ஓஷோ ரஜீநிஷ் சிறு வயதில் இருந்த பொழுது நடந்த சம்பவம் இது. ஓஷோவிற்கு சிறு வயதில் காந்தியடிகளை மிகவும் பிடிக்கும். ஒரு முறை காந்தியடிகள் வரும் ரயில் வண்டி தன் கிராமத்திற்கு அருகே உள்ள ரயில் நிலையத்திற்கு வருவதாகவும், காந்தியடிகள் அங்கு இறங்கி மக்களை சந்திக்க இருப்பதாகவும் கேள்விப்பட்டார். மகாத்மா என்று அழைக்கப்படும் அந்த தெய்வ பிறவியை காண ஓஷோவிற்கு ஆவல் ஏற்பட்டது. எனவே தன் நண்பர்களை அழைத்து கொண்டு கொஞ்சம் பணத்தையும் எடுத்துகொண்டு ரயில் நிலையம் சென்றார். ரயில் வர மிகவும் காலதாமதம் ஆனதால் ஓஷோவின் நண்பர்கள் பொறுமை இழந்து, நாங்கள் கிராமத்திற்கே திரும்பி செல்கிறோம் என்று கூறிவிட்டு சென்றுவிட்டனர். ஓஷோ மட்டும் மகாத்மாவை சந்திக்க மிகவும் ஆவலுடன் இருந்ததால் பொறுமையுடன் காத்திருந்தார். வேறு சிலரும் காந்தியை பார்பதற்காக காத்திருந்தனர்.
ரயிலும் வந்தது. மகாத்மா காந்திக்கு ஜெய் என்று கோஷங்கள் எழுந்தன. காந்தியடிகளும் ரயிலை விட்டு கீழே இறங்கி சிறுது நேரம் மக்களிடம் கலந்துரையாடினார். பின்னர் ஒரு உண்டியலை எடுத்து நாட்டில் ஏழை மாகுளுக்கு உதவுவதற்காக காங்கிரஸ் இயக்கம் நிதி திரட்டுவதாகவும், கிராமங்களில் உள்ள ஏழைகளின் வளர்சிக்காக இந்த நிதியை பயன்படுத்த போவதாகவும் கூறினார். பின்னர் அங்கிருந்த மக்களிடம் நிதி வசூல் செய்யா ஆரம்பித்தார். ஓஷோவிடம் உண்டியலை நீட்டியதும், தன்னிடம் இருந்த சிறு தொகையை உண்டியலில் போட்டார்.
பின்னர் காந்தியடிகள் எதிர்பாராத ஒரு காரியத்தை செய்தார். பனும் போட்ட உண்டியலை தன் கையில் வாங்கிய அவர், அதனை எடுத்து கொண்டு நடையை கட்டினார்.
காந்தியடிகள் அதிர்ச்சி அடைந்து, நில், என்ன காரியம் செய்கிறாய் நீ ? என்று கேட்டார். ஓஷோவும் நின்று பின்னர் காந்தியடிகளை பார்த்து " தன் கிராமத்திலும் நிறைய ஏழைகள் இருப்பதாகவும், இந்த நிதியை தந்தால் தன் கிராமத்தினருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் பதில் அளித்தார். ஒரு சிறுவன் இவ்வாறு பேசியதை பார்த்த காந்தியடிகள் அதிர்ச்சி அடைந்து செய்வதர்கரியாமல் நின்றார்.
பின்னர் ஓஷோ காந்தியடிகளிடமே அந்த உண்டியலை தந்து " நான் மகாத்மாவை பார்க்க தான் வந்தேன். ஆனால் இங்கு நான் ஒரு வியாபாரியை தான் பார்கிறேன் என்றார்.
இந்த நிகழ்வை பார்த்த கஸ்தூரிபாய் அவர்களும் புன்னகை பூத்தார்.
காந்தியடிகள் எங்கு சென்றாலும் நிதி திரட்டுவதை முக்கிய நோக்கமாக வைத்திருந்தார் என்பதற்கு பல சான்றுகள் உண்டு. பெண்கள் காந்தியடிகளின் மீது வைத்திருந்த நம்பிக்கையின் காரணமாக தாங்கள் அணிதிருந்த நகைகளை கூட கழட்டி கொடுத்தது தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் நடந்திருக்கிறது. ஒரு முறை பொது கூட்டத்திற்கு காந்தி அடிகள் செல்லும் வழியில் உள்ள கிராமத்தை சார்ந்த சிலர், தங்கள் கிராமத்திலும் பேசுமாறு அழைத்த பொழுது தகுந்த நிதி அளிபதாக வாக்குறுதி தந்தால் பேசுவதற்கு ஆட்சேபமில்லை என்று கூறினார்.
மகாத்மா காந்தி உண்மையில் மகாத்மாவா அல்லது சிறந்த நிர்வாகியா, வியாபாரியா என்று நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும்.
இயக்கத்தை வளர்க்கவும், கட்சியை வளர்க்கவும் நிதி தேவை என்பது மறுக்க முடியாது. ஆனால் அது எதற்காக பயன்படுத்த படுகிறது என்பது தான் முக்கியம். இவ்வாறு நிதி ஒரே இடத்தில் சேரும் பொழுது, உண்மையான நோக்கதிற்காக செலவு செய்யபடுவதற்கு பதிலாக, இயக்கத்தையும் கட்சியையும் வளர்க்கவே செய்யபடுகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.
இப்பொழுது மக்கள் தெளிவாகிவிட்ட காரணத்தினால் மிரட்டி தான் நிதி வசூல் செய்யபடுகிறது. அது கட்சியை வளர்கமட்டும் அல்ல தன் குடும்பத்தை வளர்க தான் அரசியல்வாதிகள் பயன்படுத்துகின்றனர்..
இப்பொழுது ஓட்டுக்கு பணம் கொடுக்கும் நிலை உருவாகி உள்ளது. மக்களும் சுயநலவாதிகளாகவே இருப்பதால், இந்த தவிர்கமுடியாத நிலை உருவாகி உள்ளது. இது மாறுமா ?
அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்தால் மக்களை மேலும் மேலும் சுயநலவாதிகளாக மாற்றிகொண்டிருக்கின்றனர்.
உழைக்காமல் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் பெருகிக்கொண்டு இருக்கிறது. நம் கிராமங்கள் எப்படி மாறிகொண்டிருகிறது என்பதை பார்க்கும் பொழுது மனம் வலிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இலவசமும் ஊழலும் என்ற என் பதிவை பார்க்கவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக