எழுத்தாளர்கள், ஓவியர்கள் , கவிஞர்கள் ஆகியோருக்கு கற்பனை திறன் அதிகம் உண்டு. அவர்களுக்கு மட்டும் அல்ல அனைவருக்கும் இந்த கற்பனை திறன் பலன் அளிக்கும். வியாபாரத்தில் கூட கற்பனை திறன் அவசியம். வித்தியாசமாக யோசித்து அதுவரை 100௦௦ ml , 200௦௦ ml , 500௦௦ ml பாட்டில்களில் வந்த ஷாம்பூவை ,ஒரு ருபாய் ஷாம்பூ பாக்கெட்டை இல் விற்கலாம் என்ற சிந்தனை ரெங்கராஜன் என்பவருக்கு வந்தது. சைக்கிளில் கடை கடையாக சென்று கிராமப்புறத்தில் விற்கமுயற்சித்து பின்னர் அந்த சிந்தனை பெரியா வெற்றியை தந்தது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு நிகராக வளர்ந்து நிற்கும் நிறுவனமாக அவரது Cavin - Kare நிறுவனம் வெற்றிநடை போட்டுவருகிறது. பல புதிய கண்டுபிடிப்புகளும் வித்தியாசமான சிந்தனையின் பலனே. மாவு அரைக்கும் கல் உரலில் குழவியை கையால் சுற்றி மாவு அரிப்பது வழக்கம்.மாவு அரைக்கும் கிரைண்டரில் குழிக்கு பதில் அடியில் உள்ள பத்திரம் சுழலும். ஆற்றி யோசித்ததே இதற்கு காரணம்.இத்தகைய கற்பனை திறன் Lateral Thinking எனப்படும். கற்பனை திறனில் Creative thinking மற்றும் Logical thinking என்றவையும் அடங்கும். எதையும் காரண காரியங்களோடு பொறுத்தி ஆராய்வதே Logical thinking
வெற்றி அடைபவர்கள் வித்தியாசமான செயல்களை செய்வதில்லை. செய்யும் செயலையே வித்தியாசமாக செய்வார்கள் என்று ஷிவ் கேரா கூறுகிறார்.
என் ஆறு வயது குழந்தையின் கற்பனை திறனை பார்க்கும் பொழுது வியப்பும் பயமும் ஒன்றாக வருகிறது. அவளுக்கு தினமும் நான் ஒரு கதை தூங்க போகும் முன் சொல்லவேண்டும். சரக்கு தீர்ந்துவிட்டால் பெரும்பாலும் கற்பனை கதையை சொல்லுவேன். சில சமயம் அவள் " அப்பா ஒரு யானை, ஒரு சிங்கம் மற்றும் ஒரு மயில் வரும் மாதிரி ஒரு கடை சொல்லு என்றோ ஒரு Fan ஒரு Kattil ஒரு TV வரும் மாதிரி (அவைகள் பேசவேண்டும் ) என்றோ கூறுவாள். நானும் கஷ்ட்ப்பட்டு ஒரு கடை சொல்லுவேன்.
சில சமயம் நான் நீ பதில்லுக்கு ஒரு கதை சொல்லவேண்டும் என்பேன். ஒரு முறை அப்பா நான் உன்னை பற்றி ஒரு கதை சொல்கிறேன் என்றாள். சரி என்றேன் . ஒரு முறை ரமேஷ் (நான்), கணேஷ் (என் தம்பி) இருவரும் தங்கள் அப்பாவுடன் ஒரு துணி கடைக்கு சென்றனர். அங்கு ரமேஷ் ஒரு T-Shirt வாங்கினான். கணேஷுக்கும் அந்த T-ஷர்ட் பிடித்துவிட்டது. எனக்கு தான் அந்த T-ஷர்ட் வேண்டும் என்று கேட்டான். இருவரும் கடையிலேயே சண்டை போட்டுகொண்டனர். உடனே அவங்க அப்பா " இங்கே சண்டை போடவேண்டாம். வீட்டுக்கு போய் யாருக்கு அந்த T-shirt என்று முடிவு செய்வோம் என்றார். வீட்டுக்கு வந்தவுடன் அந்த T-shirt யை அவங்க அப்பா " இந்த த-ஷர்ட் உங்க இரண்டு பேருக்கும் கிடையாது. எனக்கு தான் என்று கூறிவிட்டு அவரே அணிந்துகொண்டார். ரமேஷும் கணேஷும் திரு திருவென முழித்தனர் என்று மழலை மொழியில் கதையை கூறி முடித்தாள். நகைசுவையுடன் கூடிய அவளின் கற்பனை திறனை என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை.
நமது ஊடகங்களும் சமூகமும் எப்படி குழந்தைகளை பாதிக்கின்றது என்பதற்கு அவள் சொன்ன மற்றொரு கதை உதாரணம். ஒரு ஊருலமெரினா அப்படின்னு ஒரு பொண்ணு இருந்தா. அவங்க அம்மா அவளை மெரினா ரோசி அப்படின்னு தான் அவளை கூப்பிடுவாங்க. ஏனா அவ பிங்க் கலர்ல இருப்பா. ஒரு நாள் மெரினா ரோட்டில் நடந்து வந்துகிட்டு இருந்த போது எதிரே ரமேஷ் வந்தான். அவன் மெரினா கிட்ட போய் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்து " I Love You" என்றான். மெரினாவுக்கு பயங்கரமா கோபம் வந்துச்சி. அவ ரமேஷை "Hand bag " ஆள் அடித்து உன்னை எனக்கு பிடிக்கவில்லை. போய் விடு என்றாள்.
மறுநாள் மெரினா நடந்து வந்த போது மீண்டும் ரமேஷ் அவளிடம் போய் ஒரு "Bouquet " கொடுத்து " I Love You" என்றான். மெரினா அந்த Bouquet வை காலில் போட்டு மிதித்தாள். அப்பறம் உனை எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டு சிரித்து கொண்டே சென்றாள்.
ரமேஷ் அழுதுகொண்டே வீட்டுக்கு சென்றான். அவன் அம்மா ஏன்டா அழுவறே என்று கேட்டாங்க. ரமேஷ் நடந்ததை சொன்னான். உடனே அவங்க அம்மா அவனை திட்டி ' உன்னை காலேஜ் கு படிக்க அனுப்புனா லவ் வா பண்ற லவ்வு. இந்த வயசுல என்ன லவ் வேண்டி கிடக்கு. போய் படிக்கிற வேலைய பாரு என்றாள். அதுலேர்து ரமேஷும் ஒழுங்கா படிக்க ஆரம்பிச்சான் ( அப்பாடி தப்பித்தேன் )
இந்த கதையை கேட்டு சந்தோஷ படுவதா? இல்லை வருத்தபடுவதா ?
இப்பொழுது பள்ளிகூடங்களும் குழந்தைகளின் கற்பனை திறனை வளர்க்கும் பல விசயங்களை கற்று தருகின்றன. வீடு சுவர் முழுவதும் என் பெண் பள்ளியில் வரைந்த படங்களை, கற்று கொண்ட பாடங்களை வரையும் எழுதும் போது நான் தடுபதில்லை. நம் குழந்தைகள் நம்மைவிட புத்திசாலிகளாக இருப்பதை நாம் ஒத்துகொள்ளதான் வேண்டும். அவர்களின் அறிவு வளர்ச்சியை நாம் கட்டுபடுத்த முடியாது. ஆனால் எது நல்லது எது கேட்டது என்ற ஒழுக்க கல்வியை குழந்தைபருவம் முதலே எடுத்து சொல்ல வேண்டும். அதையும் கட்டாய படுத்தி திணிக்காமல் சொல்லும் விதத்தில் சொன்னால் நம் குழந்தைகள் அறிவுள்ளவைகலாக மட்டும் அல்லாமல் ஒழுக்கம் உள்ளவைகளாகும் வளரும். இந்த உலகம் போட்டி நிறைந்ததாகவும் வாழ்கை போராட்ட மயமாகவும் இருக்கும் சுழலில் டார்வின் நின் வலியதே வெல்லும் என்ற தத்துவத்தின் படி தவறான பாதைக்கு நம் குழந்தைகள் பிற்க்காலத்தில் செல்லாமல் தவிர்ப்பது நம் கடமையாகும். நல்ல சந்ததியினை உருவாக்குவதே நம் கடமை.
குழந்தைகளிடம் ஆக்கபூர்வமான நேரத்தை செலவிடுங்கள். அவர்களின் திறமையையும் ஆர்வத்தையும் அறிந்துகொண்டு அதற்க்கு முக்கியத்துவம் கொடுங்கள். அவர்கள் புத்தி கூர்மையாக இருக்க உதவுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் குழந்தை எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அவ்வாறே நீங்களும் இருங்கள். அவர்கள் மகிழிசியாக இருக்கும் படி பார்த்து கொள்ளுங்கள். தடுக்கி விழுந்தல்லும் மீண்டும் மீண்டும் எழும் தைரியத்தை ஊட்டுங்கள்
குழந்தைகளின் எதிர்காலமும் அவர்கள் வாழ போகும் உலகமும் அழகாக இருக்க இயன்றதை செய்வோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக