ஒரு விவசாயியின் கழுதை சுவரில்லா கிணற்று ஒன்றில் விழுந்துவிட்டது. வெளியே வர வழியின்றி பெருங்குரலேடுத்து கத்த ஆரம்பித்தது. விவசாயிக்கு என்ன பண்ணுவது என்று தெரியவில்லை. பிறகு யோசித்து பார்த்தான். கழுதைக்கும் வயசாகிவிட்டது. அதனால் பயன் எதுவும் பெரிதாக எல்லை. கிணறும் பழுதடைந்து விட்டது. இதனையும் எப்போவோ மூடி இருக்க வேண்டும். இனி இந்த கிணற்றில் வேறு யாரும், ஆடு மாடு போன்றவையும் தவறி விழுந்து விடகூடாது என்று நினைத்தான்.
உடனே சில வேலையாட்களின் உதவியுடன் மண்ணை அள்ளி போட்டு கிணற்றை முடிவிட முடிவு செய்தான். அவ்வாறே மண்ணால் கிணறு மூடும் பணி தொடங்கியது. சிறுது நேரம் கழித்து கிணற்றுக்குள் எட்டி பார்த்த விவசாயி ஆச்சிரியம் அடைந்தான். மண்ணை கொண்டு மூட மூட, கழுதை தன மீது விழும் மண்ணை உதறி, தன கால்களை உதைத்து மண் மீது நின்றுகொண்டிருந்தது. மேலும் மண்ணை போட போட கழுதை மேலே ஏறி மகிழ்ச்சியுடன் கிணற்றை விட்டு வெளியில் வந்தது.
நம் வாழ்கையில் முன்னேற முயற்சிக்கும் பொழுது, பலர் நம் மீது மண்ணை போட முயற்சிக்கலாம். புழுதிவாரி தூற்றலாம். நம் செய்கையில் நேர்மையும் நியாயமும் இருக்கும் பொழுது, அதனை உதறி தள்ளி வெற்றியடைய முயற்சிக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக