பிரபலமான இடுகைகள்

புத்தக விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புத்தக விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 26 ஜனவரி, 2012

இன்றைய காந்தி- ஜெயமோகன்

இன்றைய காந்தி

ஜெயமோகன் எழுதிய இன்றைய காந்தி புத்தகம் காந்தி யை பற்றிய விமர்சனகளுக்கு பதிலாக அமைந்துள்ளது. காந்தியை அவரது அத்தனைய  கிறுக்குதனங்களுடன் அப்படியே ஏற்றுகொள்கிறேன் என்று ஒரு இடத்தில ஜெயமோகன் சொல்லிருபது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது.

காந்திக்கு மகாத்மா என்ற பெயரை சூட்டியது கோண்டு என்ற மலைவாழ் மக்கள். பலரும் நினைப்பது போல ராபிந்தரநாத் தாகூர் அல்ல என்றும், காந்தி தான் மகாத்மா என்று அழைப்பதை விரும்பியதில்லை என்று ஜெயமோகன் குறிபிடுகிறார். காலில் விழும் கலாச்சாரத்தை அரசியலில் ஆரம்பித்துவைத்ததே காந்தி தான் என்ற குற்றசாட்டுக்கு பதில் அளிக்கையில் அவ்வாறு கூறுகிறார்.

காந்தியின் சாதியை குறிப்பிட்டு அவர் பனியா புத்தி உடையவர் என்ற கேள்விக்கு ஆம் அவர் பனியா புத்தி உடையவர் தான் என்று குறிபிடுகிறார். காந்தியின் வம்சம் சமண மதத்தை வழியாக கொண்டது. காந்தியின் 'புலன் ஒறுத்தல்' அதன் அடிப்படியிலேயே வந்தது. சமணர்கள் வியாபாரத்தில் சிறந்தவர்கள். நமது நாட்டுகோட்டை செட்டியார், வெள்ளாளர், சைவ முதலியார் போன்றவர்களும் சமணமததை ஒரு காலத்தில் பின்பற்றியவர்கள். பழங்காலத்தில் தொழிலை அடிப்படையாக கொண்டு சாதிகள் இயங்கதால், பல நெடுங்காலமாக ஒரு தொழிலை செய்து வந்தவர்களுக்கு அதற்குரிய அறிவும் திறமையும் இருப்பது இயற்கை தான். அந்த வகையில் காந்தி நிர்வாக திறமை மிக்கவராக , தலைமைத்துவ பண்பு உடையவராக இருந்தார். அனால் அவர் என்றும் தன சாதியை முதன்மைபடுத்தியது இல்லை என்கிறார் ஜெயமோகன்.    

காந்தியின் காமம் என்ற தலைப்பில் காந்தி காதலையும் காமத்தையும் அணுகிய விதம் ஒரு பிரேதத்தை அறுத்து பார்க்கும் சலனமற்ற முறையில் என்று ஜெயமோகன் சொல்கிறார். ஒரு முறை சபர்மதி ஆசிரமத்தில் காதல் வயப்பட்ட பெண்ணை பிராத்தனை கூடத்தில் அனைவர் முன்னிலையிலும் கேள்வி கேட்டு இரண்டு நாட்கள் உண்ணா விரதம் இருக்க செய்தார். அந்த பெண்ணின் மனம் பதிக்கப்படும் என்று அவர் எண்ணவில்லை ( அவள் காதலித்த ஆணுக்கு என்ன தண்டனை கொடுக்கபட்டது என்ற விவரம் நூலில் இல்லை). ஆனால் காந்தியே தன் 55  அவது வயதில் 47  வயது ஆனா சரளா தேவி என்ற பெண்மணியின் மேல் கொண்ட ஈர்பால் அவரை திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார். பின்னர் அனைவரது எதிர்ப்பால் குறிப்பாக அவரது மகன் இந்த முடிவால் கஸ்துரி பை மனவேதனை அடைந்துள்ளார் என்று பலமுறை எடுத்து குரிய பிறகு திருமணம் செய்யும் முடிவை கைவிடுகிறார். காந்தி பிறகு தாந்திரிக செயல்களில் ஈடுபட்டு நிர்வாணமாக பெண்களுடன் படுத்து உறங்கியதையும் பின்னர் தன் பேத்தியையே நிர்வாணமாக தன்னுடன் படுக்கவைத்து உறங்கியதையும், குறிப்பிடும் ஜெயமோகன் காந்தி இதற்கு கொடுத்த விளக்கத்தை ஆசிரமத்தில் உள்ள பலர் ஏற்கவில்லை என்கிறார். நம் இந்து சமயத்திலும் ஜென் புத்த மதத்திலும் இந்த தாந்த்ரிய முறைகள் கடைபிடிக்க பட்டதற்கு ஆதாரம் உள்ளதாக ஆசிரியர் கூறுகிறார்.( தற்காலத்தில் இதையே நித்தியானந்த செய்ததற்கு எவ்வளவு எதிர்ப்பு. காந்தி செய்தால் சரி. நித்தியானந்த செய்தால் தவறு. காந்தியின் மீது ஊடகங்களும் வரலாற்று பதிவுகளும் ஏற்படுத்தியுள்ள நம்பிக்கை அத்தகையது.)
காந்தியின் அகிம்சை மற்றும் சத்தியாக்ரகாம் ஹிட்லர் முன்னால் செளுபடியாகும என்ற கேள்விக்கு ஹிட்லர்ரின் பலம் ஜெர்மன் மக்கள் அவர் மீது வைத்த நம்பிக்கையால் ஏற்பட்டது என்றும், மக்கள் சக்த்தியே பின்னால் அவர் ராணுவ மற்றும் அதிகார பலம் ஏற்பட காரணமாக இருந்தது என்றும், காந்தியாலும் தன அஹிம்சை முறையால் மக்களின் நம்பிகையை வென்றெடுத்து வெற்றிபெற முடிந்திருக்கும் என்கிறார் ஜெயமோகன்
காந்தியின் மகன்கள் நால்வரில் ( ஹரிலால், மணிலால், ராமதாஸ் மற்றும் தேவதாஸ் ) ஆகிய நால்வரில் ஹரிலால் மட்டும் அனைத்து  கெட்ட குணங்களுடன் (குடி, சூது, விபச்சாரம், ஏமாற்றுதல் போன்ற காந்தி கு நேர்மாறான குணங்களுடன் இருந்தார் . மணிலால் தென்னாப்ரிக்கா அகிம்சா வழியில் விடுதலைக்கு போராட முக்கிய காரணமாக இருந்தார். நெல்சன் மண்டேலா காந்தியை அறிந்து கொண்டதே மணிலால் மூலமாக தான் என்று சொல்லிருகிரர். ராமதாஸ் காந்தி சேவாஷ்ரம் மூலம் தொண்டு செய்து வந்தார் என்றும் காந்தியுடன் கருத்து வேறுபாடு இருந்தாலும் நல்லவராக வாழ்தார். காந்தியின் பேரன்களும் நல்ல நிலையில் உள்ளனர். அறிவும் திறமையும் நல்ல பண்பும் கொண்டவர்களாக தான் பெரும்பாலவனர்கள் இருந்தனர் என்ற செய்தி, காந்தியின் வம்சா வழியினர் சாதனைகள் எதுவும் செய்ய வில்லை என்ற பொதுவான கருத்துக்கு எதிராக இருக்கிறது.

சே குவேரா புரட்சி வழியை தேர்ந்து எடுத்தாலும் அவரும் தநலம் இல்ல தலைவர் தானே. அவர் வழியும் கியூபா வில் வெற்றியை ஏற்படுத்தியுள்ளது. எனவே காந்திய அகிம்சா வழி மட்டும் தான் சிறந்தது என்று எப்படி கூற முடியம் என்ற கேள்விக்கு,  புரச்சியில் பெரும் வெற்றி ஒரு விபத்து போல எதிர்பாராமல் தான் நிகழும். அத்தகைய முறையில் வெற்றி பெற்றவர்கள் தங்கள் கருத்துகளை மக்கள் மீது திணிக்க முயல்வர். அது சரியான வெற்றி கிடையாது. சே தநலம் இல்லாதவர், தன்னமிக்கை, தைரியம் விடாமுயற்சி உள்ளவர். அனால் அவருக்கு அரசியல் அறிவு போதுமான அளவு இல்லை என்கிறார் ஜெயமோகன். காந்தியின் வழியே நிரந்தரமானது நன்மை தர கூடியது.
காந்தியின் மீதான பிற குறைகளாக சொல்லபடுவது
1. முதலாம் உலக போரின் பொது ஆங்கிலேயர்க்கு ஆதரவான நிலை எடுத்தது
2. கிலாபத் இயக்கத்திற்கு ஆதரவு தந்தது
3.இரண்டாம் உலக போரின் போது ஆங்கிலேயர்க்கு எதிரான நிலைபாடை எடுத்தது
3. சுபாஷ் சந்திர போஸ் காங்கிரஸ் தலைவராக விடாமல் தடுத்தது
4.  இரட்டை வாக்குரிமையை தலித் களுக்கு கிடைக்காமல் அம்பேத்கருக்கு எதிராக செயல்பட்டு பூனா ஒப்பந்தத்தை செயல்படுத்தியது
5.. சுதந்திரத்துக்கு பிறகு பாகிஸ்தானுக்கு தர வேண்டிய பணத்தை தர சொல்லி உண்ணாவிரதம் இருந்தது
 
இவை அனைத்திலும் காந்தியின் நிலைப்பாடு சரியே என்ற வாதத்தை ஜெயமோகன் எடுத்து வைக்கிறார்.
காந்தி- அம்பேத்கார் உறவை பற்றி சொல்லும் பொது இருவருமே பொதுநலம் மிக்கவர்கள், தங்கள் மக்களின் மேம்பாட்டிற்காக குரல் கொடுத்தவர்கள், ஒருவர் செய்ய தவறியதை மட்ட்றவர் செய்து இடைவெளியை நிரப்பியவர்கள், ஒருவரிடம் இருந்து மற்றவர் நல்ல விசயங்களை எடுத்துகொண்டவர்கள், தங்கள் முரண்களில் இருந்து நல்லது விளைவிக்க செய்தவர்கள். ஆங்கிலேயர்கள் காந்திக்கு எதிரான சக்தியாக அம்பேத்கரை பயன்படுத்தினர். அம்பேத்கர் ஆனிலேயே ஆதரவு நிலை கொண்டவர் என்று அருண் ஷோரி தன் Worshipping  false  Gods  என்ற புத்தகத்தில் ஆதரங்களுடன் பட்டியல் இடுகிறார். காஞ்சன் இல்லையா Why I am Not  a Hindu ? என்ற புத்தகத்தில் காந்தி ஆங்கிலேயருக்கு ஆதரவாக தலித் களுக்கு எதிராக செயல்பட்டதாக சொல்கிறார். ஆனால் இருவருமே மக்கள் நலனை முன்னிருத்தியே தங்கள் போராட்டத்தை செய்தனர் என்று ஜெயமோகன் குறிபிடுகிறார்               

தனக்கு தானே ஏறக்குறைய தினமும் எனிமா  கொடுத்து கொள்வது, தன மலத்தை தானே பரிசோதனை செய்வது, ஆடு பால் அருந்துவது போன்ற இயற்கை வைத்திய முறைகளில் காந்திக்கு இருந்த ஆர்வத்தை பற்றியும் நூலில் குரிபிடபட்டஉளது

காந்தியை பற்றிய சிறப்பான பல செய்திகளுக்காகவும் காந்தியை புரிந்து கொள்வதற்காகவும் இந்த புத்தகத்தை வாசிக்கலாம்.

ஜெயமோகன் சில இடங்களில் காந்தியை நியாய படுத்துவதாக தோன்றினாலும் அவரது இந்த முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது.

காந்தி மகாத்மா அல்ல ஒரு சராசரி மனிதன் தான் என்பது நூலை வாசித்தபிறகு எனக்கு தோன்றிய கருத்து.     

செவ்வாய், 17 மே, 2011

வழிகாட்டும் புத்தகம்



Tao Te Ching என்பது சீனாவில் 2500 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட எண்பத்தி ஒரு பாடல்களை கொண்ட ஒரு தொகுப்பு.  இதில் சொல்லப்பட்ட கருத்துகள் "Taoism " என்ற பெயரில் வழங்கபடுகிறது. TAOஎன்பது " The Way" என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்கபட்டுள்ளது. இந்த வழி என்பதை, நாம் கடவுளின் வழி என்றும், இயற்கையின்  வழி என்றும் வாழ்வதற்கான வழி என்றும் எப்படி வேண்டும் என்றாலும் நம் விருப்பபடி அர்த்தம் கொள்ளலாம்.அத்தனையும் இதில் கூறப்பட்டுள்ள கருத்துகளுக்கு  பொருந்தும். The Book Of The Way and Virtue" என்று ஆங்கிலத்தில் நாம் அர்த்தம் கொள்ளலாம். Virtue என்பதற்கு நல்லொழுக்கம், இரக்கம், பொறுமை, அன்பு மற்றும் ஆற்றல் என்று பல அர்த்தங்கள் உண்டு. இது அனைத்தும் கூட இதில் சொல்லப்பட்டுள கருத்துகளுக்கு பொருந்தும். TAO Te Ching என்ற புத்தகம் ஒன்று Rupa publishing company ஆல் ஆங்கிலத்தில் வெளியிடபட்டுளது. இதனை எழுதியவர் Derek Lin. சீன மொழியின் மூல நூலின் சாரம் குறையாமல் அதன் பாடல்களை அப்படியே தகுந்த அர்த்தத்துடன் மொழிபெயர்கப்பட்டு வெளிவந்துள்ளது. பெரும்பாலும் கடினமான, பல பொருட்களை தரும் ஆன்மீக நூல்களை மொழிபெயர்க்கும் பொழுது மொழிபெயர்ப்பு என்ற பெயரில் தான் புரிந்துகொண்ட அர்த்தங்களை தெரிவிப்பது பலரது வழக்கம் என்று ஆசிரியர் கூறுகிறார்.   ஆனால் இந்த நூலில் பாடல்கள் அப்படியே மொழிபெயர்க்கப்பட்டு அதன் எதிரே உள்ள  பக்கத்தில் அதன் விளக்கம் தரபட்டுள்ளது. அதனால் நாம் குழப்பம் இல்லாமல்  படிக்கலாம்.

எந்த மதத்தையும் சாராமல் பொருள் சார்ந்த புற உலகத்தின் தன்மையையும் மனிதனின் அக உலகத்தின் தன்மையையும் எடுத்து சொல்கின்றன இந்த பாடல்கள்.  
இதனை இயற்றியவர் யார் என்று சரியாக தெரியாத காரணத்தினால் இது பலர் எழுதிய பாடல்களின் தொகுப்பு என்று ஒரு சிலரும் LAO TZU என்பவர் தான் இதனை முதலில் எழுதினார் என்றும் இரு வேறு கருத்துகள் நிலவினாலும் 2500 ஆண்டுகள் தாண்டி யாரும் இதனை விளம்பரபடுத்தாமல் நிலைத்து நிற்கின்றது இந்த பாடல்கள். இதற்கு காரணம் இந்த கவிதைகளின் பொதுவான அம்சம்,அனைவருக்கும் பொருந்தும் என்பதே. உலக பொதுமறையாம் திருக்குறளுக்கும் இந்த பெருமை உண்டு. 

இந்த புத்தகத்தில் உள்ள கருத்துகளை கேட்டோ படித்தோ புரிந்துகொள்வதை விட நம் வாழ்வோடு பொருத்தி உணர்துகொண்டால் அதிக பலனை அடையலாம் என்று இதன் முதல் பாடலிலேயே சொல்லப்பட்டுள்ளது.

வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த பாடல்களை படித்து வாழ்வோடு பொருத்தி பார்த்தல் ஒவ்வொரு முறையும் புதிய அர்த்தத்தை உணரலாம். 

ஒரு பாடல் 

ஒரு கோப்பையை அது நிரம்பி வழியும் வரை நிரப்புவதை விட 

வழியாதவாறு சிறிது இடம் விட்டு நிரப்புவது சிறந்தது 

ஒரு கூர்மையான ஆயுதத்தை தொடர்ந்து பட்டை தீட்டி கொண்டே இருக்கமுடியாது 

தங்கமும் பவழமும் நிறைந்த அறையை 

எப்பொழுதும் பாதுகாத்து கொண்டே இருக்க முடியாது 

ஒருவனுக்கு அகந்தையை ஏற்படுத்தும் பணமும் பதவியும் 

பின்னர் அவனுக்கு பேரழிவை ஏற்படுத்தும்  

செயலை முடித்து வெற்றியும் புகழும்  அடைந்தபின் விலகி நில் 

இது தான் சொர்கத்தை அடையும் வழி 

போதும் என்ற மனம் இல்லாமல் நம் வாழ்கை என்னும் கோப்பையை இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்ற ஆசையால் நிரப்பிக்கொண்டு இருந்தால் வாழ்கை சிறக்காது. ஒரு தேநீர் கோப்பையில் தேநீரை வழிய வழிய ஊற்றினால், தேநீர் வழிந்து கோப்பையும் அந்த இடமும் அசுத்தமாகிவிடும். மேலும் விளிம்பு வரை நிற்கும் தேநீர் கோப்பையை தூக்கி நாம் தேநீரை அருந்த நினைத்தால் நம் மீதே ஊற்றிகொள்வோம். அதன் சுவை உணர்து பருக முடியாது. வாழ்கையின் சுவையையும் அது போல பேராசைபட்டால் நம்மால் உணரமுடியாது. இது முதல் வரிக்கு என் மனதில் தோன்றிய விளக்கம்.

நாம் எதையாவது சாதித்தால் அதன் வெற்றியும் பெருமையும் புகழும் நம்மை பாதிக்காமல் அதில் இருந்து விலகி நிற்க வேண்டும். புகழுக்கு அடிமையான ஒருவன் சொர்கத்தை அடைய முடியாது  

ஒரு சிறந்த நிர்வாகத்தை எப்படி செய்யவேண்டும் என்று மற்றும் ஒரு பாடல் சொல்கிறது  

சாதனையாளர்களை புகழ்துகொண்டே இருக்காதீர்கள் 
அவர்கள் தடம் புரள நேரிடும் 
அரிதில் கிடைக்கும் பொருட்களை பொக்கிஷமாக நினைக்காதீர்கள் 
மக்கள் திருடர்களாக மாறமாட்டார்கள் 
இது தான் சிறந்தது என்று எதனையும் சுட்டி காட்ட வேண்டாம் 
அவர்கள் மனது குழம்பி விடும் 

புனித  தன்மை வாய்ந்தவர்கள் தங்கள் நிர்வாகத்தின் கீழ் உள்ள மக்களின் 
இதயத்தை வெறுமையாகவும் 
வயற்றை நிரப்பியும் 
தேவைகளை  குறைத்தும்
எலும்புகளை வலிமையாகவும் வைத்திருப்பர் 
மக்கள் சகுனிதனமும் பேராசையும் இல்லாமல் இருக்கட்டும் 
அப்படியிருந்தால் திட்டங்களுக்கு இடையூறு ஏற்படாது 

சூழ்ச்சி இல்லாமல் செயல்படுங்கள் 
எதுவும் கட்டுப்பாட்டை மீறி போகாது  

விளக்கம் :

சாதனையாளர்களை புகழ்ந்து கொண்டே இருந்தால் அவர்கள் தங்கள் சுய கட்டுபாட்டை இழப்பர். அவர்களை உயர்ந்த இடத்தில வைத்து போற்றினால் அவர்கள் தலைகனம் பிடித்து அடுத்தவர்களை பற்றி கவலை படாமல் அவர்களை ஏறி மிதித்து முரட்டுத்தனமாக செயல்படுவர்  

இதயத்தை  வெறுமையாக என்றால் - ஆசைகள் இல்லாமல் 

வயிற்றை நிரப்பியும்  என்றால்   - மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்தும் 

என் தமிழாக்கத்தில் பிழை இருந்தால் பொறுத்து கொள்ளவும்.  

படித்து உணர மிக அருமையான புத்தகம் 


புதன், 30 மார்ச், 2011

ஓடும் நதியை போல

புத்தக விமர்சனம்


 ஓடும் நதியை போல 

மதுரை வாசகர்கள் குழுவின் உறுப்பினராக இருக்கும் எனக்கு கடந்த 20௦.02.2011 அன்று Paulo Coelho எழுதிய Like the Flowing River என்ற புத்தகத்தை மதிப்பீடு செய்யும் வாய்ப்பு கிடைத்தது. நான் படித்ததில் மிகவும் பிடித்த புத்தக வரிசையில் இந்த புத்தகத்திற்கு என்றும் என் மனதில் இடம் இருக்கும்.

Paulo Coelho பிரேசில் நாட்டை சேர்ந்த  பிரபல எழுத்தாளர். The Alchemist என்ற புத்தகத்தின் மூலம் உலக புகழ் அடைந்தவர்.  வாழ்வின் லட்சியத்தை கனவாக உருவகபடுத்தி, அந்த கனவின் மீது நம்பிக்கை வைத்து அதை நோக்கி ஒரு ஆடு  மேய்ப்பவன் செல்வதை போன்ற கதை இது. 

Like the Flowing River என்ற இந்த புத்தகம் பல செய்திதாள்களிலும் பத்திரிகைகளிலும் Paulo Coelho எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. மொத்தம் 227 பக்கம் கொண்ட இந்த புத்தகத்தில், 102 சிறு கட்டுரைகள் இருகின்றது. ஒவ்வொரு கட்டுரையும் ஒன்றிலிருந்து மூன்று பக்கங்களில் அடங்கிவிடும். புத்தகத்தின் விலை ருபாய் 295 /  


புத்தக ஆசிரியர் தன சொந்த வாழ்கை அனுபவம் மற்றும் இந்து மதம், பௌத்தம் ,கிறுத்துவ மதம், இஸ்லாம் போன்ற மதங்களில் இருக்கும் ஆன்மீக கருத்துகளை அடிப்படியாக கொண்டு கட்டுரையை அமைத்திருக்கிறார். 
  
இந்த புத்தகத்தில் உள்ள சில கட்டுரைகளை பற்றி பாப்போம்    


  1. யுத்தத்திற்கு தயாரானேன் - சில சந்தேகங்களுடன் (Prepared to battle with few doubts )- ஒரு காலை பொழுதில் தன் விட்டு அழகான தோட்டத்தில் உள்ள களை செடிகளை ஒரு களை எடுக்கும் கருவி கொண்டு எடுத்துகொண்டிருந்தார். அப்பொழுது அவருக்கு ஒரு சிந்தனை தோன்றியது. இந்த உலகில் பிறந்த அனைத்து உயிர்களுக்கும் வாழ உரிமை உண்டு. அதனால் இந்த களை செடிக்கும் வாழும் உரிமை உண்டு. களை செடிகளின் விதை காற்று, தேனீ, பட்டாம்பூச்சி மற்றும் பிற பூச்சிகள், சில விலங்குகளின் உதவியோடு தொலைதூரம் எடுத்து செல்லப்பட்டு, பல இடங்களில் பரவி வளர்கின்றன. இயற்கை ஒரு இனம் அழியாமல் தொடர செய்திருக்கும் ஏற்பாடு இது. இதை கொல்ல நான் யார் ? மாற்று சிந்தனையாக இந்த களைகள் வளர்ந்தால், தான் கஷ்டப்பட்டு வளர்க்கும் அழகான செடிகளை அழித்துவிடும். இதனால் நல்ல பயனை தரும் செடிகளுக்கு பாதிப்பு உண்டாகும் என்றும் தோன்றியது. அவரின் மன குழப்பத்திற்கு தீர்வாக பகவத் கீதை உதவிக்கு வந்தது. கிருஷ்ணன் அர்ஜுனனிடம் " உன்னால் ஒரு உயிரை கொல்ல முடியும் என்று நினைக்கிறாயா ? உண்மையில் கொலை செய்வது நீ அல்ல. இந்த செயலை செய்ய உன்னை வழிபடுத்துவது நான் தான். யாராலும் யாரையும் கொல்ல முடியாது. Paulo Coelho தயக்கம் இல்லாமல் தன் செயலை தொடருகிறார்.
  2. நம்மை பென்சிலுடன் தொடர்புபடுத்தி எழுதிருக்கும் இன்னொரு கட்டுரை. ஒரு பென்சில் தன செயலை சரியாக செய்வதற்கு அதனை இயக்கும் கை உதவியாக இருக்கிறது. அது போல மனிதன் தன செயல்களை சரியாக செய்ய கடவுளின் கை உதவி புரிகிறது.பென்சிலால் எழுதும் பொழுது அதன் கூர் மழுங்கி சரியாக எழுத முடியாமல் போகும். அப்பொழுது அதனை கூர்மை படுத்தி மீண்டும் எழுதுவோம். அது போல நமக்கு ஏற்படும் துன்பங்களையும் கஷ்டங்களையும் நம்மை கூர்மை படுத்தி கொள்ள வந்தவையாக நினைத்து நம்மை பண்படுத்தி கொள்ள வேண்டும்.
  3. பென்சிலால் எழுதும் பொழுது தவறு ஏற்பட்டால் அழித்து விட்டு மீண்டும் தவறு ஏற்படாமல் எழுதுவோம். அது போல வாழ்கையில் தவறு செய்தால் திருத்திக்கொண்டு மீண்டும் தவறு செய்யாமல் வாழவேண்டும். பென்சிலின் வெளியே உள்ள மரத்தை விட உள்ளே இருக்கும் கரி குச்சி தான் முக்கியம். அது போல நம் உள்ளே இருக்கும் ஆற்றல் தான் வாழ்வதற்கு உதவி செய்யும். பென்சில் தான் எழுதியதற்கான அடையாளத்தை விட்டு செல்லும். நாமும் நாம் வாழ்ந்த  தடத்தை விட்டு செல்ல வேண்டும். 
  4. செங்கிஸ் கான் என்ற மங்கோலிய பேரரசர் ஒரு முறை வேட்டையாட சென்ற பொழுது நடந்த சம்பவத்தை Paulo Coelho குறிப்பிடுகிறார். அவர் வேட்டையாட செல்லும் பொழுது Falcon (கழுகை போன்ற ஒரு பறவை) என்ற பறவையை உடன் அழைத்து செல்வது வழக்கம். ஒரு முறை தன் குழுவுடன் வேட்டையாடசென்று எதுவும் கிடைக்காமல் திரும்பி தன் இருப்பிடத்திற்கு வந்தார். தூக்கம் வரவில்லை என்பதால் அவர் மட்டும் தன் Falcon பறவையுடன் மீண்டும் வேட்டைக்கு சென்றார். சென்ற இடத்தில அவருக்கு தாகம் எடுத்தது. அப்பொழுது ஒரு மலையில் இருந்த பாறை இடுக்கில் இருந்து சொட்டு சொட்டாக தண்ணீர் வருவதை பார்த்தார். தான் எப்பொழுதும் வைத்திருக்கும் சிறிய கோப்பையை எடுத்து அதில் மிக மிகபொறுமையாக தண்ணீரை சேகரித்தார். அதனை அவர் பருக சென்ற பொழுது Falcon பறவை வேகமாக பறந்து வந்து அந்த கோப்பையை தட்டி விட்டது. எரிச்சல் அடைந்த அவர் மீண்டும் கோப்பையை எடுத்து பொறுமையாக நீரை சேகரித்து பருக சென்றார். மீண்டும் பறந்து வந்த அந்த பறவை தண்ணீரை தட்டி விட்டது.    செங்கிஸ் கான் கடும் கோபம் அடைந்தார். இந்த முறை தன் வாளை உருவி ஒரு கையில் தயாராக வைத்திருந்து மறு கையில் கோப்பையில் மீண்டும் தண்ணீரை பிடித்து பருக சென்றார். இம்முறையும் Falcon பறவை கோப்பையை தட்டிவிட்டது. கோபம் கொண்ட அவர் தன் வாளால் அந்த பறவையை வெட்டி கொன்று விட்டார். பின்னர் கோப்பையை எடுத்து நீரை பிடிக்க பார்த்த பொழுது சொட்டு சொட்டாக வந்த நீரும் நின்று போய் இருந்தது. எனவே அவர் அந்த பாறையின் மேல் ஏறி பார்க்கலாம் என்று மேலே ஏறினார். அங்கு அவர் பார்த்த காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  அங்கு இருந்த ஒரு சிறிய சுனில் நீர் இருந்தது. ஆனால் அந்த நீரில் ஒரு மிக விசத்தன்மை வாய்ந்த ஒரு பாம்பு செத்து கிடந்தது. தன் உயிரை காப்பாற்ற நினைத்த Falcon பறவையை கொன்று விட்டோமே என்று அவர் மிகவும் வருத்தப்பட்டார். தன் நாடு திரும்பிய அவர் தங்கத்தால் ஒரு பாலகன் பறவையை செய்தார். அதன் இறகு ஒவ்வொன்றிலும் ஒரு கருத்தை பதிந்தார். "உங்கள் உண்மையான நண்பன் உங்களுக்கு கெடுதல் செய்தாலும் அவன் நண்பனே ஆவான்"    கடும் கோபத்தில் எடுக்கும் எந்த முடிவும், செய்யும் எந்த செயலும் அழிவை உண்டாக்கும்.      
  5. ஒரு சராசரி மனிதனின் தினசரி வாழ்கையை அவர் பதிவு செய்து இருப்பதை படித்தால் பெரும்பாலனவர்களுக்கு தங்களை கூறுவதை போல தோன்றும். 
  6. பிரான்ஸ் நாட்டின் செய்தி தாள் ஒன்றில் மனிதன் ஒருவன் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இறந்து கிடந்த செய்தி வெளியானது. அந்த மனிதன் இறந்து 20௦ வருடம் கழித்து தான் அவனின் பிணம் கண்டுஎடுக்கபட்டது. இருபது வருடங்களாக அவன் மனைவி கூடவா அவனை தேடவில்லை? என்று வியந்தார். பின்னர் இருபது வருடங்களாக யாரும் தேடாத மனிதனாக அவன் வாழ்க்கையை நினைத்து வேதனைப்பட்டார்.அனாதையாய் பிறப்பதற்கு விட அனாதையாய் சாவது கொடுமை. அத்தகைய வாழ்வை நாம் வாழ கூடாது என்பது இந்த செய்தி உணர்த்தும் குறிப்பு.
  7. இன்னொரு கட்டுரையில் தன் வாழ்நாளில் பணி ஓய்வு பெற்ற பிறகு பல வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும் என்பதற்காகவே பொருள் ஈட்டிய ஒரு பெண்மணி, பக்கவாதம் வந்து ஒரு அறையில் முடங்க நேர்ந்த செய்தியை சொல்கிறார். அந்த பெண்மணி அந்த நிலையிலும் ஒரு வினோதமான உயிலை எழுதுகிறார். தான் இறந்த பிறகு தன்னுடைய அஸ்தி ௧௪௧ நாடுகளுக்கு எடுத்து செல்லப்பட்டு அங்குள்ள நீர்நிலைகளில் கரைக்கப்படவேண்டும் என்பதே அது. தன் தாயின் ஆசை படி அவர் மகன் அதனை செய்து முடித்த செய்தி ஆச்சிரியத்தை அளிக்கும். 
  8. வாழ்க்கையில் ஒரு குறிக்கோளை அடைவதை மலை ஏறுவதுடன் ஒப்பிட்டு Paulo Coelho எழுதிய கட்டுரையும் நன்றாக இருந்தது 
  9. இன்னொரு கட்டுரையில்நாம் வாழ்கையை நாம் தான் முடிவு செய்யவேண்டும் என்பதை உங்கள் தோட்டத்தை நீங்கள் தான் பயிர் செய்ய வேண்டும் என்றும் அப்படி இல்லாவிட்டால் என்னஆகும் என்றும் குறிபிடுகிறார். 
மென்மையாக மனதை தொடும் புத்தகம் இது. படித்து பயன்பெறுங்கள்