பிரபலமான இடுகைகள்

நாட்டு நடப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாட்டு நடப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 18 மே, 2011

மின்சாரம்

நேற்று எங்க ஏரியாவில் பவர் Shut down . காலையில் ஒன்பது மணிக்கு போன கரண்ட் மாலை எட்டரைமணிக்கு தான் வந்தது. என் மகள் கரண்ட் வந்தவுடன் தொலைகாட்சியை போட்டு சுட்டி டிவி பார்க்க ஆரம்பித்தாள். நான் சிறிது நேரம் கழித்து என் பெண்ணிடம் ஜெயலலிதா பற்றி என்ன நியூஸ் என்று பார்த்துகொள்கிறேன். கொஞ்சம் சேனலை மாற்று என்றேன். அவள் உடனே " ஜெயலதிதா வந்ததில் இருந்து சுத்தமா கரண்டே வரலன்னு சொல்ல போறாங்க' என்று சொல்லிவிட்டு முந்தியாவது கொஞ்சம் கரண்ட் வந்தது அப்பா. இன்னைக்கு full லா கரண்ட் இல்லை என்றாள்.

நான் சிரித்துவிட்டேன். ஹ்ம்ம் ஆறு வயது மகளுக்கு கூட அரசியலை புரியவைத்து விட்டது இந்த கரண்ட் பிரச்சனை

               

செவ்வாய், 17 மே, 2011

அரசியல் மாற்றம்

தமிழகத்தில் ஒரு அரசியல் மாற்றம் வந்துள்ளது. மிகவும் அவசியமான மாற்றம் சரியான தருணத்தில் வந்துள்ளது. மக்கள் இலவசதிற்கும் பணத்திற்கும் விலை போக மாட்டார்கள் என்பதை நெத்தியடியாக மக்கள் உணர்தயுள்ளர்கள்.

தான் செய்யும் தவறுகளை பற்றி கேள்வி கேட்டால் அல்லது பத்திரிகைகளில் எழுதினால் மிக கேவலமாக பேசுவதையும் பிரச்சனையை தன் நா வன்மையின் மூலம் திசைதிருப்புவதையும் கருணாநிதி செய்து வந்தார். பணத்தின் மீதும் பதவியின் மீதும் அவருக்கு இருந்த ஆசை தள்ளாத வயதிலும் கூடி கொண்டே இருந்தது பதவியும் பணமும் எவ்வளவு ஆபத்தான விஷயம் என்பதை உணர்த்தியது. தமிழகத்தையே தன் குடும்ப சொத்தாக கருதி பதவி அதிகாரம் பணம் முதலியவற்றை பயன்படுத்தி அனைத்து பணம் கொழிக்கும் துறையிலும் மூக்கை நுழைத்து அனைவரின் எதிர்ப்பையும் சம்பாதித்துக்கொண்டார். Spectrum ஊழலில் கலைஞர் டிவி கு நேரடி பங்கு வந்ததை சகித்துகொள்ளவே  முடியவில்லை. இது கருணாநிதி குடும்பம் செய்த ஊழலில் ஒரு (௦.0001 % ?)சதவிகிதம் தான்.

மதுரையில் ஒரு ரௌடி ராஜ்யமே நடந்தது. கடந்த ஐந்து வருட காலத்தில் நான்கு கலக்டர்கள் மாற்றப்பட்டனர் ( சகாயத்தை தவிர்த்து). அழகிரியின்  அடிமையாக செயல்பட முடியாத காரணத்தினால்.

அனைத்துக்கும் ஒரு முற்றுப்புள்ளி.

ஜெயலிதா ஒரு சிறந்த நிர்வாகி. கடந்தகாலத்தில் அவசர பட்டு சில முடிவுகளை எடுத்து பல இழப்புகளை சந்தித்தார். தற்பொழுது அந்த தவறை உணர்துள்ளார் என்று நம்புவோம். அவர் பதவி ஏற்றதில் இருந்து நடந்த சில நிகழ்வுகள் அவர் பக்குவம் அடைதுள்ளதை காட்டுகிறது. சரியான நபர்களை நம்பி சரியான முடிவுகளை எடுத்தால் இந்த ஆட்சி தமிழர்களுக்கு மிக சிறப்பாக அமையும் என்று நம்புவோம்    
    

சனி, 14 மே, 2011

திருமணமும் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவும் -2


சமிபகாலமாக திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகளை பற்றிய செய்திகளும் அதனால் ஏற்படும் குடும்ப வன்முறைகள் மற்றும் கொலைகள் பற்றிய செய்திகள் அதிர்ச்சியை தருவனவாக இருக்கின்றன. ஆனால் எதார்த்தமாக சிந்தித்து பார்க்கும் பொழுது இத்தகைய உறவுகள் சூழ்நிலைகள் காரணமாகவும், நிறைவேறாத எதிர்பார்ப்புகள் காரணமாகவும் ஏற்படுகின்றன என்பது புரியும். ஒரு கொலையை செய்தவனுக்கு கூட தன் தரப்பு வாதங்களை கூற சட்டம் அனுமதி தருகிறது. அனால் இத்தகைய தவறுகள் செய்யும் பெண்களுக்கு சமூகம் அந்த அனுமதியை அளிபதிலை. நம் கலாசாரம், குடும்பம், சமூகம் மற்றும் சட்ட திட்டங்களையும் மீறி ஒரு பெண் இத்தகைய முடிவை எடுபதற்கு காரணம் வெறும் காம இட்சையாக பல நேரங்களில் இருக்க முடியாது. திருமணம் என்ற உறவில் கணவன் மற்றும் மனைவி சமூக கலாச்சாரா விதிமுறைகளால் கட்டுண்டு இருக்கின்றார்கள். கணவன் தனக்கு மட்டுமே சொந்தம். மனைவி தனக்கு மட்டுமே சொந்தம். அவர்கள்   திருமணத்திற்கு பிறகு தாய் தந்தையிரடம் கூட இடைவெளி விட்டு பழகவேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. ஒரு மேசை, நாற்காலி, நகை, பணம் முதலியவற்றை எப்படி நமக்கு சொந்தமாக பார்கிறோமோ அதுபோல தான் கணவன் மனைவியையும் மனைவி கணவனையும் பார்க்கிறான். பெண்களுக்கு அதுவும் தன்னம்பிக்கை இல்லாத மற்றும் கணவனை மட்டுமே முழுமையாக சார்திருக்கும் பெண்களுக்கு இத்தகையே எண்ணம் அதிகம். கணவன் தன் தாயிடம், தந்தையிடம், சகோதர சகோதரிகளிடம் அன்பு கொண்டிருந்தால் இத்தகையே பெண்களுக்கு பிடிக்காது. கணவன் அவர்களிடம் கொண்டிருக்கும் உறவை துண்டிக்க  முற்படுவார்கள்.   இது கணவனுக்கு தன் மீது வெறுப்பை ஏற்படுத்தும் என்பதைகூட உணரமாட்டார்கள்.ஒரு பாதுகாப்பில்லாத உணர்வின் காரணமாக செய்யப்படும்   இத்தகைய செயல்கள் கணவன் மனைவி இருவரிடம் உள்ள பரசபர அன்பை குறைத்து காலபோக்கில் வெறுப்பை ஏற்படுத்திவிடும். பிறகு உண்மையான அன்பை நினைத்து மனது எங்கும். இத்தகையே சுழலில் இருவருமே பாதை மாறி போக நேரிடும். தன தேடும் அன்பு வேறு ஆண் அல்லது பெண் மூலம் கிடப்பது போல் தெரிந்தால் அவர்கள் மனம் மாறக்கூடும்.


வாழ்வில் பாதுகாப்பாக உணர சில ஆண்கள் பணத்தை தேடி அலைவர். தன வேலையில் தொழிலில், அதனால் அதிக அக்கறையும் ஈடுபாட்டையும் செலுத்துவர். இத்தகையே சுழலில் குடும்பத்தின் மீது செலவிடும் நேரம் குறையும். கலைத்து போய் வேலையிலிருந்து வீடு திரும்பும் அவர்களுக்கு மனைவிடம், தங்கள் குழந்தைகளிடம் அன்பாகவும் அக்கறையாகவும் பேச எண்ணம் இருக்காது. சற்று இளைபாறிவிட்டோ, அல்லது தொலைகாட்சியை பார்த்து விட்டு பின்னர் உணவருந்திவிட்டு தூங்க செல்வர். உண்மையில் மனைவி குழந்தைகள் மீது அவர்களுக்கு அக்கறை இருந்தாலும் கூட அதனை வெளிபடுத்த முடியாத சுழல் நிலவும். குடும்பம் நன்றாக இருக்க தான் பொருள் ஈட்டுவார். ஆனால் குடும்பம் வேலை இரண்டையும் சமன் படுத்தி வாழ தெரியாத காரணத்தால், மனைவி தானும் தன் குழந்தைகளும் தனித்து விடப்பட்டதை போல உணருவார். பணமும் ஆடம்பர வாழ்கையை விரும்பும் பெண்களுக்கு இது ஒரு பொருட்டாக தெரியாவிட்டாலும், அன்பையும் அக்கறையும் விரும்பும் பெண்களுக்கு இந்த வாழ்கை பெரும் சுமையாக அமையும். தன் கருத்தை காதுகொடுத்து கேட்க கூட நேரமிலாத கணவனை நினைத்து வருந்துவர். தன் தொழிலில் வேலையில் ஏற்படும் வெற்றிகளினால், அதனால் ஏற்படும் போதையினால், கணவன் குடும்பத்திற்கு செலவிடும் நேரம் குறைந்துகொண்டே போகும். கணவன் மீது மனைவிக்கு அன்பு குறைந்து வெறுப்பு ஏற்படும். தான் குடும்பத்திற்காக கஷ்டப்பட்டு உழைத்தும் மனைவி தன்னை மதிகவில்லையே என்று கணவன் நினைப்பான். இந்த கசப்புணர்வும் அவர்களை பாதை மாற செய்யும்.      


காதல் திருமணம் செய்து கொண்டு வாழும் கணவன் மனைவி இருவருக்கும் இடையே உள்ள அன்புகூட காலபோக்கில் கசந்துபோகிறது. காதலிக்கும் பொழுது தவறாக தெரியாத ஒரு விஷயம், திருமணத்திற்கு பிறகு தவறாக தெரியும். காதலிக்கும் பொது பெருமையாக நினைத்த ஒரு விஷயம் கூட திருமணத்திற்கு  பிறகு கஷ்டமாக தெரியும். திருமணமாகியும் தான் செல்லும் இடமெல்லாம் தானும் கூடவே வந்து உதவி புரிந்த கணவனை நினைத்து பெருமை பட்டு கொண்ட ஒரு பெண், பின்னர் சில ஆண்டுகளுக்கு பிறகு அது கணவன் தன் மீது கொண்ட அக்கறையால் அல்ல, அது சந்தேகத்தால் என்று தெரியவந்ததும் மனம் நொந்த கதை எனக்கு தெரியும். சிறிது காலம் தாழ்த்தி விட்டுக்கு வந்தாலும் ஏன் எதற்கு என்ற கேள்வி, அவளில் பிற நண்பிகளிடம் விசாரிப்பது தெரிந்ததும் அவள் மனம் சுக்கு நூறாகி இருக்கும். மேலும் காதலிக்கும் பொழுது உண்மைத்தன்மையை யாரும் வெளிபடுத்துவதிலை. அருகில் இருந்து பார்க்கும் பொழுது தான் பிற குறைகள் தெரியும். காதலிக்கும் பொழுது சில விசயத்திற்காக விட்டுகொடுத்ததை போல திருமணத்திற்கு பிறகு விட்டு கொடுக்க இயலாது. காரணம் கணவனை மனைவியோ அல்லது மனைவியை கணவனோ ஒரு ' பொருளாக' தான் பார்க்கும் நிலைமையை திருமண பந்தம் ஏற்படுத்திவிடுகிறது. காதலிக்கும் பொழுது மனது வேலை செய்யும். திருமணத்திற்கு பிறகு மூளை வேலை செய்யும். கவர்ச்சி மறைந்து எதார்த்த வாழ்கையை எதிர்கொள்ளும் பொழுது சங்கடம் ஏற்படும். ஒருவனின் பொருளாதார நிலையை வைத்து திட்டமிட்டு காதலிக்கும் பெண்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு கணவன் மீது உண்மையான அன்பு இருக்காது. அதனை உண்மையான அன்பு என்று நினைத்த காதலனும் திருமணத்திற்கு பிறகு உண்மை தெரிந்தால் வெறுதுவிடுவான்.  (நீங்கள் வாங்கும் சம்பளம் நான் குடும்பம் நடத்த பத்தாது என்று சொன்ன பெண்களும் இருக்கிறார்கள் )
                              
பணத்தை தேடிஅதனால் குடும்பத்தை தொலைபவர்களை விட குடும்பத்தின் மீது அக்கறையே இல்லாத கணவர்கள் பலர் இருக்கின்றனர். மாறி வரும் சமூக சுழலில் பெண்கள் மீது பாரம் அதிகமாகிக்கொண்டே வருகிறது. ஏழ்மை நிலையில் இருக்கும் பல குடும்பங்களில் கணவன் கூலி வேலை செய்து ஈட்டும் பணத்தை பெருமளவு குடிபதார்காக பயன்படுத்துகிறான். சரியாக வேலைக்கு செல்லாத கணவர்களையும் பார்த்திருக்கிறேன். இத்தகையே கணவனை கொண்ட கிராமத்து பெண்கள் அவனால் ஒரு பயனும் இல்லை என்றாலும்,  சமூக கட்டுப்பாடு  காரணமாக  விவாகரத்து செய்யாமல் சேர்ந்து வாழ்கின்றனர். தன் குழந்தைகளை முன்னிட்டு, அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பொருத்து கொண்டு வாழ்கின்றனர்.



தன் எதிர்பார்பிற்கு மாறாக குடும்பத்தினரின் கட்டாயத்தினால் திருமணம் செய்து கொண்டவர்களின் குடும்ப சிக்கல், கணவன் மூன்று முடிச்சி போடும் போதே தொடங்கிவிடும். திருமணம் சரியில்லை என்றால், விவாகரத்து செய்து விட்டு மறுமணம் செய்து கொள்ளும் பெண்களும் முதல் திருமணத்தால் ஏற்பட்ட பாதிப்பை நினைத்து , தன் மறுமண வாழ்கையையும் சரியாக அமைத்து கொள்ளாமல் தவிகின்றனர்.



தன் வருங்கால வாழ்கையை பற்றி ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆணுக்கும் கனவுகள் பல இருக்கும். ஆனால் எதார்த்தம் என்பது வேறு. நம் ஆசைகள் எல்லாம் கனவாகவே போகும் நிலை ஏற்படலாம். அல்லது சில ஆசைகள் பூர்த்தி அடையாளம். அதிலும் கூட ஒரு பெண்ணுக்கு தான் எதிர்பார்த்தபடி கணவன் கிடைத்தாலும், அதே பெண்ணின் கணவன் தான் எதிர்பார்த்தபடி மனைவி இல்லையே என்று நினைக்கலாம் . மிக திருப்த்திகரமாக ஒருவரை ஒருவர் சரியாக புரிந்து கொண்டு, விட்டு கொடுத்து மகிழ்ச்சியாக வாழ்வது வெகு சிலரே. ஆனால் காலபோக்கில் இத்தகைய குடும்பத்தின் எண்ணிக்கை குறைந்துகொண்டே போகிறது.


அன்பும் ஆன்மிகமும் காலச்சாரமும் மிகுந்த நம் நாட்டில், மேற்கத்திய தாகத்தினால் பல மாற்றங்கள் உண்டாகியுள்ளன. இது திணிக்கப்பட்டதாக நாம் எடுத்துகொள்ள கூடாது. தவிர்க்க முடியாத மாற்றம் தான் இது. தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியினால் உலகமே உள்ளங்கையில் இருக்கிறது. பல விசயங்களை தெரிந்து கொள்ள நேரிடுகிறது. மேலும் வாழ்கை மேலும் மேலும் கடினமாகி கொண்டே போகிறது. எதற்கும் போட்டி போட வேண்டிருக்கிறது. அதனால் அன்பு குறைகிறது.


அன்பு குறைகிறது. இது தான் இப்பொழுது நாம் சந்திக்கும் பெரிய பிரச்னை. ஒருவருக்கு ஒருவர் பரசபரம் அன்பு செலுத்துவது குறைந்துவிட்டது. நாம் அன்பை தேடுகிறோம். ஆனால் தர மறுக்கிறோம். அது கணவன் மனைவிக்கும் இடையில் உண்மையான அன்பு இல்லாத  பொழுது, எங்கு அன்பு கிடைக்கிறதோ அங்கு மனம் பாயதொடங்குகிறது. அத்தகைய சுழலில் சமூக, குடும்ப காலச்சார கட்டுபாடுகள் தடையாக தோன்றுவதில்லை. அன்பிற்காக தன் மானத்தை கூட இழக்கும் கேவலமான நிலைக்கு பெண்கள் தள்ள பட்டுள்ளனர் என்பதே உண்மை.


திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு ஏன் ஏற்படுகிறது என்று அலசி ஆராயும் பக்குவம் இதில் சம்மந்தப்பட்டவர்களுக்கு இல்லை.  முதலில் அவன் அல்லது அவன் தனக்கு சொந்தமான பொருள். அதனை எப்படி இன்னொருவன் பயன்படுத்தலாம் என்ற எண்ணம் தான் வருகிறது. அவர்களுக்குள் ஒரு இதயம் இருக்கின்றது, அது எத்தகைய சுழலில் இந்த கடினமான முடிவை எடுக்க தூண்டியது என்று யாரும் யோசிபதில்லை. சமூகமும் யோசிக்கவிடுவதில்லை.இந்த சமூகம் பெண்களுக்கு விதித்துள்ள கட்டுபாடுகள் அதிகம். ஆண்களுக்கு கட்டுபாடுகள் குறைவு. ஆனால் காமத்தின் காரணமாக தப்பு செய்பவர்கள் பெரும்பாலான ஆண்கள். பெரும்பாலான பெண்களுக்கோ காமம் முதன்மையான காரணமாக இருக்காது. அன்பை தேடும் பெண்கள் காமம் வேண்டும் ஆண்களின் போலியான அன்பில் சில சமயம் விழுந்து விடுவதும் உண்டு. வாழ்க்கையில் வெறுப்பு, விரக்தி, நம்பிகைஇன்மை, போலியான அன்பு, நிறைவேறாத சின்ன சின்ன ஆசைகள் அவர்களை தடம் மாற செய்கின்றன.காற்றில் அசைந்தாடும் கொடி ஏதோ ஒன்றை பற்றி கொள்ள துடிப்பது போல துடிக்கும் அவர்கள், ஒரு நம்பிக்கையின் பெயரில் ஏதேனும் ஒன்றை பற்றிகொள்கின்றனர்.  


போட்டிகளும், எதிர்பார்ப்புகளும், அகந்தையும், சுயநலமும் அதிகமாகிக்கொண்டே போகும் சுழலில் இத்தகைய மாற்றம் தவிர்க்க முடியாதது. ஆனால் இதற்கும் வழக்கம் போல பெண்களை மட்டும் குறை சொல்கிறோம்.  


ஒரு ஆணிடம் ஒரு பெண் நட்பாக பழகினால் கூட அதனை தவறாக பார்க்கும் சமூக சுழல் தான் நிலவுகிறது. ஒரு பெண் அப்படி பட்ட சொற்களை தன் காதால் கேட்டுவிட்டால் வேறு வழி இல்லாமல் நட்பை துண்டித்துகொள்கிறாள். அல்லது சமூகமே நம்மை தவறாக பார்க்கும் பொழுது அப்படி நடந்தால் தான் என்ன என்ற எண்ணத்திற்கும் ஆளாகிறாள். நம் இந்திய நாட்டில் தான் மக்கட் தொகை அதிகம். ஆனால் உடலுறவு குறித்தும் ஒழுக்கத்தை பற்றியும் மிகவும் கவலைபடுவது அதனை கொச்சைபடுத்துவதும் நாம் தான். உண்மை தெரியாமல் நட்பையும் கொச்சை படுத்துவோம்.    பெண்களுக்கு விதிக்கப்பட்டுள அதிகபடியான சமூக  கட்டுபாடுகள் அதிகபடியான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இதற்காக கட்டுபாடுகள் தேவையில்லை என்று அர்த்தம் இல்லை. கட்டுப்பாடு என்பது சமூகத்தில் உள்ள அனைவர்க்கும் சமம் என்றால் பெரிதாக எதிர்வினை இருக்காது. ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி. ஏழைக்கு ஒரு நீதி பணக்காரனுக்கு ஒரு நீதி, பதவியும்  அதிகாரமும் உள்ளவனுக்கு ஒரு நீதி சாமானியனுக்கு ஒரு நீதி என்ற சுழலில் எதிர்வினைகள் பெரிதாக ஏற்படும்.   
   


ஒரு திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவில் ஈடுபட்டுள்ள ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே "இவள் எனக்கு சொந்தம்" அல்லது "இவன் எனக்கு சொந்தம்" என்ற நினைப்பு இல்லாவிட்டால் கண்டிப்பாக அது திருமணத்தை விட ஒரு புனிதமான உறவாக இருக்கும் . ஆனால் அங்கேயும் "possessiveness " வரும் பொழுது அன்பு மறைந்து சுயநலம் மேலோங்குகிறது. 


"பதினொரு நிமிடங்கள்" என்ற புத்தகத்தில் "Paulo Coelho " ஒரு விலைமகளின் உண்மையான காதலை வெளிபடுத்தியிருபார். தான் காதலிக்கும் ஓவியன் மீது எல்லையட்ட்ற அன்பை கொண்ட அவள் அந்த அன்பு நிலைக்க அவனை தான் சொந்தமாகி கொள்ள கூடாது என்று எண்ணுவாள். அவனை அன்பின் மிகுதியால் விலகி செல்லவும் நினைப்பாள். உண்மையான அன்பு எதையும் எதிர்பார்க்காது. அப்படி பட்ட அன்பை தேடுகிறோம். ஆனால் தர மறுக்கிறோம். அப்படி பட்ட அன்பு கிடைத்தால் அதற்காக எதுவும் செய்ய முயல்கிறோம். ஒருவன் தன் மீது உண்மையான அன்பை செலுத்துகிறான் என்பதை ஒரு பெண் உணர்துவிட்டால் அதற்காக தடைகள் அனைத்தையும் உடைத்தெறிந்து வெளியேறுகிறாள். மிக கடினமான முடிவுகளையும் எளிதாக எடுக்கிறாள். இதை கள்ள தொடர்பு என்று எளிதில் நாம் கொச்சைபடுத்துகிறோம். அன்பின் மிகுதியால் ஏற்படும் எந்த உறவும் நல்ல உறவே. வெறும் செய்தித்தாளை படித்துவிட்டு அதனை கள்ளஉறவு என்று முடிவு செய்து அவர்களை தூற்றி நம் மன அழுக்குக்கு வடிகால் தேடுகிறோம். 


"Kahil Gibranin" உடைந்த சிறகுகள்" என்ற கதையில் செல்மா என்ற பெண் " தன் தந்தை மற்றும் மதபோதகரின் வற்புறுத்தலால் பணக்காரன் ஒருவனை தன் விருபத்திற்கு மாறாக திருமணம் செய்து கொண்டு கஷ்டபடுவதை அழகாக பதிவு செய்திருப்பார். தான் விரும்பிய காதலன் கிடைக்காமல் பொருள் ஈட்டுவதிலும் பெண் பித்தனாக பல பெண்களுடன் தொடர்பு கொண்ட அன்பில்லாத கணவனுடன் அவள் வாழும் வாழ்கையை சகிக்காமல், அவள் தந்தையும் தவறை உணர்து நோய் வாய் பட்டு இறந்துவிடுவார். சமூகத்தின் மீது கொண்ட பயத்தின் காரணமாக திருமணத்திற்கு பிறகு சில சந்திப்புகளில் " வா ஓடிவிடலாம் " என்ற காதலனின் அழைப்பை புறக்கணித்து நிமதியட்ட்ற வாழ்வை வாழ்து அவள் இறந்துவிடுவாள். அவள் இறப்பு கூட அவள் கணவனிற்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது .


உடைந்த சிறகுகளில் திருமணத்தை பற்றி குறிபிடும்போழுது " திருமணம் என்பது பெண்களை பொறுத்தவரை பெற்றோர்கள் மற்றும் ஆண்களின் கையில் வேடிக்கையான சடங்காகும். பெண் என்பவள் ஒரு வீட்டிலிருந்து மற்றொரு வீட்டுக்கு வாங்கி எடுத்து செல்லும் பொருளாக தான் பார்க்க படுகிறாள். காலபோக்கில் அவள் அழகு   குறைந்து ஒரு பழைய நாற்காலியை போலவோ மேசையை போலவோ வீட்டின் இருட்டான மூலையில் இருக்கிறாள்" என்று "kahlil gibran " கூறுகிறார்     
    
மேலும் தற்கால பெண்களின் நிலையை பற்றி கூறும் பொழுது ' தற்கால நாகரீகம் பெண்களை சற்று புத்திசாலிகளாக  மாற்றியுள்ளது, ஆனால் ஆண்களின் சூழ்ச்சியினால் அவளுக்கு கஷ்டத்தை அதிகபடுத்தியுளது. நேற்றைய பெண் மகிழ்ச்சியான மனைவியாக இருந்தாள். இப்பொழுதோ துன்பத்தில் உழல்பவலாக இருக்கிறாள். நேற்று கண்ணை மூடி கொண்டு வெளிச்சத்தில்  நடந்தாள். இன்று கண்ணை திறந்து கொண்டு இருட்டில் நடக்கிறாள். நேற்று அவள் அறியாமையின் அழகில், எளிமையின் பண்பில், தன் இயலாமையிலும் உறுதியாக இருந்தாள். இன்று அவள் தன் அறிவின் அசிங்கத்தில், மேலோட்டமாக இதயமில்லாமல் இருக்கிறாள். அறிவும் அழகும் , ஞானமும் குணமும், உடலின் உறுதியின்மையும் உள்ளத்தின் உறுதியும் என்று தான் பெண்களுக்கு ஒன்றாக அமையுமோ என்கிறார்             


செல்மா தன்னுடன் வர வற்புறுத்திய தன் காதலனிடம் தன் துயரமான வாழ்வை பற்றி குறிப்பிடும் பொழுது : சொர்க்கம் எனக்கு தந்த கசப்பான பானத்தை சில துளிகள் மட்டும் மிட்சம் வைத்துவிட்டு அதன் முழு கசப்புதன்மையை உணர்வதற்காக குடித்துவிட்டேன். மீதம் இருக்கும் சிறு துளிகளையும் பொறுமையாக பருகுவேன். புதிய அன்பான அமைதியான  வாழ்க்கைக்கு தகுதியானவள் நான் அல்ல. வாழ்கையின் மகிழ்ச்சியையும் சுவையும் உணர்வதற்கான சக்தி என்னிடம் இல்லை. வானத்தில் பறக்கமுடியாத அளவிற்கு என் சிறகுகள் உடைந்து போய்விட்டன. மெழுகுவர்த்தி வெளிச்சத்திற்கு பழக்கப்பட்ட என் கண்கள் சூரிய வெளிச்சத்தை தாங்காது. மகிழ்ச்சியை பற்றியே என்னிடம் பேசாதே. அதனை பற்றிய எண்ணமே என்னை துன்புரசெய்கிறது. அமைதியை பற்றி நீ கூறாதே, அதன் நிழல் என்னை பயமுற செய்கிறது.ஆனால் நீ என் இதயத்தை பார். என் இதயம் என்ற சாம்பல் குவியலில் சொர்க்கம் ஏற்றி வாய்த்த புனித வெளிச்சத்தை பார். நான் உன் தாய் உன் மீது அன்பு செலுத்தியதை போல் அன்பு செலுத்துவது தெரியும். அந்த அன்பு தான் உன்னை என்னிடமிருந்தும் பாதுகாக்க கற்று தந்தது. நெருப்பினால் புனிதபடுத்தபட்ட அந்த அன்பு தான் உன்னை நான் பின்தொடர்து தூர தேசத்திற்கு வர தடையாக இருக்கின்றது. அந்த அன்பு தான் என் ஆசைகளை கொன்று நீ சுதந்திரமாகவும் பண்புள்ளவனாகவும்  வாழ வழிவகுத்துள்ளது. எல்லையுள்ள அன்பு அன்புகொண்டவரை கேட்கும். எல்லை இல்லாத அன்பு அன்பை மட்டுமே கேட்கும். 


பின்னர் செல்மா சொல்கிறாள் " நான் இப்பொழுது மகிழ்ச்சியாக கொடூரமான பேய்கள் இருக்கும் இருண்ட குகைக்குள் செல்கிறேன். என்னை எண்ணி வருத்தப்படவோ பாவபடவோ வேண்டாம். கடவுளின் நிழலை கண்ட ஆத்மாவிற்கு பேய்களை பார்த்து பயம் இருக்காது. சொர்கத்தை கண்ட கண்கள் இந்த பூவுலகின் வலிகளை கண்டு மூடாது 


செல்மாவை போல வலிகளை பொறுத்துக்கொண்டு வாழும் பெண்கள் தான் இன்னும் அதிகம். காரணங்களும் சூழ்நிலைகளும் வேறுபடலாம். ஆனால் துன்பம் மட்டுமே அவர்களுக்கு நிரந்தரம். செல்மா தனக்கு சிறகுகள் உடைந்து விட்டதாக கூறுகிறாள். பல பெண்களுக்கு சிறகுகள் உடைக்க பட்டு தான் இருக்கின்றது. இதையும் மீறி பறக்க நினைக்கும் பெண்களை தாக்க தயாராக காத்திருக்கின்றன சமூகத்தில் பல வல்லூறுகள். தவறு செய்யாதவர் யாரேனும் இருந்தால் இந்த பெண் மீது கல்லை வீசுங்கள் என்றார் இயேசு. நாம் மனதில் அழுக்கையும் முதுகு நிறைய பாவத்தையும் வைத்திருந்தும் காரணம் தெரியாமலேயே ஒருவர் கல் வீசுகிறார் என்பதால் நாமும் வீசுகிறோம்.    


ஆசை படாமல் வாழவேண்டும் என்று போதனை உண்டு. ஆனால் வாழ்வதற்கு கூட ஆசைபட  கூடாதா ? வாழ்கையில் எப்போதாவது வரும் சின்ன சின்ன சந்தோஷங்களை விட வேறு எதுவும் இல்லை.     


இந்த உலகில் எதுவும் நமக்கு சொந்தமில்லை. நாம் இறந்தால் அதன் வருத்தமும் வலியும் நீண்ட நாள் நம்மையே நம்பியிருப்பவருக்கு கூட இருக்காது. காலம் அதற்கு மருந்தாக அமையும். ஆனால் அன்பு செலுத்தபடாமல் வாழ்நாள் முழுவதும் புறக்கனிகபடும் வலி மிகவும் கொடுமையானது. 


" சொந்தம் " என்ற வார்த்தையை உறவினர்களுக்கு இடையே பயன்படுத்துவது கூட தவறானது. எனக்கு சொந்தம் என்ற உரிமையே ஒருவர் மீதான ஈடுபாட்டை அதிகபடுத்துகிறது. மனைவி- கணவன்- குழந்தைகள் என்ற குடும்ப அமைப்பில் இந்த ஈடுபாடு மிக அதிகம். இதனால் சுயநலம் மேலோங்குகிறது. தனது "தீர்க்கதரிசி " என்ற அற்புதமான  படைப்பில் குழந்தைகளை பற்றி சொல்லும் பொழுது "கஹ்ளில் கிப்ரான்" இவ்வாறு கூறுகிறார்             
உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல 
வாழ்கை தனக்காக ஆசைபடுவதனால்
அதனின் மகனாகவும் மகளாகவும் பிர்றபவர்கள்
அவர்கள் உங்களால் வந்தவர்கள் அல்ல 
உங்கள் வழியே வந்தவர்கள்,
அவர்கள் உங்களுடன் இருந்தாலும் உங்களுக்கு சொந்தம் இல்லை'
நீங்கள் அவர்களுக்கு உங்கள் அன்பை தர முடியும் எண்ணத்தை தரமுடியாது,
என்னென்றால் அவர்களுக்கு என ஒரு சொந்த எண்ணம் இருக்கும்
நீங்கள் அவர்களின் உடம்பிற்கு அடைக்கலம் தரலாம் ,
உள்ளத்திற்கு தரமுடியாது       
என்னென்றால் அவர்களின் ஆன்மா நீங்கள் கனவிலும் கூட செல்ல முடியாத நாளை என்ற வீட்டில்  வாழ்கின்றன 


நாம் பெற்ற குழந்தைகளிடம் கூட இந்த பக்குவத்தில் தான் நடந்து கொள்ள வேண்டும் என்றால் திருமண பந்தத்தின் மூலம் இணைந்த கணவன் மனைவியிடமும் மனைவி கணவனிடமும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் 


ஒரு குடும்பம் என்ற அமைப்பு சமூகத்தினால் சில பல காரணங்களால் எற்படுத்தபட்டுளது. ஒரு குடும்பம் ஒரு தெரு ஒரு கிராமம், ஒரு மாநிலம் ஒரு நாடு என்பது ஒரு அடையாளம். நன்ற யோசித்து பார்த்தல் திருமணம் என்ற பந்தம் ஒரு சமூக பாதுகாப்பை மனிதர்களுக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு வழங்க ஏற்படுத்த பட்ட ஒரு அமைப்பாகும். சில பழங்குடியினர் சமுதாயத்தை பொறுத்தவரை பல தாரத்துடன் கூட்டமாக வசிக்கும் நிலை இருக்கிறது. அவர்களை பொறுத்தவரை அது தங்கள் பாதுகாபிற்காக ஏற்படுத்திக்கொண்ட ஒரு சமூக முறை. மேலை நாடுகளில் விவாகரத்தும் மறுமணமும் சாதாரணம். அதனால் பெரிதாக சமூதாய சிக்கல் ஏற்படுவதில்லை. குழந்தையை தாயோ தந்தையோ குறிப்பிட்ட வயது வரை பொறுபெடுத்து வளர்கின்றனர். திருமண உறவின் மூலம் ஏற்படும் குடும்பம் என்ற அமைப்பில் சமூதாய பாதுகாப்பு குழந்தைகளுக்கு உறுதிசெயயபடிகிறது. இதை தவிர பொருளாதார நோக்கத்துடன் ( தன் குடும்பத்திற்கு சொத்து சேர்க்க) சுயநலமாக செயல்படும் அமைப்பாக அது மாறிவிடுகிறது. அதனால் தான் தன் குடும்பத்தை தாண்டி பலர் சமூக அக்கறையோடு சிந்திபதில்லை. தனக்கு நேரடியாக பாதிப்பு ஏற்படும் வரை சமூகத்தில் ஏற்படும் சீர்கேடு குறித்து குரல் எழுப்புவதில்லை. உதாரணம் : கள்ள காதல் குறித்த செய்திகளை அசை போட்டு அதில் ஒரு வித திருப்தி அடைவதோடு இருந்துவிடுவர். தன் குடும்பத்திலும் தான் சரியாக அன்பு செலுத்த தவறும் பட்சத்தில் இது போன்ற ஒரு நிகழ்வு நடக்கும் என்று யாரும் சிந்திபதில்லை.


எனவே குடும்பம் என்ற அமைப்பில் உள்ளவர்களை பாதுகாப்பது மட்டும் தான் நமது கடமை. வேறு எந்தவிதத்திலும் யாரும் யாருக்கும் உடமையாகவோ அடிமையாகவோ  மாட்டார்கள்.


சரி. காமத்தின் மிகுதியால் தவறு செய்யும் பெண்கள் இல்லவே இல்லையா என்றால் அப்படிப்பட்டவர்களும் இருகிறார்கள். காமம் மிகுந்தால் பேருந்தில் இடிப்பதில் இருந்து ஆரம்பித்து விலைமகளிடம் செல்லும் ஆண்கள் வரை இருக்கிறார்கள்.அவர்களுக்கு பெரிதாக இந்த சமூதாயத்தில் தண்டனைகள்  இல்லை. ஆனால் பெண்கள்? தகுந்த வாய்ப்பு வந்தால் பயன்படுத்திகொள்வார்கள். ஆனால் இத்தகைய பெண்களின் சதவிகிதம் வெகு குறைவே. பசி போல காமமும் ஒரு உணர்வு. 


ஒருவரின் உடலமைப்பையும் குணதிசயத்தையும் முடிவு செய்வதில் அடிப்படை மூல கூறுகளான "Gene 's " ( ஜீன்கள் ) பெரும் பங்கு வகிகின்றான. பிறப்பால் நிர்ணயம் செய்யப்பட்ட சில அடிப்படை உணர்வுகள் மீது குடும்பம் மற்றும் சமுதாயத்தின் தாக்கம் நிகழும் பொழுது அது குணமாக உருவெடுக்கிறது. இந்த அடிப்படையில் பார்த்தல் அதுவும் கூட தவறில்லை.


இந்த கட்டுரையின் நோக்கம் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு வேண்டும் என்பது அல்ல. எந்த சுழலில் அது ஏற்படுகிறது என்பதை என் அறிவுக்கு எட்டியவரை பதிந்திருக்கிறேன். 


கணவர்களே மனைவி மீது அன்பு மட்டும் செலுத்துங்கள் 
மனைவிகளே கணவன் மீது அன்பு மட்டும் செல்லுதுங்கள் 
ஒருவர் மீது ஒருவர் முழுமையான நம்பிக்கை வையுங்கள். 
அவர்களின் குறைந்தபட்ச சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றுங்கள்  
அவர்களை தனக்கே தனக்கு என்று சொந்தம் கொண்டாடவேண்டாம் 
வாழ்க்கை மிக அமைதியாக இருக்கும். யாரும் வழி தவறியும் செல்லமாட்டார்கள். 


அப்படியே சென்றாலும் "LaoTzu" வின் இந்த கவிதையை நினைவில் வைத்திருங்கள் 


அனைத்தும் கடந்துவிடும் 


சூரியன் உதித்து கொண்டே இருப்பதில்லை 


அனைத்தும் கடந்துவிடும் 


மழையும் பொழிந்துகொண்டே இருப்பதில்லை 


மறைந்த சூரியன் மீண்டும்  உதிக்காமல் இருப்பதில்லை 


அனைத்தும் கடந்துவிடும் 


இவை எல்லாம் மாறும் 


இந்த பூமி ... வானம்... இடி 
மலை... தண்ணீர்... 
காற்று... நெருப்பு - கண்மாய் --




இவையே மாறும் என்றால் 
இவையே  நிரந்தரம் இல்லை என்றால் 


மனிதனின் எண்ணங்கள் நிலையாக இருக்குமா ?
கற்பனைகள் நிலையாக இருக்குமா ?
வருவதை அப்படியே ஏற்று கொள்ளுங்கள் 
அனைத்தும் கடந்துவிடும் 

"THIS TOO WILL PASS AWAY "  





  



செவ்வாய், 19 ஏப்ரல், 2011

ஏமாற்றாதே ஏமாறாதே.


ஏமாற்றாதே ஏமாறாதே. இந்த உலகில் ஏமாற்றாமல் வாழமுடியும். ஆனால் ஏமாறாமல் வாழமுடியுமா என்று சந்தேகம் வலுக்கிறது. ஏமாற்றுதல் சின்ன விசயத்தில் இருந்து கூட ஆரம்பிக்கிறது. பக்கத்துக்கு வீட்டு பெண்மணி சீட்டு பிடிக்கிறார்கள்- நானும் அதில் சேரட்டுமா என்று என் மனைவி கேட்டபொழுது நான் வேண்டாம் என்றேன். அதற்கு பதில் Recurring Deposit அல்லது பரஸ்பர பங்கு திட்டத்தில் (Mutual Fund)- மாதம் தோரும் முதலீடு செய்யலாம் என்றேன். என்னிடம் கருத்து கேட்ட என் மனைவி எனக்கு தெரியாமல் சீட்டுக்கு பணம் செலுத்தி வருவது நேற்று தான் தெரியவந்தது. 

நான் ஒரு உர நிறுவனத்தில் வேலை பார்த்த பொழுது, உர கடைகாரர் ஒருவர் தான் கடை வைத்திருக்கும் கிராமத்தில் அனைவரின் நம்பிக்கையையும் பெற்றவர். அவர் சீட்டு படிக்க ஆரம்பித்த பொழுது அனைவரும் சேர்ந்தனர்.  மேலும் உர கம்பனிகளுக்கு அவர் கொடுக்கும் காசோலை என்றும் பணம் இல்லை என்று திரும்பியது இல்லை. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு மேலாக வைத்திருந்த நம்பிக்கையை ஒரு நாள் அவர் தவிடு போடி ஆக்கினார். 
கடையில் கொஞ்சம் கொஞ்சமாக சரக்கை ( உரமூடைகள், பூச்சி மருந்துகள் ) குறைத்த அவர், ஒரு நாள் அதிகாலை யாருக்கும் சொல்லாமல் ஊரை விட்டு குடுபத்துடன் ஓடி விட்டார். எங்கு சென்றார் என்று யார்க்கும் தெரியவில்லை. உர கம்பனிகளுக்கு அவர் தந்த பல லட்சங்களுக்கான பின் தேதியிட்ட காசோலைகள் அனைத்தும் பணம் இல்லாமல் திரும்பின. கிராமத்து மக்களிடம் சீட்டு பிடித்த பணம் பல லட்சம். அனைத்தும் சேர்த்து ஒரு கோடி ரூபாயை தாண்டியது. பின்னர் தான் தெரிந்தது ஊரில் அவருக்கு சொந்த வீடோ நிலமோ இல்லை. வெளியூரில் இருந்து பிழைக்க வந்து, பல வருடங்களாக திட்டமிட்டு பல லட்சங்களை ஏமாற்றி சுருட்டி கொண்டு ஓடிவிட்டார். இது நடந்து பத்து வருடத்திற்கு மேல் ஆகியும் அவர் எங்கு இருக்கிறார் என்று கூட கண்டுபிடிக்க முடியவில்லை.  

வேலை பார்க்கும் இடத்தில் அடுத்தவரை போட்டு கொடுத்து தான் நல்ல பெயர் எடுத்து முன்னேறுபவர்களை நாம் நிறையவே பார்க்கலாம். புகழ்ச்சிக்கு அடிமையாகதவர்கள் வெகு சிலரே. இதனை பயன்படுத்திக்கொண்டு, தன் திறமையை மட்டும் நம்பாமல் அடுத்தவர்களுக்கு குழி பறித்து வாழ்கையில் முன்னேறுவார்கள். இதுவும் ஒரு வகையான ஏமாற்றும் செயலே. நிறுவனம் ஒரு தவறான நபரை நம்பி, நல்ல ஊழியரை (அவர் தன் திறமையால் நிறுவனத்திற்கு பல வகைகளில் உதவி இருந்தாலும்) இழக்கும் நிலை ஏற்படலாம். உழைத்தும் பலன் இல்லையே என்று அவர் தன் உழைப்பை குறைக்கலாம். மேலும் போட்டு கொடுத்தால் தான் முன்னேற முடியும் என்பதை உணர்ந்து தானும் போட்டு கொடுக்கும் செயலை செயலாம். இதன் நீண்ட கால விளைவாக நிறுவனம் தான் நல்ல ஊழியர்களை இழந்து பாதிக்கப்படும். மேலும் இத்தகைய தவறான எண்ணம் உடையவர்கள் பெரிய பொறுப்பிற்கு வந்தால் நிறுவனம் தவறான பாதையில் செல்லும். நிதி ரீதியான தவறுகள் நடக்கவும் வாய்ப்புகள் அதிகம்.

அரசியலை பற்றி கேட்கவே வேண்டாம். பணம் மற்றும் பதவி மட்டும் தான் அவர்கள் குறி. அதற்காக கொள்கைகளை ( அப்படி ஒன்று நிஜமாகவே இருக்காது ) காற்றில் பறக்கவிடுவார். வெட்கம் மானம் ரோஷம் போன்ற குணங்கள் எல்லாம் அறவே இருக்காது. வஞ்சகம், சூழ்ச்சி, பொய், புரட்டு, பழி பாவத்திற்கு அஞ்சாமை, கொலை செய்ய கூட தயங்காமை போன்றவைகளே அரசியல்வாதிகளுக்கு இருக்க வேண்டிய பண்புகள். சுருக்கமாக சொன்னால் நற்பண்புகள் என்று சொல்லப்படும் எதுவும் இல்லாமலும், தீய பண்புகள் அனைத்தும் கொண்டவருமே அரசியல்வாதி ஆக தகுதி படைத்தவர்கள். விபச்சாரியிடம் நண்பனுடன் சென்று, அவளை அனுபவித்துவிட்டு பிறகு பணம் தராமல் நண்பனை மாட்டிவிட்ட ஒருவனை முதலமைச்சாராக கொண்ட மாநிலம் இது. பல வகைகளில் இவர்களால் நாம் ஏமாற்ற பட்டு கொண்டிருக்கும் பொழுது ஏமாறாமல் நடப்பது சாத்தியமா ?

ஒரு மாநிலம் இன்னொரு மாநிலத்தை எமாற்றிகொண்டிருக்கிறது. ஒரு நாடு இன்னொரு நாட்டை எமாற்றிகொண்டிருக்கிறது. ஒரு இனம் இன்னொரு இன்னதை ஏமாற்றுகிறது. திறமையாக எமாற்றுகிரவனே திறமையான வியாபாரி. சாதாரண பூ விற்கும் கிழவியிடம் இருந்து நகை விற்கும் பெரிய நகை கடை முதல் ஏமாற்றுதலே முதன்மை. நிறம் மாறது என்று தெரிந்தும் விளம்பர கவர்ச்சியில் மயங்கி வெண்மையாக்கும் க்ரீம்களை வாங்கி தடவி கொள்கிறோம்.Active Salt அடைங்கியது என்று சாதாரண உப்பை கொண்ட பற்பசை விளம்பரத்தை கண்டு ஏமாறுகிறோம்.     

நாம் படிக்கும் வரலாறே எழுதியவர்களின் விருப்பத்தின் அடிப்படையிலும் ஆட்சியில் இருந்தவர்களின் விருப்பத்தில் அடிப்படையிலும் எழுதப்பட்டதே ஆகும். வரலாற்றின் உண்மை தன்மை நிகழ்காலத்தில் வாழும் நமக்கு தெரியாது. நம் வாழ்கையை நாம் எழுதினாலே பல விஷயங்கள் மறைக்கப்படும். பிறர் எழுதினாலும் அவர் அறிந்துகொண்ட தெரிந்துகொண்ட சில விஷயங்களின் அடிப்படையில் தான் எழுதமுடியுமே தவிர, உண்மையை எழுத முடியாது. காந்தி, அன்னை தெரேசா முதல் பொதுவாழ்க்கையில் ஈடுபட்ட பலரது கறுப்பு பக்கங்கள் மறைக்கப்பட்டு தான் வருகிறது. இதில் யாரும் விதிவிலக்கல்ல. 

நினைப்பது ஒன்று, சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என்று ஒரு விதமான Hypo -Critic சமூகத்தில் தான் நாம் வாழ்ந்து வருகிறோம். பல குடும்பத்தில் வேறு வழியில்லாமல் தான் கணவன் மனைவி இருவரும் சமூகத்திற்கு பயந்து சேர்ந்து வாழ்கின்றனர். ஒருவரை ஒருவர் ஏமாற்றிக்கொண்டுதான் வாழ்கின்றனர். வாழ்கையில் விட்டுகொடுத்தல் தான் வேண்டும் என்றாலும் அன்பை தொலைத்துவிட்டு போலியாக வாழ்வதால் என்ன பயன் ?

காதலில் விழும் பருவ வயது குழந்தைகள் பெற்றோரை ஏமாற்றி வருவதும், உண்மையான(?) அன்பை செலுத்திய பெற்றோரை ஒரே நொடியில் தூக்கிபோட்டு செல்வதும் நடக்கிறது. கொஞ்சம் தெளிவானவர்கள் காதல் என்ற பெயரில் தன உடல் இட்சைகளை தீர்த்துக்கொண்டு காதலித்த பெண்ணையோ பையனையோ கழற்றிவிடுவதும் உண்டு.
உலகமே பொய் என்ற அச்சாணியில் தன் சுழல்கிறதோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. எமாற்றதெரியாதவரை வாழ தெரியாதவராக பார்க்கும் சமூதாய சுழல் ஏற்பட்டுள்ளது.

மிக பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் தொலைதொடர்பு துறையை ஏமாற்றி வெளிநாட்டு தொலைபேசி அழைப்புகளை உள்நாட்டு தொலைபேசி அழைப்புகளாக காண்பித்து பல கோடி ருபாய் வரி எய்ப்பு செய்ததும், சுரங்க தொழிலில் 80௦ % தாதுக்கள் சட்டவிரோதமாக கடத்தபடுவதாக வரும் செய்திகளும், பங்கு சந்தை ஊழல், இராமலிங்க ராஜு செய்த சத்யம் நிறுவன ஊழல் காமன் வெல்த் விளையாட்டு போட்டியில் நிகழ்ந்த ஊழல், கிரிகெட் சூதாட்டம், IPL கிரிகெட் போட்டியில் நடந்த ஊழல், அரசியல் வாதிகள் செய்த பல்வேறு ஊழல்கள், முதல் அரசு அலுவலக கடை நிலை பணியாளர் மற்றும்  காவல் துறையினர்  பெரும் கையூட்டு வரை நம் தேசமே வெட்கி தலைகுனியும் அளவிற்கு ஏமாற்றுதல் நடந்துகொண்டிருக்கிறது.

இதை அனைத்தையும் கண்டு கொள்ளாமல் பிறந்தோம், இருந்தோம் , செத்தோம் என்று வாழ்பவர்கள் நேர்மையாக இருந்தாலும் நேர்மையானவர்கள் அல்ல. இப்படி கண்டு கொள்ளமால் நமக்கு என்ன என்று வாழ்வதால் தான் உலகம் மேலும் மேலும் கெடுகிறது.

ஏழை மக்களுக்கு தொண்டாற்றுவதாக சொல்லிகொள்ளும் அரசு சாரா நிறுவங்கள் சில வெளிநாட்டில் இருந்து பெரும் பணத்தை கண்ணுக்கு காட்டிவிட்டு சுருட்டி கொள்வதுடன் மட்டும் நில்லாமல், முடிதா அளவு யாருக்காக வேலை பார்கிறோமோ அவர்களையே ஏமாற்றுவதும் நடக்கிறது. ஐந்து கோடி ருபாய் வரவு செலவு நடக்கும் ஒரு மகளிர் சுய உதவி குழு கூட்டமைப்பில். ஏழை பெண்களுக்கு இரண்டு சென்ட் / மூன்று சென்ட் நிலம் வாங்கி தருவதாக ( அதற்கு கடனும் தருவதாக ) கூறி அவர்களை ஏமாற்றி பன் மடங்கு அதிக விலைக்கு நிலத்தை விற்று, தன் பெயரிலும் தன் உறவினர்  பெயரிலும் நான்கே வருடங்களில் நாற்பது லட்ச ருபாய் மதிப்புள்ள நிலத்தை சொந்தமாகிகொண்ட ஒரு கேடு கட்ட பிறவியை சட்டபூர்வமாக எதுவும் செய்யமுடியவில்லை. கூட்டமைப்பின் பணத்தில் நிலம் வாங்க கடன் கொடுத்து தனக்கு கமிசனாக ( ரியல் எஸ்டேட் புரோக்கர் வைப்பதைவிட) பண் மடங்கு கமிசன் வைத்து பணம் சுருடியவன் அவன்.

நடக்கும் எமாற்றுதல்களை பட்டியல் இட்டு கொண்டே போகலாம். நேர்மையாக இருந்த ஒரே காரணத்தால் அரசு அலுவலராக இருந்த என் தந்தை தான் ஓய்வு பெரும் சமயத்தில் அரசியல்வாதிகளால் பெரும் துன்பத்திற்கு ஆளானார். நேர்மையாக செயல்பட்ட காரணத்தால் நானும் எனக்கு கிடைக்கவேண்டிய பணி உயர்வை இழந்தேன். ஆனாலும் விரக்க்திக்கு பதில் சமூகத்தின் மீதான, ஏமாற்றி பிழைப்பை நடத்தும் கீழ்த்தரமான மனிதர்களை நினைத்தால் கோபம் அதிகம் வருகிறது.

மதுரை கலக்டர் சகாயம் நேர்மையானவர். அவர் செயலுக்கு பல தடங்கல் வந்தாலும் தன் தனித்தன்மையை இது வரை விட்டுகொடுத்ததிலை. இதற்கு முன் கலக்டராக இருந்த உதயச்சந்திரன் அவர்களும் கீழ்த்தரமான அரசியலுக்கு அடிபடியவில்லை என்ற காரணத்தினாலேயே விரைவில் மாற்றம் செய்யப்பட்டார். பணம் அதிகாரம் பழி பாவத்திற்கு அஞ்சாமை போன்ற செயல்களால் நாட்டையே சுடுகாடாகும் சிலரை என்ன செய்வது. சட்டத்தையே வளைக்கும் இவர்களுக்கு யார் தான் தண்டனை கொடுப்பார்கள் ?
ஒரு சமுதாய எழுச்சி உருவாக வேண்டும். குறைவானவர்களாக உள்ள நல்லவர்கள் இந்த எழுச்சியை உண்டாக்கினால், நல்லவர்கள் அதிகம் ஆவர் கெட்டவர்கள் குறைவர். உங்களால்  முடிந்தவரை அநீதியை எதிர்த்து குரல் கொடுங்கள் . இதனால் தனிப்பட்ட முறையில் நீங்கள் பாதிக்கபட்டாலும், நேர்மை உயர நாடு செழிக்க உங்களால் ஆனதை செய்த மன திருப்தியுடன் வாழலாம். மன திருப்தியுடன் இறக்கலாம்  

சனி, 16 ஏப்ரல், 2011

பாண்டிச்சேரி தேர்தல் கூத்துக்கள்

பாண்டிச்சேரி தேர்தல் கூத்துக்கள்  

கூத்து-1

காங்கிரஸ் கட்சியை சார்ந்த நாராயணசாமி என்பவர், தன் கட்சி மக்களுக்கு என்ன செய்திருக்கிறது என்று கூறும் பொழுது " புள்ளையை தவிர அனைத்தையும் தந்திருக்கிறோம் என்று கூறியுள்ளார் ". இதை கேட்டு கோபமான பெண்மணி ஒருவர் " நீ ஒன்னும் எங்கள்ளுக்கு புள்ளை தரவேணா - நான் வேணும்னா என் வீட்டுக்காரை உன் வீட்டுக்கு அனுப்புறேன் என்று கூறியுள்ளார் "
நான் இத்துடன் ஏன் உரையை முடித்துகொள்கிறேன் என்று நாராயணசாமி உடனேயே இடத்தை காலி செய்தார் 

( மக்கள் இலவசத்துக்கு ஆசைப்பட்டு "என்ன தருவே ?" என்று கேட்கும் நிலைமை வந்துவிட்டது. இலவசத்திற்கு ஆசைபடும் மக்கள் இதைவிட கேவல படவேண்டிய நிலைமை பிற்காலத்தில் ஏற்படும் என்பதை நினைவில் வைத்துகொள்ளுங்கள் )

கூத்து -2

பாண்டிச்சேரி லாஸ்பேட்டை தொகுதியில் நந்தா சரவணன் என்பவர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட தொகுதியில் நீண்ட காலமாக தன்னை அறிமுக படித்திகொண்டு, சின்ன சின்ன வேலைகளை சுயவிளபரங்களை செய்து கொண்டுஇருந்தார். ஆனால் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த சிவகொழுந்து என்பவருக்கு, திடீர் அரசியல் ஆசை வந்தது. காங்கிரஸ் தலைமையிடம் ஒரு பெரும் தொகையை கொடுத்து லாஸ்பேட்டை தொகுதியில் நிற்க சீட் வாங்கிவிட்டார். ஆனால் தொகுதியில் அறிமுகமே இல்லை. தன்னை தொகுதியில் அறிமுகபடுத்திகொள்ள தேர்தல் தேதி அறிவிக்கும் முன் 1000௦௦௦ ஏழை பெண்களுக்கு புடவை வழங்க திட்டமிட்டு பயனாளிகளுக்கு முன்கூட்டியே டோக்கன் வழங்கப்பட்டது. ஒரு குறிப்பிட்ட தேதியில் ஒரு திருமணமண்டபத்தில் வந்து புடவையை பெற்றுகொள்ளுமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டது.
தனக்கு சீட்டு கிடைக்காத கோபத்தில் இருந்த நந்தா சரவணன் இந்த நிகழ்வை கெடுக்க நூதனமாக ஒரு திட்டம் போட்டார். சிவகொழுந்து அடித்து கொடுத்த டோக்கனை போலவே அச்சு அசலாக 10000௦௦௦௦ டோக்கன் அடித்து, ஊர் முழுவதும் சிவகொழுந்து கொடுத்ததை போல கொடுத்து, திருமணமண்டபத்தில் வந்து புடவை பெற்று கொள்ளுமாறு மக்களிடம் சொல்லிவிட்டார்.
குறிப்பிட்ட தேதியில் திருமணமண்டபதில் கூடிய கூட்டத்தை பார்த்து மிரண்டுவிட்டனர் சிவகொழுந்தின் ஆதரவாளர்கள். பிறகு அங்கு என்ன நடந்திருக்கும் என்று கூறவும் வேண்டுமோ ?

கூத்து- 3

பாண்டிச்சேரியில் நகை கடன் மற்றும் கந்து வட்டி, ரன் வட்டி, மீட்டர் வட்டி போன்றவற்றில் கொடிகட்டி பறக்கும் சகோதரர்களிடம் தேர்தல் செலவுகளுக்காக நான்கு அரசியல்வாதிகள் சில பல லட்சங்களை கடன்பெற்று இருந்தனர். இதில் ஒரு சகோதரர் இவர்களுக்கு கடன் கொடுபதற்கு பதில் நாமே தேர்தலில் நின்று  விடலாமே என்று சொல்லிருக்கிறார். அதற்கு மூத்த சகோதரார் " இவர்கள் சம்பாதித்து நமக்கு தானே பல மடங்கு வட்டியுடன் தர போகிறார்கள். நாம் ஏன் அந்த ஆசை படவேண்டும் என்று கூறிருக்கிறார்" ஒவ்வுருவருக்கும் ஒரு பீலிங். ஒவ்வுருவருக்கும் ஒரு ஆசை.

கூத்து-4

ச்சே இந்த தேர்தல சாக்கா வச்சு  ஒரு லட்ச ரூபா சம்பாதிக்கலாம் என்று இருந்தேன். எழுபத்தி ஐயாயிரம் ருபாய் தான் கிடைத்தது என்று ஒரு இளைஞன்
புலம்பிகொண்டு இருந்தான். இரு சுயஉதவி குழு வைத்திருக்கும் அவன் தாய்க்கு ஒரு குழுவிற்கு இருபதாயிரம் ருபாய் என்று நார்பதயிரமும், இவன் நடத்தும் கிரிகெட் குழுவிற்கு இருபதாயிரமும், பின்னர் தினசரி தேர்தல் செலவிற்காக கொடுத்த பணத்தில் அமுக்கியது பதினைந்து ஆயிரமும் ஆகா மொத்தம்   எழுபத்தி ஐயாயிரம் ருபாய் தான் கிடைத்தது என்று கணக்கும் சொன்னான்.

வருஷத்துக்கு ஒரு தடவ தேர்தல் வந்தால் போதும். வேட்பாளர்கள் எல்லாம் பிச்சைகாரர்கள் ஆகவும் நாம் எல்லாம் பணக்காரர்கள் ஆகவும் ஆகிவிடலாம் என்று அவன் சொன்னதை கேட்டு அழுவாத சிரிப்பதா என்று தெரியவில்லை       

மக்கள் வரிபணத்தில் ஊதியம் வாங்கும் அரசாங்க அலுவலர்கள்

இந்த வருடம் தேர்தல் கமிசன் நடவடிக்கையை பாராட்டி தான் நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். தேர்தலும் அமைதியாகவே நடை பெற்றது. ஆனால் தேர்தல் பணிக்கு சென்ற சில ஆசிரியர்களின் நடவடிக்கை  எனக்கு வியப்பை தந்தது. 

என் மனைவி ஆசிரியராக பணி புரிகிறார். ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் ருபாய் 4000௦௦௦/  தொகுப்பு ஊதிய சம்பளத்தில் பணிநியமனம் செய்யப்பட்ட அவருக்கு, கருணாநிதியின் ஆட்சி காலத்தில் அவர் வந்த உடனேயே பணி நிரந்தரம் செய்யப்பட்டது. ஜெயலலிதா தொலைநோக்கு பார்வையோடு, அரசு பணியாலர்களின் நல்லதை பற்றி மட்டும் நினைக்காமல் ஒட்டு மொத்த தமிழ்நாட்டின் நலத்தை பற்றி சிந்தித்தார். தன்னை பற்றி மற்றும் நினைபவர்களுக்கு ஜெயலலிதாவின் செயல்பாடு பிடிக்காது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் நாம் பள்ளிக்கு காலதாமதமாக வர முடியாது. அரசாங்க சலுகைகள் ஊதிய உயர்வுகள் கிடைக்காது என்பது ஆசிரியர்கள் மட்டும் அல்லாமல் பல அரசு ஊழியர்களின் கருத்து. என் மனைவிக்கும் இதே கருத்து உண்டு.

என் மனைவிக்கு முதல்முதலாக தேர்தல் பணிக்கு செல்லும் வாய்ப்பு இந்த தேர்தலில் கிடைத்தது. இதனால் தன சக அசிரியர்களிடம் இந்த பணி குறித்து அவர்கள் அனுபவங்களை கேட்டார். அவர்களில் பலர் தேர்தல் பணி குறித்து கவலைப்பட தேவை இல்லை என்றும், பணி நேரத்தில் பிரியாணி மற்றும் பிற கவனிப்புகள் அரசியல் கட்சியினரால் தாராளமாக செய்யப்படும் என்று கருத்து கூறினார். முதல் நாள் இரவு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்கு சாவடி இருக்கும் ஊரில் தங்கவேண்டும் என்ற விதிமுறை இருந்தாலும், தங்க வசதி இல்லை என்றால் வீட்ட்க்கு சென்று விட்டு அதிகாலை வாக்கு சாவடிக்கு வரலாம் என்றும் கூறினர்.

இந்த எண்ணத்தில் தான் பலர் தேர்தல் பண்ணிக்கு சென்றனர். ஆனால் அவர்கள் நினைப்பில் தேர்தல் கமிசன் மண்ணை வாரி போட்டது. முதல் நாள் இரவு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஊரில் தங்காமல், வீட்டுக்கு சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டது (அது போலவே வாடிப்பட்டி தாலுகா வில் வீட்டுக்கு சென்றவர்கள் சிலருக்கு தேர்தல் கமிசன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது ) . மேலும் அரசியல் கட்சிகளை சார்ந்தவர்கள் யாரும் (பூத் agents )  முதல் நாள் வாக்கு சாவடிக்கு வரகூடாது என உத்தரவு இடப்பட்டது. இதனால் ஆசிரியர்கள் பலர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஊரில் தங்கவேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் அரசியில் கட்சிகள் மூலம் அவர்கள் எதிர்பார்த்த பிரியாணி உள்ளிட்ட கவனிப்பும் நடைபெறவில்லை. சில ஊர்களில் மட்டும் சாதாரண சாப்பாடு மற்றும் சிற்றுண்டி கிடைத்தது.

இதனால் வெறுப்படைந்த ஆசிரியர் ஒருவரின் புலம்பல் இது. தான் தங்க வைக்க பட்ட பள்ளியில் சரியான வசதிகள் இல்லை என்றும், பள்ளி மிகவும் குப்பையாக இருந்தது என்றும், கழிப்பறை சரியாகவே இல்லை என்றும் குறை கூறியுள்ளார். இவ்வாறு ஆசிரியர்களை  கொடுமைபடுத்திய தேர்தல் கமிசன் பற்றி ஆசிரியர்கள் அனைவரும் தின மலர் நாளிதழுக்கு எழுதி போடவேண்டும் என்று கூறியுள்ளார். இதை கேட்ட என் மனைவி என்னிடம் இந்த தகவலை கூறும் பொழுது " ஒரு நாள் ஏற்படும் ஒரு சின்ன பிரச்சனையை கூட தன் சக ஆசிரியரால் பொறுத்து கொள்ள முடியவில்லை என்றார்".

பள்ளியில் கழிப்பறை சரியில்லாமல் இருப்பதற்கும், பள்ளி சுத்தமாக இல்லாததற்கும் யார் காரணம்? பல பள்ளிகளில் கழிப்பறை வசதி ஆசிரியர்களுக்கு கூட இல்லை என்பது தான் வெட்ககேடான உண்மை. பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் நிலைமையை, குறிப்பாக பெண் குழந்தைகளின் நிலைமை இன்னும் மோசம். கழிப்பறை வசதியை ஏற்படுத்தி தரவோ அதனை பாரமரிக்கவோ பள்ளிகல்வி துறையும், அரசாங்கமும் தவறிவிட்டது என்பது தான் உண்மை. சுகாதாரத்தை பற்றி போதிக்க கூடிய பள்ளியின் நிலைமை இது என்றால் பின்னர் எப்படி சுகாதார பழக்கம் குழந்தைகளுக்கு வரும்?

என் மனைவி வேலை பார்க்கும் பள்ளியில் கழிப்பறை கதவு சரியில்லை என்பதால் ஊரில் இருக்கும் சமூக விரோதிகள் அதனை தவறாக பயன்படுத்தி, ஆசிரியர்கள் அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அங்கு இருந்த ஆரம்ப பள்ளிக்கும் உயர் நிலை பள்ளிக்கும் ஒரே கழிப்பறை தான். ஆரம்ப பள்ளியின் தலைமை ஆசிரியர், கழிப்பறை கதவை சரி செய்ய ஆரம்ப பள்ளி மற்றும் உயர் நிலை பள்ளி ஆசிரியர்களிடம் தலைக்கு ருபாய் நூறு கேட்டார். ஆனால் இதற்கு உயர் நிலை பள்ளி ஆசிரியர்கள் ஒத்து வரவில்லை. எனவே மீதம் உள்ள தொகையை ஆரம்ப பள்ளி ஆசிரியர்களே செலவு செய்து கழிப்பறை கதவை செய்து அதற்க்கு ஒரு பூட்டும் போட்டனர். தாங்கள் மட்டுமே அந்த கழிப்பறையை பயன்படுத்திக்கொண்டு உயர்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு கழிப்பறையை திறந்து விட மறுத்தனர். என்ன ஒரு தர்ம சிந்தனை ! இப்படி பட்ட ஆசிரியர்களால் குழந்தைகளுக்கு என்ன ஒழுக்கத்தை கற்று தர முடியும்? இவர்களுக்கு தான் அரசாங்கம் ஊதியத்தை வாரி வழங்குகிறது.

கிராமங்களில் ஆசிரியர் பணி பணி செய்யும் பலர் வட்டி தொழிலில் ஈடுபட்டு பணம் சம்பாதிப்பதும் நடக்கிறது. ஒரு ஆரம்ப பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒரு உணவகத்தை கிராமத்தில் நடத்திவருகிறார். சாப்பாடு பரிமாறுவது முதல் அனைத்து வேலையும் அவரே செய்வார். பற்றா குறைக்கு விவசாய வேலையையும் பார்த்துகொள்வர். இவர் எப்படி தன் ஆசிரியர் பணியை சிறப்பாக   செய்யமுடியும்?
ஒரு மலை கிராமத்தில் தனக்கு பத்தில் வெறும் ருபாய் ௧௫௦௦/ தந்து பினாமி ஆசிரியரை வைத்து பாடம் நடத்தபடுவதை நானே நேரில் கண்டுஇருக்கிறேன். செய்தித்தாளிலும் இதை பற்றி படித்திருக்கிறேன்.

இவர்களை விட மிக குறைந்த ஊதியம் வாங்கும் தனியார் பள்ளியின் ஆசிரியர்கள் இது போல செயல் பட முடியுமா? அவர்களுக்கு உள்ள கட்டுபாடுகள் எத்தனை எத்தனை. தங்களுக்கு உரிய தற்செயல் விடுப்பை கூட நிர்வாகம் அனுமதிக்காத காரணத்தினால் எடுக்க முடியாமல் தவிக்கும் ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளில் இருக்கிறார்கள்.

ஆசிரியர்கள் மட்டும் அல்ல மக்கள் வரிபணத்தில் தான், சம்பளம் வாங்கி தங்கள் வாழ்கையை நடத்துகிறோம் என்ற உணர்வே இல்லாமல் கடமையை செய்ய தவறுகிற, கடமையை செய்ய கையூட்டு பெறுகிற அரசாங்க       அலுவலர்களை நினைத்தால் இதயத்தில் வலி ஏற்படுகிறது

                  

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

பணம் மற்றும் பதவி படுத்தும் பாடு


பணத்திற்காக உன் ஆன்மாவை இழக்க கூடாது
பணத்திற்காக உன் உறவுகளை இழக்ககூடாது 
பணத்திற்காக உன் சுயமரியாதையை இழக்ககூடாது 
பணத்திற்காக உன் உடல்நலத்தை இழக்ககூடாது
பணத்திற்காக உன் அறிவை இழக்ககூடாது 
பணத்திற்காக உன் மகிழ்ச்சியை இழக்ககூடாது  

பணம் ஒரு தவிர்க்கமுடியாத சக்தியாய் உருவாகிவிட்டது. சம்பளம் வாங்குபவர்களுக்கு மாத கடையில் பாக்கெட்டில் ஒரு நூறு ருபாய் பணம் கூட இல்லாமல் இருந்தால், அது நமக்கு பெரிய வேதனையை தருகிறது.   சம்பள நாளை எதிர்நோக்கியே மீதம் உள்ள நாட்களை தவிப்புடன் கழிப்பவர்கள் பலர். தின கூலி வேலை செய்பவர்களுக்கு மாதம் அல்லது வாரம் இவ்வளவு சம்பாதிக்கலாம் என்பதை உறுதி கூற முடியாது. விவசாய கூலிகள் அதிலும் குறிப்பாக விவசாய கூலியாக வேலை பார்க்கும் பெண்களின் நிலைமை இதைவிட மோசம். நிலத்தடி நீர் பற்றாகுறை, பருவம் தவறி பெய்யும் மழை. ஆற்று பாசனமும் கைவிட்ட நிலையில் விவசாயம் செய்வது மிககடினாமாகி விட்டது. முப்போகம் விளைந்த இடங்களில் இப்பொழுது ஒரு போகம் தான். காடாறு மாதம் வீடு ஆறு மாதம் என்பதுபோல் வருடத்தில் நான்கு அல்லது ஐந்து மாதங்களில் தான் சரியான கூலி வேலை கிடைக்கும் நூறு நாள் வேலை திட்டம் (NREGA ) விவசாயம் இல்லாத நேரத்தில் விவசாய கூலிகளுக்கு பணி உறுதி அளித்தாலும், சரியான திட்டமிடுதலை பஞ்சாயத்து அமைப்புகள் செய்ய தவறும் காரணத்தால் மற்றும் தவறான நடைமுறைகளினால் வேலை செய்யாமலையே கூலி என்ற நிலையை தான் ஏற்படுத்திஉள்ளது. தவிர விவசாய வேலை அதிகம் இருக்கும் மாதங்களிலேயே பெரும்பாலும் NREGA செயல்படுத்தபடுகிறது. இதனால் அதிக உழைப்பு தேவைப்படும் விவசாய கூலி வேலைக்கு செல்லாமல், நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் பணியை செய்யவே கிராம மக்கள் விரும்புகிறார்கள். ஒரே நேரத்தில் இரு வேலைகள் இருப்பதால் இதில் அதிக பணி நாட்கள் வேலை செய்யும் வாய்ப்பும் மாக்களுக்கு கிடைக்காமல் போகிறது. நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் பணிகளையும் மேம்போக்காக செய்யும் காரணத்தினால் பணம் விரயம் தான் நடக்கிறது. கண்மாய்கள் சரியாக தூர் வார படுவதில்லை. மர கன்றுகள் நடபட்டாலும், பின்னர் அவை சரிவர பராமரிக்கபடுவதிலை  இந்த திட்டத்தின் கீழ் செலவு செலவு செய்யபடும் பணதினால் கிராமத்திற்கும் பலன் இல்லை, விவசாயத்திற்கும் பலன் இல்லை. மக்களை சோம்பேறி ஆக்குவது தான் நடக்கிறது. பணம் விழலுக்கு இழைத்த நீர் போல ஆவது மட்டும் அல்லாமல், ஒரு சமுதாய சீர்கேடும் நடக்கிறது. திட்டத்தை என்னவோ நல்ல நோக்கத்தோடு தான் அரசாங்கம் செயல்படுத்துகிறது. ஆனால் அதனை நடைமுறை படுத்துவதில் தான் இத்தனை சீர்கேடும் நடக்கிறது. பல நல்ல திட்டங்களின் கதி இது தான்.


உண்ண உணவு, குடிக்க சுகாதாரமான நீர், இருக்க வீடு, உடுக்க உடை போன்ற அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்யாமல் வாழும் ஏழைகள் பலர். நகர் புற பெண்கள் குடும்பத்திற்காக படும் கஷ்டத்தை விட கிரமாபுற பெண்கள் குடும்பத்திற்காக படும் கஷ்டம் சொல்லிமாளது. சொல்லபோனால் பணம் ஈட்டுவது முதல் குடும்ப பாரம் முழுவதையும் தலையில் தாங்கும் பெண்கள் கிராமபுறத்தில் அதிகம்.  பல குடும்பங்களில் ஆண்கள் சம்பாதித்தாலும் அதில் பெரும் பகுதியை தண்ணி அடிப்பதில் செலவு பண்ணுவதை 70௦ % குடும்பங்களில் காணமுடியும். ஒரு பொறுப்புள்ள குடும்பதலைவிகளாக பெண்கள் செய்யல்படுவது உண்மை. குடும்ப தலைவன் என்ற அதிகாரம் மட்டும் வேண்டும். ஆனால் குடும்பத்தை கவனிக்கும் பொறுப்பை ஏற்கமாட்டேன் என்பது தான் பெரும்பாலான கிராமப்புற ஆண்களின் குணம். நகர்ப்புறங்களிலும் இது இருந்தாலும் , கிராமங்களில் இந்த போக்கு அதிகம்.   தங்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவே ஏழைகள் பெரும் பாடுபடவேண்டி இருக்கிறது. 


இத்தகைய சூழலில் அவர்களின் இயலாமையையும் ஆசைகளையும் பயன்படுத்தி, தங்கள் வியாபாரதிற்காகவும் அரசியல் லாபத்திற்காகவும் சுயநல நோக்கோடு  பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது.  இதனால் தங்கள் தகுதியை மேல் ஆசைபட்டு கடன் சூழலில் சிக்கும் நிலை உருவாகி உள்ளது. அடிப்படை தேவையான கழிப்பறை வசதி கூட பல வீடுகளில் இல்லை. அதற்க்கு இடமும் இல்லாத எழைகளுக்கு , பொது கழிப்பிட வசதியும் அனைத்து கிராமங்களிலும் எற்படுத்திதரவில்லை. அப்படியே இருந்தாலும் அவை சரிவர பராமரிக்க படுவதில்லை( பராமரிக்க நிதி ஒதிக்கீடு செய்யபட்டால் தானே )  


ஆனால் இலவச தொலைக்காட்சி, மிக்சி, க்ரிண்டேர் என்று கவர்சிகரமான வாக்குறுதிகள் அளிக்கபடுகின்றன. ஒரு கிராமம் முன்னேற எது தேவை ? ஒரு சமுதாயம் முன்னேரே எது தேவை ? தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்படும் மானாட மயிலாட, குத்து பாட்டு, கலாசார சீர்கேட்டை உண்டாகும் சீரியல் மற்றும் சினிமா வா ? அல்லது அடிப்படை சுகாதார வசதியா ? ஒரு சுயஉதவி குழுவில் உறுப்பினராக இருக்கும் 50௦ வயது பெண்மணி, குழுவில் ருபாய் 5000௦௦௦ கடன் கேட்டார். நான் எதற்கு கடன் என்று கேட்டதற்கு, தனக்கு இலவச தொலைக்காட்சி பெட்டி கிடைத்திருபதாகவும், ஆனால் வீட்டில் மின் இணைப்பு இல்லை என்றும், மின் இணைப்பு பெருவதார்காக கடன் வேண்டும் என்று கேட்டார். தன் பேரன்கள் தொலைக்காட்சி பார்க்க மின் இணைப்பு தருவதாகவும் சொன்னார். தன் பேரன்கள் படிப்பதற்காக வீட்டிற்கு மின் இணைப்பு தர நினைக்காதவர், தொலைக்காட்சி பார்க்க மின் இணைப்பு தர நினைத்தார். அடித்தட்டு மக்களை சினிமா மோகத்திலும் அறியாமையிலும் திளைதிருக்க வைத்து அதனேயே தன் ஒட்டு வங்கியாக மாற்றும் சாமர்த்தியம் இந்த அரசியல்வாதிகளுக்கு உண்டு. ஒட்டு மட்டும் அல்ல, தான் நடத்தும் தொலைகாட்சிகளுக்கும் வருமானம் பார்க்கும் செயல். மேலும் அதே ஊடகங்கள் மூலம் பல பொய்களை பரப்பி ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடிக்கும் திறன் இவர்களை விட்டால் யாருக்கு வரும்.


அடித்தட்டு மக்கள் தங்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மிக கஷ்ட்டப்பட்டு உழைத்து பணம் ஈட்டுகின்றனர். ஆனால் இவர்களை (அரசியல்வாதிகள்)  சுரண்டி தன் குடும்பத்தினர் பல தலைமுறைகளுக்கு சுகபோகமாக வாழ, தன் ஆன்மாவை இழந்து, சுயமரியாதையை இழந்து பணம் ஈட்டுகின்றனர். அத்தியாவசியமான தேவைகளை தாண்டி ஆடம்பர தேவைகளை பூர்த்தி செய்து கொண்ட பிறகும், பணத்தின் மீதான வெறி இவர்களுக்கு அடங்குவதில்லை.


தனக்கும் தன் குடும்பத்திற்கும் சொத்து சேர்க்க பயன்படுத்தின மூளையை, அதில் 10௦ % தை யாவது சமுதாய நலன் மற்றும் மக்கள் நலனுக்காக பயன்படுத்தியிருந்தால் நாடு நன்றாக இருந்திருக்கும். மக்களுக்கு மீன் பிடிக்க கற்று தராமல், மீனை மசாலா தடவி வறுத்து வாயில் ஊட்டிவிடும் வேலையை இந்த அரசு செய்ததாக ஆனந்த விகடன் பத்திரிகை தன் தலையங்கத்தில் எழுதியது. மக்களை பிச்சைகார்களாக, ஏழைகளாக, அறியாமையில் உழல்பவர்கலாக வைத்திரிந்தால் தானே இவர்கள் பிழைப்பு நடத்தமுடியும். 


பணத்தாசை, பதவியாசை, இதற்காக மானம் மரியாதை கொள்கை இவற்றை விற்றுவிடும் தைரியம், சகுனித்தனம், தன்னையும் தன் குடும்பத்தையும் தவிரா பிறரை பற்றி சிறிதும் கவலைபடாத இரக்கமற்ற குணம் ஆகியவற்றை கொண்ட எந்த ஆறறிவு பெற்ற மிருகமும் அரசியலில் மட்டும் அல்ல மற்ற துறைகளிலும்  பிரகாசிக்கலாம் என்பது தான் இன்றைய சூழல். ஆனால் இவர்கள் வாழ்வதினால் உலகிற்கு என்ன பயன்.  கெடுதலே அன்றி பயன் ஏதும் இல்லை 
       

திங்கள், 11 ஏப்ரல், 2011

கருணாநிதி வளர்த்துள்ள விஷ செடி

திருவாரூரில் இருந்து திருட்டு ரயில் ஏறி, இன்று மனைவி, துணைவி, மகன்கள், மகள்கள், தாய்மாமன் மகன்கள், பேரன்கள் பேத்திகள் என்று தன் குடும்பத்தினர் அனைவரையும் அதிகராமையமாக்கி, தமிழ்நாட்டை கொள்ளைஅடித்து வரும் கருணாநிதி மீண்டும் மக்களை ஏமாற்ற தயாராகி உள்ளார்.

முதல் அமைச்சர் ஆக வேண்டும் என்பது என் ஆசை இல்லை. உங்களுக்கு வேலைக்காரனாக இருந்து பணிபுரியவே ஆசை.

முதல் அமைச்சர் என்பதை விட திருவாரூர் M.L.A என்று சொல்லிகொள்வதில் தான் எனக்கு பெருமை என்று கூறிகொள்கிறார்( கூறி கொல்கிறார்)

தமிழ்நாட்டு பிரச்சனைக்காக போராடாதவர், தன் பேரன்களுக்கும் மகனுக்கும் அமைச்சர் பதவி வேண்டி இந்த தள்ளாத வயதிலும் தவம் இருந்தார்.

சீட்டு பிரச்சனையில் மதிய அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்வோம் என்று காங்கிரஸ் ற்கு மிரட்டல் விடுத்தார்.

ரியல் எஸ்டேட் தொழிலில் நிலங்களை மிரட்டி வாங்குவது, சினிமா உலகத்தையே தன் கட்டுபாடுக்குள் வைத்திருப்பது, மதுரையில் அழகிரி ராஜ்ஜியம், கல்லூரிகளையும் மிரட்டி பங்குகளை வாங்குவது போன்ற அதிகார துஷ்பிரயோகங்கள் மூலமும், விஞ்ஞான ஊழல்கள் மூலமும் பல தலைமுறைக்கு சொத்து சேர்த்த பிறகும் என்னும் ஆசை குறையாமல் வளையவரும் முதியவர் கருணாதிக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்தால் என்னாகும் ?

இலவசங்கள் மூலம் நம்மை ஏற்கனவே அடிமை ஆக்கியுள்ளார். தமிழக மக்கள் அனைவரையும் கொத்தடிமை ஆக்க முயற்சிகள் நடக்கும். சட்டம் மற்றும் நீதியை ஏற்கனவே அதிகாரா துஸ்பிரயோகம், ரௌடி ஸம் மற்றும் கட்டபஞ்சாயட்டு மூலம் அவர்கள் கட்டுபாட்டில் தான் வைத்துலார்கள். இது மேலும் அதிகமாகும்.

சாதாரண குடிமக்கள் ஆகிய நாம் வேலைக்கு சென்றோமா, குடும்பத்தை பார்த்தோமா, பிள்ளைகளை நல்ல பள்ளியில் படிக்கவைத்து நம்மை  விட நல்ல நிலைமைக்கு அவர்களை ஆக்குவோமா, கடைசி காலத்தில் சேமித்த பணத்தில் வாழ்கையை ஒட்டுவோமா என்று தான் நினைகிர்றோம். ஊழல்களை பற்றியும், கொலை கொள்ளை பற்றியும் பேசி திரிகிறோம். ஆனால் அதற்கு எதிராக ஒரு சின்ன எதிர்ப்பை கூட காட்டுவதில்லை. இவை எல்லாம் அதிகமாவதற்கு நாம் தான் காரணம் என்பதை உணருவதில்லை.

இலவசங்கள், NREGA மூலம் கூலி வேலையை செய்யாமலேயே ( அல்லது பெயருக்கு வேலை செய்தவர்களுக்கு ) சம்பளம். ஊருக்கு ஊர் மதுபான கடை, ஓட்டுக்கு பணம்  இவைகள் மூலம் மக்களை சோம்பேறிகளாக்கி, அவர்களை சிந்திக்க விடாமல் சிற்றின்பங்களில் திளைக்கவைத்து, ஊழலில் அவர்களையும் பங்குதார்கள் ஆக்கி ஒரு மோசமான சமுதாய சூழலையே ஏற்படுத்தி இருக்கிறார்கள். நேர்மையாக வாழ்பவர்கள், இலவசங்களை எதிர்பார்காதவர்கள் ஏமாளிகளாக சித்தரிக்கப்படும் சுழல் தான் இருக்கிறது. இப்படி தான் வாழ வேண்டும் என்பதற்கு பதில் எப்படி வேண்டும் என்றாலும் வாழலாம் பணம் சம்மதிக்கலாம் என்ற சிலரது சிந்தனையை பாலும் தேனும் ஊட்டி வளர்த்து, பலரது சிந்தனையாக சமூக சிந்தனையாக மாற்றியது தான்     தி .மு.கா வின் சாதனை.

ஒரு கேவலமான பாதையை நோக்கி தான் மற்றும் தன் குடும்பம் சென்றது மட்டும் அல்லாமல் தமிழகத்தையே தவறான பாதையில் திருப்பியது தான்  தான் இவர்களது சாதனை.

மக்களை தவறான பாதையை பின்பற்ற வைப்பது எளிது. குறுக்கு வழியில் பணம், உழைக்காமல் பணம், சோம்பி இருப்பதே சுகம், போதையில் மனம் என்று அடித்தட்டு மக்கள் மாறிவிட்டார்கள். இன்றைய சமுதாயத்தை நினைத்தாலே மனதில் பயம் ஆட்கொள்கிறது. நம் குழந்தைகள் நல்லவர்களாக இருந்தால் நசுக்கி பிழிந்து எறிய பட்டுவிடுவார்களோ என்ற பயம்.

நல்ல மாற்றத்தை யாரால் கொண்டு வர முடியும் ? நூறு இளைங்கர்களை தாருங்கள். இந்த நாட்டையே மாற்றி காட்டுகிறேன் என்று சொன்னார் விவேகானந்தர். அந்த நூறு நல்ல இளைங்கர்களை கண்டுபிடிபதேயே மிக சிரமமான காரியமாக கருணாநிதி மாற்றிவிட்டார். 

நகரத்தில் பிறந்தாலும் கிராமத்தில் வேலை பார்க்க வேண்டும் என்று சிறு வயதிலேயே விரும்பியவன் நான். இன்று கிராமங்களில் மக்களின் மனதை வெகுவாக கெடுத்த புண்ணியம் கருணாநிதிக்கும், அவர் வளர்ந்த சினிமா உலகத்திற்கும், வளர்த்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும், திறந்த மதுபான கடைகளுக்கும் கொடுத்த இலவசங்களுக்கும், போய் சேரும். 

தான் வளர பிறர் குடியை கெடுத்தவர்களை பற்றி கேள்விபட்டிருக்கிறோம். தானும் தன் குடும்பமும் வளர ஒரு சமூதாய சீர்கேட்டையே உருவாக்கியவர் கருணாநிதி. அவர் வளர்த்துள்ள விஷ செடியை அகற்றவே வெகு நாட்கள் ஆகும். இவரை தேர்ந்து எடுத்தால் இந்த விஷ செடிக்கு உரம் போட்டு நீர் பாய்ச்சி வளர்ப்பார்.



வெள்ளி, 8 ஏப்ரல், 2011

கலைஞர் குடும்பம் எப்படி எல்லாம் சம்பாதிக்கிறது



கலைஞர் குடும்பம் எப்படி எல்லாம் சம்பாதிக்கிறது என்பதற்கு என்னும் ஒரு உதாரணம் ( இட்லி வடையில் படித்தது )


திரு வி.சந்தானம் இந்த பேரை பலர் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். இதோ அவரை பற்றிய ஒரு செய்தி....

கலைஞர் டிவி க்கு தமிழக அரசு பணம் கொடுக்கப்படும் விகிதம் - 10 விநாடிக்கு ரூ.9700/- சன் டிவி க்கு – ரூ.23,474-

தமிழக அரசு சம்பந்தப்பட்ட பல விளம்பரங்கள் கலைஞர் தொலைக்காட்சியில் வருவதைக் காண்கிறோம். சில விளம்பரங்கள்
3-4 நிமிடங்கள் அளவிற்கு கூடப் போகின்றன. இவை எல்லாம் சமூக நலன் கருதி வெளியிடப்படும் இலவச அரசு விளம்பரங்கள் என்றே பலரும் எண்ணி வந்தனர்.

அண்மைக் காலங்களில் அடிக்கடி வெளியிடப்படும் குடிசை வீடுகளை கான்க்ரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்தின் விளம்பரங்களில் கலைஞரும், ஸ்டாலினும் பல நிமிடங்களுக்கு தொடர்ந்து காட்சி அளிக்கிறார்கள். அவர்களுக்கு புகழ்மாலைகள் சூட்டப்படுகின்றன.

அரசு செலவில் இப்படி முதல்வரும், துணைமுதல்வரும் தற்புகழ்ச்சி செய்து கொள்வதே அருவருப்பாக இருக்கிறது. இத்தகைய விளம்பரங்களை திமுக தன் கட்சி செலவில் தயாரித்து வெளியிட்டால் யாரும் கேட்கப்போவதில்லை.

அரசு செலவில் இத்தகைய விளம்பரங்கள் தயாரிக்கப்படுவதே அருவருப்பாக இருக்கிற நேரத்தில், இவை தொலைக்காட்சி நிறுவனத்திற்கு தமிழக அரசால் காசு வேறு கொடுத்து ஒளிபரப்பப்படுகின்றன என்கிற செய்தி அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.

இது குறித்து செய்தி ஒன்று –

சென்னை குரோம்பேட்டையில் உள்ள மக்கள் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் வி.சந்தானம், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் டிசம்பர் 30-ம் தேதி இ.எம்.ஆர்.ஐ.தலைமைச் செயல் இயக்குநரிடம் இருந்து பெற்ற கேள்வி- பதில்களின் விவரம் இன்று வெளியாகி இருக்கிறது.

கேள்வி:— 108 ஆம்புலன்ஸ் சேவை சம்பந்தமான விளம்பரங்கள் சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகின்றன. இது இலவச விளம்பரமா? அல்லது கட்டண விளம்பரமா? கட்டணமென்றால் ஒரு முறை விளம்பரத்துக்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்?

பதில்:— 108 ஆம்புலன்ஸ் சம்பந்தமான விளம்பரம் இலவச விளம்பரம் அல்ல. கட்டண விளம்பரம்தான்.

ஒரு முறை பத்து விநாடிகள் விளம்பரத்துக்கு சன் டிவியில் ரூ.23,474-ம், கலைஞர் டிவியில் ரூ.9,700-ம் செலுத்த வேண்டும் !!!

சன் தொலைக்காட்சியின் உரிமையாளர்கள் - முதல்வரின் பேரன், அவர் மனைவி மற்றும் அவரது குடும்பத்து உறுப்பினர்கள்.

கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர்களில் - முதல்வரின் மகளும், சில அமைச்சர்கள் குடும்பத்தினரும் அடங்குவர்.

அரசாங்க விளம்பரங்கள் எந்த அடிப்படையில் இந்த தொலைக்காட்சிகளுக்கு கொடுக்கக்ப்படுகின்றன ?

சன் தொலைக்காட்சி அதிகம் பேரால் பார்க்கப்படுவதால் விளம்பரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாகச் சொல்லலாம். சரி - கலைஞர் தொலைக்காட்சியை எவ்வளவு பேர் பார்க்கிறார்கள் ? அதற்கு எப்படி அரசு விளம்பரத்தைக் கொடுத்தார்கள் ?

இதில் விநோதம் என்னவென்றால் - அரசு தொலைக்காட்சியான பொதிகையில் இத்தகைய அரசு விளம்பரங்கள் வெளியாவதே இல்லை ! (அங்கு காசு கொடுத்தால் அது தன் குடும்பத்திற்கு எப்படி போகும் ?)

அரசாங்க பணத்தில் முதல்வர் குடும்பத்து தொலைக்காட்சிகளுக்கு விளம்பரம் கொடுப்பது அதிகார துஷ்பிரயோகம் இல்லையா ?

மிகுந்த சிரமத்திற்கிடையே இத்தகைய தகவல்களை வெளிக்கொண்டு வந்த திரு வி.சந்தானம் அவர்களைப் பாராட்டுவதும், இவற்றை அதிக அளவில் பொது மக்கள் கவனத்திற்கு கொண்டு போவதும் நம் கடமை.

எரிகிற வீட்டில் பிடுங்கின வரை லாபம் என்கிற போக்கில் செயல்படுவது சரியா? 



thanks to http://idlyvadai.blogspot.com/2011/04/blog-post_07.html

அரசியல் ஜோக்ஸ்-2

அரசியல் ஜோக்ஸ்-2

ஸ்டாலின் : எல்லா இலவசங்களையும் இந்த தேர்தல்லே அள்ளிவீசிட்டா அடுத்த தேர்தல்லுகு என்ன பண்றது ?

கருணாநிதி : கவலைபடாதே. இப்ப மக்களை விலைக்கு வாங்குறோம்  அடுத்ததேர்தலுக்கு ஜெயலலிதாவிற்கு 5 லட்சம் கோடி கொடுத்து அ.தி.மு.க வையே விலைக்கு வாங்கிவிடலாம்.

----------------------------------------------------------------------------------------------------------

என் உயிர்க்கு ஆபத்து என்றால் கலெக்டர் மற்றும் தேர்தல் ஆணையம் தான் பொறுப்பு- அழகிரி 

அவங்க சொல்லவேண்டியதை இவர் சொல்றாரு. அஞ்ஜாநெஞ்சனுக்கு வந்த சோதனையை பாருங்க 
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

 2050௦ ஆம் ஆண்டு :   உதயநிதி ஸ்டாலின் முதல்வர் . அவருக்கு மனைவிகள் 5. துணைவிகள் 10௦. தமிழை அமெரிக்காவின் தாய் மொழி ஆக்கும் போராட்டம். இலவச மனைவி வழங்கும் திட்டம் அவரை மீண்டும் முதல்வராக்கும் என்று நம்பபடுகிறது .

உலக கோடிஸ்வரர்கள் பட்டியலில் 2100 ஆம் ஆண்டு வரை யாரும் இவரை நெருங்க முடியாது என்று Forbes பத்திரிகை தகவல். (Forbes பத்திரிகையும் எவர்கள் குடும்ப சொத்து என்பது கூடுதல் தகவல் )
---------------------------------------------------------------------------------------------------------       

அரசியல் ஜோக்ஸ்

அரசியல் ஜோக்ஸ் 

அண்ணன் விஜயகாந்த் அம்மா வோட ஏன் ஒரே மேடையில் பேசவில்லை ?

போதையில அம்மாவையே அடி பின்னி எடுத்துட்டா அப்பறம் களேபரம் ஆகிடும்ல அதான்.
----------------------------------------------------------------------------------------------

அண்ணன் விஜயகாந்த் வேட்பாளரை ஏன் எட்டி உதைத்தார் ?

ச்சே ச்சே அவர் உதைக்கவில்லை. வேட்பாளர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க நினைத்தார் . அவர் எதற்கு கீழ குனிஞ்சு சிரமபடவேண்டும்,என்று  விஜயகாந்தே காலை எடுத்து அவர் தலையில் வைத்தார் அவ்வளவு தான் 

-----------------------------------------------------------------------------------------------------


வியாழன், 31 மார்ச், 2011

பாலின் சில்லறை விற்பனை விலை Rs50 / என்று மாறினால் ஆச்சிரிய படவேண்டாம்



இந்திய நாட்டின் பால் உற்பத்தி 1951 யில்  17 மில்லியன்  டன் ஆக இருந்து, 2009 தில் 110 மில்லியன் டன் ஆக உயர்ந்துள்ளது (2010 -11 இல் 115 மில்லியன் டன் ). இந்திய பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் சந்தை மதிப்பு ஆண்டுக்கு 7 %  வளர்ச்சியடைந்து வருகிறது.
சுமார் 7.5 கோடி இந்திய குடும்பங்கள் பால் உற்பத்தியின் மூலம் கிடைக்கும் வருமானத்தை நம்பி இருக்கின்றார்கள். ஆனால் இதில் 1.1 கோடி நபர்கள் தான் பால் கூட்டுறவு சங்கங்களில் இணைந்துள்ளனர். 
Operation Flood மற்றும் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் விற்பனையை கட்டுபடுத்தும் ஆணையின் விதிகளில் சில கட்டுபாடுகளை தளர்த்திய காரணத்தால் (MMPO _2002 ) பால் உற்பத்தி பன்மடங்கு பெருகியது. பல தனியார் நிறுவனங்கள் பால் விற்பனையில் இறங்கின. ஆனால் எதனால் பால் உற்பத்தி செய்யும் சிறு குறு விவசாயிகள் பயனடையவில்லை. தனியார் முதலாளிகள் தான் பயன் பெற்றனர். 

விதிகளை தளர்த்தினாலும் பல்வேறு காரணங்களால் சிறு மற்றும் குறு விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பாலை ஒழுங்குமுறை படுத்தாத விற்பனை சந்தையின் மூலம் தான் விற்பனை செய்யா முடிகிறது. அவர்களிடம் இருந்து பால் பெரும் இடைத்தரகர்கள் தான் பெரிதும் பயன் அடைகின்றனர். தங்கள் குடும்ப சுழல் காரணமாகவும், சரியான படிப்பறிவு இல்லாத காரணத்தாலும் தங்களுக்கு மிகவும் தெரிந்த உள்ளூர்காரரான இடைதரகரிடம் தங்கள் அவசர தேவைக்கு முன்பணம் வாங்கிவிட்டு பின் அவர்களுக்கே பாலை ஊற்றும் நிலைக்கு தள்ளபடுகின்றனர்.

தற்பொழுது பால் கூட்டுறவு சங்கங்களும், தனியார் பால் நிறுவனங்களும் நகர்புற பால் தேவையை அடிப்படியாக கொண்டே செயல்படுகின்றன. அதனால் பால் உற்பத்தியும் கிராமபுறத்தில் இருந்து நகரை சுற்றயுள்ள புற நகர் பகுதிக்கு இடம் பெயர்ந்து வருகிறது.     

பாலின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், சிறு குறு விவசாயிகளுக்கு பால் மாடு வளர்த்தல் என்பது லாபகரமாக இல்லை. பால் கொள்முதல் விலை உயர்தாலும் அதைவிட பால் மாடு பராமரிப்பு செலவு அதிகமாவதே இதற்கு காரணம். கண்டிப்பாக ஒன்று முதல் மூன்று மாடு வரை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு பால் உற்பத்தியால் லாபம் இல்லை என்பதே உண்மை.

இதற்கு கீழ்கண்ட காரணங்களை சொல்லலாம் 

  1. பால் மாடுகளின் உற்பத்தி திறன் குறைவாகவே உள்ளது. ஜெர்சி போன்ற கலப்பின பசுக்களின் முதலாம் மற்றும் இரண்டாம் தலைமுறை ஈத்துகள், நன்கு பராமரித்தல் ஓரளவு நன்றாக பால் சுரக்கும். ஆனால் நம் நாட்டில் கால்நடை பராமரிப்பு துறையின் செயல்பாடு சரியாக இல்லை. தரமான மாடுகள் தான் நல்ல பயனை தரும். இது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவும், இதற்கான இனபெருக்க தேவையை சரிவர பூர்த்தி செய்யவும் நம் அரசாங்கம் தவறி வருகிறது.
  2. கால்நடை ஆராய்ச்சியிலும் மக்களுக்கு( சிறு குறு விவசாயிகளுக்கு ) பெரிதும் பயன் தரும், விஞ்ஞான செயல்முறைகள் கண்டுபிடிக்க படவில்லை.பால் கறவை இயந்திரம் பெரிய பண்ணைகளில் தான் பயன்படுத்த படுகின்றன. பால் கொள்முதல் நிலையங்களில் இதன் பயன்பாட்டை செய்வதில்லை. பால் பதனிடுதல், பாலின் தரத்தை அளவிடும் கருவிகள், பால் பண்ணையின் வளர்ச்சிக்கு உதவும் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றிற்கு தான் முக்கியத்தும் தரபடுகிறது. ஜெர்சி கலப்பினத்தை தவிர்த்து, நம் நாடு சீதோசன நிலைக்கு உகந்த கலப்பின பசுக்கள் நீண்டகாலமாக உருவாக்கப்படவில்லை என்பது மிகவும் வருத்தத்தை தரும் விஷயம்.
  3. கிராமபுறத்தில் மேய்ச்சல் நிலங்கள் குறைந்துகொண்டே வருவதும் கவலை தரும் விஷயம். இதனால் பால் மாடு வளர்ப்போர் புண்ணாக்கு,   மாட்டு தீவனம் போன்றவற்றை கடைகளில் வாங்கி பயன்படுத்துவது அதிகமாகி உள்ளது. இதனால் பால் மாட்டை வளர்க்கும் செலவு கூடியுள்ளது.      
  4. கடந்த இரண்டு ஆண்டுகளில் மாட்டு தீவன விலை அடிக்கடி உயர்ந்து ( மாதம் மாதம் கூட விலை உயர்ந்தது) 20௦ % திற்கு அதிகமாக விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
  5. கால்நடைகளை காப்பிடு செய்யும் பழக்கம் குறைவாகவே உள்ளது. இதனால் கால்நடை இறந்தால் ஏழை எளிய மக்களுக்கு பெரிய பாதிப்பு உண்டாகும்.
  6. பால் கொள்முதல் விலை கண்டிப்பாக கட்டுபடியாகாது. லிட்டருக்கு ருபாய் இருபது பால் உற்பத்தியாளர்களுக்கு கிடைத்தால் தான் சிறு குறு விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும் 
  7. தீவன விலை ஏற்றத்தால், மாடுகளுக்கு குறைந்த தீவனம் கொடுக்கபடுகிறது. சரியான தீவனம் கொடுக்காத காரணத்தாலும் பால் உற்பத்தி குறைந்து அவர்களின் வருமானத்தை பாதிக்கிறது.   
தற்பொழுது 4.3 % கொழுப்பு மற்றும் 8.2 % SNF உள்ள பசும் பாலுக்கு கொள்முதல் விலையாக ருபாய் 15 .54 / லிட்டர் மற்றும் எருமை மாட்டு பாலுக்கு ருபாய் 23 /     ( Fat 7 % SNF 8.8 % ) என்று  ஆவின் நிறுவனம் நிர்ணயம் செய்து உள்ளது. இதற்கு முன் செப்டம்பர் மாதம் 2009 தில் பால் கொள்முதல் விலையில் மாற்றம் செய்யப்பட்டது.  

கடந்த ஐந்து ஆண்டுகளில் பால் கொள்முதல் விலை Rs5 .50 மட்டுமே அதிகரித்துள்ளது. ஆனால் பல்வேறு காரணங்களால் பயனீட்டாளர்களுக்கு சில்லறை விற்பனை விலை Rs11 / வரை அதிகரித்துள்ளது. தற்பொழுது நிர்ணயம் செய்யப்பட்டுள்ள Rs15 .54 என்ற விலை பால் கொள்முதல் நிலையத்திற்கு கொடுக்கும் விலையாகும். அவர்கள் கமிசன் போக Rs15 / தான்  பால் உற்பத்தியாளர்களுக்கு கிடைக்கும்.    

சில தனியார் நிறுவனங்கள் இதை விட அதிக விலைக்கு பால் கொள்முதல் செய்தாலும், பாலின் கொழுப்பு சத்து மற்றும் SNF சதவீதத்தை குறைத்து காட்டி விவசாயிகளை ஏமாற்றுவதும் நடக்கிறது.

இடைதரகர்களிடம் பால் ஊற்றும் பொழுது அவர்களிடம் வாங்கிய முன் பணத்திற்கு அதிக வட்டியை பிடித்து கொண்டு பணம் கொடுப்பதால், வறுமையில் வாடும் நிலை ஏற்படுகிறது.

நான் ஜல்லிக்கட்டிற்கு பெயர் போன அலங்காநல்லூர் ஒன்றியத்தில் கண்கூடாக கண்ட காட்சி இது. மேலே குறிப்பிட்ட காரணங்களினால் பால் மாடுகளின் எண்ணிக்கை கடந்த நான்கு ஆண்டுகளில் வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் பால் உற்பத்தி குறைந்துள்ளது. ஆனால் தேவை அதிகரித்துள்ளது. இதனால் பால் கொள்முதல் செய்வதற்கு கூட்டுறவு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இடையே பயங்கர போட்டி நிலவுகிறது. ஆச்சிரியமாக பால் கொள்முதல் விலை ஏற்றம் மட்டும் நடக்கவில்லை. பால் பதபடுத்தும் நிறுவனங்களும்,  உற்பத்தி இடத்திலிருந்து பதபடுத்தும் இடத்துக்கு பாலை எடுத்து செல்லும் போக்குவரத்து செலவு வெகுவாக அதிகரித்துளதால் பதிப்பு அடைந்துள்ளன. தங்கள் விற்பனை பாதிக்க கூடாது என்பதற்காக விற்பனை விலையையும் மற்ற நிறுவனத்திற்கு நிகராக வைக்கும் நிலைக்கும் எந்த நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன      


பால் உற்பத்தியாளர்களின் போராட்டத்தினால் சமிபத்தில் பால் கொள்முதல் விலையை தமிழக அரசு உயர்த்திள்ளது. ஆனால் ஆவினின் சில்லறை  விற்பனை விலையை உயர்த்தமாட்டோம் என்று அரசு அறிவித்துள்ளது. இதனால் ஆவினின் லாபம் குறையும். தேர்தல் முடிந்த பிறகு கண்டிப்பாக பால் சில்லறை விற்பனை விலை உயரும்    
  
பால் விலை மேலும் மேலும் கூடியவிரைவில் அதிகரிக்கும். இந்த விலை உயர்வு தவிர்க்கமுடியாதது. நாம் நாட்டின் பெரிய கூட்டுறவு நிறுவனமான அமுல், கடந்த Febraury 17 ஆம் தேதி முதல் தன் சில்லறை விற்பனை விலையை மகாராஷ்டிரா மாநிலத்தில் உயர்த்திள்ளது. மற்ற நிறுவனங்களும் Rs3 / வரை தங்கள் பால் சில்லறை விற்பனை விலையை. மும்பையில் அதிகம் விற்பனை ஆகும் பால் அமுல் பால். அமுல் தன் பால் தேவையில் 40௦ % தத்தை மகாராஷ்டிரா மாநிலத்திலும் மீதம் தேவைப்படும் பாலை குஜராத்திலிருந்தும் கொள்முதல் செய்கிறது. மகாராஷ்டிரா மாநில அரசு பால் கொள்முதல் விலையை Rs2 /- Rs2 .50௦/லிட்டர் வரை கடந்த 16 .02 .2011 முதல் உயர்த்தியதே இதற்க்கு காரணம். அமுல் தன் சில்லறை பாலை தரத்தை பொறுத்து Rs30 முதல் Rs38 / வரை தற்பொழுது விற்பனை செய்து கொண்டு வருகிறது                  

கர்நாடக அரசும் பால் கொள்முதல் விலையை Rs2 / உயர்திள்ளது 


அமுல் பால் உற்பத்தியாளர்களுக்கு செலவு அதிகரித்த காரணத்தினால், கொள்முதல் விலை உயர்த்தபட்ட்து என்றும், விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்றும் அறிவித்துள்ளது.

தமிழக பால் உற்பத்தியாளர்களை பொறுத்த வரை இந்த பால் கொள்முதல் விலையும் கட்டுபடியாகாது 

நாம் நாட்டு பொருளாதார கொள்கைகள் வெளிநாட்டு தொழில் நிறுவனங்களுக்கும் சேவை நிறுவனங்களுக்கும் சாதகமாக உள்ளது. இதனால் விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில் செய்பவர்களும் பாதிக்கபட்டுள்ளனர்  
      
ஆனால் இதன் பாதிப்புகள் பொது மக்களை சென்றடையும் நாள் வெகு தொலைவில் இல்லை. இப்பொழுதே அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை பன் மடங்காக எகிறி உள்ளது. பாலின் சில்லறை விற்பனை விலை Rs50 /  ஆகா இரு ஆண்டுகளில் மாறினால் ஆச்சிரிய படவேண்டாம்   

வெள்ளி, 25 மார்ச், 2011

இலவசத்திற்கு ஆசை படும் அனைவரையும் தூக்கில் போடவேண்டும்.


இதற்கு முன் தேர்தல் வாக்குறுதிகளை எப்படி எல்லாம் தரலாம் என்று ஒரு ப்ளாக் எழுதி இருந்தேன். தி.மு.கா மற்றும் அ.தி.மு.கா ஆகிய கட்சிகள் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகளை பார்த்து கூனி குறுகி போனேன். அவர்களை விட எனக்கு கற்பனை வளம் மிக குறைந்தது என்று புரிந்தது. அவர்கள் தந்த வாக்குறுதிகளை மீண்டும் இங்கு பதிந்து என் திறமையின்மையை நான் நிரூபிக்க வேண்டாம் என எண்ணுகிறேன் . என்னுடைய முந்திய பதிவு இதோ  


சரி. நம் தமிழ்நாட்டு மக்களை அரசியல்வாதிகள் மிக கேவலமாக நினைகின்றார்கள். பிச்சைகாரர்களை விட வாக்காளர்களை மிக கேவலமாக மதிக்கிறார்கள் என்பதற்கு அவர்களின் தேறுதல் அறிக்கையே சான்று. நாம் எல்லோரும் இலவசத்திற்காக கையேந்தி அவர்களிடம் நிற்பதை கற்பனையில் நினைத்து பாருங்கள்.

இன்னும் வேணும் இன்னும் வேணும். உழைக்காமல் சம்பாதிக்க வேண்டும் என்று கேவலமாக வாழும் பிறவிகள் தான் நாம் என்று சென்ற தேர்தலில் இலவசத்திற்கு ஆசை பட்டோமே அதற்கு பலன் தான் இது. நம்மை வீட்டில் உட்கார வைத்து மூன்று வேலை சோறும் போட்டாலும் போடுவேன் என்று சொல்வார்கள் .

அரசியல்வாதிகள் இன்னும் PIMP ( மாமா) வேலையை தான் பொது மக்களுக்கு செய்யவில்லை. அடுத்த தேர்தல் அறிக்கையில் அதையும் எதிர்பார்க்கலாம் 

இலவசத்திற்கு ஆசை படும் அனைவரையும் தூக்கில் தான் போடவேண்டும். ஆமாம் தேர்தல் கமிசன் இதனை வாக்காளர்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக நினைகவிலையா ?

நாடு எங்கே போகிறது ?

செவ்வாய், 22 மார்ச், 2011

நம் நாட்டின் பொருளாதார கொள்கையை நிர்ணயம் செய்பவர்கள் யார் ?


நம் நாட்டின் பொருளாதார கொள்கையை நிர்ணயம் செய்வதில் அமெரிக்க உள்ளிட்ட வளர்ந்த நாடுகளின் தலையீடு உள்ளது. இன்னும் சொல்ல போனால் நம் நாட்டு  பொருளாதார கொள்கையை முடிவு செய்வதே அவர்கள் தான் என்றும் கூறலாம். 

1990 களில் IMF ( International Monitory Fund ) கடன் கேட்டு பொருளாதார தேக்கநிலை காரணமாக இந்தியா உலகநாடுகளிடம் கையேந்த வேண்டிய நிலை வந்தது.
உலக வங்கியும் IMF உம் அதற்கு சில நிபந்தனைகளை விதித்தது. Structural adjustment என்று ஒரு நாட்டின் பொருளாதார கட்டமைப்பில் சில மாறுதல்களை வற்புறுத்துவதே அது. IMF கடன் பெரும் எந்த நாடும் இந்த விதிகளை பின்பற்றவேண்டும். கடன் பெரும் ஒப்பந்தத்திலேயே இது குறிப்பிடப்படும். நம் நாட்டின் புதிய பொருளாதரா கொள்கையை அப்போதைய மத்திய நிதி அமைச்சராக இருந்த மன்மோகன் சிங் , புதிய பொருளாதார கொள்கையை அறிவித்தது இந்த அடிப்படையில் தான். IMF கடன் பெற நாடுகள் கீழ்கண்ட பொருளாதார மாற்றத்தை செய்யவேண்டும். 

  • உலகமயமாக்கல் ( liberlaization ) - ஏற்றுமதி இறக்குமதி கட்டுபாடுகளை தளர்த்தல், வெளிநாட்டு நிறுவனங்கள் நம் நாட்டில் கடை பரப்ப அனுமதி அளிதல், நம் நாடு நிறுவங்களும் வெளி நாடுகளில் கிளை திறக்க அனுமதி அளித்தல் போன்றவை.
  • மாநில அரசின் பங்கு (roles )இதில் குறைக்கப்படும்.  
  • பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல், உள்நாட்டு நிறுவனங்களுக்கு சலுகைகளை குறைத்தல் 
  • ருபாய் மதிப்பை குறைதல், வட்டி விகிதத்தை ஏற்றுதல், தொழிலாளர் நல கொள்கைகளில் சமரசங்கள், மானியங்களை படிபடியாக குறைத்து முற்றிலுமாக மானியம் இல்லாத நிலையை உருவாகுதல் போன்றவை     ( குறிப்பாக உணவிற்கான மானியம் )   
  • வெளிநாட்டு முதலீடாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கி அவர்களை நம் நாட்டில் தொழில் தொடங்க ஈர்த்தல். 

  மன்மோகன் சிங் கின் பொருளாதார கொள்கை என்று எது விளம்பரம் செய்ய பட்டது. நம் நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார நிலையும், தேக்க நிலையை கடந்து வெகுவாக முன்னேரே ஆரம்பித்த காரணத்தினால்,இதன் பின்னால் உள்ள சூழ்ச்சியை மக்கள் உணரவில்லை. மன் மோகன் சிங்க் பைக் வாங்கினால் எங்கள் பைக்கை தான் வாங்குவார் என்று கூட விளம்பரம் செய்யப்பட்டது. நம் நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி அனைவராலும் பாரட்டப்பட்டது. இதை எதிர்த்து குரல் கொடுப்போர் முட்டாளாக சித்தரிகபட்டனர். பண பலம் அதிகாரம் கொண்டு இந்த பொருளாதார வளர்ச்சியின் இன்னோரு முகம் மறைக்கப்பட்டு வந்தது 

வெளிநாட்டில் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் முதலாளிகள், நம் நாட்டு மக்களின் உழைப்பினாலும், நம் நாட்டு வளங்களை பயன்படுத்தியும் தங்கள் கல்லாவை நிரப்பி  கொண்டு இருக்கிறார்கள்.

முன்பு சிறு சிறு தயாரிப்பாளர்கள் " கலர் " தயாரித்து - ஆரஞ்சு, மாங்கோ போன்ற சுவைகளில் கிராமங்களில் விற்று கொண்டிருந்ததை பார்க்கலாம். ஆனால்  Pepsi யும் Coke கும் வந்த பிறகு இவர்கள் இருந்த இடம் தெரியாமல் போனார்கள். இது அனைவருக்கும் தெரிந்த ஒரு உதாரணம். அனைத்து தொழில்களிலும் பலர் ஒழிந்து சிலர் மட்டுமே கொழிக்கும் நிலை உருவானது . நமது நாட்டில் உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை உயர்ந்தது. ஆனால் ஏழைக்கும் பணக்காரனுக்கும் உள்ள வித்தியாசம் அதிகமாகிக்கொண்டே போகிறது. 

சரி IMF விதித்து நம் நாடு செயல்படுத்திய பொருளாதார மாற்றங்களால் என்ன என்ன விளைவுகள் உண்மையில் ஏற்படுகின்றன /ஏற்படும் ?                    

  • தான் வாங்கிய கடனை முறையாக திருப்பி செலுத்தாத கடன் வாங்கிய நாடுகள் அதிக அளவில் ஏற்றுமதி செய்து பணம் ஈட்டவேண்டும் 
  • இந்தியாவை போல வேறு சில கடன் வாங்கிய நாடுகளும் உலக சந்தையில் தங்கள் பொருட்களை விற்க இவ்வாறு நிர்பந்தபடுத்த பட்டதாலும்,  பெரும்பாலும் ஒரே மாதிரியான பயிர்களும், விவசாய பொருட்களும் விற்பனைக்கு வந்ததாலும் ஒரு பெரிய விலை உத்தமே தொடங்கியது       
  • அதனால் வளரும் நாட்டுகளில் இருந்து வரும் பொருட்களின் விலை உலக சந்தையில் வீழ்ச்சியடையும். இதனால் மேற்கத்திய நாடுகளுக்கு பலன் அதிகம்
  • இதனால் அரசாங்கம் ஏற்றுமதியை அதிகரித்து தங்கள் நாடு ரூபாயின் மதிப்பை  நிலையாக வைக்க பாடுபட வேண்டிருக்கும். எதன் மூலம் அந்நிய செலவாணியை ஈட்டி கடனை அடைக்க வேண்டிய சுழல்லுகு தள்ள படும்.      
  • மேலும் கடன் பெற்ற நாடுகள்
                         - செலவை குறைக்க வேண்டும் .
                         - நிதி கட்டுபாடுகளை நீக்கவோ குறைகாவோ வேண்டும் 
                         - பொருட்களின் சுய பயன்பாட்டை குறைத்துக்கொள்ள           வேண்டிருக்கும்  
  • இதனால் நீண்ட கால விளைவுகளாக - மனித உழைப்பின் மதிப்பு குறையும், மூலதன நிதி தடுமாறும், ஏழை பணக்காரன் ஏற்றத்தாழ்வு மிக அதிகமாகி சமூக பிரச்சனைகளையும், உலகம் முழுக்க கலகங்களையும் ஏற்படுத்தும்        

    • நிலைமை மிகவும் மோசமானால் கடன் வாங்கிய நாட்டில் முதலீடு செய்த வெளிநாட்டு நிறுவங்களும் சுரண்டியவரை போதும் என்று தங்கள் முதலீட்டை திரும்ப எடுத்துகொள்வர் 
      • மேலும் 1997 /98 /99 ஆசிய/உலக நிதி பேரிடரின் பொழுது ஏற்பட்ட பொருளாதார விழ்ச்சி போன்ற நிகழ்வுகள் நடக்கும் ( மெக்ஸிகோ, பிரேசில் போன்ற நாடுகளில் நடந்ததை போல ). எத்தகைய நிகழ்வின் பொது உண்மையான காரணம் மறைக்கப்பட்டு வெகுஜன தொலைதொடர்பு ஊடகங்களும், பொருளாதார நிபுணர்களும் அப்போதுள்ள ஆட்சியை குறை கூறியோ அல்லது வேறு சிறிய பொருளாதார கொள்கைகளின் மீது குற்றம் சும்மத்தியோ செய்திவெளியிடுவர்        
    •  IMF கடனை கொடுத்தவர்கள் ரூபாய்க்கு நிகரான தங்கள் பணத்தின் மதிப்பை கட்டுபாடுக்குள் வைத்துகொண்டு , ஏழை நாடுகள் என்னும் ஏழை நாடாகும் நிலைமையை ஏற்படுத்துவர்
    எனவே நம் நாட்டின் பொருளாதார கொள்கையை முடிவு செய்யும் உரிமையை 1991 இல் IMF கடன் வாங்கிய பொழுதே இழந்துவிட்டோம். ஏழை மக்களை முன்னேற்றி ஏற்ற தாழ்வில்லாத சமுதாயத்தை ஏற்படுத்துகிறோம் என்று நம் அரசில்யல்வாதிகள் சொல்வது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்.

    எப்பொழுது ஏழை மக்களை முன்னேற்ற போடும் திட்டங்களும் அவர்களையும் கடனாளியாகும் திட்டங்களாகவே இருக்கின்றன. வங்கிகளின் மூலம் சுயஉதவி குழுக்கள் பெரும் கடனும், குறு நிதி நிருவனனால் மூலம் பெரும் கடனும் ஏழை மக்களை முன்னேற்றுவதற்கு பதிலாக கடனாளி ஆக்குகின்றது. எளிதில் கடன் கிடைபதால், அதன் பின் விளைவை உணராமல் தங்கள் தேவைகளை அதிகபடுத்திகொண்டு, பின்னர் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தில் பெரும் பகுதியை கடன் கட்டியே சாகின்றனர். சேமிக்கும் பண்பை அடிபடியாகவும், கடன் வாங்குவதை கேவலமாகவும் நினைத்த சமுதாயம் என்று எவ்வளவு கடன் வாங்கவும் தயங்குவதில்லை.

    நம் நாட்டு பொருளாதார கொள்கைகளில் வெளிநாடுகளின் தலையீடு  இருக்கிறது என்பதற்கான சமிபத்திய ஆதாரம் விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்ட தகவல் ஒன்றிலிருந்து தெளிவாக தெரிகிறது.

    ப.சிதம்பரத்திற்கு பதிலாக பிரணாப் முகர்கியை காங்கிரஸ் அரசு தேர்ந்து எடுத்தவுடன் கீழ் கண்ட கேள்விகளை ஹில்லரி கிளிண்டன் எழுப்பியுள்ளார் 
    1. மன்மோகன் சிங்க் இன் பொருளாதார சீர்திருத்தங்களில் பிரணாப்   முகர்ஜிக்கு உடன்பாடு உண்டா ? எது பற்றிய அவரது தனிப்பட்ட கருத்துகள் என்ன ?
    2. எவ்வளவு வேகமாக இந்த சீர்த்திருத்தங்களை பிரணாப் முகர்ஜி எடுத்து செல்வார் ?   
    3. பிரணாப் முகர்ஜி கு இதனை செயல்படுத்தும் திறமைகள் உண்டா ?
    4. பிரணாப் முகர்ஜீக்கு இந்தியா - அமெரிக்க பொருளாதார உறவை பற்றி என்ன கருத்து இருக்கிறது ? இந்த உறவு பலன் தரும் என்று அவர் நம்புகிறாரா?
    5. எந்த எந்த விசயங்களில் அமெரிக்காவுடன் ஒத்துழைக்க அவர் ஆர்வமாக உள்ளார் ?
    6. அமெரிக்க -இந்தியா இடையிலான பொருளாதார உறவையும் அமெரிக்க -சீனா இடையிலான பொருளாதார உறவையும் அவர் எந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறார் ? 
    7. மொண்டேக் சிங்க் அஹ்லுவாலியாக்கு(Montek Singh Ahluwalia) பதில்   நிதி அமைச்சர் பொறுப்புக்கு பிரணாப் முகர்ஜி எப்படி தேர்வு செய்யப்பட்டார் ? மொண்டேக் சிங்க் அஹ்லுவாலியா மற்றும் பிரணாப் முகர்ஜி இருவருக்கும் ஒத்து போகுமா ?   
    8. எந்த எந்த தொழில் நிறுவனங்களுடன் பிரணாப் முகர்ஜீக்கு நெருங்கிய தொடர்பு உண்டு ? தன பொருளாதார கொள்கைகள் மூலம் யாருக்கு அவர் உதவி செய்வார் ? வருகின்ற நிதி அறிக்கையில் எது எதற்கு பிரணாப் முகர்ஜி முக்கியத்துவம் தருவார் ?     
    9. பிரணாப் முகர்ஜி யும் பிற தலைவர்களும் உலக  பொருளாதார தேக்க நிலையை சரி செய்ய எத்தகைய பொருளாதார கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என்று நினைகின்றனர் ?
    10. ஒரு நிதி அமைச்சராக பிரணாப் முகர்ஜி எப்படி செயல் பட வேண்டும் என்று பிரதமர் நினைக்கிறார் ?
    11. முகர்ஜீகும் RBI கவர்னர் D.V.சுப்பாராவுக்கும் எத்தகைய உறவு இருக்கிறது ? சிதம்பரம் நிதி அமைச்சர் பொருபில்லிருந்து விலக்கப்பட்டதை சுப்பாராவ் எப்படி எடுத்துக்கொண்டார் ?
    12. இதனால் நிதி அமைச்சகத்துக்கும் RBI கும் உள்ள உறவு எப்படி இருக்கும் ?    
    அப்பாடி !  பிரணாப் முகர்ஜியை நிதி அமைச்சர் ஆக்குவதற்கு முன்னாள் காங்கிரஸ் மற்றும் மன் மோகன் சிங்க் கூட எவ்வளவு யோசித்திருக்க மாட்டார்கள்

    நம் நாட்டின் பொருளாதார கொள்கையை நிர்ணயம் செய்பவர்கள் யார் என்று புரிந்திருக்குமே ? நம் நாடு சுதந்திரமாக செயல்படமுடியாமல், ஒப்பந்தம் என்ற பெயரில் அந்நிய சக்திகளால் ஆடுவிக்கபடுகிறதா இல்லையா என்பதை நீங்களே புரிந்துகொள்ளுங்கள்