பிரபலமான இடுகைகள்

படிப்பினை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
படிப்பினை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 17 மே, 2011

ஒரு குழந்தையின் பக்குவம் -2

ஒரு முறை என் குழந்தை நக பூச்சை ( நைல் போலிஷ்) எடுத்து விளையாடிகொண்டிருந்த பொழுது அது கீழே சிந்திவிட்டது. உடனே அவள் தன விரல் கொண்டு சிந்திய நக பூச்சை எடுத்து தரையில் முன்று முகங்களை வரைந்தாள். முகத்திற்கு ஒரு வட்டம், கண்களுக்கு இரண்டு புள்ளிகள் மூக்கிற்கு ஒன்று. வாய்க்கு இரண்டு முகங்களுக்கு Upward Curve . ஒரு முகத்திற்கு downward Curve. இது என்ன படம் என்று நான் கேட்டேன். உடனே அவள் உன் படம் அம்மா படம் மற்றும் என் படத்தை வரைந்திருக்கிறேன் என்றாள். பிறகு smiling faces நீயும் அம்மாவும் sad face நான் என்றாள். ஏன் அப்படி என்று கேட்டேன் நான்.

முன்னாடி அம்மாகிட்ட நீ சண்டை போட்டுக்கிட்டு இருப்பே. இப்ப சண்டை போடுறது இல்லை. அதனால் அம்மா Smiling face உடன்   இருக்கிறாள் என்றாள்.

அதே போல அம்மா உன்கிட்ட முன்னாடி சண்டை போடுவாங்க. இப்ப சண்டை போடுறது இல்லை அதனால நீயும் சந்தோஷமா இருக்கே என்றால் என் மகள்.  

சரி நீ ஏன் சோகமாக இருக்கே என்றேன்.

நான் சுட்டி டிவி பார்க்க விடாமல் ஆபீஸ் விட்டு வந்ததும் remotai நீ எடுத்து சேனல மாத்துறே அதனால நான் சோகமாக இருக்கேன் என்றது.

நாங்கள் சண்டையிட்டது குழந்தையின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது என்பது தெரிந்தது. மேலும் அலுவலகம் விட்டு வந்ததும் தொலைகாட்சியை பார்க்கும் எண்ணத்தை விட்டோழிதேன். அனால் வெகு நேரம் தொலைகாட்சியை பார்க்க கூடாது என்பதை அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக உணர்த்தி வருகிறேன்.அவளிடம் நான் செலவிடும் நேரத்தையும் அதிகரித்துளேன்.




                             

திங்கள், 16 மே, 2011

ஒரு குழந்தையின் பக்குவம்

ஒரு பெண் "Parnoid Schizophrenia " என்ற மனநல பாதிப்புக்கு உண்டானவர். தனக்கும் தன் குடும்பத்திற்கும் யாரோ கெடுதல் செய்வதாக ஆரம்பித்த இந்த எண்ணம் போக போக அதிகரித்து தன் தாய் தந்தை கணவன் ஆகியோரை கூட தனக்கு கெடுதல் செய்கிறார்கள் என்று நினைக்க ஆரம்பித்தாள். இது இன்னும் அதிகமாகி- தன் கணவன், தந்தை உருவத்தில் வேறு யாரோ வீட்டுக்குள் வருகிறார்கள் என்று எண்ணி அவர்களிடம் சண்டை இடுவது தொடர்கதையானது.
பொதுவாக இத்தகைய மனச்சிதைவு உள்ளவர்களுக்கு தான் நன்றாக தான் இருக்கிறோம் என்ற எண்ணம் ஆழமாக இருக்கும். தனக்கு மன நல பாதிப்பு இருகின்றது என்பதை உணரவோ ஏற்று கொள்ளவோ மாட்டார்கள். இதன் காரணமாக மன நல மருத்துவரிடம் சிகச்சை எடுத்தாலும் மருந்துகளை தொடர்ச்சியாக எடுத்துகொள்ள மாட்டார்கள். மருந்து மாத்திரைகளை எடுத்துகொள்வதை பாதியிலேயே விட்டால், அடுத்த முறை இந்த பாதிப்பு இன்னும் அதிக சேதத்தை ஏற்படுத்தும். மன நல ஆலோசனகளும் சில நபர்களிடம் எடுபடாது 

தன் கணவனுக்கு பதில் வேறு யாரோ விட்டுக்குள் வருகின்றார்கள் என்ற எண்ணத்தால் யார் நீ ? என்று வினவி சண்டை இடுவதும், அவன் தூங்கும் பொழுது விளக்கை போட்டு அவனை உற்று பார்பதுமாக இருந்தார். இந்த குழப்பம் தன் ஆறு வயது குழந்தையிடமும் ஆரம்பித்தது. பள்ளிக்கு சென்றது ஒரு குழந்தை ஆனால் விட்டுக்கு வந்ததோ வேறு குழந்தை என்று நினைக்க ஆரம்பித்தாள். தன் குழந்தைக்கு உணவு ஊட்டிய பிறகு சமையல் அறைக்கு சென்று திரும்பிய நேரத்தில் குழந்தை மாறிவிட்டதாவும் உணர்தாள். சந்தேகத்தில் குழந்தையின் கையை முகர்து பார்பதும் நீ என்ன இப்பொழுது சாப்பிட்டாய் என்று கேட்பதும் வழக்கமாயிற்று. ஒரு முறை பூஜை அறைக்கு குழந்தையை அழைத்து சென்று உண்மையை சொல். நீ என் மகள் தானே என்றதும் அந்த பிஞ்சு குழந்தை தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தது. 

இதனை கண்ட அவள் தன் கணவன் வீடு திரும்பியதும் நடந்ததை சொன்னாள். இது நம்ப குழந்தை தானா ?  நான் தான் குழப்பி கொள்கிறேனே என்று கூறி அழுதாள் . கணவனும் "பல முறை நான் எடுத்து சொல்லியும் நீ கேட்பதில்லை. மன நல மருத்துவரிடம் சென்று வாங்கிய மாத்திரைகளை நீ எடுத்து கொள்ளவில்லை . இன்றாவது மருத்துவமனைக்கு வா" என்று கோபப்பட்டதும்  அவளும் வர சம்மதம் தெரிவித்தாள். மருத்துவமனைக்கு சென்று வீடு திரும்பியதும் ஒரு ஆச்சிரியமான சம்பவம் நடந்தது.

அவளின் ஆறு வயது மகள் "அம்மா ஒரு பேப்பர் கொடு என்றாள்"

அவள் அம்மாவும் ஒரு பேப்பரை எடுத்து வந்தாள்

ஒரு பேனாவை எடுத்து நான் சொல்லுவது போல எழுது என்றது குழந்தை 

அவள் அம்மாவும் இசைந்தாள்

முதலில் " நான் (அதாவது அந்த குழந்தை ) எங்கேயும் போகவில்லை " என்று எழுது என்றது குழந்தை 

அவளும் எழுதினாள்

அடுத்ததாக " அப்பாவும் எங்கேயும் போகவில்லை " என்று எழுது என்று சொன்னது குழந்தை 

அவளும் எழுதினாள்

அடுத்ததாக " நான் உனக்கு ஒரே குழந்தை. வேறு குழந்தை இல்லை " என்று எழுது என்றது குழந்தை 

மீண்டும் " வேற அப்பா இல்லை "என்று எழுது என்றது 

கடைசியாக " இந்த மாத்திரை உனக்கு வழிகாட்டாவிட்டால் இந்த பேப்பர் வழிகாட்டும் " என்று எழுது என்றது குழந்தை ( வழிகாட்டாவிட்டால் என்ற இந்த சொல்லை தான் குழந்தை சொன்னது. )

முடிந்ததா? ஒரு கோடு போடு என்றது குழந்தை 

அவள் அம்மாவும் செய்தால் 

பின்னர் அந்த குழந்தை " அம்மா உனக்கு எப்பலாம் குழப்பம் வருதோ இந்த பேப்பர்ர எடுத்து படி என்றது. மேலும் குழப்பம் வரும் போது அந்த கோட்டிற்கு கீழே என்ன குழப்பம் ? என்று எழுதிக்கொண்டே வா என்றது 

பின்னர் அந்த பேப்பரை எடுத்து நான்காக மடித்து ஒரு சின்ன பிளாஸ்டிக் பெட்டியில் வைத்து அவள் அம்மாவின் " Bedside table இல்" வைத்தது     

அந்த குழந்தை தன் தாய் மீது எவ்வளவு அன்பு செலுத்துகிறது ? தன் தாய்க்கு பிரச்சினை இருக்கின்றது என்பதையும் தெளிவாக உணர்து தன்னால் ஆனா உதவியை செய்ய நினைக்கிறது. 

அவள் தன் மன நல பிரச்சனையினால் என்னை நீ யார் ? என்று கேட்கும் பொழுது நான் எவ்வளவு பக்குவமாக நடந்து இருக்க வேண்டும். அதற்கு பதில் மருத்துவமனைக்கு வர வில்லையே என்று கோபபட்டேனே? இந்த சின்ன குழந்தையிடம் உள்ள பக்குவம் எனக்கு இல்லையே என்று வருத்தப்பட்டேன் 

ஆம். அது என் குழந்தை.

வாழ்கையை பற்றிய புதிய நம்பிக்கையையும் அந்த குழந்தை எனக்கு ஏற்படுத்தியது.     



    
  

புதன், 20 ஏப்ரல், 2011

நல்ல உதாரணமாக இருங்கள்

Butch O'Hare என்பவர் அமெரிக்க நாட்டு போர் விமானி.  இரண்டாம் உலக போர் நடந்தசமயம் அவர் எதிரி நாட்டின் (ஜப்பான் ) மீது தாக்குதல் தொடுக்க சென்ற விமானபடை அணிவகுப்புடன் புறப்பட்டு சென்றார். புறபட்ட பின் தான் தெரிந்தது, அவர் விமானத்தில் எரிபொருள் நிரப்புபவர்கள், எரிபொருளை நிரப்பாமல் மறந்து விட்டனர் என்று. எனவே தன தலைமை விமான படை அதிகாரிக்கு தகவல் கொடுத்தார். தலைமை அதிகாரி உடனே நீ புறப்பட்டு வந்த கப்பலுக்கே திரும்பி  செல். எரிபொருள் இல்லாமல் நீண்ட நேரம் போர் செய்ய இயலாது என்றார். Butch O'Hare வும் திரும்பி சென்றார். திரும்பி செல்லும் வழியில் அமெரிக்க கப்பலை தாக ஜப்பானிய போர் விமானங்கள் படை திரட்டி வருவதை கவனித்தார். அந்த படைகளின் மீது எதிர் தாக்குதல் தொடுக்க எந்த விமானமும் கப்பலில் இல்லை. Butch O'Hare தன்னந்தனியாக போராடுவது என்று முடிவெடுத்தார். அந்த போர் விமானங்கள் மீது தாக்குதலை தொடுத்தார். தன் உயிரை பற்றி கவலைபடாமல் போரிட்டு பல விமானங்களை சேத படுத்தினர். வழியிலேயே தாக்குதலை எதிர்பாக்காத ஜப்பானிய விமானகள் பல சேதம் அடைந்தன. Butch O'Hare வின் விமானமும் பெரும் சேதம் அடைந்தது. ஆனால் தாக்குதலை கண்டு ஜப்பானிய விமானங்கள் பின் வாங்கி சென்றன. நடந்த போர் நிகழ்வுகளை எல்லாம் அமெரிக்க விமானத்தில் இருந்த காமெராக்கள் புகைப்படமாக  பதிவு செய்திருந்தது.  Butch O'Hare வும் மிகவும் சிரமப்பட்டு விமானத்தை கப்பலில் தரை இறக்கினர். பின்னர் நடந்ததை சொன்னார். ஆனால் அவர் சொன்னதை விட விமானம் எடுத்த புகைப்படங்கள் எத்தகைய சாகசத்தை அவர் நிகழ்த்தி இருக்கிறார் என்று எடுத்து சொன்னது. அதனால் அவர் பேரும் புகழும் அடைந்தார். O'Hare விமான நிலையத்திற்கு இதன் காரணமாகவே இந்த பெயர் சூட்டப்பட்டது. 

இதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னாள் Al Capone என்ற சட்ட விரோத செயல்களை செய்யும் ஒருவருக்கு Easy Eddie என்பவர் வழக்கறிங்கராக இருந்தார். Easy Eddie தன் திறமையால் Al Capone னை பல வழக்குகளில் இருந்து விடுவித்தார். அதனால் Al Capone அவருக்கு பண் மடங்கு அதிக ஊதியத்தையும், இடம் வீடு போன்ற சொத்துக்களையும் வழங்கினார். Easy Eddie கு ஒரு மகன் இருந்தார். தன் மகன் மீது அதிக பாசத்தை வைத்திருந்த Easy Eddie தன் மகனுக்கு நல்ல படிப்பு, அருமையான கார், உடைகள், பணம் ஆகியவை கிடைக்குமாறு பார்த்துக்கொண்டார். மேலும் தன்னை போல இல்லாமல் மிகவும் நல்லவனாக தன் மகன் வாழவேண்டும் என்று நினைத்தார். பல நல்ல விசயங்களை போதித்தார். இருந்தாலும் தான் நல்லவனாக இல்லை என்பது அவரை உறுத்தியது. எனவே Al Capone னுக்கு எதிராக சாட்சி சொல்வது, அவர் செய்த குற்றங்களுக்கு தண்டனை வாங்கி தருவது என்று முடிவெடுத்தார். அது போலவே செய்தார். இதனால் கோபம் அடைந்த Al Capone , Easy Eddie யை ஆள் வைத்து சுட்டு கொன்றார்.

இந்த இருக்கு கதைகளும் சம்மந்தம் இல்லாதது போல தோன்றும். ஆனால் சம்மந்தம் உண்டு. இந்த Easy Eddie யின் மகன் தான்   Butch O'Hare 


வெள்ளி, 1 ஏப்ரல், 2011

லவ் வா பண்ற லவ்வு


எழுத்தாளர்கள், ஓவியர்கள் , கவிஞர்கள் ஆகியோருக்கு கற்பனை திறன் அதிகம் உண்டு. அவர்களுக்கு மட்டும் அல்ல அனைவருக்கும் இந்த கற்பனை திறன் பலன் அளிக்கும். வியாபாரத்தில் கூட கற்பனை திறன் அவசியம். வித்தியாசமாக யோசித்து அதுவரை 100௦௦ ml , 200௦௦ ml , 500௦௦ ml பாட்டில்களில் வந்த ஷாம்பூவை ,ஒரு ருபாய் ஷாம்பூ பாக்கெட்டை இல் விற்கலாம் என்ற சிந்தனை ரெங்கராஜன் என்பவருக்கு வந்தது. சைக்கிளில் கடை கடையாக சென்று கிராமப்புறத்தில் விற்கமுயற்சித்து பின்னர் அந்த சிந்தனை பெரியா வெற்றியை தந்தது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு நிகராக வளர்ந்து நிற்கும் நிறுவனமாக அவரது Cavin - Kare நிறுவனம் வெற்றிநடை போட்டுவருகிறது. பல புதிய கண்டுபிடிப்புகளும் வித்தியாசமான சிந்தனையின் பலனே. மாவு அரைக்கும் கல் உரலில் குழவியை கையால் சுற்றி மாவு அரிப்பது வழக்கம்.மாவு அரைக்கும் கிரைண்டரில் குழிக்கு பதில் அடியில் உள்ள பத்திரம் சுழலும். ஆற்றி யோசித்ததே இதற்கு காரணம்.இத்தகைய கற்பனை திறன் Lateral Thinking எனப்படும். கற்பனை திறனில் Creative thinking மற்றும் Logical thinking என்றவையும் அடங்கும். எதையும் காரண காரியங்களோடு பொறுத்தி ஆராய்வதே Logical thinking 

வெற்றி அடைபவர்கள்  வித்தியாசமான செயல்களை செய்வதில்லை. செய்யும் செயலையே வித்தியாசமாக செய்வார்கள் என்று ஷிவ் கேரா கூறுகிறார். 

என் ஆறு வயது குழந்தையின் கற்பனை திறனை பார்க்கும் பொழுது வியப்பும் பயமும் ஒன்றாக வருகிறது. அவளுக்கு தினமும் நான் ஒரு கதை தூங்க போகும் முன் சொல்லவேண்டும். சரக்கு தீர்ந்துவிட்டால் பெரும்பாலும் கற்பனை கதையை சொல்லுவேன். சில சமயம் அவள் " அப்பா ஒரு யானை, ஒரு சிங்கம் மற்றும் ஒரு மயில் வரும் மாதிரி ஒரு கடை சொல்லு என்றோ ஒரு Fan ஒரு Kattil ஒரு TV வரும் மாதிரி (அவைகள் பேசவேண்டும் ) என்றோ கூறுவாள். நானும் கஷ்ட்ப்பட்டு ஒரு கடை சொல்லுவேன்.                 

சில சமயம் நான் நீ பதில்லுக்கு ஒரு கதை சொல்லவேண்டும் என்பேன்.  ஒரு முறை அப்பா நான் உன்னை பற்றி ஒரு கதை சொல்கிறேன் என்றாள். சரி என்றேன் . ஒரு முறை ரமேஷ் (நான்), கணேஷ் (என் தம்பி) இருவரும் தங்கள் அப்பாவுடன் ஒரு துணி கடைக்கு சென்றனர். அங்கு ரமேஷ் ஒரு T-Shirt வாங்கினான். கணேஷுக்கும் அந்த T-ஷர்ட் பிடித்துவிட்டது. எனக்கு தான் அந்த T-ஷர்ட் வேண்டும் என்று கேட்டான். இருவரும் கடையிலேயே சண்டை போட்டுகொண்டனர். உடனே அவங்க அப்பா " இங்கே சண்டை போடவேண்டாம். வீட்டுக்கு போய் யாருக்கு அந்த T-shirt என்று முடிவு செய்வோம் என்றார். வீட்டுக்கு வந்தவுடன் அந்த T-shirt யை அவங்க அப்பா " இந்த த-ஷர்ட் உங்க இரண்டு பேருக்கும் கிடையாது. எனக்கு தான் என்று கூறிவிட்டு அவரே அணிந்துகொண்டார். ரமேஷும் கணேஷும் திரு திருவென முழித்தனர் என்று மழலை மொழியில் கதையை கூறி முடித்தாள். நகைசுவையுடன் கூடிய அவளின் கற்பனை திறனை என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை.  
   
நமது ஊடகங்களும் சமூகமும் எப்படி குழந்தைகளை பாதிக்கின்றது என்பதற்கு அவள் சொன்ன மற்றொரு கதை உதாரணம். ஒரு ஊருலமெரினா அப்படின்னு ஒரு பொண்ணு இருந்தா. அவங்க அம்மா அவளை மெரினா ரோசி அப்படின்னு தான் அவளை கூப்பிடுவாங்க. ஏனா அவ பிங்க் கலர்ல இருப்பா. ஒரு நாள் மெரினா ரோட்டில் நடந்து வந்துகிட்டு இருந்த போது எதிரே ரமேஷ் வந்தான். அவன் மெரினா கிட்ட போய் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்து " I Love You" என்றான். மெரினாவுக்கு பயங்கரமா கோபம் வந்துச்சி. அவ ரமேஷை "Hand bag " ஆள் அடித்து உன்னை எனக்கு பிடிக்கவில்லை. போய் விடு என்றாள்.
மறுநாள் மெரினா நடந்து வந்த போது மீண்டும் ரமேஷ் அவளிடம் போய் ஒரு "Bouquet "  கொடுத்து " I Love You" என்றான்.  மெரினா அந்த Bouquet வை காலில் போட்டு மிதித்தாள். அப்பறம் உனை எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டு சிரித்து கொண்டே சென்றாள்.

ரமேஷ் அழுதுகொண்டே வீட்டுக்கு சென்றான். அவன் அம்மா ஏன்டா அழுவறே என்று கேட்டாங்க. ரமேஷ் நடந்ததை சொன்னான். உடனே அவங்க அம்மா அவனை திட்டி ' உன்னை காலேஜ் கு படிக்க அனுப்புனா லவ் வா பண்ற லவ்வு. இந்த வயசுல என்ன லவ் வேண்டி கிடக்கு. போய் படிக்கிற வேலைய பாரு என்றாள். அதுலேர்து ரமேஷும் ஒழுங்கா படிக்க ஆரம்பிச்சான் ( அப்பாடி தப்பித்தேன் )       

இந்த கதையை கேட்டு சந்தோஷ படுவதா? இல்லை வருத்தபடுவதா ?

இப்பொழுது பள்ளிகூடங்களும் குழந்தைகளின் கற்பனை திறனை வளர்க்கும் பல விசயங்களை கற்று தருகின்றன. வீடு சுவர் முழுவதும் என் பெண் பள்ளியில் வரைந்த படங்களை, கற்று கொண்ட பாடங்களை வரையும் எழுதும் போது நான் தடுபதில்லை. நம் குழந்தைகள் நம்மைவிட புத்திசாலிகளாக இருப்பதை நாம் ஒத்துகொள்ளதான் வேண்டும். அவர்களின் அறிவு வளர்ச்சியை நாம் கட்டுபடுத்த முடியாது. ஆனால் எது நல்லது எது கேட்டது என்ற ஒழுக்க கல்வியை குழந்தைபருவம் முதலே எடுத்து சொல்ல வேண்டும். அதையும் கட்டாய படுத்தி திணிக்காமல் சொல்லும் விதத்தில் சொன்னால் நம் குழந்தைகள் அறிவுள்ளவைகலாக மட்டும் அல்லாமல் ஒழுக்கம் உள்ளவைகளாகும் வளரும். இந்த உலகம் போட்டி நிறைந்ததாகவும் வாழ்கை போராட்ட மயமாகவும் இருக்கும் சுழலில் டார்வின் நின் வலியதே வெல்லும் என்ற தத்துவத்தின் படி தவறான பாதைக்கு நம் குழந்தைகள் பிற்க்காலத்தில் செல்லாமல் தவிர்ப்பது நம் கடமையாகும். நல்ல சந்ததியினை உருவாக்குவதே நம் கடமை. 
குழந்தைகளிடம் ஆக்கபூர்வமான நேரத்தை செலவிடுங்கள். அவர்களின் திறமையையும் ஆர்வத்தையும் அறிந்துகொண்டு அதற்க்கு முக்கியத்துவம் கொடுங்கள். அவர்கள் புத்தி கூர்மையாக இருக்க உதவுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் குழந்தை எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அவ்வாறே நீங்களும் இருங்கள். அவர்கள் மகிழிசியாக இருக்கும் படி பார்த்து கொள்ளுங்கள். தடுக்கி விழுந்தல்லும் மீண்டும் மீண்டும் எழும் தைரியத்தை ஊட்டுங்கள் 

குழந்தைகளின் எதிர்காலமும் அவர்கள் வாழ போகும் உலகமும் அழகாக இருக்க இயன்றதை செய்வோம்    
   

செவ்வாய், 15 மார்ச், 2011

வாழு வாழவிடாதே

வாழு வாழவிடு. நல்ல குறிக்கோள். தான் வாழ பிறரை கெடுப்பது தான் அதிகம் நடந்துகொண்டு இருக்கிறது. இதை விட மோசமாகவும் ஒருவன் நடந்துகொள்ள முடியுமா? முடியும் என்பதற்கு என் நண்பனின் கதையே உதாரணம்.

என் நண்பன் ஒருவன் விவசாயத்தில் உழவியலில் முதுகலை பட்ட படிப்பு முடித்து, ஒரு உர நிறுவனத்தில் பணிபுரிந்து, பின் வேறு சில நிறுவங்களில் 
பணி புரிந்து விட்டு இப்பொழுது தற்காலிக பணி ஒன்றில் ( இந்த மாதத்துடன் பணி முடிகிறது. பிறகு வேறு வேலை தான் பார்க்க வேண்டும்.) இருக்கிறான் .

அவனுக்கு பாண்டிசேரி மாநிலத்தில் Junior Agronomist என்ற நிரந்தர பணி வாய்ப்பு கிடைக்க இருந்தது. அவன் பிழைப்பில் மண்ணை போட திண்டிவனத்தில் உதவி பேராசிரியராக வேலை பார்த்த ஒருவன் வந்தான். அவன் பெயர் ரகு( பெயர் மாற்ற பட்டுள்ளது ). உதவி பேராசிரயர் சம்பளத்தை விட இளநிலை உழவியல் பணிக்கு ருபாய் எட்டு ஆயிரம் சம்பளம் குறைவு. மேலும் Promotion வாய்ப்புகளும் இல்லை. இருந்தாலும் சொந்த ஊரில் பணிபுரிய வேண்டும் என்ற விருப்பத்தில் ரகுவும் Junior Agronomist பதவிக்கு விண்ணப்பித்தான். என் நண்பன் Forward caste . ரகு பட்டியல் இனத்தை சார்ந்தவன். (பட்ட படிப்பையே அர்ரியர்ஸ் வைத்து தட்டு தடுமாறி முடித்த அவன் உழவியலில் டாக்டர் பட்டமும் பெற்று இருந்தான். விவசாய கல்லூரியில் ஒரு வசதி. உள்ளே நுழைதுவிட்டால் போதும். மூன்று வருடங்களில் டாக்டர் பட்டம் உறுதி. அதற்கு மேல் இழுத்தால் தங்களுக்கு கேட்ட பெயர் என்று உங்கள் Chariman அவர்களே அனைத்தையும் பார்த்து கொள்வார். ஆராய்சிக்கான தலைப்பும், ஆராய்ச்சியும்  முன்பே செய்த ஒரு ஆராய்ச்சியில் சிறு மாறுதலுடன் இருக்கும் ( 2 - 5%  ). நான் இங்கு அவன் படிப்பு திறமையை மட்டும் கோடிட்டு காட்ட விரும்பினேன். அது கண்டிப்பாக ஜாதியின் அடிப்படையில் அல்ல. நன்றாக படிக்கும் வேறு சிலரையும் எனக்கு தெரியும்.      

ரகு போட்டிக்கு வந்ததால் என் நண்பனுக்கு வாய்ப்பு பறிபோனது. டாக்டர் பட்டமும் ஜாதியும் உதவி செய்ய, ரகுவிற்கு எளிதில் வேலை கிடைத்தது.  எனக்கு ரகுவுடன் அதிகமாக பழக்கம் இல்லை. ஆனால் அவனிடம் நெருக்கமாக இருந்த சிலர், இந்த வாய்ப்பை என் நண்பனுக்க விட்டு கொடுக்கும் படி கேட்டிருந்தனர். அனால் என் நண்பன் நேரடியாக கேட்கவில்லை.
இருந்தாலும் ரகு விட்டு கொடுக்கவில்லை. மேலும் என் நண்பனுக்காக பேசியவர்களிடம் ரகு சரியாக பேசுவது இல்லையாம்.

என் நண்பன் நாற்பது வயதாகியும் சரியான பணி வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறான். ஆனால் ரகுவோ நல்ல பணியில் இருந்துவிட்டு சொந்த ஊரில் பணி புரிய வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக,  அதை விட கீழான பணிக்கு விண்ணப்பித்து சேர்ந்து விட்டான். ரகுவை பொறுத்த வரை வேலை கூட முக்கியமில்லை. ஏற்கனவே பெட்ரோல் பங்க், பஸ் போன்ற தொழில்களும் அவன் குடும்பத்திற்கு உண்டு. அவன் தாய் ஒரு முன்னால் MLA .     

வேறு என்ன வேண்டும் ? ஆனாலும் அடுத்தவன் வாழ உதவ மனசு வரவில்லை.

சரி என் நண்பன் யார் என்று கேட்கவில்லையே? ஜாதிகள் இருக்குதடி பாப்பா என்ற ப்ளாகில் நான் குறிப்பிட்ட பாவப்பட்ட ஜீவன் ஆன ராகுல் தான் அவன்.

அவன் வாழ்க்கையில் நடந்த ஒரே நல்ல விஷயம் அவன் மனைவி. அவனது எல்லா கஷ்டங்களுக்கும் தோல் கொடுக்கும் துணைவி. M.phil ( gold medal in Physics ) 
அவருக்கும் கூட நல்ல பணி கிடைகாதது கொடுமை.

ஏன் சிலருக்கு ( நல்லவர்களுக்கு ) வாழ்க்கை இப்படி இருக்கிறது 
          

செவ்வாய், 8 மார்ச், 2011

ஜாதிகள் இருக்குதடி பாப்பா -2

மதுரை மாவட்டத்தில் கிராமபுரத்தில் உள்ள ஒரு அரசு உயர் நிலை பள்ளியில் நடந்த சம்பவம். அந்த பள்ளியை சார்ந்த ஆசிரியர் ஒருவரிடம் பேசிகொண்டிருந்த பொழுது வருத்ததுடன் இந்த செய்தியை பகிர்ந்து கொண்டார். ஆறாம் வகுப்பு பாட புத்தகம் ஒன்றில் அம்பேத்கர் படமும் தேவர் படமும் இருப்பதாகவும், ஒரு குறிப்பிட்ட ஜாதியை சார்ந்த மாணவர்கள் அம்பேத்கர் படத்தின் மீது காம்பஸ் முனையை கொண்டு குத்தி படத்தை கிழித்து விடுவதாகவும் கூறினார். இதை  போல தேவர் படத்தை வேறு ஜாதியை சார்ந்த மாணவர்கள் தங்கள் புத்தகத்தில் கிழித்து வைத்துள்ளதாகவும் கூறினார்.

பள்ளி சென்று படிப்பது எதற்கு? பள்ளி கூடங்கள் நல்லோழுகங்களை கற்று தரும் கூடாரங்களாக இருக்க வேண்டும் என்பதற்காக. ஆனால் ஜாதி வெறியை போக்க வேண்டிய நம் சமுதாயம், அதனை பல காரணங்களுகாக ஊதி பெரிது படுத்திக்கொண்டே வருகிறது. தங்களுடைய சுயநலத்திற்காக அப்பாவி மக்களை ஜாதி அமைப்புகள் மற்றும் ஜாதி கட்சிகள் பயன் படுத்திகொள்கிறது. சிறுவர்களின் நெஞ்சும் ஜாதி என்னும் நஞ்சால் மாசுபட்டுள்ளது.

