பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 4 மார்ச், 2011

நடுநசியில் செல்பேசி அழைப்பு

வேறு ஒரு Blog இல் படித்ததை சிறு மாறுதலுடன் இங்கு பதிவு செய்கிறேன்.

  நேரம் நள்ளிரவை தாண்டி ஓடிகொண்டிருந்தது. நான் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த பொழுது என் செல்பேசி ஒலித்தது. தூக்க கலக்கத்தில் செல்பேசியை எடுத்து என் காதில் வைத்து "ஹல்லோ' என்றேன்.

மறுமுனையில் பேசியவன் " ஹலோ என் பொண்டாட்டியை எங்கே வச்சுருக்க, மரியாதையா சொல்லிடு என்றான் "

எனக்கு தூக்கம் சுத்தமாக போய்விட்டது " என்னது உன் பொண்டாட்டியா ? என்கிட்ட ஏன் கேட்குற என்றேன் 

நீ தான் என் பொண்டாட்டிய கூட்டிட்டு போயிட்டேன்னு தெரியும். அவ எங்க இருக்கா  சொல்லு 

யோவ் ராங் நம்பர டயல் செய்துட்டு சவடால பேசுற வை "போன்" ன வை   என்று சொல்லி செல்பேசியை கட் செய்துவிட்டேன்.

மீண்டும் அவனிடமிருந்து அழைப்பு "போன" வைக்காத, நீ சொல்லாட்டி நான் போலீசில் சொல்லிடுவேன் " என்றது குரல்

நான் மெதுவாக " சரி நீ எந்த நம்பர் போன் செஞ்சேன்னு சொல்லு" என்றேன்

அவன் சரியாக என் செல்பேசி எண்ணை சொன்னான்

குழம்பிய நான் " சரி உன் பொண்டாட்டிய என் கிட்ட தான் இருகான்னு எப்படி கண்டுபுடிச்ச" என்றேன்

எதிர் முனையில் சிரிப்பு " ஏன்டா அவள் செல் நம்பர் உன்கிட்டதானே இருக்கு. அப்ப அவளும் உன்கிட்டதனே இருப்பா" என்று சொன்னான் அந்த அதிபுத்திசாலி

அப்பொழுது தான் எனக்கு எல்லாம் புரிந்தது. இந்த புதிய நம்பரை நான் வாங்கி சில நாட்கள்  தான் ஆகிறது.  இந்த நம்பரை தான் அவன் மனைவி முன்பு பயன்படுத்தி விட்டு புதிய இணைப்பு பெற்றிருக்கவேண்டும்.

நான் மறுமுனையில் பேசியவனிடம் இதனை சொல்லிவிட்டு " இனிமேல் என்னை தொல்லை  செய்யாதே என்றேன்

அவன் சளைக்கவில்லை " பொய் சொல்லாதே, உன்ன நான் கண்டுபுடிச்சேன அப்பறம் நடக்கறதே வேற என்றான்"

கோபம் வந்து செல்பேசியை முழுவதுமாக அணைத்துவிட்டேன்.

விடியற்காலையில் செல்பேசியை "on "   செய்தவுடன் வந்தா முதல் போன் " என்னா, என் பொண்டாட்டிய என்கிட்டே கொடுத்திடு"  என்றது

கடுப்பான நான் இனி தமிழில் பேசினால் சரிவராது என்று எண்ணி ஆங்கிலத்தில் " இனி என்னை தொல்லை செய்யாதே. எத்தன்னை தடவை தான் சொல்வது. மரியாதையாக போனை வை என்றேன்.

மறு முனையில் சிரிப்பு " என் பொண்டாட்டி இங்கிலிஷ்காரனோடு தான் ஓடி போய்ட்டானு நான் சந்தேகப்பட்டேன்" அது சரியாய் போச்சு என்றது குரல்.

தலையில் அடித்து கொண்ட நான் மறுபடியும் செல்பேசியை அணைத்தேன்.

மீண்டும் அவனிடம் இருந்து போன் " உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம். என் பொண்டாட்டிய நீயே வச்சுக்கோ. ஆனா அவ செல்போன எங்கிட்ட கொடுத்துடு. எனக்கு ரொம்ப புடிச்ச விலை அதிகமான போன் அது. திரும்ப அது மாதிரி ஒன்னு இப்ப என்னால் வாங்க முடியாது. "போன" மட்டும் கொடு Please  என்றான்

                             

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக