பிரபலமான இடுகைகள்

வியாழன், 31 மார்ச், 2011

பாலின் சில்லறை விற்பனை விலை Rs50 / என்று மாறினால் ஆச்சிரிய படவேண்டாம்



இந்திய நாட்டின் பால் உற்பத்தி 1951 யில்  17 மில்லியன்  டன் ஆக இருந்து, 2009 தில் 110 மில்லியன் டன் ஆக உயர்ந்துள்ளது (2010 -11 இல் 115 மில்லியன் டன் ). இந்திய பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் சந்தை மதிப்பு ஆண்டுக்கு 7 %  வளர்ச்சியடைந்து வருகிறது.
சுமார் 7.5 கோடி இந்திய குடும்பங்கள் பால் உற்பத்தியின் மூலம் கிடைக்கும் வருமானத்தை நம்பி இருக்கின்றார்கள். ஆனால் இதில் 1.1 கோடி நபர்கள் தான் பால் கூட்டுறவு சங்கங்களில் இணைந்துள்ளனர். 
Operation Flood மற்றும் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் விற்பனையை கட்டுபடுத்தும் ஆணையின் விதிகளில் சில கட்டுபாடுகளை தளர்த்திய காரணத்தால் (MMPO _2002 ) பால் உற்பத்தி பன்மடங்கு பெருகியது. பல தனியார் நிறுவனங்கள் பால் விற்பனையில் இறங்கின. ஆனால் எதனால் பால் உற்பத்தி செய்யும் சிறு குறு விவசாயிகள் பயனடையவில்லை. தனியார் முதலாளிகள் தான் பயன் பெற்றனர். 

விதிகளை தளர்த்தினாலும் பல்வேறு காரணங்களால் சிறு மற்றும் குறு விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பாலை ஒழுங்குமுறை படுத்தாத விற்பனை சந்தையின் மூலம் தான் விற்பனை செய்யா முடிகிறது. அவர்களிடம் இருந்து பால் பெரும் இடைத்தரகர்கள் தான் பெரிதும் பயன் அடைகின்றனர். தங்கள் குடும்ப சுழல் காரணமாகவும், சரியான படிப்பறிவு இல்லாத காரணத்தாலும் தங்களுக்கு மிகவும் தெரிந்த உள்ளூர்காரரான இடைதரகரிடம் தங்கள் அவசர தேவைக்கு முன்பணம் வாங்கிவிட்டு பின் அவர்களுக்கே பாலை ஊற்றும் நிலைக்கு தள்ளபடுகின்றனர்.

தற்பொழுது பால் கூட்டுறவு சங்கங்களும், தனியார் பால் நிறுவனங்களும் நகர்புற பால் தேவையை அடிப்படியாக கொண்டே செயல்படுகின்றன. அதனால் பால் உற்பத்தியும் கிராமபுறத்தில் இருந்து நகரை சுற்றயுள்ள புற நகர் பகுதிக்கு இடம் பெயர்ந்து வருகிறது.     

பாலின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், சிறு குறு விவசாயிகளுக்கு பால் மாடு வளர்த்தல் என்பது லாபகரமாக இல்லை. பால் கொள்முதல் விலை உயர்தாலும் அதைவிட பால் மாடு பராமரிப்பு செலவு அதிகமாவதே இதற்கு காரணம். கண்டிப்பாக ஒன்று முதல் மூன்று மாடு வரை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு பால் உற்பத்தியால் லாபம் இல்லை என்பதே உண்மை.

இதற்கு கீழ்கண்ட காரணங்களை சொல்லலாம் 

  1. பால் மாடுகளின் உற்பத்தி திறன் குறைவாகவே உள்ளது. ஜெர்சி போன்ற கலப்பின பசுக்களின் முதலாம் மற்றும் இரண்டாம் தலைமுறை ஈத்துகள், நன்கு பராமரித்தல் ஓரளவு நன்றாக பால் சுரக்கும். ஆனால் நம் நாட்டில் கால்நடை பராமரிப்பு துறையின் செயல்பாடு சரியாக இல்லை. தரமான மாடுகள் தான் நல்ல பயனை தரும். இது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவும், இதற்கான இனபெருக்க தேவையை சரிவர பூர்த்தி செய்யவும் நம் அரசாங்கம் தவறி வருகிறது.
  2. கால்நடை ஆராய்ச்சியிலும் மக்களுக்கு( சிறு குறு விவசாயிகளுக்கு ) பெரிதும் பயன் தரும், விஞ்ஞான செயல்முறைகள் கண்டுபிடிக்க படவில்லை.பால் கறவை இயந்திரம் பெரிய பண்ணைகளில் தான் பயன்படுத்த படுகின்றன. பால் கொள்முதல் நிலையங்களில் இதன் பயன்பாட்டை செய்வதில்லை. பால் பதனிடுதல், பாலின் தரத்தை அளவிடும் கருவிகள், பால் பண்ணையின் வளர்ச்சிக்கு உதவும் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றிற்கு தான் முக்கியத்தும் தரபடுகிறது. ஜெர்சி கலப்பினத்தை தவிர்த்து, நம் நாடு சீதோசன நிலைக்கு உகந்த கலப்பின பசுக்கள் நீண்டகாலமாக உருவாக்கப்படவில்லை என்பது மிகவும் வருத்தத்தை தரும் விஷயம்.
  3. கிராமபுறத்தில் மேய்ச்சல் நிலங்கள் குறைந்துகொண்டே வருவதும் கவலை தரும் விஷயம். இதனால் பால் மாடு வளர்ப்போர் புண்ணாக்கு,   மாட்டு தீவனம் போன்றவற்றை கடைகளில் வாங்கி பயன்படுத்துவது அதிகமாகி உள்ளது. இதனால் பால் மாட்டை வளர்க்கும் செலவு கூடியுள்ளது.      
  4. கடந்த இரண்டு ஆண்டுகளில் மாட்டு தீவன விலை அடிக்கடி உயர்ந்து ( மாதம் மாதம் கூட விலை உயர்ந்தது) 20௦ % திற்கு அதிகமாக விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
  5. கால்நடைகளை காப்பிடு செய்யும் பழக்கம் குறைவாகவே உள்ளது. இதனால் கால்நடை இறந்தால் ஏழை எளிய மக்களுக்கு பெரிய பாதிப்பு உண்டாகும்.
  6. பால் கொள்முதல் விலை கண்டிப்பாக கட்டுபடியாகாது. லிட்டருக்கு ருபாய் இருபது பால் உற்பத்தியாளர்களுக்கு கிடைத்தால் தான் சிறு குறு விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும் 
  7. தீவன விலை ஏற்றத்தால், மாடுகளுக்கு குறைந்த தீவனம் கொடுக்கபடுகிறது. சரியான தீவனம் கொடுக்காத காரணத்தாலும் பால் உற்பத்தி குறைந்து அவர்களின் வருமானத்தை பாதிக்கிறது.   
தற்பொழுது 4.3 % கொழுப்பு மற்றும் 8.2 % SNF உள்ள பசும் பாலுக்கு கொள்முதல் விலையாக ருபாய் 15 .54 / லிட்டர் மற்றும் எருமை மாட்டு பாலுக்கு ருபாய் 23 /     ( Fat 7 % SNF 8.8 % ) என்று  ஆவின் நிறுவனம் நிர்ணயம் செய்து உள்ளது. இதற்கு முன் செப்டம்பர் மாதம் 2009 தில் பால் கொள்முதல் விலையில் மாற்றம் செய்யப்பட்டது.  

கடந்த ஐந்து ஆண்டுகளில் பால் கொள்முதல் விலை Rs5 .50 மட்டுமே அதிகரித்துள்ளது. ஆனால் பல்வேறு காரணங்களால் பயனீட்டாளர்களுக்கு சில்லறை விற்பனை விலை Rs11 / வரை அதிகரித்துள்ளது. தற்பொழுது நிர்ணயம் செய்யப்பட்டுள்ள Rs15 .54 என்ற விலை பால் கொள்முதல் நிலையத்திற்கு கொடுக்கும் விலையாகும். அவர்கள் கமிசன் போக Rs15 / தான்  பால் உற்பத்தியாளர்களுக்கு கிடைக்கும்.    

சில தனியார் நிறுவனங்கள் இதை விட அதிக விலைக்கு பால் கொள்முதல் செய்தாலும், பாலின் கொழுப்பு சத்து மற்றும் SNF சதவீதத்தை குறைத்து காட்டி விவசாயிகளை ஏமாற்றுவதும் நடக்கிறது.

இடைதரகர்களிடம் பால் ஊற்றும் பொழுது அவர்களிடம் வாங்கிய முன் பணத்திற்கு அதிக வட்டியை பிடித்து கொண்டு பணம் கொடுப்பதால், வறுமையில் வாடும் நிலை ஏற்படுகிறது.

நான் ஜல்லிக்கட்டிற்கு பெயர் போன அலங்காநல்லூர் ஒன்றியத்தில் கண்கூடாக கண்ட காட்சி இது. மேலே குறிப்பிட்ட காரணங்களினால் பால் மாடுகளின் எண்ணிக்கை கடந்த நான்கு ஆண்டுகளில் வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் பால் உற்பத்தி குறைந்துள்ளது. ஆனால் தேவை அதிகரித்துள்ளது. இதனால் பால் கொள்முதல் செய்வதற்கு கூட்டுறவு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இடையே பயங்கர போட்டி நிலவுகிறது. ஆச்சிரியமாக பால் கொள்முதல் விலை ஏற்றம் மட்டும் நடக்கவில்லை. பால் பதபடுத்தும் நிறுவனங்களும்,  உற்பத்தி இடத்திலிருந்து பதபடுத்தும் இடத்துக்கு பாலை எடுத்து செல்லும் போக்குவரத்து செலவு வெகுவாக அதிகரித்துளதால் பதிப்பு அடைந்துள்ளன. தங்கள் விற்பனை பாதிக்க கூடாது என்பதற்காக விற்பனை விலையையும் மற்ற நிறுவனத்திற்கு நிகராக வைக்கும் நிலைக்கும் எந்த நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன      


பால் உற்பத்தியாளர்களின் போராட்டத்தினால் சமிபத்தில் பால் கொள்முதல் விலையை தமிழக அரசு உயர்த்திள்ளது. ஆனால் ஆவினின் சில்லறை  விற்பனை விலையை உயர்த்தமாட்டோம் என்று அரசு அறிவித்துள்ளது. இதனால் ஆவினின் லாபம் குறையும். தேர்தல் முடிந்த பிறகு கண்டிப்பாக பால் சில்லறை விற்பனை விலை உயரும்    
  
பால் விலை மேலும் மேலும் கூடியவிரைவில் அதிகரிக்கும். இந்த விலை உயர்வு தவிர்க்கமுடியாதது. நாம் நாட்டின் பெரிய கூட்டுறவு நிறுவனமான அமுல், கடந்த Febraury 17 ஆம் தேதி முதல் தன் சில்லறை விற்பனை விலையை மகாராஷ்டிரா மாநிலத்தில் உயர்த்திள்ளது. மற்ற நிறுவனங்களும் Rs3 / வரை தங்கள் பால் சில்லறை விற்பனை விலையை. மும்பையில் அதிகம் விற்பனை ஆகும் பால் அமுல் பால். அமுல் தன் பால் தேவையில் 40௦ % தத்தை மகாராஷ்டிரா மாநிலத்திலும் மீதம் தேவைப்படும் பாலை குஜராத்திலிருந்தும் கொள்முதல் செய்கிறது. மகாராஷ்டிரா மாநில அரசு பால் கொள்முதல் விலையை Rs2 /- Rs2 .50௦/லிட்டர் வரை கடந்த 16 .02 .2011 முதல் உயர்த்தியதே இதற்க்கு காரணம். அமுல் தன் சில்லறை பாலை தரத்தை பொறுத்து Rs30 முதல் Rs38 / வரை தற்பொழுது விற்பனை செய்து கொண்டு வருகிறது                  

கர்நாடக அரசும் பால் கொள்முதல் விலையை Rs2 / உயர்திள்ளது 


அமுல் பால் உற்பத்தியாளர்களுக்கு செலவு அதிகரித்த காரணத்தினால், கொள்முதல் விலை உயர்த்தபட்ட்து என்றும், விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்றும் அறிவித்துள்ளது.

தமிழக பால் உற்பத்தியாளர்களை பொறுத்த வரை இந்த பால் கொள்முதல் விலையும் கட்டுபடியாகாது 

நாம் நாட்டு பொருளாதார கொள்கைகள் வெளிநாட்டு தொழில் நிறுவனங்களுக்கும் சேவை நிறுவனங்களுக்கும் சாதகமாக உள்ளது. இதனால் விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில் செய்பவர்களும் பாதிக்கபட்டுள்ளனர்  
      
ஆனால் இதன் பாதிப்புகள் பொது மக்களை சென்றடையும் நாள் வெகு தொலைவில் இல்லை. இப்பொழுதே அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை பன் மடங்காக எகிறி உள்ளது. பாலின் சில்லறை விற்பனை விலை Rs50 /  ஆகா இரு ஆண்டுகளில் மாறினால் ஆச்சிரிய படவேண்டாம்   

புதன், 30 மார்ச், 2011

Paulo Coelho வின் பொன்மொழிகள் -1



Paulo Coelho வின் பொன்மொழிகள் -1 

  • நீங்கள் வேண்டியதை அடைவதற்கு உறுதியாக முயற்சித்தால் இந்த அண்டமே துணையாக இருக்கும்.

  • கனவு காணும் வாய்ப்பு இருப்பதால் தான், இந்த வாழ்கையே சுவாரிசயமாக இருக்கிறது  

  • ஒருவர் மீது அன்பு செலுத்துவதால் தான் நீங்கள் அன்பாக இருகின்றீர்கள். அன்பு செலுத்த காரணம் எதுவும் தேவையில்லை 

  •   கனவை அடைவதற்கு தடையாக இருப்பது ஒன்று தான். தோற்றுவிடுவோமோ என்ற பயம் தான் அது.

  • எல்லோரும் அடுத்தவர்கள் எப்படி வாழவேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். தான் எப்படி வாழ வேண்டும் என்று தான் யாருக்கும் தெரிவதில்லை.

  •   ஏழு முறை விழுந்து எட்டு முறை எழுவது தான் வாழ்கையின் ரகசியம்
  
  • உங்கள் இதயம் சொல்வதை கேளுங்கள். என்னென்றால் அங்கு தான் வாழ்கையின் பொக்கிஷம் இருக்கிறது  

  • நான் ஏன் கடந்தகாலத்திலும் எதிர்காலத்திலும் வாழவில்லை. நான் நிகழ்காலத்தில் தான் விருப்பமுடையவனாக இருக்கிறேன். நீயும் உன் நிகழ்காலத்தில் வாழ்தால் மகிழ்ச்சியுடன் இருப்பாய். வாழ்கையே ஒரு திருவிழாவாக, கொண்டாட்டமாக இருக்கும். ஏனென்றால் வாழ்கை என்பது நாம் வாழும் இந்த நொடி தான்.

  • வேகமாக செயல்படுவதில் மகிழ்ச்சியை காண முயற்சி செய்யுங்கள். வழக்கமாக செயல்படும் முறையில் ஆக்கபூர்வமான மாற்றத்தை கொண்டுவந்தால், உங்களுள் ஒரு புதிய மனிதனை காணலாம்  

  • துன்பத்தை பற்றிய எண்ணம் மற்றும் பயம் துன்பத்தை விட கொடுமையானது என்று உன் இதயத்திடம் சொல். தன் கனவை தேடி செல்லும் எந்த இதயமும் துன்பபடுவதில்லை. தேடும் ஒவ்வொரு கணமும் நீங்கள் கடவுளை சந்திப்பீர்கள் 

  • உலகில் எளிமையாக இருக்கும் ஒன்று தான் அசாதாரமானது. ஞானம் அடைந்தவர்கள் தான் அதை உணருவார்கள் 

  • நான் உன் கனவில் ஒரு பகுதி என்றால் கண்டிப்பாக ஒரு நாள் நீ திரும்பி வருவாய் .

  • இது தான் காதல். அன்புவயபட்டால் நீ எதையும் உருவாக்கலாம். நீ அன்பு வயபட்டால் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முயற்சி செய்யவேண்டாம். ஏனென்றால் எல்லாம் உனக்குள்ளே நடக்கிறது. 
  
  • நாம் வலிமையுடையவராக நடிக்கிறோம். நமக்கு வலிமை இல்லாத காரணத்தினால்.  

  • ஒருவனை கட்டுப்படுத்த நீங்கள் நினைத்தால், அவனை பயம் கொள்ள செய்தால் மட்டும் போதும். எளிதில் கட்டுபடித்திவிடலாம்     

ஓடும் நதியை போல

புத்தக விமர்சனம்


 ஓடும் நதியை போல 

மதுரை வாசகர்கள் குழுவின் உறுப்பினராக இருக்கும் எனக்கு கடந்த 20௦.02.2011 அன்று Paulo Coelho எழுதிய Like the Flowing River என்ற புத்தகத்தை மதிப்பீடு செய்யும் வாய்ப்பு கிடைத்தது. நான் படித்ததில் மிகவும் பிடித்த புத்தக வரிசையில் இந்த புத்தகத்திற்கு என்றும் என் மனதில் இடம் இருக்கும்.

Paulo Coelho பிரேசில் நாட்டை சேர்ந்த  பிரபல எழுத்தாளர். The Alchemist என்ற புத்தகத்தின் மூலம் உலக புகழ் அடைந்தவர்.  வாழ்வின் லட்சியத்தை கனவாக உருவகபடுத்தி, அந்த கனவின் மீது நம்பிக்கை வைத்து அதை நோக்கி ஒரு ஆடு  மேய்ப்பவன் செல்வதை போன்ற கதை இது. 

Like the Flowing River என்ற இந்த புத்தகம் பல செய்திதாள்களிலும் பத்திரிகைகளிலும் Paulo Coelho எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. மொத்தம் 227 பக்கம் கொண்ட இந்த புத்தகத்தில், 102 சிறு கட்டுரைகள் இருகின்றது. ஒவ்வொரு கட்டுரையும் ஒன்றிலிருந்து மூன்று பக்கங்களில் அடங்கிவிடும். புத்தகத்தின் விலை ருபாய் 295 /  


புத்தக ஆசிரியர் தன சொந்த வாழ்கை அனுபவம் மற்றும் இந்து மதம், பௌத்தம் ,கிறுத்துவ மதம், இஸ்லாம் போன்ற மதங்களில் இருக்கும் ஆன்மீக கருத்துகளை அடிப்படியாக கொண்டு கட்டுரையை அமைத்திருக்கிறார். 
  
இந்த புத்தகத்தில் உள்ள சில கட்டுரைகளை பற்றி பாப்போம்    


  1. யுத்தத்திற்கு தயாரானேன் - சில சந்தேகங்களுடன் (Prepared to battle with few doubts )- ஒரு காலை பொழுதில் தன் விட்டு அழகான தோட்டத்தில் உள்ள களை செடிகளை ஒரு களை எடுக்கும் கருவி கொண்டு எடுத்துகொண்டிருந்தார். அப்பொழுது அவருக்கு ஒரு சிந்தனை தோன்றியது. இந்த உலகில் பிறந்த அனைத்து உயிர்களுக்கும் வாழ உரிமை உண்டு. அதனால் இந்த களை செடிக்கும் வாழும் உரிமை உண்டு. களை செடிகளின் விதை காற்று, தேனீ, பட்டாம்பூச்சி மற்றும் பிற பூச்சிகள், சில விலங்குகளின் உதவியோடு தொலைதூரம் எடுத்து செல்லப்பட்டு, பல இடங்களில் பரவி வளர்கின்றன. இயற்கை ஒரு இனம் அழியாமல் தொடர செய்திருக்கும் ஏற்பாடு இது. இதை கொல்ல நான் யார் ? மாற்று சிந்தனையாக இந்த களைகள் வளர்ந்தால், தான் கஷ்டப்பட்டு வளர்க்கும் அழகான செடிகளை அழித்துவிடும். இதனால் நல்ல பயனை தரும் செடிகளுக்கு பாதிப்பு உண்டாகும் என்றும் தோன்றியது. அவரின் மன குழப்பத்திற்கு தீர்வாக பகவத் கீதை உதவிக்கு வந்தது. கிருஷ்ணன் அர்ஜுனனிடம் " உன்னால் ஒரு உயிரை கொல்ல முடியும் என்று நினைக்கிறாயா ? உண்மையில் கொலை செய்வது நீ அல்ல. இந்த செயலை செய்ய உன்னை வழிபடுத்துவது நான் தான். யாராலும் யாரையும் கொல்ல முடியாது. Paulo Coelho தயக்கம் இல்லாமல் தன் செயலை தொடருகிறார்.
  2. நம்மை பென்சிலுடன் தொடர்புபடுத்தி எழுதிருக்கும் இன்னொரு கட்டுரை. ஒரு பென்சில் தன செயலை சரியாக செய்வதற்கு அதனை இயக்கும் கை உதவியாக இருக்கிறது. அது போல மனிதன் தன செயல்களை சரியாக செய்ய கடவுளின் கை உதவி புரிகிறது.பென்சிலால் எழுதும் பொழுது அதன் கூர் மழுங்கி சரியாக எழுத முடியாமல் போகும். அப்பொழுது அதனை கூர்மை படுத்தி மீண்டும் எழுதுவோம். அது போல நமக்கு ஏற்படும் துன்பங்களையும் கஷ்டங்களையும் நம்மை கூர்மை படுத்தி கொள்ள வந்தவையாக நினைத்து நம்மை பண்படுத்தி கொள்ள வேண்டும்.
  3. பென்சிலால் எழுதும் பொழுது தவறு ஏற்பட்டால் அழித்து விட்டு மீண்டும் தவறு ஏற்படாமல் எழுதுவோம். அது போல வாழ்கையில் தவறு செய்தால் திருத்திக்கொண்டு மீண்டும் தவறு செய்யாமல் வாழவேண்டும். பென்சிலின் வெளியே உள்ள மரத்தை விட உள்ளே இருக்கும் கரி குச்சி தான் முக்கியம். அது போல நம் உள்ளே இருக்கும் ஆற்றல் தான் வாழ்வதற்கு உதவி செய்யும். பென்சில் தான் எழுதியதற்கான அடையாளத்தை விட்டு செல்லும். நாமும் நாம் வாழ்ந்த  தடத்தை விட்டு செல்ல வேண்டும். 
  4. செங்கிஸ் கான் என்ற மங்கோலிய பேரரசர் ஒரு முறை வேட்டையாட சென்ற பொழுது நடந்த சம்பவத்தை Paulo Coelho குறிப்பிடுகிறார். அவர் வேட்டையாட செல்லும் பொழுது Falcon (கழுகை போன்ற ஒரு பறவை) என்ற பறவையை உடன் அழைத்து செல்வது வழக்கம். ஒரு முறை தன் குழுவுடன் வேட்டையாடசென்று எதுவும் கிடைக்காமல் திரும்பி தன் இருப்பிடத்திற்கு வந்தார். தூக்கம் வரவில்லை என்பதால் அவர் மட்டும் தன் Falcon பறவையுடன் மீண்டும் வேட்டைக்கு சென்றார். சென்ற இடத்தில அவருக்கு தாகம் எடுத்தது. அப்பொழுது ஒரு மலையில் இருந்த பாறை இடுக்கில் இருந்து சொட்டு சொட்டாக தண்ணீர் வருவதை பார்த்தார். தான் எப்பொழுதும் வைத்திருக்கும் சிறிய கோப்பையை எடுத்து அதில் மிக மிகபொறுமையாக தண்ணீரை சேகரித்தார். அதனை அவர் பருக சென்ற பொழுது Falcon பறவை வேகமாக பறந்து வந்து அந்த கோப்பையை தட்டி விட்டது. எரிச்சல் அடைந்த அவர் மீண்டும் கோப்பையை எடுத்து பொறுமையாக நீரை சேகரித்து பருக சென்றார். மீண்டும் பறந்து வந்த அந்த பறவை தண்ணீரை தட்டி விட்டது.    செங்கிஸ் கான் கடும் கோபம் அடைந்தார். இந்த முறை தன் வாளை உருவி ஒரு கையில் தயாராக வைத்திருந்து மறு கையில் கோப்பையில் மீண்டும் தண்ணீரை பிடித்து பருக சென்றார். இம்முறையும் Falcon பறவை கோப்பையை தட்டிவிட்டது. கோபம் கொண்ட அவர் தன் வாளால் அந்த பறவையை வெட்டி கொன்று விட்டார். பின்னர் கோப்பையை எடுத்து நீரை பிடிக்க பார்த்த பொழுது சொட்டு சொட்டாக வந்த நீரும் நின்று போய் இருந்தது. எனவே அவர் அந்த பாறையின் மேல் ஏறி பார்க்கலாம் என்று மேலே ஏறினார். அங்கு அவர் பார்த்த காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  அங்கு இருந்த ஒரு சிறிய சுனில் நீர் இருந்தது. ஆனால் அந்த நீரில் ஒரு மிக விசத்தன்மை வாய்ந்த ஒரு பாம்பு செத்து கிடந்தது. தன் உயிரை காப்பாற்ற நினைத்த Falcon பறவையை கொன்று விட்டோமே என்று அவர் மிகவும் வருத்தப்பட்டார். தன் நாடு திரும்பிய அவர் தங்கத்தால் ஒரு பாலகன் பறவையை செய்தார். அதன் இறகு ஒவ்வொன்றிலும் ஒரு கருத்தை பதிந்தார். "உங்கள் உண்மையான நண்பன் உங்களுக்கு கெடுதல் செய்தாலும் அவன் நண்பனே ஆவான்"    கடும் கோபத்தில் எடுக்கும் எந்த முடிவும், செய்யும் எந்த செயலும் அழிவை உண்டாக்கும்.      
  5. ஒரு சராசரி மனிதனின் தினசரி வாழ்கையை அவர் பதிவு செய்து இருப்பதை படித்தால் பெரும்பாலனவர்களுக்கு தங்களை கூறுவதை போல தோன்றும். 
  6. பிரான்ஸ் நாட்டின் செய்தி தாள் ஒன்றில் மனிதன் ஒருவன் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இறந்து கிடந்த செய்தி வெளியானது. அந்த மனிதன் இறந்து 20௦ வருடம் கழித்து தான் அவனின் பிணம் கண்டுஎடுக்கபட்டது. இருபது வருடங்களாக அவன் மனைவி கூடவா அவனை தேடவில்லை? என்று வியந்தார். பின்னர் இருபது வருடங்களாக யாரும் தேடாத மனிதனாக அவன் வாழ்க்கையை நினைத்து வேதனைப்பட்டார்.அனாதையாய் பிறப்பதற்கு விட அனாதையாய் சாவது கொடுமை. அத்தகைய வாழ்வை நாம் வாழ கூடாது என்பது இந்த செய்தி உணர்த்தும் குறிப்பு.
  7. இன்னொரு கட்டுரையில் தன் வாழ்நாளில் பணி ஓய்வு பெற்ற பிறகு பல வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும் என்பதற்காகவே பொருள் ஈட்டிய ஒரு பெண்மணி, பக்கவாதம் வந்து ஒரு அறையில் முடங்க நேர்ந்த செய்தியை சொல்கிறார். அந்த பெண்மணி அந்த நிலையிலும் ஒரு வினோதமான உயிலை எழுதுகிறார். தான் இறந்த பிறகு தன்னுடைய அஸ்தி ௧௪௧ நாடுகளுக்கு எடுத்து செல்லப்பட்டு அங்குள்ள நீர்நிலைகளில் கரைக்கப்படவேண்டும் என்பதே அது. தன் தாயின் ஆசை படி அவர் மகன் அதனை செய்து முடித்த செய்தி ஆச்சிரியத்தை அளிக்கும். 
  8. வாழ்க்கையில் ஒரு குறிக்கோளை அடைவதை மலை ஏறுவதுடன் ஒப்பிட்டு Paulo Coelho எழுதிய கட்டுரையும் நன்றாக இருந்தது 
  9. இன்னொரு கட்டுரையில்நாம் வாழ்கையை நாம் தான் முடிவு செய்யவேண்டும் என்பதை உங்கள் தோட்டத்தை நீங்கள் தான் பயிர் செய்ய வேண்டும் என்றும் அப்படி இல்லாவிட்டால் என்னஆகும் என்றும் குறிபிடுகிறார். 
மென்மையாக மனதை தொடும் புத்தகம் இது. படித்து பயன்பெறுங்கள்   

வெள்ளி, 25 மார்ச், 2011

இலவசத்திற்கு ஆசை படும் அனைவரையும் தூக்கில் போடவேண்டும்.


இதற்கு முன் தேர்தல் வாக்குறுதிகளை எப்படி எல்லாம் தரலாம் என்று ஒரு ப்ளாக் எழுதி இருந்தேன். தி.மு.கா மற்றும் அ.தி.மு.கா ஆகிய கட்சிகள் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகளை பார்த்து கூனி குறுகி போனேன். அவர்களை விட எனக்கு கற்பனை வளம் மிக குறைந்தது என்று புரிந்தது. அவர்கள் தந்த வாக்குறுதிகளை மீண்டும் இங்கு பதிந்து என் திறமையின்மையை நான் நிரூபிக்க வேண்டாம் என எண்ணுகிறேன் . என்னுடைய முந்திய பதிவு இதோ  


சரி. நம் தமிழ்நாட்டு மக்களை அரசியல்வாதிகள் மிக கேவலமாக நினைகின்றார்கள். பிச்சைகாரர்களை விட வாக்காளர்களை மிக கேவலமாக மதிக்கிறார்கள் என்பதற்கு அவர்களின் தேறுதல் அறிக்கையே சான்று. நாம் எல்லோரும் இலவசத்திற்காக கையேந்தி அவர்களிடம் நிற்பதை கற்பனையில் நினைத்து பாருங்கள்.

இன்னும் வேணும் இன்னும் வேணும். உழைக்காமல் சம்பாதிக்க வேண்டும் என்று கேவலமாக வாழும் பிறவிகள் தான் நாம் என்று சென்ற தேர்தலில் இலவசத்திற்கு ஆசை பட்டோமே அதற்கு பலன் தான் இது. நம்மை வீட்டில் உட்கார வைத்து மூன்று வேலை சோறும் போட்டாலும் போடுவேன் என்று சொல்வார்கள் .

அரசியல்வாதிகள் இன்னும் PIMP ( மாமா) வேலையை தான் பொது மக்களுக்கு செய்யவில்லை. அடுத்த தேர்தல் அறிக்கையில் அதையும் எதிர்பார்க்கலாம் 

இலவசத்திற்கு ஆசை படும் அனைவரையும் தூக்கில் தான் போடவேண்டும். ஆமாம் தேர்தல் கமிசன் இதனை வாக்காளர்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக நினைகவிலையா ?

நாடு எங்கே போகிறது ?

செவ்வாய், 22 மார்ச், 2011

நம் நாட்டின் பொருளாதார கொள்கையை நிர்ணயம் செய்பவர்கள் யார் ?


நம் நாட்டின் பொருளாதார கொள்கையை நிர்ணயம் செய்வதில் அமெரிக்க உள்ளிட்ட வளர்ந்த நாடுகளின் தலையீடு உள்ளது. இன்னும் சொல்ல போனால் நம் நாட்டு  பொருளாதார கொள்கையை முடிவு செய்வதே அவர்கள் தான் என்றும் கூறலாம். 

1990 களில் IMF ( International Monitory Fund ) கடன் கேட்டு பொருளாதார தேக்கநிலை காரணமாக இந்தியா உலகநாடுகளிடம் கையேந்த வேண்டிய நிலை வந்தது.
உலக வங்கியும் IMF உம் அதற்கு சில நிபந்தனைகளை விதித்தது. Structural adjustment என்று ஒரு நாட்டின் பொருளாதார கட்டமைப்பில் சில மாறுதல்களை வற்புறுத்துவதே அது. IMF கடன் பெரும் எந்த நாடும் இந்த விதிகளை பின்பற்றவேண்டும். கடன் பெரும் ஒப்பந்தத்திலேயே இது குறிப்பிடப்படும். நம் நாட்டின் புதிய பொருளாதரா கொள்கையை அப்போதைய மத்திய நிதி அமைச்சராக இருந்த மன்மோகன் சிங் , புதிய பொருளாதார கொள்கையை அறிவித்தது இந்த அடிப்படையில் தான். IMF கடன் பெற நாடுகள் கீழ்கண்ட பொருளாதார மாற்றத்தை செய்யவேண்டும். 

  • உலகமயமாக்கல் ( liberlaization ) - ஏற்றுமதி இறக்குமதி கட்டுபாடுகளை தளர்த்தல், வெளிநாட்டு நிறுவனங்கள் நம் நாட்டில் கடை பரப்ப அனுமதி அளிதல், நம் நாடு நிறுவங்களும் வெளி நாடுகளில் கிளை திறக்க அனுமதி அளித்தல் போன்றவை.
  • மாநில அரசின் பங்கு (roles )இதில் குறைக்கப்படும்.  
  • பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல், உள்நாட்டு நிறுவனங்களுக்கு சலுகைகளை குறைத்தல் 
  • ருபாய் மதிப்பை குறைதல், வட்டி விகிதத்தை ஏற்றுதல், தொழிலாளர் நல கொள்கைகளில் சமரசங்கள், மானியங்களை படிபடியாக குறைத்து முற்றிலுமாக மானியம் இல்லாத நிலையை உருவாகுதல் போன்றவை     ( குறிப்பாக உணவிற்கான மானியம் )   
  • வெளிநாட்டு முதலீடாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கி அவர்களை நம் நாட்டில் தொழில் தொடங்க ஈர்த்தல். 

  மன்மோகன் சிங் கின் பொருளாதார கொள்கை என்று எது விளம்பரம் செய்ய பட்டது. நம் நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார நிலையும், தேக்க நிலையை கடந்து வெகுவாக முன்னேரே ஆரம்பித்த காரணத்தினால்,இதன் பின்னால் உள்ள சூழ்ச்சியை மக்கள் உணரவில்லை. மன் மோகன் சிங்க் பைக் வாங்கினால் எங்கள் பைக்கை தான் வாங்குவார் என்று கூட விளம்பரம் செய்யப்பட்டது. நம் நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி அனைவராலும் பாரட்டப்பட்டது. இதை எதிர்த்து குரல் கொடுப்போர் முட்டாளாக சித்தரிகபட்டனர். பண பலம் அதிகாரம் கொண்டு இந்த பொருளாதார வளர்ச்சியின் இன்னோரு முகம் மறைக்கப்பட்டு வந்தது 

வெளிநாட்டில் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் முதலாளிகள், நம் நாட்டு மக்களின் உழைப்பினாலும், நம் நாட்டு வளங்களை பயன்படுத்தியும் தங்கள் கல்லாவை நிரப்பி  கொண்டு இருக்கிறார்கள்.

முன்பு சிறு சிறு தயாரிப்பாளர்கள் " கலர் " தயாரித்து - ஆரஞ்சு, மாங்கோ போன்ற சுவைகளில் கிராமங்களில் விற்று கொண்டிருந்ததை பார்க்கலாம். ஆனால்  Pepsi யும் Coke கும் வந்த பிறகு இவர்கள் இருந்த இடம் தெரியாமல் போனார்கள். இது அனைவருக்கும் தெரிந்த ஒரு உதாரணம். அனைத்து தொழில்களிலும் பலர் ஒழிந்து சிலர் மட்டுமே கொழிக்கும் நிலை உருவானது . நமது நாட்டில் உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை உயர்ந்தது. ஆனால் ஏழைக்கும் பணக்காரனுக்கும் உள்ள வித்தியாசம் அதிகமாகிக்கொண்டே போகிறது. 

சரி IMF விதித்து நம் நாடு செயல்படுத்திய பொருளாதார மாற்றங்களால் என்ன என்ன விளைவுகள் உண்மையில் ஏற்படுகின்றன /ஏற்படும் ?                    

  • தான் வாங்கிய கடனை முறையாக திருப்பி செலுத்தாத கடன் வாங்கிய நாடுகள் அதிக அளவில் ஏற்றுமதி செய்து பணம் ஈட்டவேண்டும் 
  • இந்தியாவை போல வேறு சில கடன் வாங்கிய நாடுகளும் உலக சந்தையில் தங்கள் பொருட்களை விற்க இவ்வாறு நிர்பந்தபடுத்த பட்டதாலும்,  பெரும்பாலும் ஒரே மாதிரியான பயிர்களும், விவசாய பொருட்களும் விற்பனைக்கு வந்ததாலும் ஒரு பெரிய விலை உத்தமே தொடங்கியது       
  • அதனால் வளரும் நாட்டுகளில் இருந்து வரும் பொருட்களின் விலை உலக சந்தையில் வீழ்ச்சியடையும். இதனால் மேற்கத்திய நாடுகளுக்கு பலன் அதிகம்
  • இதனால் அரசாங்கம் ஏற்றுமதியை அதிகரித்து தங்கள் நாடு ரூபாயின் மதிப்பை  நிலையாக வைக்க பாடுபட வேண்டிருக்கும். எதன் மூலம் அந்நிய செலவாணியை ஈட்டி கடனை அடைக்க வேண்டிய சுழல்லுகு தள்ள படும்.      
  • மேலும் கடன் பெற்ற நாடுகள்
                         - செலவை குறைக்க வேண்டும் .
                         - நிதி கட்டுபாடுகளை நீக்கவோ குறைகாவோ வேண்டும் 
                         - பொருட்களின் சுய பயன்பாட்டை குறைத்துக்கொள்ள           வேண்டிருக்கும்  
  • இதனால் நீண்ட கால விளைவுகளாக - மனித உழைப்பின் மதிப்பு குறையும், மூலதன நிதி தடுமாறும், ஏழை பணக்காரன் ஏற்றத்தாழ்வு மிக அதிகமாகி சமூக பிரச்சனைகளையும், உலகம் முழுக்க கலகங்களையும் ஏற்படுத்தும்        

    • நிலைமை மிகவும் மோசமானால் கடன் வாங்கிய நாட்டில் முதலீடு செய்த வெளிநாட்டு நிறுவங்களும் சுரண்டியவரை போதும் என்று தங்கள் முதலீட்டை திரும்ப எடுத்துகொள்வர் 
      • மேலும் 1997 /98 /99 ஆசிய/உலக நிதி பேரிடரின் பொழுது ஏற்பட்ட பொருளாதார விழ்ச்சி போன்ற நிகழ்வுகள் நடக்கும் ( மெக்ஸிகோ, பிரேசில் போன்ற நாடுகளில் நடந்ததை போல ). எத்தகைய நிகழ்வின் பொது உண்மையான காரணம் மறைக்கப்பட்டு வெகுஜன தொலைதொடர்பு ஊடகங்களும், பொருளாதார நிபுணர்களும் அப்போதுள்ள ஆட்சியை குறை கூறியோ அல்லது வேறு சிறிய பொருளாதார கொள்கைகளின் மீது குற்றம் சும்மத்தியோ செய்திவெளியிடுவர்        
    •  IMF கடனை கொடுத்தவர்கள் ரூபாய்க்கு நிகரான தங்கள் பணத்தின் மதிப்பை கட்டுபாடுக்குள் வைத்துகொண்டு , ஏழை நாடுகள் என்னும் ஏழை நாடாகும் நிலைமையை ஏற்படுத்துவர்
    எனவே நம் நாட்டின் பொருளாதார கொள்கையை முடிவு செய்யும் உரிமையை 1991 இல் IMF கடன் வாங்கிய பொழுதே இழந்துவிட்டோம். ஏழை மக்களை முன்னேற்றி ஏற்ற தாழ்வில்லாத சமுதாயத்தை ஏற்படுத்துகிறோம் என்று நம் அரசில்யல்வாதிகள் சொல்வது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்.

    எப்பொழுது ஏழை மக்களை முன்னேற்ற போடும் திட்டங்களும் அவர்களையும் கடனாளியாகும் திட்டங்களாகவே இருக்கின்றன. வங்கிகளின் மூலம் சுயஉதவி குழுக்கள் பெரும் கடனும், குறு நிதி நிருவனனால் மூலம் பெரும் கடனும் ஏழை மக்களை முன்னேற்றுவதற்கு பதிலாக கடனாளி ஆக்குகின்றது. எளிதில் கடன் கிடைபதால், அதன் பின் விளைவை உணராமல் தங்கள் தேவைகளை அதிகபடுத்திகொண்டு, பின்னர் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தில் பெரும் பகுதியை கடன் கட்டியே சாகின்றனர். சேமிக்கும் பண்பை அடிபடியாகவும், கடன் வாங்குவதை கேவலமாகவும் நினைத்த சமுதாயம் என்று எவ்வளவு கடன் வாங்கவும் தயங்குவதில்லை.

    நம் நாட்டு பொருளாதார கொள்கைகளில் வெளிநாடுகளின் தலையீடு  இருக்கிறது என்பதற்கான சமிபத்திய ஆதாரம் விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்ட தகவல் ஒன்றிலிருந்து தெளிவாக தெரிகிறது.

    ப.சிதம்பரத்திற்கு பதிலாக பிரணாப் முகர்கியை காங்கிரஸ் அரசு தேர்ந்து எடுத்தவுடன் கீழ் கண்ட கேள்விகளை ஹில்லரி கிளிண்டன் எழுப்பியுள்ளார் 
    1. மன்மோகன் சிங்க் இன் பொருளாதார சீர்திருத்தங்களில் பிரணாப்   முகர்ஜிக்கு உடன்பாடு உண்டா ? எது பற்றிய அவரது தனிப்பட்ட கருத்துகள் என்ன ?
    2. எவ்வளவு வேகமாக இந்த சீர்த்திருத்தங்களை பிரணாப் முகர்ஜி எடுத்து செல்வார் ?   
    3. பிரணாப் முகர்ஜி கு இதனை செயல்படுத்தும் திறமைகள் உண்டா ?
    4. பிரணாப் முகர்ஜீக்கு இந்தியா - அமெரிக்க பொருளாதார உறவை பற்றி என்ன கருத்து இருக்கிறது ? இந்த உறவு பலன் தரும் என்று அவர் நம்புகிறாரா?
    5. எந்த எந்த விசயங்களில் அமெரிக்காவுடன் ஒத்துழைக்க அவர் ஆர்வமாக உள்ளார் ?
    6. அமெரிக்க -இந்தியா இடையிலான பொருளாதார உறவையும் அமெரிக்க -சீனா இடையிலான பொருளாதார உறவையும் அவர் எந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறார் ? 
    7. மொண்டேக் சிங்க் அஹ்லுவாலியாக்கு(Montek Singh Ahluwalia) பதில்   நிதி அமைச்சர் பொறுப்புக்கு பிரணாப் முகர்ஜி எப்படி தேர்வு செய்யப்பட்டார் ? மொண்டேக் சிங்க் அஹ்லுவாலியா மற்றும் பிரணாப் முகர்ஜி இருவருக்கும் ஒத்து போகுமா ?   
    8. எந்த எந்த தொழில் நிறுவனங்களுடன் பிரணாப் முகர்ஜீக்கு நெருங்கிய தொடர்பு உண்டு ? தன பொருளாதார கொள்கைகள் மூலம் யாருக்கு அவர் உதவி செய்வார் ? வருகின்ற நிதி அறிக்கையில் எது எதற்கு பிரணாப் முகர்ஜி முக்கியத்துவம் தருவார் ?     
    9. பிரணாப் முகர்ஜி யும் பிற தலைவர்களும் உலக  பொருளாதார தேக்க நிலையை சரி செய்ய எத்தகைய பொருளாதார கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என்று நினைகின்றனர் ?
    10. ஒரு நிதி அமைச்சராக பிரணாப் முகர்ஜி எப்படி செயல் பட வேண்டும் என்று பிரதமர் நினைக்கிறார் ?
    11. முகர்ஜீகும் RBI கவர்னர் D.V.சுப்பாராவுக்கும் எத்தகைய உறவு இருக்கிறது ? சிதம்பரம் நிதி அமைச்சர் பொருபில்லிருந்து விலக்கப்பட்டதை சுப்பாராவ் எப்படி எடுத்துக்கொண்டார் ?
    12. இதனால் நிதி அமைச்சகத்துக்கும் RBI கும் உள்ள உறவு எப்படி இருக்கும் ?    
    அப்பாடி !  பிரணாப் முகர்ஜியை நிதி அமைச்சர் ஆக்குவதற்கு முன்னாள் காங்கிரஸ் மற்றும் மன் மோகன் சிங்க் கூட எவ்வளவு யோசித்திருக்க மாட்டார்கள்

    நம் நாட்டின் பொருளாதார கொள்கையை நிர்ணயம் செய்பவர்கள் யார் என்று புரிந்திருக்குமே ? நம் நாடு சுதந்திரமாக செயல்படமுடியாமல், ஒப்பந்தம் என்ற பெயரில் அந்நிய சக்திகளால் ஆடுவிக்கபடுகிறதா இல்லையா என்பதை நீங்களே புரிந்துகொள்ளுங்கள்

    திங்கள், 21 மார்ச், 2011

    இரண்டாவது சுதந்திர போராட்டம்


    அவர் பிறந்தது கேரளா மாநிலத்தில்  ஒரு பணக்கார சிரியன் கிருத்துவ குடும்பத்தில் . சிறு வயதில் விமான ஓட்டியாக ( Pilot ) ஆகா வேண்டும் என விருப்பபட்டு , அதற்கான பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து, பின்னர் இந்திய விமான படையில் சேர்ந்தார் . பின்னர் ஒரு அழகான பெண் மீது காதல் வயப்பட்டு, அவரையே திருமணம் செய்துகொண்டு இரு குழந்தைக்கு தந்தையானார். வசதியான வாழ்கை. நினைததல்லாம் நடந்தது. ஒரு தனியார் விமான சேவையை தொடங்கவேண்டும் என்பது அவரது ஆவல். அதை நோக்கி வாழ்கை பயணம் சென்றுகொண்டிருன்தது 


      08 .07 .1982 . பதினெட்டு நபர்களை ஏற்றி சென்ற ஒரு சிறிய விமானம் தர்மபுரி அருகே விபத்துக்குளானது. விபத்து நடந்த விமானத்தில் இவரும் இருந்தார் . அது வரை தன விதியை தானே முடிவு செய்பவராக, கடவுள் நம்பிக்கை இல்லாத அவர் முதன் முதலாக உயிர் பிச்சை கேட்டு கடவுளிடம் பிராத்தனை செய்கிறார். உயிரும் பிழைகிறார்.

    கல்லூரியில் மார்க்சிஸ்ட் தத்துவத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார் அவர் . எந்த விமான விபத்திற்கு பிறகு, தனக்கு மறுவாழ்வு கிடைதிருபதாக உணர்ந்த அவர் , தன வாழ்வை இனி உலக அமைதிக்காக அற்பனிப்பது என முடிவு செய்தார் . விமான படை பணியிலிருந்து விடை பெற்றார். 
    ஆன்மிகத்தை பற்றிய அவர் தேடல் தொடங்கியது . முதலில் கிருத்துவமதத்தை பற்றி தெரிந்துகொள்ள நீதிபதி வித்தியாத்தில் ( Justice Vithyathil ) என்பவரிடம் கிருத்துவமதத்தை பற்றி சீடராக இருந்து தெரிந்துகொண்டார் . பின்னர் Bede Griffiths என்றவரிடம் ஆன்மீக பயறிசி பெற்றார். பின்னர் இந்து மதத்தில் ஈடுபாடு கொண்டு ராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் சுவாமி ரங்கநாதனந்தா விடம் சீடராக சேர்ந்தார்.  பின்னர் தன குடும்பத்தார் அனுமதியுடன் காவி தீத்சையும் பெற்றார்.   சுபி தத்துவத்திலும் தேர்ச்சி பெற்றார்.
    எப்பொழுது தர்ம பாரதி ஆஷ்ரமம் என்று கொச்சினில் ஒரு அஷ்ராமத்தை நிறுவி அதன் வாயிலாக ஆன்மீக சேவையில் ஈடுபட்டுள்ளார். ராணுவத்தில் இருந்ததால் இருந்த நாட்டு பற்றும், பொருள் சார்ந்த வாழ்கையில் இருந்து மீண்டு மக்கள் அமைதியும் அறமும் சார்ந்த வாழ்கைக்கு மாறவேண்டும் என்பதை குறிக்கோளாக வைத்து செயல்பட்டு வருகிறார் .

    பொறுப்புள்ள குடிமகனாக ஒவ்வொரு இந்தியனும் இருக்கவேண்டும்  என்பதற்காக ' 
    பொறுப்புள்ள குடியுரிமை " என்றல் என்ன என்பதை வலியுறுத்தி வருகிறார்.

    ஜான் என்ற தன் பெயரை சுவாமி சச்சிதானந்தா என்று மாற்றிக்கொண்டு ஆன்மிகம் என்பது மததிற்கு அப்பாற்பட்டது என்ற உண்மையை வலியுறுத்தி , நாட்டு நலனிலும் அக்கறை கொண்டு செயல்படும் அவரின் தொண்டு வெற்றியடைய வாழ்த்துவோம்.

    அமைதியையும் ஒற்றுமையையும் வலியுறுத்தி பசி இல்லாத, ஊழல் இல்லாத , ஜாதி மத வேறுபாடுகள் இல்லாத சமூகத்தை உருவாக்க நடத்தப்படும் இந்த இரண்டாவது சுதந்திர போராட்டம்  போற்றுதளுக்கு உரியது.   

    சனி, 19 மார்ச், 2011

    ஊழல் செய்யாத கலைஞர்


    இது முழுக்க முழுக்க கற்பனையே. படிப்பவர்கள் அனைவரும் ஜாலியாக எடுத்து கொள்ளுங்கள் 

    திடிர் என இனி  ஊழல் செய்வதில்லை என கலைஞர் கருணாநிதி முடிவெடுக்கிறார். மறு நாள் காலை அவசர அவசரமாக தன் இரண்டு மனைவிகள், ஸ்டாலின், அழகிரி, கனிமொழி மற்றும் பேரன்களை வீட்டுக்கு அழைக்கிறார்.

     வீட்டில் அனைவரும் தேர்தலுக்காக சிறப்பு கூட்டமோ என்று வியந்தபடி அமர்து இருக்கின்றனர்.

    கருணாநிதி எடுத்த எடுப்பிலேயே இனி ஆட்சிக்கு வந்தால் ஊழல் செய்வதில்லை என்று தான் முடிவெடுத்து உள்ளதாக கூறினார். இதை கேட்டவுடன் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கருணாநிதி இனி தன குடும்பத்தினர் யாரும் ஊழல் செய்யகூடாது என்றும், செய்தால் தானே காட்டி கொடுப்பேன் என்றும் கூறினார். 

    இதை கேட்டவுடன் அழகிரி தன் செல்பேசியை எடுத்து யாருக்கோ போன் செய்தார். ஸ்டாலினுகோ லேசாக நெஞ்சு வலிப்பது போல இருந்தது. 

    ராஜாத்தியும் தயாளுவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். இவள் எதாவது தலைவரை குழப்பிருப்பலோ  ? என்று ஒருவரை ஒருவர் நினைத்தனர்.

    அழகிரி செல்பேசியில் பேசியதை கவனித்த கருணாநிதி "இந்த நேரத்தில் கூட என்ன போன் ? செல்பேசியை வைத்துவிட்டு சொல்வதை கவனி" என்று கலைஞர் சொல்கிறார்.

     பேசிகொண்டிருக்கும் பொழுதே மருத்துவர் குழு ஒன்று கருணாநிதி இல்லத்தில் நுழைந்தது.

    கருணாநிதிக்கு ஏதோ உடல் நலம் சரியில்லை என்று அழகிரி செல்பேசியில் தகவல் தெரிவித்ததாகவும் அதனால் தான் தாங்கள் வந்திருப்பதாகவும் மருத்துவர்கள் கூறினார். அதற்கு கருணாநிதி நான் இன்னும் பேசி முடிக்க வில்லை. மேலும் உடல் நிலையும் சரியாக தான் உள்ளது என்றார்.

    ஆனால் அழகிரி மருத்துவர்களிடம் சென்று ரகசியமாக ஏதோ சொன்னார். உடனே ஒரு மருத்துவர் உங்கள் படபடப்பை குறைக்க ஒரு ஒரு ஊசி மட்டும் போடுகிறேன் என்றார்.

    சரி என்று கருணாநிதியும் எற்று கொண்டார். ஊசி போட்டவுடன் கருணாநிதி மயக்கம் அடைந்தார்.
    உடனே மருத்துவர்கள் அருகில் சென்று சில பரிசோதனைகளை செய்தனர்.

    பின்னர் அழகிரியிடம் வந்து " நீங்கள் சந்தேகப்பட்டது சரி தான். உங்கள் அப்பாவிற்கு மனநோய் முற்றியுள்ளது " அது சரி எப்படி இதை நீங்கள் கண்டுபிடித்தீர்கள் என்று கேட்டார்கள்.

     தன் தந்தைக்கு ஊழல் தான் உயிர் மூச்சு.என்றும்,  ஊழல் செய்யமாட்டேன் என்று அவர் உளறிய உடனேயே சந்தேகம் வந்தது என்று அழகிரி கூறினார் .

    ஸ்டாலின் இதை கேட்டு பெருமூச்சி விட்டார். என்னை விட தந்தையை நீ தான் மிக சரியாக புரிந்து வைத்துள்ளாய் என்று அழகிரியை பாராட்டினார் 

    திடீர் என மன நோய் வந்தது ஏன் ? என்று பின்னர் ஆராய்ந்து பார்த்ததில் , முதல் நாள் மாலை ஜெயலலிதா, கருணாநிதிக்கு போன் செய்தார் என்று தெரியவந்தது.

    சரி. தொலைபேசியில் மன நோய் வரும்படி ஜெயலலிதா என்ன சொன்னார் ?

    கருணாநிதி நடந்ததை எல்லாம் மறந்துவிடுவோம். சமிபகாலமாக உங்கள் ஆற்றலை கண்டு நான் வியந்து வருகிறேன். நானும் தனியாக தான் இருக்கிறேன். நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா ? தமிழ் நாட்டு மக்கள் இளிச்சவாயர்கள். உங்கள் நான்காவது திருமணத்தையும் ஏற்றுகொள்வார்கள்.நாம் இணைந்தவுடன் நம் கட்சிகளையும் இணைத்து விடுவோம் என்றாராம் .

    இதை கேட்டவுடன் அதிர்ச்சியில் மனநோய் வந்திவிட்டது  

    போன் செய்து வைத்து விட்டு சசிகலாவும் ஜெயலலிதாவும் விழுந்து விழுந்து சிரித்ததாக உளவு துறை பிற்பாடு செய்தி சொன்னதும் தான், கருணாநிதியை பைத்தியமாக ஜெயலலிதா செய்த சதி இது என்று தெரிய வந்தது   

    பின் குறிப்பு : கருணாநிதிக்கு மனநோய் என்பதை மாறன் சகோதரரர்கள் நம்பவில்லை. கருணாநிதி ஏதோ ஒரு காரணத்திற்காக நாடகம் ஆடி இருக்கிறார்கள் என்பது அவர்கள் எண்ணம் 


    நாய் கடியுடன் தொடங்கிய புத்தாண்டு



    01 .01 .2011 . அதிகாலை ஆறு மணிக்கு படுக்கையை விட்டு எழுந்தேன். வீட்டில் வேறு யாரும் இல்லை. மனைவி குழந்தையுடன் சொந்த ஊருக்கு சென்று இருந்ததால் இந்த புத்தாண்டு தனிமையில் தான் தொடங்கியது. படுக்கையை விட்டு எழுந்த நான் வாசல் கதவை திறந்து வெளியில் காலடி எடுத்து வைத்தேன். என் வீடு, தனி வீடுகளுடன் அமைந்த ஒரு குடியிருப்பு பகுதி. ஆறு தெருக்களுடன் நூற்றுக்கும் சற்று அதிக பிளாட்களுடன், அதில் அறுபதிற்கு மேற்பட்ட வீடுகளுடன் புறநகரில் உள்ள குடியிருப்பு பகுதி அது. ஒரு கட்டிட நிறுவனத்தால்  தேவையின் அடிபடியில் வீடுகள் கட்டிகொடுக்கபட்டு, கம்பி வேலி மற்றும் பாதுகாவலர் வசதியுடன் இருக்கும் அந்த குடியிருப்பு பகுதியில் சரியான சாலை வசதியும் ( மண் சாலை அதுவும் சரியில்லாமல் ) சாக்கடை வசதியும் இல்லை. மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வசதிகளை செய்து கொடுக்காமல் அந்த நிறுவனம் ஏமாற்றி வருகிறது என்பது வேறு விசயம்.

    நான் இருக்கும் வீடு கடைசியாக ஆறாவது தெருவில் வடக்கு பார்த்து  இருந்தது. வீட்டின் வலது பக்கத்தில் ஒரு வீடு. எதிரில் இப்பொழுதுதான் இரு வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

    வீட்டை விட்டு வெளியில் வந்த நான் சிறிது தூரம் காலாற நடக்கலாம் என்று நடக்க ஆரம்பித்தேன். பத்து அடி தான் எடுத்து வைத்திருப்பேன். எங்கிருந்தோ ஓடி வந்த பக்கத்துக்கு வீட்டு நாய், பாய்ந்து வந்து என் தொடையை கவ்வியது. அரைகால் சட்டை சிறிது மொத்தமாக இருந்த காரணத்தினால், அதன் பற்கள் தொடையில் ஆழமாக பதியவில்லை. அதன் இரு பற்கள் மட்டும் லேசாக பதிந்தது. இரத்தம் லேசாக எட்டி பார்த்தது.
       
    மேலும் அந்த நாய் என்னை கடிபதற்குள், அந்த நாயை வளர்க்கும் பக்கத்துக்கு வீட்டு இளைஞன், அதனை விலக்கிவிட்டு "சாரி சார், அந்த நாய் குட்டி போட்டிருக்கு அதனால் தான் பாய்ந்துவிட்டது" என்றான்

    இந்த நியூ இயர் நாய் கடியில் தான் ஆரம்பிக்க வேண்டும் என்ற விதி இருந்தால் யாரால் மாற்றமுடியும்?

    ஆனாலும் சிறிது கோபப்பட்ட நான் " நாயை கட்டி வைக்க வேண்டும் என்று கூடவா என்று தெரியாது" என்றேன் 

    சரி நாய்க்கு Anti rabis தட்டுபூசி மற்றும் வேறு தடுப்பூசிகள் போடபட்டுல்லதா என்று கேட்டேன். அவன் போடபட்டுள்ளது என்றான்.

    இருந்தாலும் நீங்கள் ஒரு ஊசி போட்டுக்கொள்ளுங்கள் என்றான். 

    அதற்கு மேல் என் நடையை தொடராமல் வீட்டுக்குள் சென்று நாய் கடித்த இடத்தை சோப்பு போட்டு கழுவினேன். ஊசி போடும் எண்ணத்தை கைவிட்டேன்.

    என்னை கடித்தது ஒரு போமரனியன் வகையை சார்ந்த நாய். ஆனால் அந்த இளைஞன் தன்  வீட்டில் ஒரு நாய் பண்ணையே வைத்து உள்ளான். அவன் தந்தை காய்கறி மொத்த வியாபாரம் செய்கிறவர். மூத்த மகன் வெளிநாட்டில் இருக்கிறான். இளைய மகனும் அவர் மனைவியும் இந்த வீட்டில் இருக்கின்றனர். இளைய மகன் டிகிரி முடிக்காமல், வேறு வேலை எதுவும் செய்யாமல் இருந்தான். தீடிரென ஒரு வருடத்திற்கு முன் அவனுக்கு நாய் வளர்க்க ஆசை வந்தது

    முதன் முதலில் ஒரு நாயை ருபாய் 20000௦௦௦௦ / கொடுத்து வாங்கி வந்தான். ஆறு மாத குட்டி என்று அவன் சொன்னான். ஆனால் அதுவே ஒரு கன்றுகுட்டி அளவு இருந்தது. மிகவும் சுறு சுறுப்பாகவும் இருந்தது. அந்த நாயை எனக்கும் பிடித்து விட்டது.

    ஒரு வாரம் தான் இருக்கும். ஒரு நாள் அலுவலகம் விட்டு வரும் பொழுது பார்த்தால் அவன் வீட்டை சுற்றி மேலும் 5 நாய்கள் கட்டபட்டிருந்தது. எல்லாமே உயர் ரக நாய்கள். ஒரு மாதத்தில் நாய்களின் எண்ணிக்கை ஒன்பதாக கூடியது. 

    முதலில் ஒரு நாய் இருக்கும் பொழுது அதனை நடைபயிற்சிக்கு தினமும் அவன் அழைத்து செல்வான். பின்னர் பல நாய்கள் ஆனதும் கூட அவைகளை ஒரு மாத காலம் கவனத்துடன் பார்த்து கொண்டான்.

    எதற்கு எத்தனை நாய் என்று நான் ஒரு நாள் கேட்டதற்கு நாய் வளர்த்து விற்க போவாதாக அவன் கூறினான் . என் வீட்டிற்கும் அவன் வீட்டிற்கும் எடையில், அவர்களுக்கு சொந்தமான காலி எடம் இருந்தது. அதில் தான் நாய்களுக்கு மாட்டுக்கறி சமையல் நடக்கும். நாற்றம் குடலை பிடுங்கும். அத்தனை நாய்களையும் அவனால் வெகு நாட்கள் சரியாக பார்த்து கொள்ள முடியவில்லை. மாதத்தில் சில நாட்கள் குடும்பத்துடன் வெளியூர் செல்வதுண்டு. அப்பொழுது எல்லாம் நாய்கள் கட்டியே வைக்கப்படும். அதனால் நாய்கள் தாங்கள் கட்டப்பட்ட எடத்திலே உச்சா கக்கா போகும். அருகில் இருக்கும் எங்களுக்கு நாற்றம் சகிக்காது. என் மனைவி புலம்பிக்கொண்டே இருப்பாள் .

    வீட்டிற்கு பேப்பர் போடுபவர், பால்காரர் ஆகியோர் நாய்கள் கட்டி இருந்தாலும் அவற்றிற்கு பயந்து என் வீட்டுக்கு சுற்றி வருவர். குப்பை அள்ளுபவரும், குப்பை வண்டியை தொலைவிலேயே நிறுத்திவிட்டு, அவர் மட்டும் வந்து குப்பையை எடுத்துக்கொண்டு போய் வண்டியில் போடுவார்.

    இதற்கிடையில் அங்கு  இருக்கும் சிறுவர்களுக்கு நாய் வேடிக்கை பொருள் ஆனது. கும்பலாக வந்து வேடிக்கை பார்த்து செல்வர். 

    ஒரு நாள் காலை நிறைய நபர்கள் பேசும் குரல் கேட்டு, வெளியில் சென்று பார்த்த பொழுது காணகிடைக்காத அறிய காட்சியை கண்டேன். 

    ஒரு உயர் ஜாதி பெண் நாயை, வேறு இடத்திலிருந்து அழைத்து வந்த ஒரு உயர்  ஜாதி நாயுடன் கலவி (Mating ) செய்ய வைத்து அதனை சுற்றி நின்று பலர் வேடிக்கை பார்த்துகொண்டிருந்தனர். காலங்கார்தாளையில் எந்த காட்சியை பார்க்க நேரத்தை நினைத்து தலையில் அடித்து கொண்டேன்.

    இந்த சம்பவம் இரு வாரதிற்கு ஒரு முறையாவது நடந்தது.  

    ஒரு நாள் காலையில் அலுவலகம் செல்ல என் காலனியை அணிய தேடியபொழுது ஒரு செருப்பை மட்டும் காணவில்லை. உடனேயே பாகத்து வீட்டு நாய் ஏதோ ஒன்றின் வேலை தான் என்று புரிந்தது. வீட்டை சுற்றி தேடி பார்த்தும் கிடைக்கவில்லை என்றதும் மொட்டைமாடிக்கு சென்று அடுத்த வீட்டு மொட்டை மாடியை பார்த்தேன். அங்கு என் செறுப்பு இருந்தது. மற்றும் ஒரு நாள் ஏன் குழந்தையின் ரப்பர் செறுப்பு ஒன்று சுக்கு நூறாக கடித்து குதறப்பட்டு இருந்தது 

    இந்த நிலையில் வெளிநாட்டில் இருக்கும் மகனுக்கு திருமணம் ஏற்பாடு நடந்து, திருமணம் பழனியில் நடைபெற்றது. வரவேற்ப்பு திருமணம் முடிந்த மறுநாள் மாலை மணமகன் வீட்டில். வரவேற்புக்கு வருபவர்களுக்கு நாய்கள் தொந்திரவாக இருக்கும் என்பதினால் சில நாய்களை அவசர அவசரமாக வந்த விலைக்கு விட்டுவிட்டனர். இன்னும் சில நாய்களை நாய்கள் காப்பகத்தில் வைத்திருந்தனர்.

    வரவேற்ப்பு நாளும் வந்தது. இரவு ஏழு மணி போல் வரவேற்பு நடக்க இருந்த நிலையில் கரண்ட் கட் ஆனது. முன்னேற்பாடாக ஜெனரேட்டர் வசதி செய்யப்படவில்லை. அனால் விருந்தினார்கள் வந்து விட்டனர். கரண்ட் கட் ஆனதால் வீடே இருளில் மூழ்கியது. புகைப்படம் வீடியோ எடுக்க முடியவில்லை. எனவே மணமக்களை வெளியில் அமரவைத்தனர். இந்த எடம் தெரியோமா ? நாய்கள் சில கட்டப்பட்டு அசிங்கம் பண்ணி வைத்த இடத்தில். நானும் என் மனைவியும் பரிசு பொருளுடன் அங்கு சென்ற பொழுது இந்த காட்சியை பார்த்து அதிர்சியானோம். பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு பரிசளித்து விட்டு வந்தோம்.

    திருமணம் முடிந்த சில நாட்களிலேயே மணமக்கள் வெளிநாடு சென்று விட்டனர் 

    மீண்டும் சில நாய்கள் வீட்டுக்கு திருப்பி அழைத்து வரப்பட்டன. அனால் அதில்  முதன்முதலில் வாங்கிய நாய் (அதன் பெயர் Sophie ) எல்லை. சோபியை விற்று விட்டீர்களா ? என்று பக்கத்துக்கு வீட்டு இளங்கனை கேட்டேன். எல்லை அது நாய்கள் காப்பகத்தில் இறந்து விட்டது என்றான். அவர்கள் அதனை சரியாக கவனிக்கவில்லை என்று குறை கூறினான்.
    உண்மையில் அந்த அருமையான நாயை இவன் தான் சரியாக கவினிக்கவில்லை. மிகவும் சுறு சுறுப்பாக இருந்த அந்த நாய், சில மாதங்களிலேயே அதன் பொலிவை இழந்ததை நான் கண்டேன். உடல் இளைத்தும் போனது. நாய் இறந்ததற்கு காரணம் இவன் தான் என மனதிற்குள் நினைத்துக்கொண்டேன்.

    இவன் வளர்ர்த்த Labrador இன நாய் ஒன்று ஒரே சமயத்தில் ஆறு குட்டிகளை ஈன்றது. Mating கிற்கு பலன் கிடைத்தது என்று நினைதேன். 

    சில நாட்கள் கழித்து நாய்க்குட்டிகளை பார்த்த பொழுது அவை Labrador குட்டிகளை போல தெரியவில்லை. ஒரு சந்தேகத்தில் பக்கத்துக்கு வீட்டு இளைங்கனை கேட்ட பொழுது " ஆமாம் சார். Mating செய்ததில் இது கர்ப்பம் ஆகவில்லை. கொஞ்சம் Careless ஆகா நான் இருந்ததினால் தெரு நாயோடு சேர்ந்து விட்டது என்றான்.

    மகனுக்கு சளைத்தவள் நான் எல்லை என்று அவன் தாயும் ஒரு ஆட்டை வாங்கி வளர்க்க ஆரம்பித்தல். நாயை கண்டால் பயப்படும் என் குட்டி பெண், ஆட்டுக்குட்டியிடம் விளையாட ஆரம்பித்தால். எங்கள் வீட்டு Fridge இல் உள்ள  காய்கறிகள் அதற்க்கு உணவாக சென்றது. ஐந்து வயதாகும் என் மகள் விளையாடுகிறேன் என்ற பெயரில் செய்த வேலை இது.

    ஒரு நாள் வழக்கம் போல குடும்பம்மே வெளியூர் சென்ற நிலையில், ஆடுகுட்டியின் அலறல் சத்தம் கேட்டது. என் மனைவி ஆடு விநோதமாக கத்துகிறது என்னவென்று பாருங்கள் என்றாள். வெளியில் சென்று பார்த்த பொழுது ஒரு பெரிய நாய் ( என்ன ரகம் என்று தெரியவில்லை ) கட்டி இருந்த கயிறாய் அறுந்தது கொண்டு வந்து, ஆட்டின் குரல்வலையை கடித்துகொண்டிருந்தது.
    நான் விரைந்து சென்று அந்த நாயின் சங்கிலியை பிடித்து இழுத்து வந்து ஒரு இடத்தில் கட்டினேன். பின்னர் ஆட்டின் கழுத்தை பார்த்த பொழுது ரத்தம் வடிந்துகொண்டிருன்தது. பின்னர் ஆட்டின் கழுத்தை தண்ணீர் கொண்டு கழுவி விட்டேன். என் பெண் வழக்கம் போல fridge இல் இருந்து முட்டைகோஸ், காரட் கொண்டு வந்து தந்தாள். அருகில் இருந்த சில புற்களையும் பறித்து வந்து தந்தாள்.

    அடுத்த வீட்டு குடும்பம் திரும்பி வந்ததும் நடந்ததை சொன்னேன். பிறகு அவர்கள் ஆட்டை அழைத்து சென்று ஊசி போட்டனர். சில நாட்களில் அந்த ஆட்டை விற்றுவிட்டனர்.

    இந்த நிலையில் தான் அவர்கள் வர்த்த போமேரனியன் குட்டி போட்டு, பிறகு புத்தாண்டை எனக்கு நல்லபடியாக தொடங்கிவைத்தது.

    புத்தாண்டிற்கு பிறகு மீண்டும் மூன்று நாய்களை அவன் வாங்கி வந்தான். (பொமேரேனியன் முதற்கொண்டு பழைய நாய்களில் இரண்டை தவிர மீதம் உள்ளவற்றை விற்றுவிட்டான் ? குட்டி போட்ட லப்ரடோரையும் விற்று விட்டான்)     

    ஒரு மாதத்திற்கு முன் புதிதாக வாங்கிய நாய் ( Labrador ) ஒன்று இரவு நேரங்களில் ஊளை இட தொடங்கியது. எங்கள் தூக்கத்தை கெடுத்தது. தொல்லை தாங்காத என் மாமனார் புகார் செய்தார். அப்படியா நாங்கள் நன்றாக தூங்கிவிடுவதால் எங்களுக்கு தெரியவில்லை என்று பதில் வந்தது.

    ஒரு நாள் ஊளை இட்டுகொண்டிருந்த Labrador குப்பை எடுக்க வந்தவரை பாய்ந்து கடிக்க சென்றதாகவும்,  நல்ல வேலை அருகில் இருந்த இளைஞன் அதனை கட்டுபடுத்தி கட்டிபோட்டதாகவும் என் மாமனார் கூறினார்.
    மீண்டும் இரண்டு நாள் சென்று என் மாமனார், அந்த லப்ரடோர் அந்த இளைங்கனையே பாய்ந்து கடிக்க சென்றதாகவும், சந்தேகப்பட்ட இளைகன் கால்நடை மருத்துவரிடம் கேட்டதற்கு சில மருந்துகளை  கொடுத்து, இன்னும் இரண்டு தினங்கள் பார்க்கலாம் என்று கூறியதாகவும் சொன்னார். அனால் அன்று மாலையே மீண்டும் அந்த இளைங்கனை லப்ரடோர் கடிக்க பாய்ந்தவுடன், அவன் நாய் கட்டிருக்கும் சங்கிளியாலேயே அதன் கழுத்தை இருக்கி கொன்று விட்டதாக கூறினார். பின்னர் அந்த வீட்டில் இருந்த அனைவரும் Anti Rabis போட்டுகொண்டதாகவும் கூறினார்.

    ஆம். அந்த நாய்க்கு ராபிஸ் வந்துவிட்டது. வாங்கி வரும் பொழுதே இருந்திருக்கலாம் என்பது அவன் எண்ணம். மேலும் சில நாட்களில் இன்னும் இரண்டு நாய்களின் வாயில் எச்சில் வழக்கத்திற்கு மாறாக அதிகம் வருவதை கண்ட அந்த இளைஞன், அவற்றையும் அடித்து கொன்று புதைக்க செல்லும் பொழுது பார்த்தேன்.

    அனால் அவன் நாய் வளர்ப்பதை நிறுத்தவில்லை. இப்பொழுது மூன்று நாய்கள் பக்கத்துக்கு வீட்டில் இருக்கின்றன. என் செருப்பும் கடந்த இரு வாரங்களில் இரு முறை ரோட்டில் கண்டு எடுத்தேன். 

    ஆடு வளர்த்த அவன் தாய் ஆறு கோழி குஞ்சிகளையும், ஒரு முட்டை இடும் பருவத்தில் உள்ள நாட்டுகோழி ஒன்றையும் சேவல் ஒன்றையும் இப்பொழுது வளர்க்க ஆரம்பித்துள்ளார்.

    ஐந்தறிவு ஜீவனங்களின் மேல் அவர்களுக்கு உள்ள பாசம் புரிகிறது. அனால் பக்கத்துக்கு வீட்டில் உள்ள இந்த பாவப்பட்ட ஆறறிவு ஜீவன்களையும் அவர்கள் நினைத்து பார்த்தால் மகிழ்ச்சியடைவேன்.

    பின்குறிப்பு: புத்தாண்டு அன்று என்னை நாய் கடித்ததை ஊரில் இருந்து வந்த என் மனைவி, குழந்தை மற்றும் மாமனாரிடம் கூறிவிட்டேன். ஒரு வாரம் முன்பு தான் என் மாமனார் " தம்பி , ஒன்னு கேட்டா தப்பா நினைக்கமாட்டிங்களே ? என்றார் 

    கேளுங்க அப்படின்னு சொன்னேன் 

    நாங்கள் ஊரில் இல்லாத பொழுது தண்ணி அடிப்பீர்களா என்றார் 

    என் அப்படி கேட்கறீர்கள்? என்றேன் 

    இல்லை. நீங்கள் குடித்து விட்டு தள்ளாடி கொண்டு வந்ததினால் தான் நாய் கடித்துவிட்டதாக பாகத்து வீட்டு பையன் சொன்னான் அதான் கேட்டேன் என்றார்.

    அடப்பாவிகளா! புத்தண்டுதினதன்று அதிகாலையிலேயே தண்ணி போடுபவனா நம் மருமகன் என்று என் மாமனார் நினைதிருபார். அல்லது இரவு அடித்த மப்பு தெளியாமல் நடந்து சென்று இருப்பான் என்று நினைத்திருப்பார். பாண்டிசேரி காரனை மருமகனாக தேர்ந்துஎடுத்தது தப்பு என்று வருந்தி இருப்பார்.

     நான் தண்ணி அடிக்கவில்லை என்பது தான் உண்மை . வருடத்தில் ஒரு மூன்று முதல் நான்கு முறை, அதுவும் நல்ல சந்தர்பம் அமைந்தால் மட்டுமே அடிப்பேன் என்று நான் எப்படி அவரிடம் கூறுவது ?

    தண்ணி எதுவும் அடிக்கவில்லை என்று மட்டும் கூறினேன் .




    வெள்ளி, 18 மார்ச், 2011

    இந்திய நாட்டின் மிக பெரிய ஊழல்கள்


    நம் இந்திய நாட்டில் நடந்த முக்கியமான ஊழல்களின் பட்டியல் இதோ. யாரரோ ஒரு நலம் விரும்பி தொகுத்த தகவலை சிறிது மாற்றத்துடன் சமர்பிக்கிறேன். எதில் தவறு இருந்தால் சுட்டி காட்டவும். கண்ணில் தெரிதா ஊழல்களின் பட்டியல் எது. கண்ணனுக்கு தெரியாமல் இருப்பது என்னும் எவ்வளவோ ?     


    ஊழல்களின் ஊற்று நம் நாடு என்பதை நினைத்தால் சாதிக் பாட்சாவை போல நாம் அனைவருமே தூக்கு மாறிக்கொள்ள வேண்டும். தெரிந்தோ தெரியாமலோ நம் நாட்டில் நடக்கும் ஊழல்களுக்கு நாமும் பொறுப்பு. பிறப்பு சான்றிதழ் முதல் இறப்பு சான்றிதழ் லஞ்சம் தர நாம் தயாராகிவிட்டோம். லஞ்சம் கொடுத்தால் தான் காரியம் நடக்கும் என்பது சிறு குழந்தையின் மனதில் கூட பதிந்து விட்டது. இதற்காக போராடவில்லை என்றாலும்  இந்த நிலை மாற வேண்டும் என்றாவது மனதார நினைப்போம்.

    நம் நாட்டில் நடந்த மொத்த ஊழல் தொகை ருபாய் 7,30,00 ,00 ,00 ,00 ,000  கோடி ருபாய் ( தலையை சுற்றுகிறதா? குழப்பம் வேண்டாம் தொடர்ந்து படியுங்கள் ) அதாவது எழுபத்திமூன்று இலட்சம் கோடி )

         
    1992 -Harshad Mehta பங்கு சந்தை ஊழல் Rs 5,000 கோடி 

    1994 -சக்கரை ஏற்றுமதி ஊழல் Rs 650 கோடி

    1995 - யுகச்லோவிய தினர் ஊழல் (Yugoslav Dinar scam ) Rs 400 கோடி
                மேகாலயா வனத்துறை ஊழல் Rs 300 கோடி

    1996: - உர இறக்குமதி ஊழல் Rs 1,300 கோடி
                  யூரியா ஊழல் Rs 133 கோடி
                 லல்லு புகழ் பீகார் மாட்டு தீவன ஊழல் Rs 950 கோடி

    1997 -சுக்ராம் தொலைதொடர்பு ஊழல் Rs1,500 கோடி
               - SNC Lavalin மின்சார திட்ட ஊழல் Rs 374 கோடி
               பீகார் நிலா ஊழல் -Rs 400 கோடி
               C.R. Bhansali பங்கு சந்தை ஊழல் Rs1,200 கோடி

    1998 -தேக்கு மர திட்ட ஊழல் -Rs 8,000 கோடி ( இதில் சம்பாத்தித  பணத்தில் வேறு தொழிலில் கொடிகட்டி சிலர் இன்னும் பறக்கிறார்கள் )

    2001 -UTI ஊழல் Rs 4,800 கோடி
                Dinesh Dalmia பங்கு ஊழல் Rs 595 கோடி
                Ketan Parekh பங்கு ஊழல்  Rs 1,250 கோடி 

    2002 -Sanjay Agarwal வீடு விற்பனை ஊழல் Rs 600 கோடி

    2003 -Telgi பத்திர தாள் ஊழல் Rs 172 கோடி

    2005 -IPO-Demat ஊழல் (பங்கு சந்தை ) Rs 146 கோடி
               பீகார் வெல்ல நிவாரண ஊழல் Rs 17 கோடி
              Scorpene நீர்மூழ்கி கப்பல் ஊழல் Rs 18,978 கோடி

    2006 - பஞ்சாப் நகர மைய்ய( Punjab's City சென்டர்) திட்ட ஊழல் Rs 1,500 கோடி,
                 தாஜ் கொரிடோர் ஊழல் ( Taj Corridor scam ) Rs 175 கோடி

    2008 -புனே கோடிஸ்வரன் ஹசன் அலி வரி எய்ப்பு ஊழல் Rs 50,000 கோடி
               சத்யம் கம்ப்யூட்டர் ஊழல் Rs 10,000 கோடி
               தரைப்படை ஊழல் (Army ration pilferage scam ) Rs 5,000 கோடி
                The 2-G spectrum ஊழல் Rs 60,000 கோடி
              State Bank of Saurashtra ஊழல் Rs 95 கோடி
              ஸ்விஸ் பாங்கில் உள்ள இந்தியார்களின் பணம்   (2008 ) Rs 71,00,௦௦௦ கோடி 

    2009: - ஜார்க்கந்து மருத்துவ உபகரண ஊழல் Rs 130 கோடி
                 அரிசி ஏற்றுமதி ஊழல் Rs 2,500 கோடி
                ஒரிசா சுரங்க ஊழல் Rs 7,000  ஊழல்
              மது கோடா (Madhu கோடா) சுரங்க ஊழல் Rs 4,000 கோடி r"

    போபோர்ஸ் பீரங்கி ஊழல், CWG ஊழல், இஸ்ரோ ஊழல் என்று பட்டியல் நீளுகிறது 

    இந்த எழுபத்தி மூன்று இலட்சம் இருந்தால் நாட்டிற்கு என்ன பயன் கிடைதிர்ருக்கும் ?

    2.4 கோடி ஆரம்ப சுகாதார மையங்களை கிராமத்திற்கு மூன்று என்ற அளவில் அமைதிருக்கலாம்  

    கேந்திர்யா வித்யாலயா ( Kendriya Vidhalaya ) பள்ளிகள்- 24 .1 இலட்சம் பள்ளிகள் அமைத்திருக்கலாம் ( Class VI - XII ) 


    14 .6 கோடி சிறிய  வீடுகளை ஒரு வீட்டிற்கு 5 இலட்சம் என்ற அளவில் கட்டி கொடுக்கலாம்

    ஆறு  இலட்சம் கிராமங்களுக்கு CFL பல்புகளை இலவசமாக தரலாம்
    ஒரு பெரிய ஆறுக்கு (River ) ருபாய் 1200 கோடி என்ற அளவில் 50௦ ஆறுகளை சுத்தபடுத்த 120 வருடங்களுக்கு நிதி ஒதுக்கலாம்
    கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டம் போல இன்னும் 90௦ திட்டங்களை செயல்படுத்தலாம் ( Rs81111 கோடி ஒரு திட்டத்திற்கு )

    வறுமை கோட்டிற்கு கிழே உள்ள 40௦ கோடி மக்களுக்கு ருபாய்  ஒரு இலட்சத்தி எண்பது ஆயிரம் ரொக்கமாகவே தரரலாம்  

    டாட்டா நானோ காரை 60௦ கோடி மக்களுக்கு தரலாம். அல்லது ஒவ்வுறு இந்திய குடிமகனுக்கு இரண்டு லேப் டாப் குறைந்தபட்சம் தரலாம் 

    ஒவ்வொரு குடிமகனும் இந்த ஊழல்களால் பாதிக்கபடுகிறோம். நமக்கு வந்தால் பார்த்துகொள்ளலாம் என்ற மன நிலை எவ்வளவு தவறு என்று இப்பொழுது புரியும்.

    ஊழல்களால் நம் நாடு முழ்கிபோயவிடும் அபாயம் உள்ளது 

    யானைக்கும் எறும்புக்கும் காதல்

    ஒரு யானைக்கு விபத்து நடந்து மருத்துவமனையில் அட்மிட் ஆனது. செய்தி கேட்ட அதன் நண்பியான எறும்பு பூங்கொத்துடன் மருத்துவமனைக்கு வந்து பார்த்தது. கால் எலும்பு யானைக்கு முறிந்துவிட்டது என்பதை கேள்விப்பட்ட எறும்பு மிகவும் கவலைப்பட்டது. தினமும் மருத்துவமனைக்கு வந்து யானைக்கு ஆறுதல் கூறியது. எதனால் அந்த நட்பு காதலாக மாறியது.
    யானையும் குணமடைந்தது. பிறகு யானையும் எறும்பும் சேர்ந்து பார்க், கடற்கரை, சினிமா, ஹோட்டல் என்று ஜாலியாக சுற்றி திரிந்தனர். 
    யானையும் எறும்பும் இவ்வாறு சுற்றும் பொழுது அதனை எறும்பின் தாய் பார்த்து விட்டு மகளை கண்டித்தார். 
    எவ்வளவு சொல்லியும் இருவரும் சேர்ந்து சுற்றுவதை நிறுத்தவில்லை. எறும்பின் தாய் மீண்டும் தன மகள் எறும்பை அழைத்து " அவன் என்ன ஜாதி நாம் என்ன ஜாதி. இருவருக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது. எனவே நீ யானையை மறந்துவிடவேண்டும். நீ சொல்லவதை கேட்கவில்லை என்றால் நானும் உன் தந்தையும் தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழி இல்லை. நம் குடும்ப மானத்தை தான் நாங்கள் பெரிதாக நினைகிறோம் என்றது.

    எறும்பும் என்னை மன்னித்து விடுங்கள் அம்மா! எனக்கு யானையை திருமணம்   செய்து தரவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறியது.
    எனக்கு வேறு வழி இல்லை அம்மா. ஒரு தப்பு நடந்துடுச்சி என்றது எறும்பு

    என்ன தப்பு என்றது தாய் எறும்பு

    நான் இப்ப மூணு மாசம் முழுகாம இருக்கேன் என்று சொல்லிவிட்டு எறும்பு கேவி கேவி அழுதது




    கழுதையாய் இருங்கள்

    ஒரு விவசாயியின் கழுதை சுவரில்லா கிணற்று ஒன்றில் விழுந்துவிட்டது. வெளியே வர வழியின்றி பெருங்குரலேடுத்து கத்த ஆரம்பித்தது. விவசாயிக்கு என்ன பண்ணுவது என்று தெரியவில்லை. பிறகு யோசித்து பார்த்தான். கழுதைக்கும் வயசாகிவிட்டது. அதனால் பயன் எதுவும் பெரிதாக எல்லை. கிணறும் பழுதடைந்து விட்டது. இதனையும் எப்போவோ மூடி இருக்க வேண்டும். இனி இந்த கிணற்றில் வேறு யாரும், ஆடு மாடு போன்றவையும் தவறி விழுந்து விடகூடாது என்று நினைத்தான்.

    உடனே சில வேலையாட்களின் உதவியுடன் மண்ணை அள்ளி போட்டு கிணற்றை முடிவிட முடிவு செய்தான். அவ்வாறே மண்ணால் கிணறு மூடும் பணி தொடங்கியது. சிறுது நேரம் கழித்து கிணற்றுக்குள் எட்டி பார்த்த விவசாயி ஆச்சிரியம் அடைந்தான். மண்ணை கொண்டு மூட மூட, கழுதை தன மீது விழும் மண்ணை உதறி, தன கால்களை உதைத்து மண் மீது நின்றுகொண்டிருந்தது. மேலும் மண்ணை போட போட கழுதை மேலே ஏறி மகிழ்ச்சியுடன் கிணற்றை விட்டு வெளியில் வந்தது.
    நம்  வாழ்கையில் முன்னேற முயற்சிக்கும் பொழுது, பலர் நம் மீது மண்ணை போட முயற்சிக்கலாம். புழுதிவாரி தூற்றலாம். நம் செய்கையில் நேர்மையும் நியாயமும் இருக்கும் பொழுது, அதனை உதறி தள்ளி வெற்றியடைய முயற்சிக்க வேண்டும்.


    வேலையும் ஊதியமும்


    ஒரு இதய நோய் அறுவை சிகிச்சை நிபுணர் தன்னுடைய காரை வழக்கமாக ஒரு கார் பழுது நீக்கும் மையத்தில், பழுது பார்பார். ஒரு முறை அவ்வாறு செல்லும் பொழுது அந்த மைய்யத்தின் மெக்கானிக் மற்றும் உரிமையாளரும் ஆனா நபரிடம் நட்பாக பேசிகொண்டிர்ருந்தார். அந்த மெக்கானிக் மிகவும் திறமையானவர். ஆனால் தொழிலில் பெரிய வருமானம் என்று சொல்ல முடியாது.
    நான் சில காலமாக நாம் இருவரும் செய்யும் பணியை பற்றியும் அதில் நமக்கு கிடைக்கும் வருமானத்தை பற்றியும் யோசிக்கிறேன். அப்படி யோசித்தால் வியப்பு தான் வருகிறது என்று அந்த மெக்கானிக் சொன்னார்.
    அப்படி என்ன வியப்பு என்று அந்த டாக்டர் கேட்டார்.           
    சரி. எதை பாருங்கள். நான் இப்பொழுது மிக பெரிய சிக்கலான கார் என்ஜின் ஒன்றை பழுது பார்த்து கொண்டிருகிறேன். மனிதனின் இதயத்தை போல காரின் இதயம் தான் அதன் என்ஜின். அது எப்படி சரியாக செயல்படுகிறதா, என்ன பிரச்னை இருக்கிறது என்று கண்டுபிடித்து அதனை சரியும் செய்து விடுகிறேன். அடிப்படையில் இருவரும் ஒரே மாதிரியான பணியை தான் செய்கிறோம். அப்படி இருக்கும் பொழுது நீங்கள் என்னை விட பத்து மடங்கு அதிகம் சம்பாதிகின்றீர்கள். அது எப்படி என்றார்         
    அந்த அறுவை சிகச்சை நிபுனர் சிறிது நேரம் யோசித்துவிட்டு புன்னகை செய்தார். பின்னர் அந்த மெக்கானிக் கை பார்த்து " நீ செய்யும் வேலையை என்ஜின்னை ஓட விட்டு செய்து பார்" என்று கூறினார்  

    வியாழன், 17 மார்ச், 2011

    நீங்கள் யார் -2

    இந்த  பதிவை படிக்கும் முன் கீழ்கண்ட பதிவை படிப்பது நலம்.


    நீங்கள் யார் என்று நீங்களாகவே உங்களுக்கு ஏற்படுத்திகொள்ளும் அடையாளம் மிகவும் மேலோட்டமானது. எப்பொழுதும் பொருட்களுடன் தொடர்புபடுத்தியே உங்களை உங்கள் ஆணவம் சிந்திக்கசெய்கிறது. (நான், எனது, என்னுடையது என்ற எண்ணம் )
    ஆணவத்திற்கு பொருள் மற்றும் கட்டமைப்பு ஆகிய இரு தன்மைகள் உண்டு.  உதாரணத்திற்கு உங்களுக்கு மிகவும் பிடித்தமான உடை ஒன்று உள்ளது என்று வைத்து கொள்ளுங்கள். அந்த உடை தான் உங்கள் ஆணவத்தின் பொருள். அதன் மீது உள்ள பிடித்தம் தான் கட்டமைப்பு. உங்களுக்கு பிடித்தது வேறு ஒருவருக்கு பிடிக்காமலும் இருக்கலாம். ஆனால் பொருட்கள் மாறலாம். அந்த கட்டமைப்பு மாறாது.
    சரி நீங்கள் விரும்பும் பொருள் உங்களீடம் இருந்தால் மட்டும் நீங்கள் ( உங்கள் ஆணவம்) திருப்தி அடையுமா? அடையும். ஆனால் அந்த திருப்தி மிகவும் மேலோட்டமானது. நீண்ட நாட்கள் நிலைத்தும் நிற்காது. அந்த திருப்தி என்ற எண்ணத்தின் உள்ளே திருப்தி இல்லாமை என்ற நிலை தான் ஆழ் மனதில் உள்ளது.  இது பத்தாது இன்னும் வேணடும் இன்னும் வேண்டும் என்ற எண்ணம் ஆழ் மனதில் இருக்கிறது.
    ஒரு பொருள் கிடைத்துவிட்டால் அந்த திருப்தி சில நாட்கள் மட்டும் இருக்கும். மனம் வேறு பொருட்களை நாட ஆரம்பிக்கும். இந்த இன்னும் வேணடும் என்ற ஆணவம் தான் பொருட்களின் மீது பற்று வைக்கும்ஆணவத்தை விட மிக மோசமானது. இந்த எண்ணம் என்றும் ஒருவனை மகிழ்ச்சியில்லாமல் வைக்கும்.
    பல நேரங்களில் பல பொருட்கள் மீது ஆசை வரும். சில நேரங்களில் அந்த தேவை என்ன எதற்காக என்பது கூட தெளிவாக நமக்கு தெரியாது. ஆனால் ஏதோ வேணடும் என்ற எண்ணம் இருந்துகொண்டே இருக்கும். இந்த நிலையில் நம் கையில் இருக்கும் பொருட்களை நினைத்து திருப்திபடமாடோம். இல்லாத ஒன்றையே நினைத்து கொண்டிருப்போம்.

    இதனால் மகிழ்ச்சி இழந்து, கோபம், பயம், பொறாமை, படபடப்பு, விரக்தி போன்ற எண்ணங்களால் வாழ்வை வீணடிப்போம்.

    வாழ்வில் இருக்கும் உண்மையான சந்தோசத்தை உணராமலேயே திருப்தி இல்லாமல் வாழ்ந்து இயற்கை எய்துவோம். இறக்கும் தருணத்தில் தான் நாம் சேர்த்து வைத்த பொருள் நமதில்லை என்பதை உணருவோம். அதற்குள் வாழ்கை முடிந்திருக்கும்.

    உங்களுக்கு பிடித்தமான வைர மோதிரம் இருக்கின்றது என்று வைத்து கொள்வோம் (அல்லது உங்களுக்கு மிகவும் பிடித்த பொருள் ஒன்றை நினைவுபடுத்தி கொள்ளுங்கள் ).

    கீழ் கண்ட கேள்விகளை உங்களுக்குள் கேட்டு பாருங்கள்
    1. அந்த பொருள் என்றாவது ஒரு நாள் உங்களை விட்டு போய்விடும் என்பதை உணர்திர்ருகிரீர்கலா ?  
    2. அந்த பொருள் இன்னும் எத்தனை காலம் உங்களுடன் இருக்கவேண்டும் என்று நீங்கள் விரும்புகின்றீர்கள் ?
    3. அதற்குள் அந்த பொருள் தொலைந்துவிட்டால்/ வீணாகிவிட்டால்/கைவிட்டு போய்விட்டால் உங்களுக்கு எத்தகைய இழப்பு ஏற்படும் ?
    4. அந்த இழப்பு ஏற்பட்டால் நீங்கள் குறைந்தா போய்விடுவீர்கள் ?
    எதில் கடைசி கேள்விக்கு விடை தேடினால் ஆம் . குறைந்து தான் போய்விட்டேன் என்று நினைக்கலாம். ஆனால் விடைகாணாமல் உங்களை உணர ஆரம்பித்தால் மனசு லேசாகிவிடும். உண்மையில் நீங்கள் இந்த விதத்திலும் குறைந்துபோக போவதில்லை

    இன்னும் வேண்டும் என்ற ( Wanting )  என்ற எண்ணத்தினால் பலர் தவறான பாதைக்கு சென்று அதனால் அழிவை தேடிகொள்வதும் உண்டு.

    சமிபத்திய உதாரணம் சாடிக் பாட்சா. சாதாரண பாத்திர வியாபாரியாக இருந்து, பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் இறங்கி, A.ராஜா என்ற அரசியல்வாதியின் நட்பால் பயம் இல்லாமல் பல தவறுகளை செய்து, கடைசியில் நிம்மதி இல்லாமல் தற்கொலை ? செய்து கொண்டார். நினைத்ததற்கு மேல் கிடைத்தும் மணா நிம்மதி இல்லை. மன உளைச்சல் தான் எற்பட்டது.

    ஓஷோவின் கதை ஒன்று 

    ஒருவன் கலை அழகுடன் அரண்மனையைவிடச் சிறப்பாக மாளிகை ஒன்றைக் கட்டியிருந்தான்.அதை அந்த நாட்டு மன்னர் விலைக்குக் கேட்டும் அவன் கொடுக்கவில்லை.ஒருநாள் அவன் வெளிய போய்விட்டுத் திரும்பும்போது வீடு பற்றி எரிந்து கொண்டிருந்தது.மன்னன் செய்த சதியோ என நினைத்து அவன் அழுது புலம்பினான்.அப்போது அவன் மகன் அங்கே ஓடி வந்தான்.அவன் சொன்னான்,''அப்பா,கவலைப் படாதீர்கள்.இந்த வீட்டை நான் நேற்று மன்னருக்கு மூன்று பங்கு விலைக்கு விற்றுவிட்டேன்.வரும் பணத்தைக் கொண்டு இதை விட அழகான வீடு ஒன்று கட்டிக்கொள்ளலாம்.''தந்தையின் கண்ணீர் சட்டெனக் காணாமல் போயிற்று.அவன் சிரிக்கத் தொடங்கினான்.அவன் எதிரே வீடு எரிந்து கொண்டிருந்தது.அவன் கண்களிலோ எதிர் காலக் கனவு!அப்போது அவன் இளைய மகன் ஓடி வந்தான்.அவன் சொன்னான்,''அப்பா,அண்ணன் சொன்னது உண்மைதான்.ஆனால் விற்றது பேச்சளவில்தான்.பத்திரம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.பணமும் வாங்கவில்லை.''தந்தை மறுபடியும் அழ ஆரம்பித்து விட்டான்.
    இதுதான் பற்று...அடையாளம்.ஒருவன் உயிருடன் இருக்கும்போது எல்லாவற்றையும் தன்னுடன் அடையாள படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.எல்லாவற்றையும் பயன் படுத்திக் கொள்ளலாம்.ஆனால் பற்றில் விழுந்து விடக் கூடாது.உடைமை கொள்ள முயலக்கூடாது.
    விலகி இருங்கள்!விழித்திருங்கள்!மௌனமாய்ப் பார்த்திருங்கள்!


    .........................................................................................தொடரும் 

      

    கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி


    திருச்சியில் இருந்து மதுரை வரும் வழியில் இருக்கும் துவரங்குறிச்சி (மணப்பாறை தாலுக்கா)கிராமம் அப்படி ஒன்றும் புகழ் வாய்ந்ததல்ல . அனால் விவரம் அறிந்தவர்கள் அந்த கிராமத்தில் பேருந்து நின்றால் மணப்பாறை முறுக்கு வாங்குவார்கள். எப்பொழுது நான்கு வழி சாலை வந்ததினால், பெரும்பாலும் பேருந்துகள் துவரங்குறிச்சி கிராமத்தினுள் செல்வதில்லை.
    துவரங்குறிச்சியை சுற்றி உள்ள கிராமங்களில் பச்சை மிளகாய் சாகுபடி  அதிகம். அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை கூட மிளகாய் சீசன் கலை கட்டும். மிளகாயை தவிர தக்காளி, வெண்டை, கத்திரி போன்ற பிற காய்கறிகளும் சாகுபடி செய்யப்படும். பெரும்பாலும் கிணற்று பாசனத்தை நம்பியே காய்கறி விவசாயம் இருந்தது.

    மிளகாயை பொறுத்தவரை K-1 மற்றும் K-2 ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்து வந்தனர். அதில் ஓரளவு லாபமும் பெற்று வந்தனர் . இடைத்தரகர்கள் காய்கறிகளை வாங்கி ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு எடுத்து செல்வர் . 
    ஆனால் 1990 களில் மிளகாய் சாகுபடியில் ஒரு மாற்றம் வந்தது.

    பல தனியார் நிறுவனங்கள் ஹைப்ரிட் எனப்படும் ஒட்டு ரக மிளகாய் ரகங்களை அதிக விளம்பரபடுத்தி விவசாயிகளை கவர்ந்தனர் . பொதுவாக புதிய இரகங்களோ , உரங்கலோ, பூச்சி மருந்துகளோ வந்தால் அவற்றை விவசாய்கள் தயக்கத்துடன் தான் பயன்படுத்துவார்கள். சக விவசாயி அடையும் பயனை பார்த்தே முழுவதுமாக மாற்றம் அடைவர். எதில் கிராமத்தில் உர கடை வைத்திருக்கும் நபரின் பங்கும் அதிகம். விவசாய்கள் , அரசாங்க விவசாய அதிகாரிகளையோ , அல்லது விவசாய ஆராய்ச்சி நிலையதில்லிருந்து தரும் பரிந்துரைகளை நம்புவது இல்லை ( அவர்கள் சரியாக செயல்படுவதில்லை என்பது வேறு விஷயம் ). உரக்கடைகாரரை தன் ஏதோ வேளான் விஞ்ஞானி அளவிற்கு மரியாதை கொடுப்பர் .

    இப்படி தான் மிளகாய் மட்டும் அல்ல பிற காய்கறிகளிலும் ஒட்டு இரகங்கள் கிராமத்திற்குள் நுழைந்தன. மிளகாயை பொறுத்த, புதிய ஒட்டு ரகங்களில் சில அமோகா விளைச்சலை தந்தன. ஒரு ஏக்கரில் (100௦௦ சென்ட்) வரும் விளைச்சல்  வெறும் பத்து சென்டிலேயே கிடைத்தது. மிளகாய் விதையின் விலை பத்து மடங்கு கூடுதல் என்பது , விவசாயிகளுக்கு பெரிய விசயமாக படவில்லை. இரண்டு வருடத்திலேயே அனைவரும் ஒட்டு ரகங்களுக்கு மாறினர்.

    ஆனால் பிரச்னை பிறகு தான் ஆரம்பித்தது . முன் எப்பொழுதும் இல்லாத வகையில் மிளகாய் பயிரை விதவிதமான பூச்சிகளும் நோய்களும் தாக்க ஆரம்பித்தன. இரண்டு வாரத்திற்கு ஒரு முறை மிளகாய் பறித்ததால், அதற்கு தகுந்தபடி உர செலவும் அதிகரித்தது.

    விவசாயிகள் புதுசு புதுசாக பூச்சிகளும் நோய்களும் தாக்க ஆரம்பித்ததினால், நோய் அல்லது பூச்சி பாதித்த செடியையே உர கடைக்கு எடுத்து வந்து ஆலோசனை கேட்டனர்.. 

    நம் உரகடைகாரர்களும் ஏதோ மிளகாய் சாகுபடி பற்றி அனைத்தையும் கரைத்து குடித்ததை போல பேசுவர். அவர்களுக்கு அனுபவ அறிவு உள்ளது என்பது உண்மை. ஆனால் எந்த நேரத்தில் அவர்களது வியாபார மூளை தான் வேலை செய்யும்.                

    ஒரு மிளகாய் செடியை அசுவினி என்ற பூச்சி தாக்கி உள்ளது என்று வைத்துகொள்வோம். எது சாறு உறிஞ்சும் பூச்சி வகையை சார்ந்தது. எதற்கு Moncrotophos என்ற பூச்சி கொல்லி மருந்தை பயன்படுத்தினால் போதும். ஆனால் உர கடைகாரர் தன் கடை உதவியாளரிடம் ஒரு பூச்சி மருந்து ( பெரும்பாலும் இது அதிக வீரியம் உள்ளதும், இரு பூச்சிகொல்லி மருந்துகளின் கலவையாகவும் இருக்கும்), ஒரு பூஞ்சான கொல்லி .(fungicide), ஒரு நுண்ணூட்ட சத்து மற்றும் தங்கள் தலையில் கட்டப்பட்ட விற்கமுடியாத ஏதோ ஒரு இயற்கை சார்ந்த பூச்சி கொல்லி போன்ற அனைத்தையும் எடுக்க சொல்வார். பின்னர் அதை எல்லாம் அடித்தல் தான் பல நாட்கள் மிளகாய் பயிர்                பூச்சி தாக்குதல் இல்லாமல் இருக்கும் என்று கூறுவார்.

    இத்தனை மருந்தையும் கலந்து அடித்த பிறகு மிளகாய் செடிகள் பூச்சு நோய் தாக்குதலில் இருந்து அதிக பட்சம் இரு வாரங்கள் தப்பிக்கும். விவசாயிகளை பொறுத்த வரை போச்சி மருந்து அடித்து செல்லும் பொழுது. உடனேயே பூச்சிகள் செத்து விழுவதை பார்க்கவேண்டும். எந்த மனோஇயல்பையும் உர கடைகாரர் நன்கு உணர்திருபார்.

    உர கடைக்காரர் கல்லா நிரம்பி வழிய ஆரம்பிக்கும். பூச்சி மருந்து, உரம், விதை விற்பனை நிறுவனங்களும் அதன் விற்பனை அதிகாரிகளும் மகிழ்ச்சியில் துள்ளுவர் .

    ஆனால் விவசாயி ? தன் விவசாய செலவுகள் தன்னையும் அறியாமல் எங்கோ போய் நிற்கும் பொழுது தான், அதிக விளைச்சல் கிடைத்தாலும் , அதனால் தனக்கு பயன் இல்லை என்பதை உணர்வான். அதிகமாக விளையும் காரணத்தினால் விற்பனை விளையும் குறையும். அழுகும் தன்மை வாய்ந்தது என்பதால் வியாபாரி கேட்கும் விலைக்கே தரவேண்டிய சுழல் ஏற்படும்.
    புத்திசாலிதனமான சில விவசாயிகள், அதிக மூட்டை இருப்பதால் தங்கள் இருவரோ அல்லது மூவரோ சேர்ந்து , ஒரு TATA 407 வண்டியை வாடகைக்கு அமர்த்தி ஒட்டஞ்சத்திரம் மார்கட்டிற்கு கொண்டு செல்வர். ஆனால் அங்கும் வியாபாரிகளால் எமாற்றபடுவது உண்டு.

    அப்படி சென்றால் ,ஒட்டஞ்சத்திரம் ஊரில் உள்ள மது மட்டும் உணவு விடுதியில் பணத்தை செலவிடுவார். இவர்களை நம்பி அங்கு சுற்றி திரும்  விபச்சாரிகளிடம் பணத்தை இழப்பதும் உண்டு.

    அதிக காய்கறிகள் விளைததினால் பலர் கடன் வாங்கி TATA 407 வாகனத்தை வாங்கினார்கள். துவரங்குறிச்சி மற்றும் அதன் சுத்து வட்டார கிராமங்களில்  வாழும் விவசாயிகளின் வாழ்கை, முன்னேறியதோ எல்லையோ, விவசாயிகள் சாகுபடி செய்யும் ஒரு பயிரின் இரகத்தை,வியாபார நோக்கத்தோடு சில நிறுவனங்கள் மாற்றியதால் உர கடைக்காரர் , விதை ,பூச்சு மருந்து , உரம் விற்பனை நிறுவனங்கள் , இடைதரகர்கள் , வாகன முதலாளிகள் முதலியவர்கள் பிழைத்தனர்.

    நான் இங்கு பதிந்துள்ளது ஐந்து வருடங்களுக்கு முன்னால் களத்தில் கண்ட மாற்றங்கள். புதிய ஒட்டு இரகங்களின் விளைச்சலை நானும் ஆச்சிரியத்துடன்  பார்த்தேன். பின்னர் விவசாயிகள் கண் எதிரே எமாறுவதையும்,ஏமாந்து கொண்டிருபதையும் பார்த்தேன் .

    1990 களுக்கு பிறகு உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் போன்ற கொள்கைகளை இந்திய அரசு கடைப்பிடித்து வருகின்றது . Monsanto , Syngenta போன்ற வெளிநாட்டு கம்பனிகள் நேரடியாக விதை மற்றும் பூச்சு மருந்து விற்பனையில் இந்தியாவில் இறங்கின.
    இந்திய நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரம் வளர்ச்சி அடைதிருந்தாலும், தொழில் துறை மற்றும் சேவை துறை தான் வளர்ச்சி கண்டு வருகிறது. நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியில் விவசாயத்தின் பங்கு குறைந்துகொண்டு வருகிறது.. கிராமப்புற விவசாயிகளின் வாழிவிலும் பெரிதாக மாற்றம் இல்லை.
    நீங்கள் நகரத்தில் இருந்தாலும் கடந்த பத்து ஆண்டுகளில் மிக நீளமான மிளகாய்களையும் , வெளிர் பச்சை முதல் கரும் பச்சை வரை பல நிறங்களிலும் வடிவங்களிலும், காரதன்மையில் வித்தியாசத்துடன் மிளகாய்கள் வருவதை உணர்திருந்தால், அதன் பின்னணி இது தான்.

    கூடுதலாக நீங்கள் இப்பொழுது வாங்கும் மிளகாய் மட்டும் அல்ல பிற காய்கறிகளும் அதிக அளவு பூச்சி கொல்லி மருந்து தெளிக்கப்பட்டு வளருபவை என்பதை நினைவில் கொள்ளுங்கள் .