எதையும் எதிர்பாக்காமல் அன்பு செலுத்துவது குழந்தை மட்டும் தான். தாயின் அன்பில் கூட எதிர்பார்ப்பு இருக்கிறது. எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில் மூன்று குழந்தைகள். மூத்த இரண்டும் பெண் குழந்தை. கடை குட்டி யாக ஆண் குழந்தை. தாய்க்கு மற்ற இரண்டு பெண் குழந்தைகளை விட தன் மகன் மீது பாசம் அதிகம். பொத்தி பொத்தி வளர்த்தார். அந்த மகனும் தாயின் கூடுதல் அரவணைபினால், வெளிஉலகம் தெரியாமல் வளர்ந்தான். தான் வெளியில் சந்திக்கும் விஷயங்கள் அனைத்தையும், தன் தாயிடம் கூறிவிட்டு தான் மறு வேலை பார்பான். தாயும் தனக்கு தெரிந்த அறிவுரைகளை கூறுவார். அம்மா பிள்ளை ஆக வளர்ந்த அவனின் குணத்திலும். செயலிலும் நடையிலும் பெண் தன்மை கூடியது.
அவனும் கல்லூரியில் வேதியியல் முதுநிலை பட்டபடிப்பை முடித்து ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தான். அவன் பள்ளிக்கு செல்லும் நாட்களில் அவனுக்கு இன்னும் கவனிப்பு கூடியது. அவனை தம்பி என்று தான் அவன் தாய் அழைபார். முழு சோம்பேறி ஆகிய அவனுக்கு, காலை மதியம் ஆகிய இரண்டு நேரத்திற்கும் தனியாக சமைத்து அவர் தாயார் தருவார். அவன் வீட்டை விட்டு காலடி எடுத்து வைக்கும் முன் ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு, சப்போட்டா, மாதுளை போன்ற ஏதேனும் ஒரு பழரசத்தை அவனுக்கு தருவார். மேலும் பள்ளியில் பருகவும் பாட்டிலில் தருவார். பாடம் எடுக்கும் பொழுது களைப்பாக இருக்கிறது என்று மகன் கூறியதால் இந்த சிறப்பு கவனிப்பு.
அந்த வீட்டில் இருக்கும் அவன் அக்காள் குழதைக்கு கூட பழரசம் கிடைக்காது.
பின்னர் அவனுக்கு அரசாங்க வேலையும் கிடைத்தது. திருமணமும் நடந்தது.
அம்மா பிள்ளை ஆன அவன் தன் தாய் பேச்சை கேட்டு மனைவியை வரதட்சணை கேட்டு துன்புறுத்தினான். ஒரு நாள் இரவு முழுவதும் பேசி பேசியே வார்த்தையால் சுட்டதால் அவன் மனைவிக்கு வெறுப்பு வந்து, அதிகாலையில் யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறிவிட்டால் . அவள் தன் பெற்றோர் வீட்டுக்கும் செல்லவில்லை. காலையில் குடும்பமே புது மருமகளை காணாமல் தேடியது. ஊர் முழுவதும் தேடி பார்த்தும் அவள் கிடைக்கவில்லை. பயந்து போன அம்மா பிள்ளை, தன் தாயை திட்டினான். உன்னால் தானே இவளவும் நடந்தது என்று குறை கூறினான். பெண் வீட்டில் இல்லை என்று கேள்விப்பட்ட பெண்ணின் பெற்றோரும், மருமகன் வீட்டுக்கு வந்து அவர்களை மிரட்ட ஆரம்பித்தனர். போலீசில் புகார் செய்வோம் என்று கூறியதால் நம் நாயகனுக்கு அழுகையே வந்துவிட்டது. ஒரு வழியாக புது பெண், ஒரு உறவினர் வீட்டில் தஞ்சம் அடைத்தது தெரிந்தது . பின்னர் பெண்ணை சமாதானபடுத்தி அழைத்து வந்தான் நம் நாயகன்.
அவன் தாயுக்கும் சில நாட்களில் உடல் நிலை கோளறு ஏற்பட்டது. பயந்து போன நம் நாயகனும் இப்பொழுதெல்லாம் மனைவியை திட்டுவதில்லை. பிள்ளை தன் பேச்சை மட்டும் எப்பொழுதும் கேட்க வேண்டும் என்ற சுயநலத்தினால் பார்த்து பார்த்து வளர்த்த தாய்க்கும் வேறு வழி இல்லை. தன் வாலை சுருட்டிக்கொண்டு இருக்க வேண்டியதாகிவிட்டது.
சூழ்நிலையை புரிந்து கொண்ட மருமகள் தனிக்குடித்தனம் போகவேண்டும் என்ற கோரிக்கையை வைத்தாள்.
வேறு ஊரில் பணி புரிய நேரத்தால் பிள்ளை தனி குடிதனம் போக அதையே சாக்காக அவன் பயன்படுத்தி கொண்டான்
அவன் தாய் இப்போழுதும் மகன் புராணம் தான் பேசிகொண்டிருப்பாள். தன் மகனை போல உலகத்தில் யாரும் உண்டா என்று.
வீடு வேலை ஒன்றையும் இது வரை செய்யாத நம் நாயகன், மளிகை பொருட்கள், காய்கறிகள் வாங்க பழகி கொண்டுருக்கிறான் . ஆனால் இன்னும் சில காரியங்களை செய்ய தன் தந்தையை தொல்லைபடுத்திகொன்டுதான் இருக்கிறான்.
அரசு அலுவலகத்தில் பணி புரியும் அவனை தங்கள் சொந்த வேளைகளுக்கு மேல் அதிகாரிகள் பயன்படத்தும் பொழுது நம் நாயகனுக்கு எரிச்சல் தாங்கமுடிவதில்லை. வேலையை விட்டு விடபோவதாக அடிகடி நம் நாயகன்
கூறி கொண்டிருக்கிறான்.
கூறி கொண்டிருக்கிறான்.
பாசத்தை கொட்டுவதாக நினைத்து தன்னம்பிக்கை, தைரியம் மற்றும் வாழ்வின் உண்மை சுழலை எதிர்கொள்ளும் பக்குவம் இல்லாமல் குழந்தைகளை வளர்காதிரகள் .
அது உங்களுக்கும் நல்லதல்ல உங்கள் குழந்தைக்கும் நல்லதல்ல
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக