மனித மூளை பற்றிய ஆராய்ச்சியில் நாம் மிகவும் பின்தங்கி இருக்கிறோம். அதன் முழு ஆற்றலையும், அதில் ஏற்படும் வேதியியல் மாற்றத்தையும், முழுவதுமாக உணர மேலும் பல ஆண்டுகள் ஆகும்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் Sigmond Freud என்ற அறிஞர் மனித மனதின் செயல்பாடு பற்றி அறிவியல் பூர்வமாக சில ஆய்வுகளை மேற்கொண்டார். மனித மனம் ஒரு நிலையான தன்மை கொண்டது அல்ல. ஒரே மனிதனுக்குள் வேறுபட்ட குணாதிசியங்கள் கொண்ட பல மனிதர்கள் இருக்கிறார்கள் என்று கண்டுபிடித்து சொன்னார். ( Mutifaceted nature)
Dr . Wilder Penfield என்பவர் செய்த ஆராய்ச்சி மனித மூலையின் நினைவாற்றல் திறனை ஆராய பட்டது. மூளையின் Temoporal lobe பகுதியில் லேசான மின்சாரத்தை, சில இடங்களில், பிரதேயேகமாக வடிவமைக்கபட்ட கருவி கொண்டு சோதனை செய்த பொழுது மூலையில் பதிவு செய்யப்பட்ட நிகழ்வுகள் மற்றும் சம்பவங்களை சோதனைக்கு உட்படுத்தபட்டோர் கூறினர்.
நிகழ்வுகள் மற்றும் சம்பவங்கள் மட்டும் அல்லாமல். அந்த சமயத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட உணர்வுகளும் பதிவுசெய்யபட்டு இருந்தது கண்டுபிடிக்கபட்டது. இந்த உணர்வுகள் தனியாக பதிவுசெய்யபடாமல் நிகழ்வுகளோடு பின்னி பினைதிருந்தது.
குழந்தை பிறந்ததில் இருந்து இறக்கும் வரை அனைத்து நிகழ்வுகளும், அனுபவங்களும், ஒருவனுக்கு ஏற்பட்ட உணர்வுகளும் மூலையில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதில் ஏழு வயதிற்குள் பதியப்படும் நிகழ்வுகளும் உணர்வுகளும் ஒருவனது குணத்தை நிர்ணயம் செய்கிறது. ஒருவனது Genetic Make up பும் இந்த நிகழ்வுகள் மற்றும் உணர்வுகளுடன் சேர்ந்து அவனின் குணத்தை முடிவுசெய்கிறது.
மூளை இந்த நிகழ்வுகளையும் சம்பவங்களையும் நேரம் என்ற இழை கொண்டு இணைத்து வருகிறது.
நாம் நமக்கு நிகழ்ந்த அனைத்தையும் நினைவில் கொள்ள முடிவதில்லை. ஆனால் எதுவும் மூலையில் இருந்து அழிவதில்லை. நாம் பல வருடங்களுக்கு முன் பார்த்த நபரை பற்றி கற்பனை செய்து பார்த்தல், அவரின் உண்மையான உருவம் சரியாக நினைவுக்கு வராது. ஆனால் அந்த நபர் நாம் நேரில் சந்தித்தால், பல வருடங்களுக்கு முன் இருந்த அவரின் உருவத்திற்கும் தற்பொழுது உள்ள உருவத்திற்கும் உள்ள வேறுபாடு சரியாக தெரியும்.
சரி, அப்படி என்றால் ஒருவனின் குணத்தை அவனால் வளர்ந்த பிறகு மாற்ற முடியாதா? தனக்கே கெடுதல் என தெரியும் சில விசயங்களை முயற்சித்தால் மாற்ற முடியுமா? சுய மேம்பாடு என்ற Personal Development அறிவியல் பூர்வமாக சாத்தியமா? Soft skills எனப்படும் தன்னம்பிக்கை, தைரியம், பேச்சு மற்றும் முடிவெடுக்கும் திறன், சூழ்நிலைகேற்ப தெளிவாக நடந்து கொள்ளும் திறன் போன்றவற்றை ஒருவன் வளர்த்துக்கொள்ள முடியுமா ?
சாத்தியம் தான்.
Transactional Analysis என்ற Dr. Eric Berne வகுத்த சைக்கோ தெரபி முறை எதற்கு உதவும்.
இதனை பற்றி பின்பு விரிவாக பாப்போம்.
Transactional Analysis பற்றி சின்ன அறிமுகத்திற்கு தான் எந்த கட்டுரை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக