பிரபலமான இடுகைகள்

சனி, 16 ஏப்ரல், 2011

பாண்டிச்சேரி தேர்தல் கூத்துக்கள்

பாண்டிச்சேரி தேர்தல் கூத்துக்கள்  

கூத்து-1

காங்கிரஸ் கட்சியை சார்ந்த நாராயணசாமி என்பவர், தன் கட்சி மக்களுக்கு என்ன செய்திருக்கிறது என்று கூறும் பொழுது " புள்ளையை தவிர அனைத்தையும் தந்திருக்கிறோம் என்று கூறியுள்ளார் ". இதை கேட்டு கோபமான பெண்மணி ஒருவர் " நீ ஒன்னும் எங்கள்ளுக்கு புள்ளை தரவேணா - நான் வேணும்னா என் வீட்டுக்காரை உன் வீட்டுக்கு அனுப்புறேன் என்று கூறியுள்ளார் "
நான் இத்துடன் ஏன் உரையை முடித்துகொள்கிறேன் என்று நாராயணசாமி உடனேயே இடத்தை காலி செய்தார் 

( மக்கள் இலவசத்துக்கு ஆசைப்பட்டு "என்ன தருவே ?" என்று கேட்கும் நிலைமை வந்துவிட்டது. இலவசத்திற்கு ஆசைபடும் மக்கள் இதைவிட கேவல படவேண்டிய நிலைமை பிற்காலத்தில் ஏற்படும் என்பதை நினைவில் வைத்துகொள்ளுங்கள் )

கூத்து -2

பாண்டிச்சேரி லாஸ்பேட்டை தொகுதியில் நந்தா சரவணன் என்பவர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட தொகுதியில் நீண்ட காலமாக தன்னை அறிமுக படித்திகொண்டு, சின்ன சின்ன வேலைகளை சுயவிளபரங்களை செய்து கொண்டுஇருந்தார். ஆனால் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த சிவகொழுந்து என்பவருக்கு, திடீர் அரசியல் ஆசை வந்தது. காங்கிரஸ் தலைமையிடம் ஒரு பெரும் தொகையை கொடுத்து லாஸ்பேட்டை தொகுதியில் நிற்க சீட் வாங்கிவிட்டார். ஆனால் தொகுதியில் அறிமுகமே இல்லை. தன்னை தொகுதியில் அறிமுகபடுத்திகொள்ள தேர்தல் தேதி அறிவிக்கும் முன் 1000௦௦௦ ஏழை பெண்களுக்கு புடவை வழங்க திட்டமிட்டு பயனாளிகளுக்கு முன்கூட்டியே டோக்கன் வழங்கப்பட்டது. ஒரு குறிப்பிட்ட தேதியில் ஒரு திருமணமண்டபத்தில் வந்து புடவையை பெற்றுகொள்ளுமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டது.
தனக்கு சீட்டு கிடைக்காத கோபத்தில் இருந்த நந்தா சரவணன் இந்த நிகழ்வை கெடுக்க நூதனமாக ஒரு திட்டம் போட்டார். சிவகொழுந்து அடித்து கொடுத்த டோக்கனை போலவே அச்சு அசலாக 10000௦௦௦௦ டோக்கன் அடித்து, ஊர் முழுவதும் சிவகொழுந்து கொடுத்ததை போல கொடுத்து, திருமணமண்டபத்தில் வந்து புடவை பெற்று கொள்ளுமாறு மக்களிடம் சொல்லிவிட்டார்.
குறிப்பிட்ட தேதியில் திருமணமண்டபதில் கூடிய கூட்டத்தை பார்த்து மிரண்டுவிட்டனர் சிவகொழுந்தின் ஆதரவாளர்கள். பிறகு அங்கு என்ன நடந்திருக்கும் என்று கூறவும் வேண்டுமோ ?

கூத்து- 3

பாண்டிச்சேரியில் நகை கடன் மற்றும் கந்து வட்டி, ரன் வட்டி, மீட்டர் வட்டி போன்றவற்றில் கொடிகட்டி பறக்கும் சகோதரர்களிடம் தேர்தல் செலவுகளுக்காக நான்கு அரசியல்வாதிகள் சில பல லட்சங்களை கடன்பெற்று இருந்தனர். இதில் ஒரு சகோதரர் இவர்களுக்கு கடன் கொடுபதற்கு பதில் நாமே தேர்தலில் நின்று  விடலாமே என்று சொல்லிருக்கிறார். அதற்கு மூத்த சகோதரார் " இவர்கள் சம்பாதித்து நமக்கு தானே பல மடங்கு வட்டியுடன் தர போகிறார்கள். நாம் ஏன் அந்த ஆசை படவேண்டும் என்று கூறிருக்கிறார்" ஒவ்வுருவருக்கும் ஒரு பீலிங். ஒவ்வுருவருக்கும் ஒரு ஆசை.

கூத்து-4

ச்சே இந்த தேர்தல சாக்கா வச்சு  ஒரு லட்ச ரூபா சம்பாதிக்கலாம் என்று இருந்தேன். எழுபத்தி ஐயாயிரம் ருபாய் தான் கிடைத்தது என்று ஒரு இளைஞன்
புலம்பிகொண்டு இருந்தான். இரு சுயஉதவி குழு வைத்திருக்கும் அவன் தாய்க்கு ஒரு குழுவிற்கு இருபதாயிரம் ருபாய் என்று நார்பதயிரமும், இவன் நடத்தும் கிரிகெட் குழுவிற்கு இருபதாயிரமும், பின்னர் தினசரி தேர்தல் செலவிற்காக கொடுத்த பணத்தில் அமுக்கியது பதினைந்து ஆயிரமும் ஆகா மொத்தம்   எழுபத்தி ஐயாயிரம் ருபாய் தான் கிடைத்தது என்று கணக்கும் சொன்னான்.

வருஷத்துக்கு ஒரு தடவ தேர்தல் வந்தால் போதும். வேட்பாளர்கள் எல்லாம் பிச்சைகாரர்கள் ஆகவும் நாம் எல்லாம் பணக்காரர்கள் ஆகவும் ஆகிவிடலாம் என்று அவன் சொன்னதை கேட்டு அழுவாத சிரிப்பதா என்று தெரியவில்லை       

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

11.04.2011 அன்று புதுவையில் பல இடங்களில் இயக்குனர் சீமான் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வாக்கு அளிக்கும் படி பிரச்சாரம் செய்தார்.

"நாராயணசாமியின் புள்ளையை தவிர அனைத்தையும் தந்திருக்கிறோம் என்று கூறியுள்ளார்"

பதிலடியாக அதற்கு பதிலாக சீமான் பேசியது

"நீ இங்கு யாருக்கும் குழந்தை தரவேண்டாம் உன் கட்சி தலைவிக்கு கொடு என்றார்"

இந்த பேச்சை பதிவு செய்த உளவுதுறை காவலரே கைதட்டி ஆதரவு அளித்தார்.

கருத்துரையிடுக