பிரபலமான இடுகைகள்

புதன், 9 மார்ச், 2011

இலவசமும் ஊழலும்

The Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MNREGA) -காந்தியின் பெயரில் கிராமபுரத்தில் வேலை வாய்ப்பை உறுதி செய்ய 25 .08 .2005 , இந்திய அரசாங்கம் இயற்றிய சட்டம் இது. கிராமபுரத்தில் உள்ள வேலை செய்யும் தகுதியை அடைந்த இளைங்கர்கள், இளைங்கிகள் முதல் முதியவர்கள் வரை ஆண் பெண் பேதம் இல்லாமல் ஒரு ஆண்டுக்கு நூறு நாட்கள் வேலை உத்தரவாதம் அளிக்கும் திட்டம் இது. கிராமப்புற பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்பு விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழிலையே நம்பி இருக்கிறது. பெரும்பாலான கிராமங்களில் பருவ நிலையை அடிப்படையான வேலை வாய்ப்பே இருக்கிறது. உதாரணமாக புரட்டாசி மாதம் முதல் தை மாதம் வரை மட்டுமே விவசாய வேலைகள் இருக்கும் கிராமங்கள் பல இருக்கின்றன. நீர் ஆதாரம் இல்லாமல்,மழையை நம்பி சாகுபடி செய்யும் மானாவரி விவசாயம் மட்டும் அல்ல ஆற்று நீரை நம்பி சாகுபடி செய்வதும் ஒரு போக விவசாயமாக மாறிஉள்ளது. காலம் தவறி பெய்யும் மழை, பற்றாகுறையான மழை போன்றவற்றால் வைகை, காவேரி, பெரியார் போன்ற பாசனங்களை நம்பி இருந்த விவசாயமும் சமிபகாலமாக பாதிகபட்டுள்ளது. வேலை வாய்ப்பை தேடி நகர் புரத்தை நோக்கி மக்கள் செல்வது தவிர்க்க முடியாததாகிவிட்டது. 
நாம் நாட்டில் கடைபிடிகபட்டு வரும் பொருளாதார கொள்கையும் கிராமப்புற விவசாயமும் அதனை சார்ந்த தொழில்களும் பின்னடைவு பெற முக்கியமான காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. 1991 ற்கு பிறகு கடைபிடிகபட்டு வரும் உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல்  போன்ற கொள்கைகள் தொழிற்சாலைகளும் சேவை சார்ந்த தொழில்களும் விவசாயத்தை நசுக்கிவிட்டு வளர்ந்து வருவதை நாம் காண முடிகிறது. நாம் நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருவதாக நாம் பெருமை பட்டு கொண்டாலும், நம் நாட்டில் கிராமப்புற வேலை வாய்ப்பை இன்றும் நம்பியிருக்கும் 55 % மக்கள் பாதிப்பு அடைந்து கொண்டு இருக்கிறாகள். 
 இந்த கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 2010 -11 ஆம் ஆண்டிற்கு மட்டும் ருபாய் 40100 கோடி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது ( spectrum  ஊழலில் நான்கில் ஒரு பங்கை விட குறைவு தான் என்கிறீர்களா ?)

சரி. இந்த வேலைகள் செய்தால் இந்த பணம் கிராமப்புற மக்களுக்கு கிடைக்கும் ? கிராமத்தில் உள்ள குளம், குட்டை, கண்மாய்களை தூர் வாருதல், புதிய குளம் வெட்டுதல், அவற்றை சுற்றி மரம் நடுதல், கிராமத்திற்கு பொதுவான பிற வேலைகளை செய்தல் (சாலை அமைத்தல், வெள்ள தடுப்பு நடவடிக்கை,    போன்றவைகளுக்கு இந்த பணம் ஓதுக்கீடு செய்யபட்டுள்ளது. கிராம அளவில் கிராம பஞ்சாயத்தின் மூலம் செயல்படுத்தபடுகிறது. வட்டார வளர்ச்சி அலுவலகம் தாலுகா அளவில் இதனை மேற்பார்வை செய்கிறது.

எந்த திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் வரையறுத்துள்ள சில நடை முறைகளை பாப்போம்.    

  • கிராமபுரத்தில் உள்ள பதினெட்டு வயதிற்கு மேற்பட்டோர் தனி திறமை தேவை படாத கூலி வேலை செய்ய விரும்புவோர் எழுத்து மூலமோ அல்லது வாய் வழி தகவல் மூலமோ தங்கள் விருப்பதை தெரிவிக்க வேண்டும்   
  • கிராம பஞ்சாயத்து தகவல்களை சரி பார்த்த பின்னர், வேலைக்கான அடையாள அட்டையை ( Job Card ) வழங்குவர். இதில் ஒரு குடும்பத்தில் இந்த திட்டத்தில் இணைய விரும்பும் உறுப்பினர்கள் அனைவரது புகைப்படமும் ஒட்டி இலவசமாக வழங்கப்படும்         
  • விண்ணப்பித்த பதினைந்து நாட்களுக்குள் அடையாள அட்டை வழங்க படும் 
  • அடையாள அட்டை பெற்ற நபர் கிராம பஞ்சாயத்துக்கு எழுத்து பூர்வமாக எத்தனை நாள் வேலை வேண்டும் என்ன வேலை வேண்டும் என்று கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். குறைந்தபட்சம் பதினான்கு நாட்கள் வேலை செய்ய வேண்டும்   
  • கிராம பஞ்சாயத்து அதன் படி வேலையை விண்ணபதார்களுக்கு ஒதுக்கும். கிராமத்தை சுற்றி ஐந்து கிலோமீட்டர் சுற்றளவிற்குள் வேலை வழங்கப்படவேண்டும். அதற்கு மேல் என்றால் கூடுதலாக 10 % சம்பளம் வழங்கப்படவேண்டும்  
  • ஆணுக்கும் பெண்ணுக்கும் இனையான ஊதியம் வழங்கவேண்டும் ( ருபாய் 100௦௦ ௦௦)  
  • தின கூலியாக ஊதியம் வழங்கப்பட்டு, கண்டிப்பாக வாரம் ஒரு முறை பட்டுவாடா செய்ய படவேண்டும். எக்காரணத்தை கொண்டும் இரு வாரங்களுக்கு மேல் ஊதியம் தராமல் இருக்ககூடாது.
  • மூன்றில் ஒரு பங்கு வேலையாவது பெண்களுக்கு தரப்படவேண்டும் 
  • அனைத்து கணக்கு வழக்குகளும் பொது மக்கள் பார்வைக்கு தேவைப்படும் பொது சமர்பிக்கவேண்டும் 
இந்த திட்டம் செயல்படுத்திய புதிதில் பல முறைகேடுகள் நடந்தன. சில வேலைகளை இயந்திரங்கள் மூலம் செய்து விட்டு மனித உழைப்பு மூலம் செய்யப்பட்டதாகவும் அதற்கு கூலி தந்துவிட்டதகவும் கணக்கு காட்டப்பட்டு பணம் சுருட்டப்பட்டது.

பிறகு சில விதிமுறைகள் மாற்றப்பட்டது. தற்பொழுது தமிழ்நாட்டில் அடையாள அட்டை பெற்ற அனைவர்க்கும் வங்கி கணக்கு தொடங்கப்பட்டு ஊதியம் அதில் போடபடுகிறது.

இந்த திட்டத்தினால் கிராம புற மக்கள் குறிப்பாக பெண்கள் விவசாய கூலிவேலைக்கு செல்வதை விட அதிகம் ஊதியம் ( ருபாய் 100௦௦ )  கிடைக்கும் காரணத்தினால், விவசாய வேலை இருந்தாலும் அதற்கு செல்வதில்லை. ஆண்களோ இதை விட அதிக ஊதியம் வெளியில் கிடைபதால் இந்த வேளைக்கு வருவதில்லை.

கண்மாயை தூர் வார செல்லும் பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு ஒதுக்கீடு செய்யப்படும். வேளைக்கு உடல் உறுதி படைத்த இளம் பெண்கள் முதல் அறுபது வயது மூதாட்டி வரை வருவர். பெயருக்கு தான் எட்டு மணி நேர வேலை. சில பெண்கள் ஒரு மணி நேரதில்லேயே வேலையே முடித்துவிட்டு மீதம் உள்ள நேரத்தில் கண்மாய் கரையில் உட்கார்ந்து அரட்டை அடித்து கொண்டு இருப்பர். சில நேரங்களில் தாயம் சீட்டு ஆடுதல் போன்றவைகளும் நடப்பது உண்டு. பஞ்சாயத்து அமர்த்திய மேர்பார்வையலர்களுக்கு இது நன்கு தெரியும். இருந்தாலும் கண்டு கொள்ள மாட்டார்கள். உழைக்காமல் சும்மா இருபதற்கு ருபாய் எண்பது முதல் நூறு வரை கூலி கிடைக்கும் காரணத்தால் பெண்கள் உண்மையான விவசாய வேளைக்கு, வேலை இருந்தாலும் போக மாட்டார்கள். 

மக்களை மேலும் சோம்பேறி ஆக்கும் திட்டமாக இது மாறிக்கொண்டு இருக்கிறது. விவசாய வேலைகள் பாதிக்காமல் இந்த திட்டத்தை செயல் படுத்த பஞ்சாயத்துகள் தவறி விடுகின்றன.
சரி எதனால் குளம், குட்டை, கண்மாய் எல்லாம் உண்மையிலேயே தூர் வார பட்டு அதிக நீர் பிடிக்கும் நிலையை அடைந்தனவா என்றால் அதுவும் இல்லை. பொறுப்புணர்ச்சி இல்லாமல் ஊதியம் கிடைத்தால் மட்டும் போதும் என்று தோது போட்டு கொண்டு குறைவாக வேலை செய்யும் காரணத்தால், கொடுக்கும் பணதிற்கு ஏற்ற பயன் கிடைபதில்லை.

அரசும் அரசாங்கமும் தெளிவாக இருக்கிறது. வேலை செய்யாமலேயே ஊதியம், ஒரு ரூபாய்க்கு அரிசி, சீரியல் பார்க்க இலவச தொலைக்காட்சி, ஆண்களுக்கு ஊருக்கு ஊர் மது பான கடை, ஒட்டு போட பணம் என்று தவறான நோய்களை பரப்புவதன் மூலம் தவறான சமுதாயமாகவே இது மாறிக்கொண்டு வருகிறது. அப்பொழுது தானே பல இலட்சம் கோடி ஊழல் செய்தாலும், பேருந்து கட்டணத்தை அறிவிக்காமலேயே பல மடங்கு ஏற்றினாலும், விலை நிலங்களும் விவசாயமும் பாதிக்க பட்டாலும், விலை வாசி விண்ணை தொட்டாலும், பெட்ரோல் விளையும் நினைத்தபொழுது எல்லாம் மாற்றினல்லும், வெளி நாட்டு வங்கியில் கோடி கோடியாய் பணத்தை கொண்டு முடக்கினாலும், அரசு மருத்துவர்கள் வேலை நேரத்திலேயே தங்கள் சொந்த மருத்துவமனையில் வைத்தியம் பார்த்தாலும், சாதாரண பியூன் முதல் அதிகாரிகள் முதல் அரசியல் வாதிகள் வரை லஞ்ச பேய் தலைவிரித்து ஆடினாலும் நாம் கேள்வியே கேட்கமாட்டோம்.
எந்த வம்புக்கும் போகாத மிடில் கிளாஸ் மக்கள், சுரண்ட படுவது தெரியாமல், தெரிந்தாலும் கிடைக்கும் அற்ப சுகத்தில் அதை மறக்கும் மக்கள், கவலை பட அவசியம் இல்லாத மேல் தட்டு மக்கள் இருக்கும் வரை நம் அரசியல் வாதிகளுக்கு கொண்டாட்டம்.

சரி. நாம் எப்படி இருப்பதால் அதிக பயன் யாருக்கு.? நம் நாட்டு பொருளாதார கொள்கையை நிர்ணயம் செய்யும் சக்தியும், கடை கோடி ஏழை முதல் இந்திய அரசாங்கம் வரை கடன் கொடுத்து அடிமையாக்கும் சக்தியும், சுயநலத்திற்காக நாட்டில் பிரிவினைவாதத்தை உண்டாக்கும் சக்தியும் படைத்த சில வளர்ந்த நாடுகள் தான் இதில் பெரும்மகிழிச்சி அடையும்.
நம் நாடு அந்நிய சக்திகளால் ஆட்டுவிகப்படும் நாடக மாறி பல காலம் ஆகிறது.

பல லட்சம் கோடி ஊழல் செய்ததை கேள்விப்பட்டவுடன் நாடே கொந்தளித்து இருக்க வேண்டும் அல்லவா? ஏன் அது நடக்கவில்லை. சாதாரண மொழியை வைத்து போராட்டம் நடத்தினால், ஜாதி வெறியை தூண்டி போராட்டம் நடத்தினால் கூடம் கூடம், ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தவில்லை? ஏன் என்றால் நாம் ஒவ்வொருவருமே அதற்கு காரணமாக இருப்பதால். ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் நாம் லஞ்சம் கொடுத்தோ அல்லது வாங்கியோ ( இலவச தொலைக்காட்சி ) இருக்கிறோம். பின் எப்படி தைரியமாக கேள்விகேட்க முடியும் ?    
                 

                                            

    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக