பிரபலமான இடுகைகள்

தத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 30 மார்ச், 2011

Paulo Coelho வின் பொன்மொழிகள் -1



Paulo Coelho வின் பொன்மொழிகள் -1 

  • நீங்கள் வேண்டியதை அடைவதற்கு உறுதியாக முயற்சித்தால் இந்த அண்டமே துணையாக இருக்கும்.

  • கனவு காணும் வாய்ப்பு இருப்பதால் தான், இந்த வாழ்கையே சுவாரிசயமாக இருக்கிறது  

  • ஒருவர் மீது அன்பு செலுத்துவதால் தான் நீங்கள் அன்பாக இருகின்றீர்கள். அன்பு செலுத்த காரணம் எதுவும் தேவையில்லை 

  •   கனவை அடைவதற்கு தடையாக இருப்பது ஒன்று தான். தோற்றுவிடுவோமோ என்ற பயம் தான் அது.

  • எல்லோரும் அடுத்தவர்கள் எப்படி வாழவேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். தான் எப்படி வாழ வேண்டும் என்று தான் யாருக்கும் தெரிவதில்லை.

  •   ஏழு முறை விழுந்து எட்டு முறை எழுவது தான் வாழ்கையின் ரகசியம்
  
  • உங்கள் இதயம் சொல்வதை கேளுங்கள். என்னென்றால் அங்கு தான் வாழ்கையின் பொக்கிஷம் இருக்கிறது  

  • நான் ஏன் கடந்தகாலத்திலும் எதிர்காலத்திலும் வாழவில்லை. நான் நிகழ்காலத்தில் தான் விருப்பமுடையவனாக இருக்கிறேன். நீயும் உன் நிகழ்காலத்தில் வாழ்தால் மகிழ்ச்சியுடன் இருப்பாய். வாழ்கையே ஒரு திருவிழாவாக, கொண்டாட்டமாக இருக்கும். ஏனென்றால் வாழ்கை என்பது நாம் வாழும் இந்த நொடி தான்.

  • வேகமாக செயல்படுவதில் மகிழ்ச்சியை காண முயற்சி செய்யுங்கள். வழக்கமாக செயல்படும் முறையில் ஆக்கபூர்வமான மாற்றத்தை கொண்டுவந்தால், உங்களுள் ஒரு புதிய மனிதனை காணலாம்  

  • துன்பத்தை பற்றிய எண்ணம் மற்றும் பயம் துன்பத்தை விட கொடுமையானது என்று உன் இதயத்திடம் சொல். தன் கனவை தேடி செல்லும் எந்த இதயமும் துன்பபடுவதில்லை. தேடும் ஒவ்வொரு கணமும் நீங்கள் கடவுளை சந்திப்பீர்கள் 

  • உலகில் எளிமையாக இருக்கும் ஒன்று தான் அசாதாரமானது. ஞானம் அடைந்தவர்கள் தான் அதை உணருவார்கள் 

  • நான் உன் கனவில் ஒரு பகுதி என்றால் கண்டிப்பாக ஒரு நாள் நீ திரும்பி வருவாய் .

  • இது தான் காதல். அன்புவயபட்டால் நீ எதையும் உருவாக்கலாம். நீ அன்பு வயபட்டால் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முயற்சி செய்யவேண்டாம். ஏனென்றால் எல்லாம் உனக்குள்ளே நடக்கிறது. 
  
  • நாம் வலிமையுடையவராக நடிக்கிறோம். நமக்கு வலிமை இல்லாத காரணத்தினால்.  

  • ஒருவனை கட்டுப்படுத்த நீங்கள் நினைத்தால், அவனை பயம் கொள்ள செய்தால் மட்டும் போதும். எளிதில் கட்டுபடித்திவிடலாம்     

வியாழன், 17 மார்ச், 2011

நீங்கள் யார் -2

இந்த  பதிவை படிக்கும் முன் கீழ்கண்ட பதிவை படிப்பது நலம்.


நீங்கள் யார் என்று நீங்களாகவே உங்களுக்கு ஏற்படுத்திகொள்ளும் அடையாளம் மிகவும் மேலோட்டமானது. எப்பொழுதும் பொருட்களுடன் தொடர்புபடுத்தியே உங்களை உங்கள் ஆணவம் சிந்திக்கசெய்கிறது. (நான், எனது, என்னுடையது என்ற எண்ணம் )
ஆணவத்திற்கு பொருள் மற்றும் கட்டமைப்பு ஆகிய இரு தன்மைகள் உண்டு.  உதாரணத்திற்கு உங்களுக்கு மிகவும் பிடித்தமான உடை ஒன்று உள்ளது என்று வைத்து கொள்ளுங்கள். அந்த உடை தான் உங்கள் ஆணவத்தின் பொருள். அதன் மீது உள்ள பிடித்தம் தான் கட்டமைப்பு. உங்களுக்கு பிடித்தது வேறு ஒருவருக்கு பிடிக்காமலும் இருக்கலாம். ஆனால் பொருட்கள் மாறலாம். அந்த கட்டமைப்பு மாறாது.
சரி நீங்கள் விரும்பும் பொருள் உங்களீடம் இருந்தால் மட்டும் நீங்கள் ( உங்கள் ஆணவம்) திருப்தி அடையுமா? அடையும். ஆனால் அந்த திருப்தி மிகவும் மேலோட்டமானது. நீண்ட நாட்கள் நிலைத்தும் நிற்காது. அந்த திருப்தி என்ற எண்ணத்தின் உள்ளே திருப்தி இல்லாமை என்ற நிலை தான் ஆழ் மனதில் உள்ளது.  இது பத்தாது இன்னும் வேணடும் இன்னும் வேண்டும் என்ற எண்ணம் ஆழ் மனதில் இருக்கிறது.
ஒரு பொருள் கிடைத்துவிட்டால் அந்த திருப்தி சில நாட்கள் மட்டும் இருக்கும். மனம் வேறு பொருட்களை நாட ஆரம்பிக்கும். இந்த இன்னும் வேணடும் என்ற ஆணவம் தான் பொருட்களின் மீது பற்று வைக்கும்ஆணவத்தை விட மிக மோசமானது. இந்த எண்ணம் என்றும் ஒருவனை மகிழ்ச்சியில்லாமல் வைக்கும்.
பல நேரங்களில் பல பொருட்கள் மீது ஆசை வரும். சில நேரங்களில் அந்த தேவை என்ன எதற்காக என்பது கூட தெளிவாக நமக்கு தெரியாது. ஆனால் ஏதோ வேணடும் என்ற எண்ணம் இருந்துகொண்டே இருக்கும். இந்த நிலையில் நம் கையில் இருக்கும் பொருட்களை நினைத்து திருப்திபடமாடோம். இல்லாத ஒன்றையே நினைத்து கொண்டிருப்போம்.

இதனால் மகிழ்ச்சி இழந்து, கோபம், பயம், பொறாமை, படபடப்பு, விரக்தி போன்ற எண்ணங்களால் வாழ்வை வீணடிப்போம்.

வாழ்வில் இருக்கும் உண்மையான சந்தோசத்தை உணராமலேயே திருப்தி இல்லாமல் வாழ்ந்து இயற்கை எய்துவோம். இறக்கும் தருணத்தில் தான் நாம் சேர்த்து வைத்த பொருள் நமதில்லை என்பதை உணருவோம். அதற்குள் வாழ்கை முடிந்திருக்கும்.

உங்களுக்கு பிடித்தமான வைர மோதிரம் இருக்கின்றது என்று வைத்து கொள்வோம் (அல்லது உங்களுக்கு மிகவும் பிடித்த பொருள் ஒன்றை நினைவுபடுத்தி கொள்ளுங்கள் ).

கீழ் கண்ட கேள்விகளை உங்களுக்குள் கேட்டு பாருங்கள்
  1. அந்த பொருள் என்றாவது ஒரு நாள் உங்களை விட்டு போய்விடும் என்பதை உணர்திர்ருகிரீர்கலா ?  
  2. அந்த பொருள் இன்னும் எத்தனை காலம் உங்களுடன் இருக்கவேண்டும் என்று நீங்கள் விரும்புகின்றீர்கள் ?
  3. அதற்குள் அந்த பொருள் தொலைந்துவிட்டால்/ வீணாகிவிட்டால்/கைவிட்டு போய்விட்டால் உங்களுக்கு எத்தகைய இழப்பு ஏற்படும் ?
  4. அந்த இழப்பு ஏற்பட்டால் நீங்கள் குறைந்தா போய்விடுவீர்கள் ?
எதில் கடைசி கேள்விக்கு விடை தேடினால் ஆம் . குறைந்து தான் போய்விட்டேன் என்று நினைக்கலாம். ஆனால் விடைகாணாமல் உங்களை உணர ஆரம்பித்தால் மனசு லேசாகிவிடும். உண்மையில் நீங்கள் இந்த விதத்திலும் குறைந்துபோக போவதில்லை

இன்னும் வேண்டும் என்ற ( Wanting )  என்ற எண்ணத்தினால் பலர் தவறான பாதைக்கு சென்று அதனால் அழிவை தேடிகொள்வதும் உண்டு.

சமிபத்திய உதாரணம் சாடிக் பாட்சா. சாதாரண பாத்திர வியாபாரியாக இருந்து, பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் இறங்கி, A.ராஜா என்ற அரசியல்வாதியின் நட்பால் பயம் இல்லாமல் பல தவறுகளை செய்து, கடைசியில் நிம்மதி இல்லாமல் தற்கொலை ? செய்து கொண்டார். நினைத்ததற்கு மேல் கிடைத்தும் மணா நிம்மதி இல்லை. மன உளைச்சல் தான் எற்பட்டது.

ஓஷோவின் கதை ஒன்று 

ஒருவன் கலை அழகுடன் அரண்மனையைவிடச் சிறப்பாக மாளிகை ஒன்றைக் கட்டியிருந்தான்.அதை அந்த நாட்டு மன்னர் விலைக்குக் கேட்டும் அவன் கொடுக்கவில்லை.ஒருநாள் அவன் வெளிய போய்விட்டுத் திரும்பும்போது வீடு பற்றி எரிந்து கொண்டிருந்தது.மன்னன் செய்த சதியோ என நினைத்து அவன் அழுது புலம்பினான்.அப்போது அவன் மகன் அங்கே ஓடி வந்தான்.அவன் சொன்னான்,''அப்பா,கவலைப் படாதீர்கள்.இந்த வீட்டை நான் நேற்று மன்னருக்கு மூன்று பங்கு விலைக்கு விற்றுவிட்டேன்.வரும் பணத்தைக் கொண்டு இதை விட அழகான வீடு ஒன்று கட்டிக்கொள்ளலாம்.''தந்தையின் கண்ணீர் சட்டெனக் காணாமல் போயிற்று.அவன் சிரிக்கத் தொடங்கினான்.அவன் எதிரே வீடு எரிந்து கொண்டிருந்தது.அவன் கண்களிலோ எதிர் காலக் கனவு!அப்போது அவன் இளைய மகன் ஓடி வந்தான்.அவன் சொன்னான்,''அப்பா,அண்ணன் சொன்னது உண்மைதான்.ஆனால் விற்றது பேச்சளவில்தான்.பத்திரம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.பணமும் வாங்கவில்லை.''தந்தை மறுபடியும் அழ ஆரம்பித்து விட்டான்.
இதுதான் பற்று...அடையாளம்.ஒருவன் உயிருடன் இருக்கும்போது எல்லாவற்றையும் தன்னுடன் அடையாள படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.எல்லாவற்றையும் பயன் படுத்திக் கொள்ளலாம்.ஆனால் பற்றில் விழுந்து விடக் கூடாது.உடைமை கொள்ள முயலக்கூடாது.
விலகி இருங்கள்!விழித்திருங்கள்!மௌனமாய்ப் பார்த்திருங்கள்!


.........................................................................................தொடரும் 

  

புதன், 16 மார்ச், 2011

நீங்கள் யார் ?

நல்லவராக வாழ நீங்கள் விரும்புகின்றீர்களா ? உங்களிடம் உள்ள  பேராசை, கோபம், பொறாமை பயம்  போன்ற கெட்ட குணங்கள் இல்லாமலோ அல்லது குறையவோ வேண்டும் என்று நினைகின்றீர்களா ? அப்படி என்றால் தொடர்ந்து படியுங்கள். 
நீங்கள் இனி கோபப்படகூடாது என்று ஒரு விசயத்திற்கு முடிவெடுத்துவிட்டு, பின்னர் அந்த சூழ்நிலை ஏற்படும்பொழுது உங்களையும் அறியாமல் கோபம் பொத்துக்கொண்டு வருவதை கவனித்திருப்பிர்கள். கோபப்பட்டு அதனால் விளைவுகள் மீண்டும் மோசமாகும் பொழுது, பின்னர் அமைதியாகி இது போல மீண்டும் செயல்படக்கூடாது என்று மீண்டும் முடிவெடுப்பீர்கள். ஆனால் அது தொடர்கதையாக தான் இருக்கும்.
ஏன் என்றால் இது போன்ற விளைவுகள் அல்லது எதிர்வினைகளை நாம் ஒரு சுழலின் பொது வெளிபடுத்துவது, நம் மனதின் ஆழத்தில் இருக்கும் சில பதிவுகளினால்  தான். இப்படி தான் ஒரு செயலுக்கு ( Cause / Stimulai )  எதிர்விளைவை ( effect / reaction ) நாம் வெளிபடுத்த வேண்டும் என்ற உணர்வு நாம் கற்று கொண்ட விஷயங்கள் ( taught process ), உணர்ந்து கொண்ட விஷயங்கள் (felt process ) மற்றும் சிந்தித்து நாமாக முடிவெடுக்கும் விசயங்கள் ( thought process ) இவற்றால் முடிவெடுக்கப்படும். 
நம் பெற்றோர், நெருங்கிய உறவினர்கள், சிறு வயதில் நம் மீது அதிகாரமும் ஆதிக்கமும் செலுத்தும் உரிமை கொண்டர்வர்களிடம் இருந்து -- ஒ ! இப்படி  தான் இந்த சூழ்நிலையில் நாம் நடந்துகொள்ளவேண்டுமோ ? என்று நம் மனதில் சில விஷயங்கள் பதிந்துவிடும். இதை Parent Ego என்று எரிக் பெர்னே (Eric Berne ) கூறிகிறார். இந்த சூழல்களில் நாம் வெளிபடுத்தும் அழுகை, பிடிவாதம் , கோபம் , மகிழ்ச்சி போன்ற உணர்வுகளை Child Ego என்கிறார். நமது ஐந்து வயதிற்குள் நாம் சந்திக்கும் அனுபவங்கள், ஏற்கனவே நமது குணாதிசயத்தை நிர்ணயம் செய்யும் ஜீன்களின் (hereditary nature ) தன்மையோடு இணைந்து நம் குணமாக, பழக்கமாக உருவாகிறது. இதனை தவிர நம் அறிவாற்றலின் அடிப்படையில், நாமே சுயமாக சிந்தித்து செயல்படுவதும் உண்டு. இதுவே Adult Ego எனப்படும். ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில், நாம் செய்யும் எதிர்வினை Parent Ego மற்றும் Child Ego வினால் நிர்ணயம் செய்யபடாமல், Adult Ego வினால் நிர்ணயம் செய்யபட்டால் அது சரியான விளைவாக இருக்கும் என்று ஏறிக் பெர்னே கூறுகிறார். இதன் அடிப்படையில் ஒருவரின் குணாதிசியங்களில் மாற்றத்தை கொண்டு வரலாம் என்று தன் ஆராய்ச்சி மூலம் வெளி உலகத்திற்கு தெரிவித்தார். Transactional Analysis என்ற இந்த மனோதத்துவ முறையின் தந்தை எனபடுபவர் தான் Dr . Eric Berne .


இந்தஅறிவயல் பூர்வமான ஆராய்ச்சிக்கு இணக்கமாக இருப்பது நம் உலகத்தில் பின்பற்ற படும் மதங்களில் இருக்கும் சில ஆன்மீக கருத்துக்கள்.  
எக்ஹார்ட்டொல்லே ( Eckhart Tolle )  தான் எழுதிய A New World என்ற புத்தகத்தில், நாம் யார் என்று நம்மை பற்றி ஒரு தவறான ஒரு அபிப்பிராயத்தை எற்படுதிக்கொள்கிறோம் என்கிறார்.

நான், எனது, என்னுடையது என்று சில பொருட்களுடன் நம்மை தொடர்பு படுத்தி நம்மை பற்றிய ஒரு தவறான உருவகத்தை உருவாக்கி கொள்கிறோம். நாம் யார் என்று நமக்கு நாமே ஏற்படுத்திகொள்ளும் அடையாளம் தான் அகந்தையின் தொடக்கம்.இந்த அகந்தையே நாம் வெளி படுத்தும் எதிர்வினைகளை (reaction )முடிவு செய்கிறது. இந்த அகந்தை இப்படி வேலை செய்கிறது என்பதை நாம் உணராத வரை நம்மை மாற்றிக்கொள்ள இயலாது என்று கூறுகிறார்.

நான் யார் ? என்ற கேள்வியை நீங்கள் உங்களையே கேட்டுகொள்ளுங்கள். அதற்கு விடை காண முயலுங்கள். நீங்கள் வாழ்கையில் முக்தியை அடையலாம் என்று ரமண மகரிஷி கூறியுள்ளார்.

கேட்பதற்க்கு நன்றாக தான் இருக்கிறது ? நாம் உண்மையில் யார் என்று எப்படி உணர்ந்துகொள்கிறது ? அகந்தை எப்படி செயல்படுகிறது என்று நாம் எப்படி தெரிந்துகொள்ளமுடியும் ? நாம் முயற்சித்தால் முடியும். ஆனால் அகந்தை எப்படி செயல்படுகிறது என்று தெரியாமல் நம்மை மாற்றிக்கொள்ள நினைத்தால், அந்த அகந்தையே சதி செய்து மீண்டும் நம்மை அதே புதைகுழியில் தள்ளிவிடும்.

"நான் :என்னும் நீங்கள் நினைக்கும் "நான்" எப்படி உருவாகிறது ? பிறந்தவுடன் நமக்கு ஒரு பெயர் வைக்கிறார்கள். அதனை கொண்டு தான் அழைக்கிறார்கள். சில குழந்தைகள் தனக்கு பசிக்கிறது என்பதை கூட " ரகுவிற்கு பசிக்கிறது" என்று தன் பெயரை தானே கூறிகொள்வதை கவனித்து இருப்பிர்கள். பின்னர் தான் எனக்கு பசிக்கிறது என்று கூற ஆரம்பிக்கும். அப்பொழுதே தன் உடலோடு தன் எண்ணத்தை பொருத்தி பார்க்க ஆரம்பிக்கிறது. என்னுடைய பொம்மை என்று ஒரு பொருளை தன்னுடன் பொருத்தி பார்க்கிறது. பொம்மை தொலைந்து போய்விட்டாலோ அல்லது உடைந்து விட்டாலோ பெரும் குரல் எடுத்து அழும். அந்த பொம்மை விலை மதிக்க முடியாதது என்பதாலோ, அது இல்லாமல் தன்னால் விளையாட முடியாது என்பதாலோ குழந்தை அழுவதில்லை. அந்த பொம்மை தன்னுடையது என்று பொருள் மீது வைக்கும் பற்றினால் தான். கால போக்கில் குழந்தை வளர வளர அது பற்று வைக்கும் பொருட்கள் மாறும். ஒரு பொம்மைக்கு பதில் இன்னோரு பொம்மை. வளர்ந்த பிறகு பொம்மை என்பது தனது சைக்கிள், மோட்டார் சைக்கிள், வீடு, செல்பேசி , பேனா, நகை, கணவன்/மனைவி என்று பொருட்கள் தான் மாறும். 

சில பேருக்கு பதவி மீது பற்று இருக்கும். சரி எப்படி ஆசை வைத்து, அந்த பொருள் கிடைத்தால் மகிழ்ச்சி அடைகிறோம். கிடைக்காவிட்டால் அந்த பொருளை வைத்து இருக்கும் நபரை பார்த்து பொறாமை கொள்கிறோம். ஆனால் ஆசை பட்ட பொருள் கிடைத்தாலும், அதன் மீது உள்ள பற்றின் காரணமாக பிறர் வெறுப்படையும் படியும் நடந்து கொள்கிறோம். சரி மகிழ்ச்சியாவது நீண்ட நாள் நிலைதிருகின்றதா ? அதுவும் எல்லை . திடீர் என நாம் ஆசை படும் பொருள் மாறுகிறது. ஒரு பொம்மைக்கு பதில் இன்னோரு பொம்மை. ஒரு காருக்கு பதில் இன்னோரு கார்.
இந்த தேடலிலும் பொருள் மீது வைக்கும் பற்றிலும் நாம் உண்மையான மகிழ்ச்சியை இழந்து விடுகிறோம். 
நான் என்று நமக்கு நாமே ஏற்படுத்திகொள்ளும் அடையாளம் ஒரு மிக குறுகிய அடையாளம். நமக்குள் இருக்கும் ஆற்றலையும் சக்தியையும் நாம் உணருவதில்லை 

Enlightment என்று இந்து மதம் சொல்கிறது. துன்பங்களின் முடிவு என்று புத்த மதம் சொல்லுகிறது, புனிதத்தன்மை அடைதல் என்று கிருத்துவமதம் சொல்கிறது. அனைத்து மதங்களும் கூறுவது ஒன்றை தான். நான் யார் என்ற விழிப்புணர்வை அடையுங்கள். முக்தி, புனிதத்தன்மை , துன்பத்திலிருந்து விடுதலை அனைத்தும் ஒன்றே தான் என்பதை உணர்விர்கள்.

உங்களால் மாறமுடியும். நீங்கள் யார் என்பதை உணர்ந்தால். உங்கள் அகந்தை எப்படி வேலை செய்கின்றது என்பதை உணர்தால்.

Thanks to  - I am OK , YOU'R OK by Thomas Hardy ( A Book on Transactional analysis )
                    A New Earth - A book by Eckhart Tolle

    
  

திங்கள், 7 மார்ச், 2011

Transactional Analysis-1

மனித மூளை பற்றிய ஆராய்ச்சியில் நாம் மிகவும் பின்தங்கி இருக்கிறோம். அதன் முழு ஆற்றலையும், அதில் ஏற்படும் வேதியியல் மாற்றத்தையும், முழுவதுமாக உணர மேலும் பல ஆண்டுகள் ஆகும்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் Sigmond Freud  என்ற அறிஞர் மனித மனதின் செயல்பாடு பற்றி அறிவியல் பூர்வமாக சில ஆய்வுகளை மேற்கொண்டார். மனித மனம் ஒரு நிலையான தன்மை கொண்டது அல்ல. ஒரே மனிதனுக்குள் வேறுபட்ட குணாதிசியங்கள் கொண்ட பல மனிதர்கள் இருக்கிறார்கள் என்று கண்டுபிடித்து சொன்னார். ( Mutifaceted nature)

Dr . Wilder Penfield என்பவர் செய்த ஆராய்ச்சி மனித மூலையின் நினைவாற்றல் திறனை ஆராய பட்டது. மூளையின் Temoporal lobe பகுதியில் லேசான மின்சாரத்தை, சில இடங்களில், பிரதேயேகமாக வடிவமைக்கபட்ட கருவி கொண்டு சோதனை செய்த பொழுது மூலையில் பதிவு செய்யப்பட்ட நிகழ்வுகள் மற்றும் சம்பவங்களை சோதனைக்கு உட்படுத்தபட்டோர் கூறினர்.

நிகழ்வுகள் மற்றும் சம்பவங்கள் மட்டும் அல்லாமல். அந்த சமயத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட உணர்வுகளும் பதிவுசெய்யபட்டு இருந்தது கண்டுபிடிக்கபட்டது. இந்த உணர்வுகள் தனியாக பதிவுசெய்யபடாமல் நிகழ்வுகளோடு பின்னி பினைதிருந்தது. 

குழந்தை பிறந்ததில் இருந்து இறக்கும் வரை அனைத்து நிகழ்வுகளும், அனுபவங்களும், ஒருவனுக்கு ஏற்பட்ட உணர்வுகளும் மூலையில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதில் ஏழு வயதிற்குள் பதியப்படும் நிகழ்வுகளும் உணர்வுகளும் ஒருவனது குணத்தை நிர்ணயம் செய்கிறது. ஒருவனது Genetic Make  up பும் இந்த நிகழ்வுகள் மற்றும் உணர்வுகளுடன் சேர்ந்து அவனின் குணத்தை முடிவுசெய்கிறது. 

மூளை இந்த நிகழ்வுகளையும் சம்பவங்களையும் நேரம் என்ற இழை கொண்டு இணைத்து வருகிறது.

நாம் நமக்கு நிகழ்ந்த அனைத்தையும் நினைவில் கொள்ள முடிவதில்லை. ஆனால் எதுவும் மூலையில் இருந்து அழிவதில்லை.  நாம் பல வருடங்களுக்கு  முன் பார்த்த நபரை பற்றி கற்பனை செய்து பார்த்தல், அவரின் உண்மையான உருவம் சரியாக நினைவுக்கு வராது. ஆனால் அந்த நபர் நாம் நேரில் சந்தித்தால், பல வருடங்களுக்கு முன் இருந்த அவரின் உருவத்திற்கும் தற்பொழுது உள்ள உருவத்திற்கும் உள்ள வேறுபாடு சரியாக தெரியும்.       

சரி, அப்படி என்றால் ஒருவனின் குணத்தை அவனால் வளர்ந்த பிறகு மாற்ற முடியாதா? தனக்கே கெடுதல் என தெரியும் சில விசயங்களை முயற்சித்தால் மாற்ற முடியுமா? சுய மேம்பாடு என்ற Personal Development அறிவியல் பூர்வமாக சாத்தியமா? Soft skills எனப்படும் தன்னம்பிக்கை, தைரியம், பேச்சு மற்றும் முடிவெடுக்கும் திறன், சூழ்நிலைகேற்ப தெளிவாக நடந்து கொள்ளும் திறன் போன்றவற்றை ஒருவன் வளர்த்துக்கொள்ள முடியுமா ?

சாத்தியம் தான்.

Transactional Analysis என்ற Dr.  Eric Berne வகுத்த சைக்கோ தெரபி முறை எதற்கு உதவும்.   

இதனை பற்றி பின்பு விரிவாக பாப்போம்.  

Transactional Analysis பற்றி சின்ன அறிமுகத்திற்கு தான் எந்த கட்டுரை. 

வியாழன், 24 பிப்ரவரி, 2011

வாழ்கை என்னும் பூந்தோட்டம்


வாழ்கை என்னும் பூந்தோட்டம் 

நம் வாழ்கை என்னும் பூந்தோட்டத்தில் என்ன என்ன செடிகளை வைக்கவேண்டும், அதனை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது நாமாக தான் இருக்க வேண்டும். சில சமயம் நம் பக்கத்துக்கு வீட்டுக்காரர், நம் தோட்டத்தை எட்டி பார்த்து, நீ வைத்திருக்கும் சில செடிகள் சரியில்லை என்றும், எப்படி விதைக்கவேண்டும் என்றும், எப்படி நீர் பாய்ச்சவேண்டும் என்றும் என்ன உரங்கள் போட வேண்டும் என்றும் ஆலோசனை சொல்லுவார்.

அதனை கேட்டு நாம் மாற்றங்களை செய்தால் பின்னர் அது நம் தோட்டமாக இருக்காது. பக்கத்து வீடுகாரரின் தோட்டமாக தான் இருக்கும்.

நம் வாழ்கையை முடிவு செய்வது நாமாக தான் இருக்க வேண்டும். பிறர் சொல்லை கேட்டு வாழக்கூடாது. நமக்கு எது நல்லது எது கெடுதல் என்று நாம் தான் யோசனை செய்து முடிவெடுக்க வேண்டும். ஆலோசனை கேட்பது தவறில்லை. முடிவெடுப்பது நாமாக தான் இருக்க வேண்டும். மேலும் நம் வாழ்கை பூந்தோட்டத்தை நம்மால் சரியாக பராமரிக்க முடியாவிட்டால், அடுத்தவரின் தோட்டத்தை எட்டி பார்ப்பதே தவறு 

பாலோ கேல்ஹோ வின் புத்தகத்தில் படித்தது  

புதன், 23 பிப்ரவரி, 2011

பென்சிலும் மனிதனும்

 பென்சிலும் மனிதனும் \

ஒரு பென்சில் தன செயலை சரியாக செய்வதற்கு அதனை இயக்கும் கை உதவியாக இருக்கிறது. அது போல மனிதன் தன செயல்களை சரியாக செய்ய கடவுளின் கை உதவி புரிகிறது.

பென்சிலால் எழுதும் பொழுது அதன் கூர் மழுங்கி சரியாக எழுத முடியாமல் போகும். அப்பொழுது அதனை கூர்மை படுத்தி மீண்டும் எழுதுவோம். அது போல நமக்கு ஏற்படும் துன்பங்களையும் கஷ்டங்களையும் நம்மை கூர்மை படுத்தி கொள்ள வந்தவையாக நினைத்து நம்மை பண்படுத்தி கொள்ள வேண்டும்.

பென்சிலால் எழுதும் பொழுது தவறு ஏற்பட்டால் அழித்து விட்டு மீண்டும் தவறு ஏற்படாமல் எழுதுவோம். அது போல வாழ்கையில் தவறு செய்தால் திருத்திக்கொண்டு மீண்டும் தவறு செய்யாமல் வாழவேண்டும்.

பென்சிலின் வெளியே உள்ள மரத்தை விட உள்ளே இருக்கும் கரி குச்சி தான் முக்கியம். அது போல நம் உள்ளே இருக்கும் ஆற்றல் தான் வாழ்வதற்கு உதவி செய்யும்

பென்சில் தான் எழுதியதற்கான அடையாளத்தை விட்டு செல்லும். நாமும்  நாம்   வாழ்த்தா தடத்தை விட்டு செல்ல வேண்டும் 

பாலோ கேல்ஹோ என்ற எழுத்தாளர் எழுதிய நூலில் படித்த கருத்து