இனி எத்தனை பெரியார் வந்தால் இந்த நிலைமை மாறும்? நம் அரசாங்கம் இந்த ஜாதிய வேறுபாடுகளை குறைக்கவோ அல்லது தடுக்கவோ முயற்சிக்குமா? பள்ளி கல்வி துறையாவது வருங்கால சந்ததியினர் ஒருங்கினைந்த சமுதாயமாக வளர வழி வகுக்குமா?
மனித மனம் ஏன் கூறுகிகொண்டே போகிறது ? படிக்க படிக்க அறிவு வளர வளர சுயநலமும் கூட வளருவதை தான் காண முடிகிறது. அறிவு அழிவுக்கு தான் துணை போகிறது. ஒழுக்கம் சார்ந்த அறிவை போதிக்க நம் கல்விக்கூடங்களும்  ஏன் பெற்றோரும் தவறிவிடுகிறோம். பொருள் ( Material ) சார்ந்த வாழ்க்கைக்கு பிள்ளைகளை தயார் படுத்தும் நாம் அறம் சார்ந்த வாழ்க்கைக்கு அவர்களை தயார் படுத்துவதில்லை. வலியதே வெல்லும் என்னும் Charles Darwin இன் தத்துவும் மிருகங்களை விட மனிதர்களுக்கு மிகவும் பொருந்துகிறது. ஒரு மனிதன் தான் வளர, சக மனிதனை அடக்கி வாழவே விரும்புகிறான்.

        

ஜாதிகள் இருக்குதடி பாப்பா -1

நான் கல்லூரியில் விவசாய பட்ட படிப்பு படிக்கும் பொழுது, தாய் தந்தையை தன் சிறு வயதிலேயே இழந்த ராகுல் ( பெயர் மாற்றபட்டுள்ளது) என்ற மாணவனும் உடன் படித்தான். தன் தாய் மாமன் தான் தன்னை வளர்த்து ஆளாக்கி படிக்க வைப்பதாகவும், அதற்காக தான் மிகவும் நன்றி கடன் பட்டிருபதகவும் அடிக்கடி கூறுவான்.

இந்த நிலையில் விவசாய பட்ட படிப்பின் ஒரு அங்கமாக, மாணவர்கள் அனைவரும், ஒரு மாத காலம் ஏதேனும் ஒரு கிராமத்தில் தங்கி, அவர்களின் சாகுபடி முறைகள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை பற்றி ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை கல்லூரிக்கு அளிக்க வேண்டும்.

எனக்கும் நடராஜன் என்ற என் நண்பனுக்கும் பாண்டிசேரி அருகில் உள்ள ஒரு கிராமத்திற்கு செல்ல வேண்டும் என கல்லூரியில் தகவல் தெரிவிக்க பட்டது. கிராமத்தின் பெயரை கேட்டவுடன் ராகுல் எங்களிடம் வந்து அது தான் தன் சொந்த கிராமம் எனவும், முன்பு அவர்களுக்கு அங்கே விவசாய நிலம் இருந்ததாகவும் தெரிவித்தான். ராகுலுக்கு வேறு கிராமம் ஒதுக்க பட்டு இருந்தது.

நானும் என் நண்பன் நடராஜனும் அந்த கிராமத்தில் இருந்த பொழுது வீடு வீடாக சென்று சில அடிப்படை தகவல்களை சேகரித்தோம். குடும்ப அங்கத்தினர், அவர்கள் வைத்திருக்கும் நில பரப்பு, சாகுபடி செய்யும் பயிர்கள், வருட வருமானம் போன்ற தகவல்களை எடுத்தோம்.

அவ்வாறு ஒரு வீட்டிற்கு சென்ற பொழுது ஒரு பெண்மணி கதவை திறந்தார். நாங்கள் வந்த நோக்கத்தை அவரிடம் தெரிவித்தோம். காரைகாலில் உள்ள விவசாய கல்லூரியில் படிப்பதாக நாங்கள் கூறிய உடனேயே அவர் கண்கள் கலங்கியது. நாங்கள் எதுவும் கேட்காமலேயே அவர் தன் மகன் காரைகாலில் உள்ள ஏதோ ஒரு கல்லூரியில் தான் படிபதாகவும், அவனை பார்த்து பல வருடங்கள் ஆவதாகவும் கூறினார்.

எனக்கு அந்த பெண்மணியை எங்கோ பார்திருபதாக திடீர் என தோன்றியது. குறிப்பாக அவரது கண்கள் நன்கு பரிசியமனதாக தோன்றியது. எனக்கு ராகுலின் கண்கள் நினைவிற்கு வந்தது. ராகுல் நல்ல கருப்பு. இந்த பெண்மணியோ நல்ல நிறம். ஆனால் முக ஒற்றுமை அப்படியே இருந்தது.
நான் அந்த பெண்மணியிடம் உங்கள் மகனின் பெயர் ராகுல் லா என்றேன்.

அந்த பெண்மணியின் முகத்தில் மகிழ்ச்சி. அவனை உங்களுக்கு தெரியுமா, அவன் எப்படி இருக்கிறான் என்றார். நான் பின்பு அவன் எங்களுடன் தான் படிக்கிறான் என்றும் நன்றாக இருக்கிறான் என்றும் சொன்னேன்.

தாய் தந்தை உயிரோடு இருக்கும் பொழுதே இறந்து விட்டதாக ஏன் ராகுல் சொல்லிகொண்டிருகிரான் என்று நானும் என் நண்பனும் வியந்தோம்.

கல்லூரிக்கு சென்றவுடன் ராகுல் அவனாகவே எங்களிடம் வந்து எங்கள் ஊர் எப்படி, யார் யாரை பார்த்திர்கள் என்று கேட்டான்.

என் அம்மாவை பார்த்தீர்களா என்று கேட்கவேண்டியதுதானே என்று கோபத்துடன் நான் சொன்னேன்.

இப்பொழுது அவன் கண்ணில் நீர். பின்னர் மெதுவாக அவன் உண்மையை கூறினான். ராகுல் லுக்கு நினைவு தெரியும் முன்னே அவன் தந்தை இறந்துவிட்டதாக கூறினான். இளம் விதவையான அவன் தாய் தங்கள் ஜாதியை விட கீழான ஜாதியை சார்ந்த ஒருவரை மறுமணம் செய்துகொண்டதாக தெரிவித்தான். அது காதல் திருமணம். Forward Caste ஐ சேர்ந்த அவன் தாய் MBC யை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டது அவன் குடும்பத்திற்கு பிடிக்கவில்லை. அதனால் குழந்தையை தாயிடம் இருந்து பிரித்து, அவன் தாய் மாமன் வளர்த்துள்ளார்.

எதற்கு ஜாதி மட்டும் காரணமா இல்லை குடும்ப சொத்துமா என்று தெரியவில்லை. ராகுலுக்கு விவரம் தெரிந்த பொழுது தாய் உயிரோடு இருக்கும் செய்தி தெரிய வந்தது. இதனால் மனநிலை பாதிக்கப்பட்டு சில களம் தான் சிகச்சை எடுத்துகொண்டதாக ராகுல் சொன்னான். தன்னை வளர்த்து படிக்க வைக்கும் காரணத்தினால் தாய் மாமன் சொல்லை தட்ட முடிவதில்லை என்று சொன்னான்.

விடை தெரியாத கேள்விகள் ?

ராகுலை பார்க்கும் பொழுது அவன் தன் தாயின் இரண்டாம் கணவருக்கு பிறந்ததை போல எனக்கு தோன்றியது. இதனை அவனிடம் கேட்க எனக்கு தைரியம் இல்லை. மேலும் தாய் தவறு எதுவும் செய்யவில்லை. அவரை மணந்து கொண்டவரும் அவரை நன்றாக தான் கவனித்து கொண்டுள்ளார். அப்படியே தாய் தவறு செய்து இருந்தாலும் குழந்தையை ஏன் பிரிக்க வேண்டும் ? ஜாதி பிரச்னை மட்டும் தான் காரணமா ? இல்லை இந்த பிரச்சனைக்கு நியாயமான காரணம் ஏதேனும் உண்டா ?


ஆனால் பாதிக்கபட்டது தாயும் செயும் தான்

தாயும் மகனையும் பிரித்த இந்த சமுதாயம் என்ன சமுதாயம்

வெள்ளி, 4 மார்ச், 2011

குழந்தை வளர்ப்பு -2

எதையும் எதிர்பாக்காமல் அன்பு செலுத்துவது குழந்தை மட்டும் தான். தாயின் அன்பில் கூட எதிர்பார்ப்பு இருக்கிறது. எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில் மூன்று குழந்தைகள். மூத்த இரண்டும் பெண் குழந்தை. கடை குட்டி யாக ஆண் குழந்தை. தாய்க்கு மற்ற இரண்டு பெண் குழந்தைகளை விட தன் மகன் மீது பாசம் அதிகம். பொத்தி பொத்தி வளர்த்தார். அந்த மகனும் தாயின் கூடுதல் அரவணைபினால், வெளிஉலகம் தெரியாமல் வளர்ந்தான். தான் வெளியில் சந்திக்கும் விஷயங்கள் அனைத்தையும், தன் தாயிடம் கூறிவிட்டு தான் மறு வேலை பார்பான். தாயும் தனக்கு தெரிந்த அறிவுரைகளை கூறுவார். அம்மா பிள்ளை ஆக வளர்ந்த அவனின்  குணத்திலும். செயலிலும் நடையிலும் பெண் தன்மை கூடியது.
அவனும் கல்லூரியில் வேதியியல் முதுநிலை பட்டபடிப்பை முடித்து ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தான். அவன் பள்ளிக்கு செல்லும் நாட்களில் அவனுக்கு இன்னும் கவனிப்பு கூடியது. அவனை தம்பி என்று தான் அவன் தாய் அழைபார். முழு சோம்பேறி ஆகிய அவனுக்கு, காலை மதியம் ஆகிய இரண்டு நேரத்திற்கும் தனியாக சமைத்து அவர் தாயார் தருவார். அவன் வீட்டை விட்டு காலடி எடுத்து வைக்கும் முன் ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு, சப்போட்டா, மாதுளை போன்ற ஏதேனும் ஒரு பழரசத்தை அவனுக்கு தருவார். மேலும் பள்ளியில் பருகவும் பாட்டிலில் தருவார். பாடம் எடுக்கும் பொழுது களைப்பாக இருக்கிறது என்று மகன் கூறியதால் இந்த சிறப்பு கவனிப்பு. 
அந்த வீட்டில் இருக்கும் அவன் அக்காள் குழதைக்கு கூட பழரசம் கிடைக்காது.

பின்னர் அவனுக்கு அரசாங்க வேலையும் கிடைத்தது. திருமணமும் நடந்தது. 
அம்மா பிள்ளை ஆன அவன் தன் தாய் பேச்சை கேட்டு மனைவியை வரதட்சணை கேட்டு துன்புறுத்தினான். ஒரு நாள் இரவு முழுவதும் பேசி பேசியே வார்த்தையால் சுட்டதால் அவன் மனைவிக்கு வெறுப்பு வந்து, அதிகாலையில் யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறிவிட்டால் . அவள் தன் பெற்றோர் வீட்டுக்கும் செல்லவில்லை. காலையில் குடும்பமே புது மருமகளை காணாமல் தேடியது. ஊர் முழுவதும் தேடி பார்த்தும் அவள் கிடைக்கவில்லை. பயந்து போன அம்மா பிள்ளை, தன் தாயை திட்டினான். உன்னால் தானே இவளவும் நடந்தது என்று குறை கூறினான். பெண் வீட்டில் இல்லை என்று கேள்விப்பட்ட பெண்ணின் பெற்றோரும், மருமகன் வீட்டுக்கு வந்து அவர்களை மிரட்ட ஆரம்பித்தனர். போலீசில் புகார் செய்வோம் என்று கூறியதால் நம் நாயகனுக்கு அழுகையே வந்துவிட்டது. ஒரு வழியாக புது பெண், ஒரு உறவினர் வீட்டில் தஞ்சம் அடைத்தது தெரிந்தது . பின்னர் பெண்ணை சமாதானபடுத்தி அழைத்து வந்தான் நம் நாயகன்.
அவன் தாயுக்கும் சில நாட்களில் உடல் நிலை கோளறு ஏற்பட்டது. பயந்து போன நம் நாயகனும் இப்பொழுதெல்லாம் மனைவியை திட்டுவதில்லை. பிள்ளை தன் பேச்சை மட்டும் எப்பொழுதும் கேட்க வேண்டும் என்ற சுயநலத்தினால் பார்த்து பார்த்து வளர்த்த தாய்க்கும் வேறு வழி இல்லை. தன் வாலை சுருட்டிக்கொண்டு இருக்க வேண்டியதாகிவிட்டது.

சூழ்நிலையை புரிந்து கொண்ட மருமகள் தனிக்குடித்தனம் போகவேண்டும் என்ற கோரிக்கையை வைத்தாள்.      
வேறு ஊரில் பணி புரிய நேரத்தால் பிள்ளை தனி குடிதனம் போக அதையே சாக்காக அவன் பயன்படுத்தி கொண்டான் 

அவன் தாய் இப்போழுதும் மகன் புராணம் தான் பேசிகொண்டிருப்பாள். தன்  மகனை போல உலகத்தில் யாரும் உண்டா என்று.

வீடு வேலை ஒன்றையும் இது வரை செய்யாத நம் நாயகன், மளிகை பொருட்கள், காய்கறிகள் வாங்க பழகி கொண்டுருக்கிறான் . ஆனால் இன்னும் சில காரியங்களை செய்ய தன் தந்தையை தொல்லைபடுத்திகொன்டுதான் இருக்கிறான்.

அரசு அலுவலகத்தில் பணி புரியும் அவனை தங்கள் சொந்த வேளைகளுக்கு மேல் அதிகாரிகள் பயன்படத்தும் பொழுது நம் நாயகனுக்கு எரிச்சல் தாங்கமுடிவதில்லை. வேலையை விட்டு விடபோவதாக அடிகடி நம் நாயகன்
கூறி கொண்டிருக்கிறான்.

பாசத்தை கொட்டுவதாக நினைத்து தன்னம்பிக்கை, தைரியம் மற்றும் வாழ்வின் உண்மை சுழலை எதிர்கொள்ளும் பக்குவம் இல்லாமல் குழந்தைகளை வளர்காதிரகள் .

அது உங்களுக்கும் நல்லதல்ல உங்கள் குழந்தைக்கும் நல்லதல்ல 


செவ்வாய், 1 மார்ச், 2011

குழந்தை வளர்ப்பு -1 குழந்தைகளும் ஊடகங்களும்

மதுரை மாநகரில் ஒரு பிரபல ஆங்கில பள்ளி. LKG மற்றும் UKG படிக்கும் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிகொடுக்கும் ஆசிரியர்களை நிர்வாகம் குழந்தைகளை அடிக்க கூடாது என்றும், அவர்கள் சேட்டை செய்தால் வார்த்தையால் கண்டிக்க மட்டும் செய்ய வேண்டும் என அடிகடி கூறுவது உண்டு. இது போல் ஒரு நாள் பேசிய பொழுது நிர்வாகம்,  கோபம் வந்தால் கைகளை பின்னால் கட்டி கொண்டு குழந்தைகளிடம் பேசவேண்டும் என்றும், குழந்தைகளை அடித்து பிரச்னை வந்தால், நிர்வாகம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது என்றும் ஆசிரியர்கள் தான் முழு பொறுப்பு என்றும் கூறினார்கள்.

இது நடந்த மறுநாள், மிகவும் சேட்டை செய்த ஒரு LKG குழந்தையை ஆசிரியர் ஒருவர் கண்டித்து இருக்கிறார். சிறிது நேரம் கழித்து மற்றொரு குழந்தை ஆசிரியரிடம் வந்து ஆங்கிலத்தில் " Mam , இந்த பையன் உங்களை கொலை செய்ய திட்டமிடுகிறான்" என்று சொன்னது.

அதிர்ச்சி அடைந்த ஆசிரியர், என்ன நடந்தது என்று கேட்டார். ஆசிரியர் திட்டியதால் கோபம் அடைந்த அந்த குழந்தை தன் சக வகுப்பு தோழர்களிடம் " வாங்கடா, மாம் என்னை ரொம்ப திட்டிவிட்டார். நாம் அவரை கட்டி போட்டு துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து விட்டு வகுப்பை விட்டு தப்பி செல்வோம் என்று சொல்லிருக்கிறான்.   மிகவும் அதிர்ச்சி அடைத்த அந்த ஆசிரியர் தன் சக தோழிகளிடம் இதனை சொல்லிவிட்டு " இந்த காலத்து பசங்க நம்மை கொலை செய்தால் கூட நாம் கையை பின்னால் கட்டி கொண்டு தான் இருக்க வேண்டும் என்று சொல்லிருக்கிறார்.

திரைப்படங்களும் ஊடகங்களும் குழந்தைகளை வெகுவாக பாதிக்கின்றன. குழந்தைகள் எதிரில் வன்முறை சார்ந்த திரைபடங்களையோ அல்லது செய்திகளையோ பெற்றோர் பார்க்க கூடாது. மேலும் காதல் மற்றும் செக்ஸ் சம்மந்தப்பட்ட காட்சிகளையும் பார்ப்பதை தவிர்க்கவேண்டும். சமுதாயம் வேகமாக மாறி கொண்டு வருகிறது. தொலைதொடர்பு வசதிகளும், சமுக வலை தளங்களும், பல விசயங்களை எளிதில் மக்களை வந்தடைய செய்கிறது. நம் எதிர்கால சந்ததியர்களின் காலசாரத்தை முடிவு செய்யும் சக்தி அவைகளிடம் உள்ளது. நம்மால் முடிந்த நல்லொழுக்கங்களை குழந்தைகளுக்கு போதிப்போம்.

அதே பள்ளியில் மற்றும் ஒரு பெண் குழந்தை (LKG ) தன் சக தோழியிடம் ' காதலர் தினம் ஆகிய இன்று உன் பெற்றோர் என்ன வண்ணத்தில் உடை அணிந்து சென்றார்கள் என கேட்டு இருக்கிறது.

இது எப்படி இருக்கு ?