பிரபலமான இடுகைகள்

புதன், 16 மார்ச், 2011

நீங்கள் யார் ?

நல்லவராக வாழ நீங்கள் விரும்புகின்றீர்களா ? உங்களிடம் உள்ள  பேராசை, கோபம், பொறாமை பயம்  போன்ற கெட்ட குணங்கள் இல்லாமலோ அல்லது குறையவோ வேண்டும் என்று நினைகின்றீர்களா ? அப்படி என்றால் தொடர்ந்து படியுங்கள். 
நீங்கள் இனி கோபப்படகூடாது என்று ஒரு விசயத்திற்கு முடிவெடுத்துவிட்டு, பின்னர் அந்த சூழ்நிலை ஏற்படும்பொழுது உங்களையும் அறியாமல் கோபம் பொத்துக்கொண்டு வருவதை கவனித்திருப்பிர்கள். கோபப்பட்டு அதனால் விளைவுகள் மீண்டும் மோசமாகும் பொழுது, பின்னர் அமைதியாகி இது போல மீண்டும் செயல்படக்கூடாது என்று மீண்டும் முடிவெடுப்பீர்கள். ஆனால் அது தொடர்கதையாக தான் இருக்கும்.
ஏன் என்றால் இது போன்ற விளைவுகள் அல்லது எதிர்வினைகளை நாம் ஒரு சுழலின் பொது வெளிபடுத்துவது, நம் மனதின் ஆழத்தில் இருக்கும் சில பதிவுகளினால்  தான். இப்படி தான் ஒரு செயலுக்கு ( Cause / Stimulai )  எதிர்விளைவை ( effect / reaction ) நாம் வெளிபடுத்த வேண்டும் என்ற உணர்வு நாம் கற்று கொண்ட விஷயங்கள் ( taught process ), உணர்ந்து கொண்ட விஷயங்கள் (felt process ) மற்றும் சிந்தித்து நாமாக முடிவெடுக்கும் விசயங்கள் ( thought process ) இவற்றால் முடிவெடுக்கப்படும். 
நம் பெற்றோர், நெருங்கிய உறவினர்கள், சிறு வயதில் நம் மீது அதிகாரமும் ஆதிக்கமும் செலுத்தும் உரிமை கொண்டர்வர்களிடம் இருந்து -- ஒ ! இப்படி  தான் இந்த சூழ்நிலையில் நாம் நடந்துகொள்ளவேண்டுமோ ? என்று நம் மனதில் சில விஷயங்கள் பதிந்துவிடும். இதை Parent Ego என்று எரிக் பெர்னே (Eric Berne ) கூறிகிறார். இந்த சூழல்களில் நாம் வெளிபடுத்தும் அழுகை, பிடிவாதம் , கோபம் , மகிழ்ச்சி போன்ற உணர்வுகளை Child Ego என்கிறார். நமது ஐந்து வயதிற்குள் நாம் சந்திக்கும் அனுபவங்கள், ஏற்கனவே நமது குணாதிசயத்தை நிர்ணயம் செய்யும் ஜீன்களின் (hereditary nature ) தன்மையோடு இணைந்து நம் குணமாக, பழக்கமாக உருவாகிறது. இதனை தவிர நம் அறிவாற்றலின் அடிப்படையில், நாமே சுயமாக சிந்தித்து செயல்படுவதும் உண்டு. இதுவே Adult Ego எனப்படும். ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில், நாம் செய்யும் எதிர்வினை Parent Ego மற்றும் Child Ego வினால் நிர்ணயம் செய்யபடாமல், Adult Ego வினால் நிர்ணயம் செய்யபட்டால் அது சரியான விளைவாக இருக்கும் என்று ஏறிக் பெர்னே கூறுகிறார். இதன் அடிப்படையில் ஒருவரின் குணாதிசியங்களில் மாற்றத்தை கொண்டு வரலாம் என்று தன் ஆராய்ச்சி மூலம் வெளி உலகத்திற்கு தெரிவித்தார். Transactional Analysis என்ற இந்த மனோதத்துவ முறையின் தந்தை எனபடுபவர் தான் Dr . Eric Berne .


இந்தஅறிவயல் பூர்வமான ஆராய்ச்சிக்கு இணக்கமாக இருப்பது நம் உலகத்தில் பின்பற்ற படும் மதங்களில் இருக்கும் சில ஆன்மீக கருத்துக்கள்.  
எக்ஹார்ட்டொல்லே ( Eckhart Tolle )  தான் எழுதிய A New World என்ற புத்தகத்தில், நாம் யார் என்று நம்மை பற்றி ஒரு தவறான ஒரு அபிப்பிராயத்தை எற்படுதிக்கொள்கிறோம் என்கிறார்.

நான், எனது, என்னுடையது என்று சில பொருட்களுடன் நம்மை தொடர்பு படுத்தி நம்மை பற்றிய ஒரு தவறான உருவகத்தை உருவாக்கி கொள்கிறோம். நாம் யார் என்று நமக்கு நாமே ஏற்படுத்திகொள்ளும் அடையாளம் தான் அகந்தையின் தொடக்கம்.இந்த அகந்தையே நாம் வெளி படுத்தும் எதிர்வினைகளை (reaction )முடிவு செய்கிறது. இந்த அகந்தை இப்படி வேலை செய்கிறது என்பதை நாம் உணராத வரை நம்மை மாற்றிக்கொள்ள இயலாது என்று கூறுகிறார்.

நான் யார் ? என்ற கேள்வியை நீங்கள் உங்களையே கேட்டுகொள்ளுங்கள். அதற்கு விடை காண முயலுங்கள். நீங்கள் வாழ்கையில் முக்தியை அடையலாம் என்று ரமண மகரிஷி கூறியுள்ளார்.

கேட்பதற்க்கு நன்றாக தான் இருக்கிறது ? நாம் உண்மையில் யார் என்று எப்படி உணர்ந்துகொள்கிறது ? அகந்தை எப்படி செயல்படுகிறது என்று நாம் எப்படி தெரிந்துகொள்ளமுடியும் ? நாம் முயற்சித்தால் முடியும். ஆனால் அகந்தை எப்படி செயல்படுகிறது என்று தெரியாமல் நம்மை மாற்றிக்கொள்ள நினைத்தால், அந்த அகந்தையே சதி செய்து மீண்டும் நம்மை அதே புதைகுழியில் தள்ளிவிடும்.

"நான் :என்னும் நீங்கள் நினைக்கும் "நான்" எப்படி உருவாகிறது ? பிறந்தவுடன் நமக்கு ஒரு பெயர் வைக்கிறார்கள். அதனை கொண்டு தான் அழைக்கிறார்கள். சில குழந்தைகள் தனக்கு பசிக்கிறது என்பதை கூட " ரகுவிற்கு பசிக்கிறது" என்று தன் பெயரை தானே கூறிகொள்வதை கவனித்து இருப்பிர்கள். பின்னர் தான் எனக்கு பசிக்கிறது என்று கூற ஆரம்பிக்கும். அப்பொழுதே தன் உடலோடு தன் எண்ணத்தை பொருத்தி பார்க்க ஆரம்பிக்கிறது. என்னுடைய பொம்மை என்று ஒரு பொருளை தன்னுடன் பொருத்தி பார்க்கிறது. பொம்மை தொலைந்து போய்விட்டாலோ அல்லது உடைந்து விட்டாலோ பெரும் குரல் எடுத்து அழும். அந்த பொம்மை விலை மதிக்க முடியாதது என்பதாலோ, அது இல்லாமல் தன்னால் விளையாட முடியாது என்பதாலோ குழந்தை அழுவதில்லை. அந்த பொம்மை தன்னுடையது என்று பொருள் மீது வைக்கும் பற்றினால் தான். கால போக்கில் குழந்தை வளர வளர அது பற்று வைக்கும் பொருட்கள் மாறும். ஒரு பொம்மைக்கு பதில் இன்னோரு பொம்மை. வளர்ந்த பிறகு பொம்மை என்பது தனது சைக்கிள், மோட்டார் சைக்கிள், வீடு, செல்பேசி , பேனா, நகை, கணவன்/மனைவி என்று பொருட்கள் தான் மாறும். 

சில பேருக்கு பதவி மீது பற்று இருக்கும். சரி எப்படி ஆசை வைத்து, அந்த பொருள் கிடைத்தால் மகிழ்ச்சி அடைகிறோம். கிடைக்காவிட்டால் அந்த பொருளை வைத்து இருக்கும் நபரை பார்த்து பொறாமை கொள்கிறோம். ஆனால் ஆசை பட்ட பொருள் கிடைத்தாலும், அதன் மீது உள்ள பற்றின் காரணமாக பிறர் வெறுப்படையும் படியும் நடந்து கொள்கிறோம். சரி மகிழ்ச்சியாவது நீண்ட நாள் நிலைதிருகின்றதா ? அதுவும் எல்லை . திடீர் என நாம் ஆசை படும் பொருள் மாறுகிறது. ஒரு பொம்மைக்கு பதில் இன்னோரு பொம்மை. ஒரு காருக்கு பதில் இன்னோரு கார்.
இந்த தேடலிலும் பொருள் மீது வைக்கும் பற்றிலும் நாம் உண்மையான மகிழ்ச்சியை இழந்து விடுகிறோம். 
நான் என்று நமக்கு நாமே ஏற்படுத்திகொள்ளும் அடையாளம் ஒரு மிக குறுகிய அடையாளம். நமக்குள் இருக்கும் ஆற்றலையும் சக்தியையும் நாம் உணருவதில்லை 

Enlightment என்று இந்து மதம் சொல்கிறது. துன்பங்களின் முடிவு என்று புத்த மதம் சொல்லுகிறது, புனிதத்தன்மை அடைதல் என்று கிருத்துவமதம் சொல்கிறது. அனைத்து மதங்களும் கூறுவது ஒன்றை தான். நான் யார் என்ற விழிப்புணர்வை அடையுங்கள். முக்தி, புனிதத்தன்மை , துன்பத்திலிருந்து விடுதலை அனைத்தும் ஒன்றே தான் என்பதை உணர்விர்கள்.

உங்களால் மாறமுடியும். நீங்கள் யார் என்பதை உணர்ந்தால். உங்கள் அகந்தை எப்படி வேலை செய்கின்றது என்பதை உணர்தால்.

Thanks to  - I am OK , YOU'R OK by Thomas Hardy ( A Book on Transactional analysis )
                    A New Earth - A book by Eckhart Tolle

    
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக