பிரபலமான இடுகைகள்

குட்டி கதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குட்டி கதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

வதந்தி

தத்துவ மேதை சாக்ரடீஸ் அவர்களின் சீடர் ஒருவர் சாக்ரடீசிடம் "உங்கள் நண்பரை பற்றிய தகவல் ஒன்றை தெரிவிக்கவேண்டும் என்று ஓடோடி வந்தேன் என்றார். உடனே சாக்ரடீஸ் " நீ சொல்வதற்கு முன் நான் கேட்கும் கேள்விகளுக்கு  பதில் சொல்" என்றார்.

நீ சொல்லபோகும் தகவல் உண்மையானது தான் என்பது உனக்கு உறுதியாக தெரியுமா? என்று கேட்டார்.

அதற்கு சீடன் அது எந்த அளவிற்கு உண்மை என்று எனக்கு தெரியாது. கேள்விபட்டது தான் என்றார்.

உணமையானது தான் என்று உனக்கே உறுதியாக படாத தகவலை என்னிடம் ஏன் நீ சொல்லவேண்டும் ? என்று கேட்டுவிட்டு சரி பரவாயில்லை. என் நண்பனை பற்றி உயர்வானதாக நல்லதாக ஏதேனும் சொல்ல விரும்புகிறாயா? என்று கேட்டார்.

சீடன் நான் கேள்விபட்டது நல்ல செய்தி இல்லை என்றார்     

உண்மையா என்று தெரியாத, ஒருவர் பேருக்கு கேடு விளைவிக்கும் செய்தியை நான் கேட்பதால் என்ன பயன். நீ சொல்ல போகும் செய்தியினால் ஏதேனும் பயன் உண்டா என்றார் ?

அப்படி பயன் ஏதும் இல்லை என்றார் சீடர் 

செய்தி உண்மை இல்லை. அது நல்ல விசயமும் இல்லை. அதை நான் கேட்பதால் பயனும் இல்லை. பிறகு ஏன் அதை என்னிடம் நீ சொல்ல வேண்டும் ? என்றார்

சீடன் வெட்கி தலை குனிந்தான் 

பெரும்பாலும் வதந்தி இப்படி தான் பரவுகிறது. நமக்கு அடுத்த விட்டு கழிப்பறையை எட்டி பார்ப்பது தான் சந்தோஷம்.

ஆனால் நமக்கு நன்றாக தெரிந்த தீயசெயல்களை பற்றி பேசாமலும் கண்டுகொள்ளாமலும் இருந்தால் தீய்மை வெல்லும். தவறு நடக்கிறது என்றால் அது உறுதியாக தெரியும் என்றால் அதனை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க கூடாது. அதை தடுக்க நம்மால் ஆனா முயற்சிகளை செய்து கொண்டே இருக்கவேண்டும். வதந்தியை பரப்புவது எவ்வளவு குற்றமோ அதை போல தவறை கண்டுகொள்ளாமல் இருபதும் குற்றம்.

இந்த உலகம் துன்பமயமாக ஆவது கெட்டவர்களால் அல்ல. அதனை வேடிக்கை மட்டும் பார்த்துகொண்டிருக்கும் நல்லவர்களால் - நெப்போலியன்  

எனவே தவறை என்று உறுதியாக தெரிந்தால் தைரியமாக தட்டி கேளுங்கள். இதனால் உங்களுக்கு தைபட்ட முறையில் பாதிப்பு உண்டாகும் என்று தெரிந்தாலும் " நமக்கு ஏன் வம்பு என்று இருக்க வேண்டாம்" ஆனால் பெரும்பாலானோர் இப்படி தான் இருக்கிறார்கள். ஆனால் உறுதியாக தெரியாத விசயத்தை பற்றி பேசுவார்கள். 

   
   

புதன், 20 ஏப்ரல், 2011

நல்ல உதாரணமாக இருங்கள்

Butch O'Hare என்பவர் அமெரிக்க நாட்டு போர் விமானி.  இரண்டாம் உலக போர் நடந்தசமயம் அவர் எதிரி நாட்டின் (ஜப்பான் ) மீது தாக்குதல் தொடுக்க சென்ற விமானபடை அணிவகுப்புடன் புறப்பட்டு சென்றார். புறபட்ட பின் தான் தெரிந்தது, அவர் விமானத்தில் எரிபொருள் நிரப்புபவர்கள், எரிபொருளை நிரப்பாமல் மறந்து விட்டனர் என்று. எனவே தன தலைமை விமான படை அதிகாரிக்கு தகவல் கொடுத்தார். தலைமை அதிகாரி உடனே நீ புறப்பட்டு வந்த கப்பலுக்கே திரும்பி  செல். எரிபொருள் இல்லாமல் நீண்ட நேரம் போர் செய்ய இயலாது என்றார். Butch O'Hare வும் திரும்பி சென்றார். திரும்பி செல்லும் வழியில் அமெரிக்க கப்பலை தாக ஜப்பானிய போர் விமானங்கள் படை திரட்டி வருவதை கவனித்தார். அந்த படைகளின் மீது எதிர் தாக்குதல் தொடுக்க எந்த விமானமும் கப்பலில் இல்லை. Butch O'Hare தன்னந்தனியாக போராடுவது என்று முடிவெடுத்தார். அந்த போர் விமானங்கள் மீது தாக்குதலை தொடுத்தார். தன் உயிரை பற்றி கவலைபடாமல் போரிட்டு பல விமானங்களை சேத படுத்தினர். வழியிலேயே தாக்குதலை எதிர்பாக்காத ஜப்பானிய விமானகள் பல சேதம் அடைந்தன. Butch O'Hare வின் விமானமும் பெரும் சேதம் அடைந்தது. ஆனால் தாக்குதலை கண்டு ஜப்பானிய விமானங்கள் பின் வாங்கி சென்றன. நடந்த போர் நிகழ்வுகளை எல்லாம் அமெரிக்க விமானத்தில் இருந்த காமெராக்கள் புகைப்படமாக  பதிவு செய்திருந்தது.  Butch O'Hare வும் மிகவும் சிரமப்பட்டு விமானத்தை கப்பலில் தரை இறக்கினர். பின்னர் நடந்ததை சொன்னார். ஆனால் அவர் சொன்னதை விட விமானம் எடுத்த புகைப்படங்கள் எத்தகைய சாகசத்தை அவர் நிகழ்த்தி இருக்கிறார் என்று எடுத்து சொன்னது. அதனால் அவர் பேரும் புகழும் அடைந்தார். O'Hare விமான நிலையத்திற்கு இதன் காரணமாகவே இந்த பெயர் சூட்டப்பட்டது. 

இதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னாள் Al Capone என்ற சட்ட விரோத செயல்களை செய்யும் ஒருவருக்கு Easy Eddie என்பவர் வழக்கறிங்கராக இருந்தார். Easy Eddie தன் திறமையால் Al Capone னை பல வழக்குகளில் இருந்து விடுவித்தார். அதனால் Al Capone அவருக்கு பண் மடங்கு அதிக ஊதியத்தையும், இடம் வீடு போன்ற சொத்துக்களையும் வழங்கினார். Easy Eddie கு ஒரு மகன் இருந்தார். தன் மகன் மீது அதிக பாசத்தை வைத்திருந்த Easy Eddie தன் மகனுக்கு நல்ல படிப்பு, அருமையான கார், உடைகள், பணம் ஆகியவை கிடைக்குமாறு பார்த்துக்கொண்டார். மேலும் தன்னை போல இல்லாமல் மிகவும் நல்லவனாக தன் மகன் வாழவேண்டும் என்று நினைத்தார். பல நல்ல விசயங்களை போதித்தார். இருந்தாலும் தான் நல்லவனாக இல்லை என்பது அவரை உறுத்தியது. எனவே Al Capone னுக்கு எதிராக சாட்சி சொல்வது, அவர் செய்த குற்றங்களுக்கு தண்டனை வாங்கி தருவது என்று முடிவெடுத்தார். அது போலவே செய்தார். இதனால் கோபம் அடைந்த Al Capone , Easy Eddie யை ஆள் வைத்து சுட்டு கொன்றார்.

இந்த இருக்கு கதைகளும் சம்மந்தம் இல்லாதது போல தோன்றும். ஆனால் சம்மந்தம் உண்டு. இந்த Easy Eddie யின் மகன் தான்   Butch O'Hare 


திங்கள், 18 ஏப்ரல், 2011

கடவுளுக்கு எழுதிய கடிதம்

ஒரு தபால் நிலையத்திற்கு பெறுனர்: கடவுள் என்று முகவரியிட்டு ஒரு கடிதம் வந்தது. ஆச்சிரியம் அடைந்த தபால் நிலைய ஊழியர் அந்த கடிதத்தில் என்ன தான் எழுதபட்டுள்ளது என்பதை அறிய அந்த கடிதத்தை பிரித்து படித்தார். அந்த கடிதத்தில் " நான் மாதம் ருபாய் 300௦௦/ பென்ஷன் வாங்கி காலத்தை தள்ளும் மூதாட்டி. இந்த மாத பென்ஷன் னை வாங்கி எடுத்துவரும் பொழுது பேருந்தில் அந்த பணம் திருடுபோய் விட்டது. இந்த பணம் இல்லையென்றால் நான் இந்த மாதம் முழுவதும் செலவுக்கு பணம் இல்லாமல் கஷ்டப்பட வேண்டீருக்கும். மேலும் பட்டினி கிடக்கவும் நேரிடும். எனவே அந்த பணம் என்னக்கு திரும்ப கிடைக்க நீ தான் உதவ வேண்டும் என மிக உருக்கமாக அந்த மூதாட்டி எழுதி இருந்தாள்.   

கடிதத்தை படித்து பரிதாபப்பட்ட தபால் நிலைய ஊழியர் தன நண்பர்களிடம் அந்த கடிதத்தை காட்டி அந்த மூதாட்டிக்கு உதவ அவர்களிடம் பணம் திரட்டும் வேலையில் ஈடுபட்டார். ருபாய் 270௦/ பணம் திரட்டபட்டது. கடவுளின் பெயரிலேயே அந்த பணம் மூதாட்டிக்கு அனுப்பப்பட்டது.

இரண்டு வாரம் கழித்து மூதாட்டியிடம் இருந்து கடவுளுக்கு மற்றும் ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் " பணம் கொடுத்து உதவிய கடவுளுக்கு நன்றி. இதனால் என் கஷ்டம் தீர்ந்தது. ஆனால் நீ அனுப்பிய பணம் முழுவதுமாய் என்னை வந்து சேரவில்லை. ருபாய் 270௦/ மட்டும் வந்தது. இந்த கேடு கேட்ட தபால் நிலைய ஊழியர்கள் தான் பணத்தை கையாடல் செய்திருக்க வேண்டும் என்று எழுதி இருந்தது "    



மகா கஞ்சன்

ஒரு ஊரில் மகா கஞ்சன் ஒருவன் இருந்தான். அவன் தன் உயிர் உடலை விட்டு பிரியும் தருணத்தில், தன் மனைவியை அழைத்தான். தான் இறந்தபிறகு உடலை புதைக்கும் பொழுது, தான் சம்பாதித்து வைத்த அனைத்து பணத்தையும் ஒரு கவரில் போட்டு தன் உடலுடன் புதைக்க வேண்டும் என்று கூறினான். அவன் மனைவியும் அப்படியே செய்வதாக உறுதி அளித்தாள்.

கஞ்சனும் இறந்தான். அவன் மனைவியும் சொன்னது போலவே அவன் உடலுடன் ஒரு கவரையும் புதைத்தாள். அவளது தோழி உன் கணவன் கேட்டுக்கொண்டது போல் அனைத்து பணத்தையும் நீ புதைக்கவில்லை போல தெரிகிறது. கவர் மிகவும் சிறிதாக இருக்கிறதே என்றாள்.
அதற்கு கஞ்சனின் மனைவி " நான் என்றைக்கும் வாக்கு தவறமாட்டேன். என் கணவரின் பணம் முழுவதையும் வங்கியில் என் பெயரில் உள்ள சேமிப்பு கணக்கில் போட்டு, என் கணவர் பெயருக்கு முழுதொகைக்கும் ஆனா காசோலை எழுதி அவன் உடலுடன் புதைத்துள்ளேன் என்றாள் 

சனி, 19 மார்ச், 2011

ஊழல் செய்யாத கலைஞர்


இது முழுக்க முழுக்க கற்பனையே. படிப்பவர்கள் அனைவரும் ஜாலியாக எடுத்து கொள்ளுங்கள் 

திடிர் என இனி  ஊழல் செய்வதில்லை என கலைஞர் கருணாநிதி முடிவெடுக்கிறார். மறு நாள் காலை அவசர அவசரமாக தன் இரண்டு மனைவிகள், ஸ்டாலின், அழகிரி, கனிமொழி மற்றும் பேரன்களை வீட்டுக்கு அழைக்கிறார்.

 வீட்டில் அனைவரும் தேர்தலுக்காக சிறப்பு கூட்டமோ என்று வியந்தபடி அமர்து இருக்கின்றனர்.

கருணாநிதி எடுத்த எடுப்பிலேயே இனி ஆட்சிக்கு வந்தால் ஊழல் செய்வதில்லை என்று தான் முடிவெடுத்து உள்ளதாக கூறினார். இதை கேட்டவுடன் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கருணாநிதி இனி தன குடும்பத்தினர் யாரும் ஊழல் செய்யகூடாது என்றும், செய்தால் தானே காட்டி கொடுப்பேன் என்றும் கூறினார். 

இதை கேட்டவுடன் அழகிரி தன் செல்பேசியை எடுத்து யாருக்கோ போன் செய்தார். ஸ்டாலினுகோ லேசாக நெஞ்சு வலிப்பது போல இருந்தது. 

ராஜாத்தியும் தயாளுவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். இவள் எதாவது தலைவரை குழப்பிருப்பலோ  ? என்று ஒருவரை ஒருவர் நினைத்தனர்.

அழகிரி செல்பேசியில் பேசியதை கவனித்த கருணாநிதி "இந்த நேரத்தில் கூட என்ன போன் ? செல்பேசியை வைத்துவிட்டு சொல்வதை கவனி" என்று கலைஞர் சொல்கிறார்.

 பேசிகொண்டிருக்கும் பொழுதே மருத்துவர் குழு ஒன்று கருணாநிதி இல்லத்தில் நுழைந்தது.

கருணாநிதிக்கு ஏதோ உடல் நலம் சரியில்லை என்று அழகிரி செல்பேசியில் தகவல் தெரிவித்ததாகவும் அதனால் தான் தாங்கள் வந்திருப்பதாகவும் மருத்துவர்கள் கூறினார். அதற்கு கருணாநிதி நான் இன்னும் பேசி முடிக்க வில்லை. மேலும் உடல் நிலையும் சரியாக தான் உள்ளது என்றார்.

ஆனால் அழகிரி மருத்துவர்களிடம் சென்று ரகசியமாக ஏதோ சொன்னார். உடனே ஒரு மருத்துவர் உங்கள் படபடப்பை குறைக்க ஒரு ஒரு ஊசி மட்டும் போடுகிறேன் என்றார்.

சரி என்று கருணாநிதியும் எற்று கொண்டார். ஊசி போட்டவுடன் கருணாநிதி மயக்கம் அடைந்தார்.
உடனே மருத்துவர்கள் அருகில் சென்று சில பரிசோதனைகளை செய்தனர்.

பின்னர் அழகிரியிடம் வந்து " நீங்கள் சந்தேகப்பட்டது சரி தான். உங்கள் அப்பாவிற்கு மனநோய் முற்றியுள்ளது " அது சரி எப்படி இதை நீங்கள் கண்டுபிடித்தீர்கள் என்று கேட்டார்கள்.

 தன் தந்தைக்கு ஊழல் தான் உயிர் மூச்சு.என்றும்,  ஊழல் செய்யமாட்டேன் என்று அவர் உளறிய உடனேயே சந்தேகம் வந்தது என்று அழகிரி கூறினார் .

ஸ்டாலின் இதை கேட்டு பெருமூச்சி விட்டார். என்னை விட தந்தையை நீ தான் மிக சரியாக புரிந்து வைத்துள்ளாய் என்று அழகிரியை பாராட்டினார் 

திடீர் என மன நோய் வந்தது ஏன் ? என்று பின்னர் ஆராய்ந்து பார்த்ததில் , முதல் நாள் மாலை ஜெயலலிதா, கருணாநிதிக்கு போன் செய்தார் என்று தெரியவந்தது.

சரி. தொலைபேசியில் மன நோய் வரும்படி ஜெயலலிதா என்ன சொன்னார் ?

கருணாநிதி நடந்ததை எல்லாம் மறந்துவிடுவோம். சமிபகாலமாக உங்கள் ஆற்றலை கண்டு நான் வியந்து வருகிறேன். நானும் தனியாக தான் இருக்கிறேன். நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா ? தமிழ் நாட்டு மக்கள் இளிச்சவாயர்கள். உங்கள் நான்காவது திருமணத்தையும் ஏற்றுகொள்வார்கள்.நாம் இணைந்தவுடன் நம் கட்சிகளையும் இணைத்து விடுவோம் என்றாராம் .

இதை கேட்டவுடன் அதிர்ச்சியில் மனநோய் வந்திவிட்டது  

போன் செய்து வைத்து விட்டு சசிகலாவும் ஜெயலலிதாவும் விழுந்து விழுந்து சிரித்ததாக உளவு துறை பிற்பாடு செய்தி சொன்னதும் தான், கருணாநிதியை பைத்தியமாக ஜெயலலிதா செய்த சதி இது என்று தெரிய வந்தது   

பின் குறிப்பு : கருணாநிதிக்கு மனநோய் என்பதை மாறன் சகோதரரர்கள் நம்பவில்லை. கருணாநிதி ஏதோ ஒரு காரணத்திற்காக நாடகம் ஆடி இருக்கிறார்கள் என்பது அவர்கள் எண்ணம் 


வெள்ளி, 18 மார்ச், 2011

யானைக்கும் எறும்புக்கும் காதல்

ஒரு யானைக்கு விபத்து நடந்து மருத்துவமனையில் அட்மிட் ஆனது. செய்தி கேட்ட அதன் நண்பியான எறும்பு பூங்கொத்துடன் மருத்துவமனைக்கு வந்து பார்த்தது. கால் எலும்பு யானைக்கு முறிந்துவிட்டது என்பதை கேள்விப்பட்ட எறும்பு மிகவும் கவலைப்பட்டது. தினமும் மருத்துவமனைக்கு வந்து யானைக்கு ஆறுதல் கூறியது. எதனால் அந்த நட்பு காதலாக மாறியது.
யானையும் குணமடைந்தது. பிறகு யானையும் எறும்பும் சேர்ந்து பார்க், கடற்கரை, சினிமா, ஹோட்டல் என்று ஜாலியாக சுற்றி திரிந்தனர். 
யானையும் எறும்பும் இவ்வாறு சுற்றும் பொழுது அதனை எறும்பின் தாய் பார்த்து விட்டு மகளை கண்டித்தார். 
எவ்வளவு சொல்லியும் இருவரும் சேர்ந்து சுற்றுவதை நிறுத்தவில்லை. எறும்பின் தாய் மீண்டும் தன மகள் எறும்பை அழைத்து " அவன் என்ன ஜாதி நாம் என்ன ஜாதி. இருவருக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது. எனவே நீ யானையை மறந்துவிடவேண்டும். நீ சொல்லவதை கேட்கவில்லை என்றால் நானும் உன் தந்தையும் தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழி இல்லை. நம் குடும்ப மானத்தை தான் நாங்கள் பெரிதாக நினைகிறோம் என்றது.

எறும்பும் என்னை மன்னித்து விடுங்கள் அம்மா! எனக்கு யானையை திருமணம்   செய்து தரவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறியது.
எனக்கு வேறு வழி இல்லை அம்மா. ஒரு தப்பு நடந்துடுச்சி என்றது எறும்பு

என்ன தப்பு என்றது தாய் எறும்பு

நான் இப்ப மூணு மாசம் முழுகாம இருக்கேன் என்று சொல்லிவிட்டு எறும்பு கேவி கேவி அழுதது




கழுதையாய் இருங்கள்

ஒரு விவசாயியின் கழுதை சுவரில்லா கிணற்று ஒன்றில் விழுந்துவிட்டது. வெளியே வர வழியின்றி பெருங்குரலேடுத்து கத்த ஆரம்பித்தது. விவசாயிக்கு என்ன பண்ணுவது என்று தெரியவில்லை. பிறகு யோசித்து பார்த்தான். கழுதைக்கும் வயசாகிவிட்டது. அதனால் பயன் எதுவும் பெரிதாக எல்லை. கிணறும் பழுதடைந்து விட்டது. இதனையும் எப்போவோ மூடி இருக்க வேண்டும். இனி இந்த கிணற்றில் வேறு யாரும், ஆடு மாடு போன்றவையும் தவறி விழுந்து விடகூடாது என்று நினைத்தான்.

உடனே சில வேலையாட்களின் உதவியுடன் மண்ணை அள்ளி போட்டு கிணற்றை முடிவிட முடிவு செய்தான். அவ்வாறே மண்ணால் கிணறு மூடும் பணி தொடங்கியது. சிறுது நேரம் கழித்து கிணற்றுக்குள் எட்டி பார்த்த விவசாயி ஆச்சிரியம் அடைந்தான். மண்ணை கொண்டு மூட மூட, கழுதை தன மீது விழும் மண்ணை உதறி, தன கால்களை உதைத்து மண் மீது நின்றுகொண்டிருந்தது. மேலும் மண்ணை போட போட கழுதை மேலே ஏறி மகிழ்ச்சியுடன் கிணற்றை விட்டு வெளியில் வந்தது.
நம்  வாழ்கையில் முன்னேற முயற்சிக்கும் பொழுது, பலர் நம் மீது மண்ணை போட முயற்சிக்கலாம். புழுதிவாரி தூற்றலாம். நம் செய்கையில் நேர்மையும் நியாயமும் இருக்கும் பொழுது, அதனை உதறி தள்ளி வெற்றியடைய முயற்சிக்க வேண்டும்.


வேலையும் ஊதியமும்


ஒரு இதய நோய் அறுவை சிகிச்சை நிபுணர் தன்னுடைய காரை வழக்கமாக ஒரு கார் பழுது நீக்கும் மையத்தில், பழுது பார்பார். ஒரு முறை அவ்வாறு செல்லும் பொழுது அந்த மைய்யத்தின் மெக்கானிக் மற்றும் உரிமையாளரும் ஆனா நபரிடம் நட்பாக பேசிகொண்டிர்ருந்தார். அந்த மெக்கானிக் மிகவும் திறமையானவர். ஆனால் தொழிலில் பெரிய வருமானம் என்று சொல்ல முடியாது.
நான் சில காலமாக நாம் இருவரும் செய்யும் பணியை பற்றியும் அதில் நமக்கு கிடைக்கும் வருமானத்தை பற்றியும் யோசிக்கிறேன். அப்படி யோசித்தால் வியப்பு தான் வருகிறது என்று அந்த மெக்கானிக் சொன்னார்.
அப்படி என்ன வியப்பு என்று அந்த டாக்டர் கேட்டார்.           
சரி. எதை பாருங்கள். நான் இப்பொழுது மிக பெரிய சிக்கலான கார் என்ஜின் ஒன்றை பழுது பார்த்து கொண்டிருகிறேன். மனிதனின் இதயத்தை போல காரின் இதயம் தான் அதன் என்ஜின். அது எப்படி சரியாக செயல்படுகிறதா, என்ன பிரச்னை இருக்கிறது என்று கண்டுபிடித்து அதனை சரியும் செய்து விடுகிறேன். அடிப்படையில் இருவரும் ஒரே மாதிரியான பணியை தான் செய்கிறோம். அப்படி இருக்கும் பொழுது நீங்கள் என்னை விட பத்து மடங்கு அதிகம் சம்பாதிகின்றீர்கள். அது எப்படி என்றார்         
அந்த அறுவை சிகச்சை நிபுனர் சிறிது நேரம் யோசித்துவிட்டு புன்னகை செய்தார். பின்னர் அந்த மெக்கானிக் கை பார்த்து " நீ செய்யும் வேலையை என்ஜின்னை ஓட விட்டு செய்து பார்" என்று கூறினார்  

புதன், 16 மார்ச், 2011

யார் பலசாலி ?

ஒரு ஊருல மூணு எலி இருந்துச்சாம். மூணுக்கும் யார் பலசாலின்னு வாக்குவாதம் நடந்தது.

முதல் எலி சொல்லுச்சாம் " அங்க பாருங்க அந்த பெரிய  தேக்கு மரக்கட்டையை என் பல்லாலேயே கடிச்சி, தூள் தூள் ஆக்கிருக்கேன்.  என் பலம் என்னா என்று இப்பவாவது தெரிஞ்சிக்குங்க"

உடனே இரண்டாவது எலி " இது என்னா பிரமாதம். நான் ஒரு பெரிய இரும்பு பலகையையே, பல்லால கடிச்சி தூள் தூள் ஆக்கிருக்கேன்.' அப்படின்னு சொல்லுச்சாம்.

மூணாவது எலி எதுவுமே பேசலை. உடனே மத்த இரண்டு எலியும் " என்னா பேசாம இருக்க ? நீ எதாவது சாதனை பண்ணி பலத்த காட்டி இருந்த சொல்லு " அப்படின்னு கேட்டுதாம்.

மூணாவது எலியும் சரின்னு " அங்க ஒரு பூனை இருக்கே அதை பாருங்க " அப்படின்னு சொல்லுச்சாம் "
மத்த இரண்டு எலியும் " பார்த்தோம். அதுக்கு என்னா இப்போ ? அப்படின்னு கேட்டுசிங்கலாம்.

சரியா பாருங்க. அந்த பூனை கர்ப்பமா இருக்கு அப்படின்னு மூணாவது பூனை சொல்லுச்சாம்

ஆமாம் அதுக்கு என்னா இப்போ ? மத்த இரண்டு பூனையும் கடுப்பாகி இப்படி கேட்டுதாம்.

அந்த கர்ப்பத்திற்கு காரணமே நான் தான் என்று மூணாவது எலி சொல்லுச்சாம் 

குமுதத்தில் படித்தது      

மகாத்மாவா ? வியாபாரியா ?

ஓஷோ ரஜீநிஷ் சிறு வயதில் இருந்த பொழுது நடந்த சம்பவம் இது. ஓஷோவிற்கு சிறு வயதில்  காந்தியடிகளை மிகவும் பிடிக்கும். ஒரு முறை காந்தியடிகள் வரும் ரயில் வண்டி தன் கிராமத்திற்கு அருகே உள்ள ரயில் நிலையத்திற்கு வருவதாகவும், காந்தியடிகள் அங்கு இறங்கி மக்களை சந்திக்க இருப்பதாகவும் கேள்விப்பட்டார். மகாத்மா என்று அழைக்கப்படும் அந்த தெய்வ பிறவியை காண ஓஷோவிற்கு ஆவல் ஏற்பட்டது. எனவே தன் நண்பர்களை அழைத்து கொண்டு கொஞ்சம் பணத்தையும் எடுத்துகொண்டு ரயில் நிலையம் சென்றார். ரயில் வர மிகவும் காலதாமதம் ஆனதால் ஓஷோவின் நண்பர்கள் பொறுமை இழந்து, நாங்கள் கிராமத்திற்கே திரும்பி செல்கிறோம் என்று கூறிவிட்டு சென்றுவிட்டனர். ஓஷோ மட்டும் மகாத்மாவை சந்திக்க மிகவும் ஆவலுடன் இருந்ததால் பொறுமையுடன் காத்திருந்தார். வேறு சிலரும் காந்தியை பார்பதற்காக காத்திருந்தனர்.

ரயிலும் வந்தது. மகாத்மா காந்திக்கு ஜெய் என்று கோஷங்கள் எழுந்தன. காந்தியடிகளும் ரயிலை விட்டு கீழே இறங்கி சிறுது நேரம் மக்களிடம் கலந்துரையாடினார். பின்னர் ஒரு உண்டியலை எடுத்து நாட்டில் ஏழை மாகுளுக்கு உதவுவதற்காக காங்கிரஸ் இயக்கம் நிதி திரட்டுவதாகவும், கிராமங்களில் உள்ள ஏழைகளின் வளர்சிக்காக இந்த நிதியை பயன்படுத்த போவதாகவும் கூறினார். பின்னர் அங்கிருந்த மக்களிடம் நிதி வசூல் செய்யா ஆரம்பித்தார். ஓஷோவிடம் உண்டியலை நீட்டியதும், தன்னிடம் இருந்த சிறு தொகையை உண்டியலில் போட்டார்.
பின்னர் காந்தியடிகள் எதிர்பாராத ஒரு காரியத்தை செய்தார். பனும் போட்ட உண்டியலை தன் கையில் வாங்கிய அவர், அதனை எடுத்து கொண்டு நடையை கட்டினார்.
காந்தியடிகள் அதிர்ச்சி அடைந்து, நில், என்ன காரியம் செய்கிறாய் நீ ? என்று கேட்டார். ஓஷோவும் நின்று பின்னர் காந்தியடிகளை பார்த்து " தன் கிராமத்திலும் நிறைய ஏழைகள் இருப்பதாகவும், இந்த நிதியை தந்தால் தன் கிராமத்தினருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் பதில் அளித்தார். ஒரு சிறுவன் இவ்வாறு பேசியதை பார்த்த காந்தியடிகள் அதிர்ச்சி அடைந்து செய்வதர்கரியாமல் நின்றார்.
பின்னர் ஓஷோ காந்தியடிகளிடமே அந்த உண்டியலை தந்து " நான் மகாத்மாவை பார்க்க தான் வந்தேன். ஆனால் இங்கு நான் ஒரு வியாபாரியை தான் பார்கிறேன் என்றார்.

இந்த நிகழ்வை பார்த்த கஸ்தூரிபாய் அவர்களும் புன்னகை பூத்தார்.

காந்தியடிகள் எங்கு சென்றாலும் நிதி திரட்டுவதை முக்கிய நோக்கமாக வைத்திருந்தார் என்பதற்கு பல சான்றுகள் உண்டு. பெண்கள் காந்தியடிகளின் மீது வைத்திருந்த நம்பிக்கையின் காரணமாக தாங்கள் அணிதிருந்த நகைகளை கூட கழட்டி கொடுத்தது தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் நடந்திருக்கிறது. ஒரு முறை பொது கூட்டத்திற்கு காந்தி அடிகள் செல்லும் வழியில் உள்ள கிராமத்தை சார்ந்த சிலர், தங்கள் கிராமத்திலும் பேசுமாறு அழைத்த பொழுது தகுந்த நிதி அளிபதாக வாக்குறுதி தந்தால் பேசுவதற்கு ஆட்சேபமில்லை என்று கூறினார்.
மகாத்மா காந்தி உண்மையில் மகாத்மாவா அல்லது சிறந்த நிர்வாகியா, வியாபாரியா என்று நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும்.
இயக்கத்தை வளர்க்கவும், கட்சியை வளர்க்கவும் நிதி தேவை என்பது மறுக்க முடியாது. ஆனால் அது எதற்காக பயன்படுத்த படுகிறது என்பது தான் முக்கியம். இவ்வாறு நிதி ஒரே இடத்தில் சேரும் பொழுது, உண்மையான நோக்கதிற்காக செலவு செய்யபடுவதற்கு பதிலாக, இயக்கத்தையும் கட்சியையும் வளர்க்கவே செய்யபடுகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.

இப்பொழுது மக்கள் தெளிவாகிவிட்ட காரணத்தினால் மிரட்டி தான் நிதி வசூல் செய்யபடுகிறது. அது கட்சியை வளர்கமட்டும் அல்ல தன் குடும்பத்தை வளர்க தான் அரசியல்வாதிகள் பயன்படுத்துகின்றனர்..

இப்பொழுது ஓட்டுக்கு பணம் கொடுக்கும் நிலை உருவாகி உள்ளது. மக்களும் சுயநலவாதிகளாகவே இருப்பதால், இந்த தவிர்கமுடியாத நிலை உருவாகி உள்ளது.  இது மாறுமா ?

அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்தால் மக்களை மேலும் மேலும் சுயநலவாதிகளாக மாற்றிகொண்டிருக்கின்றனர்.

உழைக்காமல் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் பெருகிக்கொண்டு இருக்கிறது. நம் கிராமங்கள் எப்படி மாறிகொண்டிருகிறது என்பதை பார்க்கும் பொழுது மனம் வலிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இலவசமும் ஊழலும் என்ற என் பதிவை பார்க்கவும் 


     
   

    

சனி, 5 மார்ச், 2011

நரகத்தில் பில் கேட்ஸ்

பில் கேட்ஸ் 2050 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். கடவுள் அவரை வரவேற்று " நீங்கள் கணினியை கண்டுபிடித்து விட்டுக்கு வீடு கணினி மயம் ஆகிவிட்டது. ஆனால் உலகமே இயந்திர மயம் ஆன காரணத்தால் ஒரு வித வெறுப்பு நிலையில் மனிதர்கள் வாழ்கிறார்கள். எனவே எனக்கு உங்களை நரகத்துக்கு அனுப்பலாமா அல்லது சொர்கத்துக்கு அனுப்பலாமா என முடிவுசெய்ய முடியவில்லை. அதனால் முடிவை உங்களிடமே விடுகிறேன். நீங்கள் சொர்கம் நரகம் இரண்டுக்கும் சென்று பார்த்து எது பிடிக்கிறதோ அங்கே நீங்கள் இருக்கலாம் என்று கடவுள் கூறினார்.

பில் கேட்ஸ் கு மகிழ்ச்சி தாங்க  முடியவில்லை. சரி என்று ஏற்றுகொண்ட அவர் முதலில் நரகத்தை பார்க்க விரும்பினார். கடவுளும் அவரை நரகத்திற்கு அழைத்து சென்றார். நரகத்தில் அவர் கண்ட காட்சி வியப்பில் ஆழ்த்தியது. 
அங்கு அழகான கடற்கரையில் இளம் பெண்கள் குளித்து கொண்டும் விளையாடிக்கொண்டும் இருந்தனர். இயற்கை எழில் கொஞ்சி விளையாடியது. அருமையான தட்பவெட்ப நிலையும் இருந்தது. சரி சொர்கத்தையும் பாப்போம் என்று அங்கு சென்றார். அங்கு வெண் மேக கூட்டத்தில் தேவதைகள் அமர்ந்து இனிய மெல்லிசையை இயற்றி கொண்டிருந்தனர். 

பில் கேட்ஸ் கு சொர்கத்தை விட நரகம் பிடித்திருந்தது. எனவே நரகத்திற்கு அனுப்புங்கள் என்று கடவுளிடம் கேட்டார். கடவுளும் அவர் விருப்பபடி செய்தார்.

இரு வாரம் கழித்து கடவுள் நரகத்திற்கு சென்ற பொழுது பில் கேட்ஸ் எண்ணை கொப்பரையில் தீயில் வாடி கொண்டிருந்ததை கண்டார். கடவுளை பார்த்ததும் கோபம் கொண்ட பில் கேட்ஸ் நீங்கள் என்னை நீங்கள் ஏமாற்றி விட்டர்கள் என்று புலம்பினார். நான் பார்த்த காட்சி வேறு. நிஜத்தில் வேறாக இருக்கிறது என்றார். அதற்கு கடவுள் நீங்கள் பார்த்தது "SCREEN SAVER " என்று கூறினார்.

நெட்டில் சுட்டது          

வெள்ளி, 4 மார்ச், 2011

ரமண மகரிஷியும் குரங்குகளும்

ரமண மகரிஷி ஒரு முறை தன் ஆசிரமத்தை வலம் வந்த பொழுது ஒரு மரத்தில் நிறைய குரங்குகளை கண்டார். மரத்தின் மீது தாவி குதித்து விளையாடிய அந்த குரங்குகளை பார்த்த மகரிஷி அந்த குரங்குகளை பார்த்து சில நல்ல கருத்துகளையும், நல் ஒழுக்க விதிகளையும் போதிக்க ஆரம்பித்தார். குரங்குகள் தங்கள் வேலையே பார்த்த படி இருந்தன. 

அந்த வழியே வந்த ரமண மகரிஷியின் சீடர்கள், மகரிஷியின் அந்த  செயலை பார்த்து என்ன ஆயிற்று நம் மகரிஷிக்கு? குரங்குகளுடன் பேசி கொண்டு இருக்கிறாரே என்று நினைத்தனர். அவரிடமே சென்று மகரிஷியே ஏன் குரங்குகளுக்கு போய் போதனைசெய்கிறீர்கள் என்று கேட்டனர். அவை என்ன நீங்கள் சொல்லவதை கவனிக்கவா போகிறது, அப்படியே கவனித்தாலும் நல்ல ஒழுக்கத்தை கடைபிடிகவா போகின்றன என்று கூறினார் .
இதனை கேட்ட ரமண மகரிஷி உங்களிடமும் தான் நான் நல்ல ஒழுக்கத்தையும் நல்ல கருத்துகளையும் சொல்லிக்கொண்டு வருகிறேன். யாரும் கேட்ட மாதிரியும் தெரியவில்லை, பின்பற்றிய மாதிரியும் தெரியவில்லை. அதனால் தான் குரங்குகலாவது , சொல்வதை  கேட்குமா என்று பார்த்தேன் என்றார் .

ரமண மகரிஷியின் சிஷ்யர்கள் வெட்கி தலை குனிந்தனர்   

புத்தகத்தில் படித்தது 

        

அலுவலகத்தில் புலி

காட்டை விட்டு வந்த புலி ஒன்று, தெரியாமல் ஒரு பெரிய நிறுவனத்தின் அலுவலகத்தினுள் நுழைந்து விட்டது. அது அந்த அலுவலகத்தில் இருந்த TOILET இல் தஞ்சம் புகுந்தது. அதனை யாரும் கவனிக்கவில்லை. மறு நாள் அதற்கு பசி எடுத்தது. எனவே TOILET ற்கு வந்த" CEO " வை கடித்து சாப்பிட்டுவிட்டது.
அலுவலகத்தில் யாரும்  " CEO " வை தேடவில்லை. வழக்கம் போல விடுப்பில் சென்று இருப்பார் என்று எண்ணி அனைவரும் தங்கள் வேலையே பார்த்தனர்.
மறு நாள் புலி TOILET ற்கு வந்த "General Manager " ரை அடித்து சாப்பிட்டுவிட்டது.
ஜெனரல் மேனேஜர் ரை காணோம் என்று யாரும் பதட்டபடவில்லை. அவர் வந்தாரா வரவில்லையா என்று கூட யாருக்கும் தெரியவில்லை.
மறு நாள் புலி அலுவலகத்தில் "Peon "  னாக வேலை பார்க்கும் ஒருவரை தின்றுவிட்டது. தங்களுக்கு கோப்புகளை கொண்டு வரும் மற்றும் எடுத்து செல்லும் வேலை மற்றும் " tea" வாங்கி வரும் வேலையை பார்க்கும்   "Peon " ஐ காணோம் என்றவுடன் அலுவலகமே பதற்றம் அடைந்தது. வருகை பதிவில் அவர் அலுவலகம் வந்தது உறுதியானது. அலுவலகம் முழுவதும் தேடினர். கடைசியாக  TOILET இல்   தேடிய பொழுது அங்கு புலியை பார்த்தனர். அனைவரும் சேர்ந்து புலியை அடித்து கொன்றுவிட்டு   "Peon " ஐ புலி அடித்து கொன்றுவிட்டதை எண்ணி வருந்தினர்.
 ஒரு அலுவலகத்தில் அனைவர்க்கும் உதவுபவராக நாம் இருக்க வேண்டும். நம் இருப்பை அனைவரும் உணரும் படி சிறப்பாக பணி செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால் நீங்கள் நிறுவனத்தின் " CEO " வாக இருந்தாலும்     "General Manager " ராக  இருந்தாலும் உங்கள் இழப்பு யாருக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.

ஒரு புத்தகத்தில் படித்து 


புதன், 23 பிப்ரவரி, 2011

அழகும் அசிங்கமும்

ஒரு நாள் அழகும் அசிங்கமும் ஒரு குளத்தில் குளிக்க சென்றன. அப்பொழுது இருவருமே தங்களது ஆடைகளை கழற்றி குளத்தின் கரையில் வைத்துவிட்டு குளித்தன. சிறிது  நேரம் கழித்து அசிங்கம் குளித்துவிட்டு குளத்தை விட்டு வெளியில் வந்தது. பின்னர் குளக்கரையில் இருந்த அழகின் ஆடையை எடுத்து அணிந்து கொண்டு இடத்தை விட்டு சென்றுவிட்டது. 

சிறிது நேரம் சென்று அழகும் குளித்து விட்டு வந்தது. கரையில் தன ஆடையை காணமல் திகைத்து. ஆனால் அசிங்கத்தின் ஆடை அங்கு இருப்பதை பார்த்து என்ன நடந்திருக்கும்  என யூகித்து, வேறு வழி இல்லாமல் அசிங்கத்தின் ஆடையை அணிந்து கொண்டு சென்றது

அன்று முதல் நாம் அழ்கை அசிங்கம் என்றும் அசிங்கத்தை அழ்கு என்றும் நினைத்து கொண்டு இருக்கிறோம்.

கஹ்ளில் கிப்ரான் நின் கதை. அழ்கு புற தோற்றத்தில் இல்லை என்பதை உணர்த்தும் கதை.