பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 1 மார்ச், 2011

ஆண்டம்மாள் என்னும் பெண்மணி

ஆண்டம்மாள். மொட்டை அடித்த பின் வளர்ந்த முடியுடன், எண்ணை தடவாத, கலைந்த, நரைத்த  தலை கேசம். குண்டான உடல்வாகு. கருத்த தேகம். தெற்று பல். எப்பொழுதும் சிரித்த முகம். ஒரு சராசரி படிக்காத கிராம்மத்து பெண்மணியின் அத்தனை  அம்சங்களும் உடையவர். நம்மை கடந்து சென்றால் ஏதோ ஒரு பெண்மணி என்ற அளவே நினைக்க தோன்றும். ஆனால் அவர் மதிநுட்பமும் தலைமைத்துவ பண்பும் சுயநலமில்லாத உழைப்பையும் ஓருங்கே உடையவர் என அவருடன் நெருங்கி பழகியவர்களுக்கே தெரியும். தைரியம் மற்றும்  தன்னம்பிக்கை  அவரின் இதர நற்பண்புகள் 
ஒரு ஏழை குடும்பத்தில் மூன்று பெண்ண்களில் மூத்தவராக பிறத்தவர் அவர். கடன் தொல்லை காரணமாக தாயார் மருந்து குடித்து இறந்த பிறகு தன் சிறிய வயதிலேயே குடும்ப பொறுப்பை ஏற்றவர். அதனால் பள்ளிக்கு செல்லவில்லை. சிறு சிறு வேலைகளை செய்து வயிற்றை கழுவி வந்தார். விவசாய கூலியாகவும்  கட்டிட வேலைக்கும் சென்று வந்தார். 
அவருடைய இளமைக்காக பின் தொடர்த்தவர்களை தவிர்க்கவும், தன் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டும், தன்னை விட இருபது வயது மூத்தவருக்கு இரண்டாம் தாரமாக வாக்கபட்டார். அவர் திருமணம் செய்து கொண்ட பாலு தேவருக்கு   ஆண்டம்மாள்லின் வயதை ஒத்த பெண் ஒருவர் இருந்தார். மேலும் முன்று குழந்தைகள் பாலு தேவருக்கு இருந்தனர்.
ஆண்டம்மாள் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் வறுமை மட்டும் நீங்க வில்லை. பாலு தேவர் குடும்பத்தை சரியாக கவனிக்காமல் குடியும் குடுதனமுமாக இருந்த காரணத்தால் ஆண்டம்மாள் தான், கூலி வேலை செய்த பணத்தில் குடும்பத்தை நடத்தவேண்டி இருந்தது.
ஆண்டம்மாலுக்கு எதிர் பாராத செலவு ஏற்பட்டால் அதிக வட்டிக்கு கடன் வாங்கும் நிலையும் ஏற்பட்டது. அப்பொழுது ஊரில் சில மகளிர் சுய உதவி குழுக்கள் செயல்பட்டு வந்தன.  அதில் உறுப்பினராக சேர அருகில் இருந்தவர்கள் கூறியபொழுது முதலில் மறுத்து வந்தார். 

பின்னர் சேர்ந்துதான் பார்ப்போமே என்று விநாயகர் களஞ்சியம் என்ற சுய உதவி குழுவில்  உறுப்பினராக சேர்ந்தார். சேர்ந்த சில மாதங்களிலேயே அவருக்கு குழுவின் செயல்பாடுகள் பிடித்துவிட்டது. எனவே குழு நன்றாக செயல்பட தன் ஆலோசனைகளை தெரிவிக்க ஆரம்பித்தார். சற்று தொய்வான நிலையில் செயல்பட்ட விநாயகர் களஞ்சியம் ஆவர் வருகைக்கு பிறகு நன்றாக செயல்பட ஆரம்பித்தது. ஆண்டம்மாள் குழுவின் தலைவி ஆனார். தன் குழுவுடன் மட்டும் நிற்காமல் தன் ஊரில் இருந்த மற்ற களஞ்சியங்களும் நன்ற செயல்பட உதவி புரிந்தார். புதிய குழுக்களை உருவாக்கவும், கடன் திருப்பி செலுத்தாத உறுப்பினர்களை  தொடர்து சந்தித்து அவர்களை முறையாக கடனை திருப்பி செலுத்தவும் வைத்தார். அவருடைய உழைப்பு ஐந்து   கிராமங்களை சார்ந்த இருபது களஞ்சியங்கள் கொண்ட வெள்ளையம்பட்டி பகுதியின் தலைவியாக அவரை ஆக்கியது.

களஞ்சியம் மூலம் எடுத்த கடனை கொண்டு பால் மாடு வாங்கி வளர்த்தார். தான் குடியிருந்த விட்டையும் சீரம்மைத்தார்.

வங்கிக்கு சென்று வங்கி மேலாளர்களிடம் கடன் தேவை குறித்து தயக்கமில்லாமல் பேசி களஞ்சியங்களுக்கு தேவையான நிதி உதவியையும் பெற்று தந்தார். தன்னுடைய உழைப்பு மற்றும் திறனால் சுய உதவி குழுக்களின் கூட்டமைப்பின் தலைவி ஆனார். இந்த கூட்டமைப்பை சுய உதவி குழுக்களில் இருந்து  தேர்ந்து எடுக்கப்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் நிர்வகித்து வந்தனர். ஆனால் அவர்கள் பெயருக்கு தான் தலைவிகளாக செயல்பட்டு வந்தனர். இந்த கூட்டமைப்பை உருவாக்கிய தானம் அறகட்டளை, நியமிக்கும் நிர்வாக இயக்குனர்கள் தான் தலைவிகள் சார்பாக முடிவுகளை எடுத்து வந்தனர். 

 ஆண்டம்மாள் தலைவி ஆன பிறகு இதில் மாற்றம் ஏற்பட்டது. அவர் தன் மதினுட்பதினாலும் கள அனுபவத்தினாலும் கூட்டமைப்பு நன்றாக செயல்பட தக்க ஆலோசனை வழங்கினார். கூட்டமைப்பும் தொய்விலேருந்து மீண்டு நல்ல  முறையில் செயல்பட ஆரம்பித்தது.

கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனரும் உண்மையான பொது நல நோக்குடன் தலைவியுடன் இணைந்து செயலாற்றிய காரணத்தினால் கூட்டமைப்பு சிறப்பாக செயல்பட்டது. கூட்டமைப்பின் வருமானம் இரு மடங்காகியது. வங்கி வாரகடனும் வசூல் ஆகிய காரணத்தினால், கூட்டமைப்பிற்கு நற் பெயர் ஏற்பட்டது.
கூட்டமைப்பின் அங்கமாக வகித்த களஞ்சியங்களும் அதன் உறுபினர்களும் தங்களது தேவைகளும் பிரச்சனைகளும் கூட்டமைபினால் உடனுக்குடன் சரி செய்ய பட்ட காரணத்தினால் மகிழ்சியடைதனர். 
கூட்டமைப்பில் பணியாளர்களாக வேலை பார்க்கும் பெண்கள் அனைவரும் அம்மா அம்மா என்று அழைத்து ஆண்டம்மால்லின் உதவியை பெறுவர். சில சமயம் தங்களுக்குள் உள்ள பகை உணர்ச்சியை கருத்தில் கொண்டு பிற பணியாளரை பற்றி புரளி பேசுவர். படிக்காத ஒருவர் நம்மை எப்படி கேள்வி கேட்கலாம் என்ற எண்ணமும் சிலரிடம் உண்டு. ஆனால் ஒருவரை பற்றி சரியாக கணிக்கும் தன் திறனால் அவற்றை எல்லாம் எளிதில் எதிர்கொள்ளுவர். ஆனால் சில சமயம் தன் இரக்க குணத்தால் ஏமாந்து விடுவார். பிறர் கண்ணில் வரும் சிறு துளி கண்ணீர் இவரை மாற்றிவிடும்.

கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக இவர் செய்து வரும் மக்கள் தொண்டு மகத்தானது. இவரால் தானம் அறக்கட்டளைக்கு பெருமை. ஆனால் இவரை போன்றோரின் உழைப்பு வெளியில் தெரியாமலேயே போய்விடுகிறது.

திருமதி சின்னபிள்ளை என்ற ஸ்ரீ சக்தி புரஸ்கர் பட்டம் பெற்ற அம்மையாரை விட இவர் ஆற்றிய மக்கள் பணி  அதிகம். 

மூகபூச்சுடன், அழகாக தலை வாரி கலர் கலராக உடை அணிந்து, நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசி உலா வரும் நவ நாகரிக பெண்கள் ஆண்டம்மாள்ளிடம் கற்று கொள்ள வேண்டிய பண்புகள் நிறைய உண்டு.      

பிறப்பது, வளர்வது, படிப்பது, வேளைக்கு சென்று கை நிறைய சம்பாதிப்பது, திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுகொள்வது கடைசியில் எதற்காக வாழ்தோம் என தெரியாமல் இறப்பது என்று தான் நம்மில் பலர் வாழ்கிறோம் . வாழ்வின் அர்த்தத்தை புரிந்துகொள்ளமலேயே நாம் இறந்து விடுகிறோம்.

வறுமை தன்னை கசக்கி பிழிந்தாலும், சரியான குடும்ப வாழ்கை அமையவில்லை என்றாலும் முகத்தில் தவழும் புன்னகையில் தன் கஷ்டங்களை மறைத்து, பொது தொண்டாற்றிவரும் ஆண்டம்மால் போன்ற பெண்களை பாதம் தொட்டு வணங்குவோம். சரியான வாய்ப்பும் கல்வி தகுதியும் இருந்திருந்தால் இந்த நாட்டை ஆள ஆண்டம்மால் போன்ற பெண்களால் முடியும்.


         
       
               

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக