பிரபலமான இடுகைகள்

புதன், 9 மார்ச், 2011

உலகம் உருண்டையானது

சரியாக பத்து வருடங்கள் தொடர்பே இல்லாமல், எங்கு இருக்கிறாள் என்ன செய்கிறாள் என்ற தகவலே இல்லாமல் இருந்த உங்கள் முன்னால் காதலியை பற்றிய தகவல் நீங்கள் முன் பின் சந்தித்திராத நபர் மூலம் தெரிய வந்தால் எப்படி இருக்கும்?

நான் பணி செய்து கொண்டிருக்கும் இடத்திற்கு, பயிற்சி பெறுவதற்காக வேறு ஒரு நிறுவனத்திலிருந்து, அதுவும் வேறு ஒரு மாநிலத்திலிருந்து  சிலர் வந்து இருந்தனர். அதுவும் ஒரு கிராமத்திற்கு. பயிற்சி எடுத்து கொண்டிருக்கும் பொழுது லேசாக ஒரு எண்ணம் வந்தது. என் முன்னால் காதலி ( பெயர் அனாமிகா என்று வைத்துகொள்வோம் )  அங்கு பணிபுரிவதாக சில வருடங்களுக்கு முன் கேள்வி பட்டிருந்தேன். அதுவும் நிறுவனம் பெயர் கூட சரியாக தெரியாது. ஏதோ ஒரு யுகத்தில் அனாமிகா என்று பெயர் கொண்ட பெண், __________ படிப்பு படித்த பெண், தங்கள் நிறுவனத்தில் பணி புரிகிறார என்று அந்த குழுவிற்கு தலைமை தாங்கி வந்தவரிடம் கேட்டேன். 

அப்படி கேட்டவுடனேயே அவர் தங்களுடன் வந்தவர்களை திரும்பி பார்த்தார். ஏதோ அவருக்கு தெரியும் என பட்டது. பின்னர் அவர் தயங்கியபடியே, அனாமிகா அங்கு தான் வேலை பார்த்ததாகவும், குடும்ப பிரச்னை காரணமாக வேலையைவிட்டு நின்று சில வருடங்கள் ஆவதாகவும் சொன்னார். பின்னர் நான் அவரின் தொலைபேசி எண் தெரியுமா என்று கேட்டதற்கு, தற்பொழுது இல்லை எனவும், ஊர்க்கு சென்ற பின் அலுவலகத்தில் தேடி பார்த்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவதாகவும் கூறினார். அனுபவத்தில் எவ்வாறு கூறும் பலர் ஊருக்கு சென்றதும் மறந்துவிட்டு தங்கள் பணியை பார்ப்பார்கள். அது போல தான் இவரும் செய்வார் என்று நினைத்தேன். ஆனால் சொன்னது போல மறக்காமல் அனாமிகாவின் தொலைபேசி எண்ணை மின்னஞ்சல் மூலம் அனுப்பினார்.

நான் அனமிகாவிற்கு போன் செய்தேன். அவள் வேறு மாநிலத்தை சேர்ந்தவள்.
அனாமிகா தான் பேசுகிறாள் என்பதை தெரிந்து கொண்ட நான், நான் யார் என்று கண்டுபிடிக்குமாறு ஆங்கிலத்தில் சொன்னேன். பல வருடங்கள் கழித்து போன் செய்த காரணத்தினாலும், என்னிடம் இருந்து செல்பேசி அழைப்பை எதிர்பார்க்காத  காரணத்தினாலும் அவள் குழுப்பம் அடைந்தது தெரிந்தது.

பின்னர் நான் யார் என்று அறிமுகப்படுதிகொண்டேன் . வந்ததே கோபம் அவளுக்கு. எத்தனை நாள் கோபமோ, எத்தனை நாள் விரக்தியோ , பட பட வென்று பொரிந்தாள். எங்கள் விட்டில் முழு சம்மதத்தை தெரிவித்தபிறகு, என் பெற்றோர் என் வற்புறுத்தலின் பெயரில் அவர் விட்டுக்கு பெண் கேட்டு  சென்றும், அவர் தாய் மறுத்ததுடன் தமிழர்களுக்கு என்றாலே எங்களுக்கு பிடிக்காது, அவர்களுக்கு எதிராக ஹோமம் செய்த குடும்பம் எங்களுடையது என்று வேறு கூறி அவமானபடுத்தி அனுப்பிவிட்டார்கள். பின்னர் சில காரணங்களினால் அவளும் மனம் மாறிவிட்டாள். 

பிறகு தொடர்பே இல்லாமல் போன பிறகு நான் திருமணம் செய்து கொண்டேன். இருந்தாலும் அவள் என் மீது கோபபட்டபோழுது அமைதியாக இருந்தேன். சிறிது நேரம் கழித்து தான் எப்படி என் செல்பேசி என் கிடைத்தது என்றாள். நான் விவரத்தை கூறினேன். பின் என் குடும்பத்தை பற்றி கேட்டாள். பதில் கூறினேன். அவள் குடும்பத்தை பற்றி கேட்ட பொழுது தனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதாக கூறினாள். வேறு விபரம் எதுவும் கூறவில்லை.

பின் எப்பவாவது ஒரு முறை நான் பேசினால் பதில் பேசுவாள். சில சமயம் பேசவும் மாட்டாள். பல மாதம் வரை பேச மாட்டாள். பிறகு திடீர் என பதில் அளிப்பாள். இப்பொழுது தொலைபேசியில் பேசுவதில்லை. மின்னஞ்சல் அனுப்பினால் பதில் வரும். பின்னர் ஒரு மின்னஞ்சலில் தனக்கு விவாகரத்து ஆகிவிட்டதாகவும், தாயாருக்கு உடல் நிலை சரி இல்லை என்பதால் அவரையும் குழந்தைகளையும் பார்த்து கொண்டு வீட்டில் இருப்பதாகவும் கூறினாள். தனக்கு அன்பான கணவர் தான் அமைந்ததாகவும், சிறிய பிரச்சனை ஒன்று ஆரம்பத்திலேயே சரி செய்யமால் விட்டதால் பெரிதாகி பிரிய நேரிட்டதாகவும் கூறினாள். ஆனால் தற்பொழுதும் அவள் கணவர் குழந்தைகள் மேல் அதிகம் பாசம் வைத்துள்ளதாகவும், அடிகடி குழந்தைகளை அவர் விட்டுக்கும் அழைத்து செல்வதாகவும், தானும் அதனை தடுபதில்லை எனவும் கூறினாள்.

மிகவும் புத்திசாலிதனமும், நல்ல ஆங்கில புலமையும், திறமையும், தைரியமும், தன்னம்பிக்கையும் கொண்ட பெண் அவள். அவளின் தைரியமும் தன்னம்பிக்கையும் தான் என்னை ஈர்த்தது. வேடிக்கை என்னவென்றால் கல்லூரி முடித்து சென்ற பின்னால் தான் தானும் என்னை காதலிப்பதாக சொன்னாள். அது வரை நண்பர்கள் என்ற எல்லையை தாண்டவில்லை.( தன் தாயிடம் இப்பொழுதே இவருடன் விட்டை விட்டு சென்றுவிடுவேன் என்று என் கையை பிடித்து சொன்னவள் அவள். நான் தான் அப்பொழுது தடுத்து அது தவறு என்றும், எப்படியாவது சம்மதத்தை பெறுவோம் என்று சொன்னேன்) 

அந்த பெண் மீது தவறே இல்லை. ஒரு முறை நான் அதிக உரிமையுடன் பழகுவதை உணர்ந்த அவள் " என்னிடம் தவறான எண்ணத்தில் ஒன்றும் பழகவில்லையே ? அப்படி ஒரு எண்ணம் இருந்தால் விட்டுவிடு. என் குடும்பத்தில் ஏற்றுகொள்ளவே மாட்டார்கள் என்று கூறினாள். என் மனதில் ஆசை இருந்தாலும், நான் பொய் சொன்னேன். அப்படி ஒரு எண்ணம் இல்லை என்று. கல்லூரி படிப்பு முடிந்தபின் தான் என் பிரிவு அவளிடம் மாற்றத்தை உண்டு பண்ணியது தெரிந்தது. கல்லூரி படிப்பு முடிந்தாலும் வேறு ஒரு காரணத்திற்காக  இருவரும் கல்லூரிக்கு செல்ல நேர்ந்தது. அப்பொழுது  பேருந்தில் இருவரும் ஒன்றாக அமர்ந்த பொழுது, என் தோள் மீது  தலை சாய்த்து அவள் அமர்ந்தாள் . வார்த்தையால் இல்லாமல் செய்கையால் உணர்த்தினாள் . பிறகு தான் புரிந்தது. கல்லூரி படிப்பு முடிந்தவுடன் தன் விட்டுக்கு வரும்படி  அவள் முன்பு வற்புறுத்தி அழைத்து சென்றதும் இதனால் தான் என்று. படிப்பு முடிந்ததும் நேரே என் விட்டுக்கு செல்லாமல் அவள் அழைத்த காரணத்தால், அவள் விட்டுக்கு சென்று விட்டு பின்னர் என் வீட்டுக்கு சென்றேன். 

உண்மையான அன்பு இப்பொழுதும் இருவருக்கும் இருக்கிறது. ஆனால் நான் கடவுளிடம் வேண்டிகொள்வது இது தான். மீண்டும் அவளை நேரில் சந்திக்க கூடாது. புனிதமான உறவாகவே இது இருக்கட்டும்.




1 கருத்து:

kannama சொன்னது…

kandipaka unkal venduthal palikatum............ ninaivukalthan suhamanathu........ unmaiyana kadhalil

கருத்துரையிடுக