வாழு வாழவிடு. நல்ல குறிக்கோள். தான் வாழ பிறரை கெடுப்பது தான் அதிகம் நடந்துகொண்டு இருக்கிறது. இதை விட மோசமாகவும் ஒருவன் நடந்துகொள்ள முடியுமா? முடியும் என்பதற்கு என் நண்பனின் கதையே உதாரணம்.
என் நண்பன் ஒருவன் விவசாயத்தில் உழவியலில் முதுகலை பட்ட படிப்பு முடித்து, ஒரு உர நிறுவனத்தில் பணிபுரிந்து, பின் வேறு சில நிறுவங்களில்
பணி புரிந்து விட்டு இப்பொழுது தற்காலிக பணி ஒன்றில் ( இந்த மாதத்துடன் பணி முடிகிறது. பிறகு வேறு வேலை தான் பார்க்க வேண்டும்.) இருக்கிறான் .
அவனுக்கு பாண்டிசேரி மாநிலத்தில் Junior Agronomist என்ற நிரந்தர பணி வாய்ப்பு கிடைக்க இருந்தது. அவன் பிழைப்பில் மண்ணை போட திண்டிவனத்தில் உதவி பேராசிரியராக வேலை பார்த்த ஒருவன் வந்தான். அவன் பெயர் ரகு( பெயர் மாற்ற பட்டுள்ளது ). உதவி பேராசிரயர் சம்பளத்தை விட இளநிலை உழவியல் பணிக்கு ருபாய் எட்டு ஆயிரம் சம்பளம் குறைவு. மேலும் Promotion வாய்ப்புகளும் இல்லை. இருந்தாலும் சொந்த ஊரில் பணிபுரிய வேண்டும் என்ற விருப்பத்தில் ரகுவும் Junior Agronomist பதவிக்கு விண்ணப்பித்தான். என் நண்பன் Forward caste . ரகு பட்டியல் இனத்தை சார்ந்தவன். (பட்ட படிப்பையே அர்ரியர்ஸ் வைத்து தட்டு தடுமாறி முடித்த அவன் உழவியலில் டாக்டர் பட்டமும் பெற்று இருந்தான். விவசாய கல்லூரியில் ஒரு வசதி. உள்ளே நுழைதுவிட்டால் போதும். மூன்று வருடங்களில் டாக்டர் பட்டம் உறுதி. அதற்கு மேல் இழுத்தால் தங்களுக்கு கேட்ட பெயர் என்று உங்கள் Chariman அவர்களே அனைத்தையும் பார்த்து கொள்வார். ஆராய்சிக்கான தலைப்பும், ஆராய்ச்சியும் முன்பே செய்த ஒரு ஆராய்ச்சியில் சிறு மாறுதலுடன் இருக்கும் ( 2 - 5% ). நான் இங்கு அவன் படிப்பு திறமையை மட்டும் கோடிட்டு காட்ட விரும்பினேன். அது கண்டிப்பாக ஜாதியின் அடிப்படையில் அல்ல. நன்றாக படிக்கும் வேறு சிலரையும் எனக்கு தெரியும்.
ரகு போட்டிக்கு வந்ததால் என் நண்பனுக்கு வாய்ப்பு பறிபோனது. டாக்டர் பட்டமும் ஜாதியும் உதவி செய்ய, ரகுவிற்கு எளிதில் வேலை கிடைத்தது. எனக்கு ரகுவுடன் அதிகமாக பழக்கம் இல்லை. ஆனால் அவனிடம் நெருக்கமாக இருந்த சிலர், இந்த வாய்ப்பை என் நண்பனுக்க விட்டு கொடுக்கும் படி கேட்டிருந்தனர். அனால் என் நண்பன் நேரடியாக கேட்கவில்லை.
இருந்தாலும் ரகு விட்டு கொடுக்கவில்லை. மேலும் என் நண்பனுக்காக பேசியவர்களிடம் ரகு சரியாக பேசுவது இல்லையாம்.
என் நண்பன் நாற்பது வயதாகியும் சரியான பணி வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறான். ஆனால் ரகுவோ நல்ல பணியில் இருந்துவிட்டு சொந்த ஊரில் பணி புரிய வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, அதை விட கீழான பணிக்கு விண்ணப்பித்து சேர்ந்து விட்டான். ரகுவை பொறுத்த வரை வேலை கூட முக்கியமில்லை. ஏற்கனவே பெட்ரோல் பங்க், பஸ் போன்ற தொழில்களும் அவன் குடும்பத்திற்கு உண்டு. அவன் தாய் ஒரு முன்னால் MLA .
வேறு என்ன வேண்டும் ? ஆனாலும் அடுத்தவன் வாழ உதவ மனசு வரவில்லை.
சரி என் நண்பன் யார் என்று கேட்கவில்லையே? ஜாதிகள் இருக்குதடி பாப்பா என்ற ப்ளாகில் நான் குறிப்பிட்ட பாவப்பட்ட ஜீவன் ஆன ராகுல் தான் அவன்.
அவன் வாழ்க்கையில் நடந்த ஒரே நல்ல விஷயம் அவன் மனைவி. அவனது எல்லா கஷ்டங்களுக்கும் தோல் கொடுக்கும் துணைவி. M.phil ( gold medal in Physics )
அவருக்கும் கூட நல்ல பணி கிடைகாதது கொடுமை.
ஏன் சிலருக்கு ( நல்லவர்களுக்கு ) வாழ்க்கை இப்படி இருக்கிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக