன்பு அன்பை மட்டுமே கேட்கும். 


பின்னர் செல்மா சொல்கிறாள் " நான் இப்பொழுது மகிழ்ச்சியாக கொடூரமான பேய்கள் இருக்கும் இருண்ட குகைக்குள் செல்கிறேன். என்னை எண்ணி வருத்தப்படவோ பாவபடவோ வேண்டாம். கடவுளின் நிழலை கண்ட ஆத்மாவிற்கு பேய்களை பார்த்து பயம் இருக்காது. சொர்கத்தை கண்ட கண்கள் இந்த பூவுலகின் வலிகளை கண்டு மூடாது 


செல்மாவை போல வலிகளை பொறுத்துக்கொண்டு வாழும் பெண்கள் தான் இன்னும் அதிகம். காரணங்களும் சூழ்நிலைகளும் வேறுபடலாம். ஆனால் துன்பம் மட்டுமே அவர்களுக்கு நிரந்தரம். செல்மா தனக்கு சிறகுகள் உடைந்து விட்டதாக கூறுகிறாள். பல பெண்களுக்கு சிறகுகள் உடைக்க பட்டு தான் இருக்கின்றது. இதையும் மீறி பறக்க நினைக்கும் பெண்களை தாக்க தயாராக காத்திருக்கின்றன சமூகத்தில் பல வல்லூறுகள். தவறு செய்யாதவர் யாரேனும் இருந்தால் இந்த பெண் மீது கல்லை வீசுங்கள் என்றார் இயேசு. நாம் மனதில் அழுக்கையும் முதுகு நிறைய பாவத்தையும் வைத்திருந்தும் காரணம் தெரியாமலேயே ஒருவர் கல் வீசுகிறார் என்பதால் நாமும் வீசுகிறோம்.    


ஆசை படாமல் வாழவேண்டும் என்று போதனை உண்டு. ஆனால் வாழ்வதற்கு கூட ஆசைபட  கூடாதா ? வாழ்கையில் எப்போதாவது வரும் சின்ன சின்ன சந்தோஷங்களை விட வேறு எதுவும் இல்லை.     


இந்த உலகில் எதுவும் நமக்கு சொந்தமில்லை. நாம் இறந்தால் அதன் வருத்தமும் வலியும் நீண்ட நாள் நம்மையே நம்பியிருப்பவருக்கு கூட இருக்காது. காலம் அதற்கு மருந்தாக அமையும். ஆனால் அன்பு செலுத்தபடாமல் வாழ்நாள் முழுவதும் புறக்கனிகபடும் வலி மிகவும் கொடுமையானது. 


" சொந்தம் " என்ற வார்த்தையை உறவினர்களுக்கு இடையே பயன்படுத்துவது கூட தவறானது. எனக்கு சொந்தம் என்ற உரிமையே ஒருவர் மீதான ஈடுபாட்டை அதிகபடுத்துகிறது. மனைவி- கணவன்- குழந்தைகள் என்ற குடும்ப அமைப்பில் இந்த ஈடுபாடு மிக அதிகம். இதனால் சுயநலம் மேலோங்குகிறது. தனது "தீர்க்கதரிசி " என்ற அற்புதமான  படைப்பில் குழந்தைகளை பற்றி சொல்லும் பொழுது "கஹ்ளில் கிப்ரான்" இவ்வாறு கூறுகிறார்             
உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல 
வாழ்கை தனக்காக ஆசைபடுவதனால்
அதனின் மகனாகவும் மகளாகவும் பிர்றபவர்கள்
அவர்கள் உங்களால் வந்தவர்கள் அல்ல 
உங்கள் வழியே வந்தவர்கள்,
அவர்கள் உங்களுடன் இருந்தாலும் உங்களுக்கு சொந்தம் இல்லை'
நீங்கள் அவர்களுக்கு உங்கள் அன்பை தர முடியும் எண்ணத்தை தரமுடியாது,
என்னென்றால் அவர்களுக்கு என ஒரு சொந்த எண்ணம் இருக்கும்
நீங்கள் அவர்களின் உடம்பிற்கு அடைக்கலம் தரலாம் ,
உள்ளத்திற்கு தரமுடியாது       
என்னென்றால் அவர்களின் ஆன்மா நீங்கள் கனவிலும் கூட செல்ல முடியாத நாளை என்ற வீட்டில்  வாழ்கின்றன 


நாம் பெற்ற குழந்தைகளிடம் கூட இந்த பக்குவத்தில் தான் நடந்து கொள்ள வேண்டும் என்றால் திருமண பந்தத்தின் மூலம் இணைந்த கணவன் மனைவியிடமும் மனைவி கணவனிடமும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் 


ஒரு குடும்பம் என்ற அமைப்பு சமூகத்தினால் சில பல காரணங்களால் எற்படுத்தபட்டுளது. ஒரு குடும்பம் ஒரு தெரு ஒரு கிராமம், ஒரு மாநிலம் ஒரு நாடு என்பது ஒரு அடையாளம். நன்ற யோசித்து பார்த்தல் திருமணம் என்ற பந்தம் ஒரு சமூக பாதுகாப்பை மனிதர்களுக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு வழங்க ஏற்படுத்த பட்ட ஒரு அமைப்பாகும். சில பழங்குடியினர் சமுதாயத்தை பொறுத்தவரை பல தாரத்துடன் கூட்டமாக வசிக்கும் நிலை இருக்கிறது. அவர்களை பொறுத்தவரை அது தங்கள் பாதுகாபிற்காக ஏற்படுத்திக்கொண்ட ஒரு சமூக முறை. மேலை நாடுகளில் விவாகரத்தும் மறுமணமும் சாதாரணம். அதனால் பெரிதாக சமூதாய சிக்கல் ஏற்படுவதில்லை. குழந்தையை தாயோ தந்தையோ குறிப்பிட்ட வயது வரை பொறுபெடுத்து வளர்கின்றனர். திருமண உறவின் மூலம் ஏற்படும் குடும்பம் என்ற அமைப்பில் சமூதாய பாதுகாப்பு குழந்தைகளுக்கு உறுதிசெயயபடிகிறது. இதை தவிர பொருளாதார நோக்கத்துடன் ( தன் குடும்பத்திற்கு சொத்து சேர்க்க) சுயநலமாக செயல்படும் அமைப்பாக அது மாறிவிடுகிறது. அதனால் தான் தன் குடும்பத்தை தாண்டி பலர் சமூக அக்கறையோடு சிந்திபதில்லை. தனக்கு நேரடியாக பாதிப்பு ஏற்படும் வரை சமூகத்தில் ஏற்படும் சீர்கேடு குறித்து குரல் எழுப்புவதில்லை. உதாரணம் : கள்ள காதல் குறித்த செய்திகளை அசை போட்டு அதில் ஒரு வித திருப்தி அடைவதோடு இருந்துவிடுவர். தன் குடும்பத்திலும் தான் சரியாக அன்பு செலுத்த தவறும் பட்சத்தில் இது போன்ற ஒரு நிகழ்வு நடக்கும் என்று யாரும் சிந்திபதில்லை.


எனவே குடும்பம் என்ற அமைப்பில் உள்ளவர்களை பாதுகாப்பது மட்டும் தான் நமது கடமை. வேறு எந்தவிதத்திலும் யாரும் யாருக்கும் உடமையாகவோ அடிமையாகவோ  மாட்டார்கள்.


சரி. காமத்தின் மிகுதியால் தவறு செய்யும் பெண்கள் இல்லவே இல்லையா என்றால் அப்படிப்பட்டவர்களும் இருகிறார்கள். காமம் மிகுந்தால் பேருந்தில் இடிப்பதில் இருந்து ஆரம்பித்து விலைமகளிடம் செல்லும் ஆண்கள் வரை இருக்கிறார்கள்.அவர்களுக்கு பெரிதாக இந்த சமூதாயத்தில் தண்டனைகள்  இல்லை. ஆனால் பெண்கள்? தகுந்த வாய்ப்பு வந்தால் பயன்படுத்திகொள்வார்கள். ஆனால் இத்தகைய பெண்களின் சதவிகிதம் வெகு குறைவே. பசி போல காமமும் ஒரு உணர்வு. 


ஒருவரின் உடலமைப்பையும் குணதிசயத்தையும் முடிவு செய்வதில் அடிப்படை மூல கூறுகளான "Gene 's " ( ஜீன்கள் ) பெரும் பங்கு வகிகின்றான. பிறப்பால் நிர்ணயம் செய்யப்பட்ட சில அடிப்படை உணர்வுகள் மீது குடும்பம் மற்றும் சமுதாயத்தின் தாக்கம் நிகழும் பொழுது அது குணமாக உருவெடுக்கிறது. இந்த அடிப்படையில் பார்த்தல் அதுவும் கூட தவறில்லை.


இந்த கட்டுரையின் நோக்கம் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு வேண்டும் என்பது அல்ல. எந்த சுழலில் அது ஏற்படுகிறது என்பதை என் அறிவுக்கு எட்டியவரை பதிந்திருக்கிறேன். 


கணவர்களே மனைவி மீது அன்பு மட்டும் செலுத்துங்கள் 
மனைவிகளே கணவன் மீது அன்பு மட்டும் செல்லுதுங்கள் 
ஒருவர் மீது ஒருவர் முழுமையான நம்பிக்கை வையுங்கள். 
அவர்களின் குறைந்தபட்ச சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றுங்கள்  
அவர்களை தனக்கே தனக்கு என்று சொந்தம் கொண்டாடவேண்டாம் 
வாழ்க்கை மிக அமைதியாக இருக்கும். யாரும் வழி தவறியும் செல்லமாட்டார்கள். 


அப்படியே சென்றாலும் "LaoTzu" வின் இந்த கவிதையை நினைவில் வைத்திருங்கள் 


அனைத்தும் கடந்துவிடும் 


சூரியன் உதித்து கொண்டே இருப்பதில்லை 


அனைத்தும் கடந்துவிடும் 


மழையும் பொழிந்துகொண்டே இருப்பதில்லை 


மறைந்த சூரியன் மீண்டும்  உதிக்காமல் இருப்பதில்லை 


அனைத்தும் கடந்துவிடும் 


இவை எல்லாம் மாறும் 


இந்த பூமி ... வானம்... இடி 
மலை... தண்ணீர்... 
காற்று... நெருப்பு - கண்மாய் --
இவையே மாறும் என்றால் 
இவையே  நிரந்தரம் இல்லை என்றால் 


மனிதனின் எண்ணங்கள் நிலையாக இருக்குமா ?
கற்பனைகள் நிலையாக இருக்குமா ?
வருவதை அப்படியே ஏற்று கொள்ளுங்கள் 
அனைத்தும் கடந்துவிடும் 

"THIS TOO WILL PASS AWAY "