மதுரை மாநகரில் ஒரு பிரபல ஆங்கில பள்ளி. LKG மற்றும் UKG படிக்கும் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிகொடுக்கும் ஆசிரியர்களை நிர்வாகம் குழந்தைகளை அடிக்க கூடாது என்றும், அவர்கள் சேட்டை செய்தால் வார்த்தையால் கண்டிக்க மட்டும் செய்ய வேண்டும் என அடிகடி கூறுவது உண்டு. இது போல் ஒரு நாள் பேசிய பொழுது நிர்வாகம், கோபம் வந்தால் கைகளை பின்னால் கட்டி கொண்டு குழந்தைகளிடம் பேசவேண்டும் என்றும், குழந்தைகளை அடித்து பிரச்னை வந்தால், நிர்வாகம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது என்றும் ஆசிரியர்கள் தான் முழு பொறுப்பு என்றும் கூறினார்கள்.
இது நடந்த மறுநாள், மிகவும் சேட்டை செய்த ஒரு LKG குழந்தையை ஆசிரியர் ஒருவர் கண்டித்து இருக்கிறார். சிறிது நேரம் கழித்து மற்றொரு குழந்தை ஆசிரியரிடம் வந்து ஆங்கிலத்தில் " Mam , இந்த பையன் உங்களை கொலை செய்ய திட்டமிடுகிறான்" என்று சொன்னது.
அதிர்ச்சி அடைந்த ஆசிரியர், என்ன நடந்தது என்று கேட்டார். ஆசிரியர் திட்டியதால் கோபம் அடைந்த அந்த குழந்தை தன் சக வகுப்பு தோழர்களிடம் " வாங்கடா, மாம் என்னை ரொம்ப திட்டிவிட்டார். நாம் அவரை கட்டி போட்டு துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து விட்டு வகுப்பை விட்டு தப்பி செல்வோம் என்று சொல்லிருக்கிறான். மிகவும் அதிர்ச்சி அடைத்த அந்த ஆசிரியர் தன் சக தோழிகளிடம் இதனை சொல்லிவிட்டு " இந்த காலத்து பசங்க நம்மை கொலை செய்தால் கூட நாம் கையை பின்னால் கட்டி கொண்டு தான் இருக்க வேண்டும் என்று சொல்லிருக்கிறார்.
திரைப்படங்களும் ஊடகங்களும் குழந்தைகளை வெகுவாக பாதிக்கின்றன. குழந்தைகள் எதிரில் வன்முறை சார்ந்த திரைபடங்களையோ அல்லது செய்திகளையோ பெற்றோர் பார்க்க கூடாது. மேலும் காதல் மற்றும் செக்ஸ் சம்மந்தப்பட்ட காட்சிகளையும் பார்ப்பதை தவிர்க்கவேண்டும். சமுதாயம் வேகமாக மாறி கொண்டு வருகிறது. தொலைதொடர்பு வசதிகளும், சமுக வலை தளங்களும், பல விசயங்களை எளிதில் மக்களை வந்தடைய செய்கிறது. நம் எதிர்கால சந்ததியர்களின் காலசாரத்தை முடிவு செய்யும் சக்தி அவைகளிடம் உள்ளது. நம்மால் முடிந்த நல்லொழுக்கங்களை குழந்தைகளுக்கு போதிப்போம்.
அதே பள்ளியில் மற்றும் ஒரு பெண் குழந்தை (LKG ) தன் சக தோழியிடம் ' காதலர் தினம் ஆகிய இன்று உன் பெற்றோர் என்ன வண்ணத்தில் உடை அணிந்து சென்றார்கள் என கேட்டு இருக்கிறது.
இது எப்படி இருக்கு ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக