அவர் பிறந்தது கேரளா மாநிலத்தில் ஒரு பணக்கார சிரியன் கிருத்துவ குடும்பத்தில் . சிறு வயதில் விமான ஓட்டியாக ( Pilot ) ஆகா வேண்டும் என விருப்பபட்டு , அதற்கான பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து, பின்னர் இந்திய விமான படையில் சேர்ந்தார் . பின்னர் ஒரு அழகான பெண் மீது காதல் வயப்பட்டு, அவரையே திருமணம் செய்துகொண்டு இரு குழந்தைக்கு தந்தையானார். வசதியான வாழ்கை. நினைததல்லாம் நடந்தது. ஒரு தனியார் விமான சேவையை தொடங்கவேண்டும் என்பது அவரது ஆவல். அதை நோக்கி வாழ்கை பயணம் சென்றுகொண்டிருன்தது
08 .07 .1982 . பதினெட்டு நபர்களை ஏற்றி சென்ற ஒரு சிறிய விமானம் தர்மபுரி அருகே விபத்துக்குளானது. விபத்து நடந்த விமானத்தில் இவரும் இருந்தார் . அது வரை தன விதியை தானே முடிவு செய்பவராக, கடவுள் நம்பிக்கை இல்லாத அவர் முதன் முதலாக உயிர் பிச்சை கேட்டு கடவுளிடம் பிராத்தனை செய்கிறார். உயிரும் பிழைகிறார்.
கல்லூரியில் மார்க்சிஸ்ட் தத்துவத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார் அவர் . எந்த விமான விபத்திற்கு பிறகு, தனக்கு மறுவாழ்வு கிடைதிருபதாக உணர்ந்த அவர் , தன வாழ்வை இனி உலக அமைதிக்காக அற்பனிப்பது என முடிவு செய்தார் . விமான படை பணியிலிருந்து விடை பெற்றார்.
ஆன்மிகத்தை பற்றிய அவர் தேடல் தொடங்கியது . முதலில் கிருத்துவமதத்தை பற்றி தெரிந்துகொள்ள நீதிபதி வித்தியாத்தில் ( Justice Vithyathil ) என்பவரிடம் கிருத்துவமதத்தை பற்றி சீடராக இருந்து தெரிந்துகொண்டார் . பின்னர் Bede Griffiths என்றவரிடம் ஆன்மீக பயறிசி பெற்றார். பின்னர் இந்து மதத்தில் ஈடுபாடு கொண்டு ராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் சுவாமி ரங்கநாதனந்தா விடம் சீடராக சேர்ந்தார். பின்னர் தன குடும்பத்தார் அனுமதியுடன் காவி தீத்சையும் பெற்றார். சுபி தத்துவத்திலும் தேர்ச்சி பெற்றார்.
எப்பொழுது தர்ம பாரதி ஆஷ்ரமம் என்று கொச்சினில் ஒரு அஷ்ராமத்தை நிறுவி அதன் வாயிலாக ஆன்மீக சேவையில் ஈடுபட்டுள்ளார். ராணுவத்தில் இருந்ததால் இருந்த நாட்டு பற்றும், பொருள் சார்ந்த வாழ்கையில் இருந்து மீண்டு மக்கள் அமைதியும் அறமும் சார்ந்த வாழ்கைக்கு மாறவேண்டும் என்பதை குறிக்கோளாக வைத்து செயல்பட்டு வருகிறார் .
பொறுப்புள்ள குடிமகனாக ஒவ்வொரு இந்தியனும் இருக்கவேண்டும் என்பதற்காக '
பொறுப்புள்ள குடியுரிமை " என்றல் என்ன என்பதை வலியுறுத்தி வருகிறார்.
ஜான் என்ற தன் பெயரை சுவாமி சச்சிதானந்தா என்று மாற்றிக்கொண்டு ஆன்மிகம் என்பது மததிற்கு அப்பாற்பட்டது என்ற உண்மையை வலியுறுத்தி , நாட்டு நலனிலும் அக்கறை கொண்டு செயல்படும் அவரின் தொண்டு வெற்றியடைய வாழ்த்துவோம்.
அமைதியையும் ஒற்றுமையையும் வலியுறுத்தி பசி இல்லாத, ஊழல் இல்லாத , ஜாதி மத வேறுபாடுகள் இல்லாத சமூகத்தை உருவாக்க நடத்தப்படும் இந்த இரண்டாவது சுதந்திர போராட்டம் போற்றுதளுக்கு உரியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக