பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 25 மார்ச், 2011

இலவசத்திற்கு ஆசை படும் அனைவரையும் தூக்கில் போடவேண்டும்.


இதற்கு முன் தேர்தல் வாக்குறுதிகளை எப்படி எல்லாம் தரலாம் என்று ஒரு ப்ளாக் எழுதி இருந்தேன். தி.மு.கா மற்றும் அ.தி.மு.கா ஆகிய கட்சிகள் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகளை பார்த்து கூனி குறுகி போனேன். அவர்களை விட எனக்கு கற்பனை வளம் மிக குறைந்தது என்று புரிந்தது. அவர்கள் தந்த வாக்குறுதிகளை மீண்டும் இங்கு பதிந்து என் திறமையின்மையை நான் நிரூபிக்க வேண்டாம் என எண்ணுகிறேன் . என்னுடைய முந்திய பதிவு இதோ  


சரி. நம் தமிழ்நாட்டு மக்களை அரசியல்வாதிகள் மிக கேவலமாக நினைகின்றார்கள். பிச்சைகாரர்களை விட வாக்காளர்களை மிக கேவலமாக மதிக்கிறார்கள் என்பதற்கு அவர்களின் தேறுதல் அறிக்கையே சான்று. நாம் எல்லோரும் இலவசத்திற்காக கையேந்தி அவர்களிடம் நிற்பதை கற்பனையில் நினைத்து பாருங்கள்.

இன்னும் வேணும் இன்னும் வேணும். உழைக்காமல் சம்பாதிக்க வேண்டும் என்று கேவலமாக வாழும் பிறவிகள் தான் நாம் என்று சென்ற தேர்தலில் இலவசத்திற்கு ஆசை பட்டோமே அதற்கு பலன் தான் இது. நம்மை வீட்டில் உட்கார வைத்து மூன்று வேலை சோறும் போட்டாலும் போடுவேன் என்று சொல்வார்கள் .

அரசியல்வாதிகள் இன்னும் PIMP ( மாமா) வேலையை தான் பொது மக்களுக்கு செய்யவில்லை. அடுத்த தேர்தல் அறிக்கையில் அதையும் எதிர்பார்க்கலாம் 

இலவசத்திற்கு ஆசை படும் அனைவரையும் தூக்கில் தான் போடவேண்டும். ஆமாம் தேர்தல் கமிசன் இதனை வாக்காளர்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக நினைகவிலையா ?

நாடு எங்கே போகிறது ?

1 கருத்து:

ராஜ நடராஜன் சொன்னது…

//இலவசத்திற்கு ஆசை படும் அனைவரையும் தூக்கில் தான் போடவேண்டும். ஆமாம் தேர்தல் கமிசன் இதனை வாக்காளர்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக நினைகவிலையா ?//

தமிழகத்தின் தேர்தல் இலவச அறிவிப்புக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக தேர்தல் ஆணையர் கூறுகிறார்.மேலும் இவற்றைக் கட்டுப்படுத்துவது ஓரளவுக்கே சாத்தியமென்றும் கூறியுள்ளார்.

ஏனைய மாநில மக்கள் தமிழர்களை ஏளனமாகவே பார்க்கிறார்கள்.

கருத்துரையிடுக