மகளிர் சுயஉதவி குழுக்களுக்காக அரசு செய்திருக்கும் விஷயங்களை பார்த்தோம்.
இனி அவை உண்மையில் எவ்வாறு செயல்படுகின்றன, இந்த திட்டம் ஏழை மக்கள், சுய உதவி குழுக்களின் தலிவிகள் அரசு சார நிறுவனங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகம், வங்கிகள், மற்றும் வார்டு கவுன்சிலர் முதல் பிற அரசியல் வாதிகள் வரை எவ்வாறு தவறாக பயன்படுத்தபடுகிறது என்பதை பாப்போம்.
1. மகளிர் சுய உதவி குழுக்களும் அரசு சார தொண்டு நிறுவனங்களும்
ஒரு கிராமத்திற்கு/ஊருக்கு சென்று அங்குள்ள மக்களை சந்தித்து குழு உருவாக்க அரசு சார நிறுவங்கள் முயற்சிகள் செய்யும். இதில் வருமானம் பார்க்கும் வாய்ப்பு இருப்பதால் புற்றீசல் போல கடந்த 10௦ ஆண்டுகளில் ( ஐந்து ஆண்டுகளில் மிகவும் அதிகம் ) பல தொண்டு நிறுவனங்கள் உருவாகின.
ஒரு தொண்டு நிறுவனத்தை பதிவு செய்வது எளிது என்பதால் பத்து இருபது குழு வைத்திருந்தால் கூட தொண்டு நிறுவனம் என்று சொல்லிக்கொண்டு ஊரில் பலர் உலவ தொடங்கினர்.
மகளிர் திட்டத்தின் நோக்கத்தை எல்லாம் அவர்கள் மக்களிடம் சொல்ல மாட்டார்கள். குழுவாக சேருங்கள். சேமிப்பு செய்யுங்கள். ஆறே மாதத்தில் Rs60000 மானிய கடன் வாங்கி தருகிறோம். ஒரு வருடத்தில் ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் மானியத்துடன் தொழில் கடன் வாங்கி தருகிறோம் என்று மகளிரிடம் ஆசை காட்டுவார்கள். கடன் வாங்கி தரும் பொழுது தங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் அவர்கள் சொல்லிவிடுவார்கள்.
பொதுவாக அரசு சார நிறுவனங்களின் பிரதிநிதிகள் செய்வது என்னவென்றால் Rs10000 மானியத்துடன் சுழல் நிதி வேண்டும் என்றால் Credit rating செய்யும் சமயத்தில் RS3000 / தர வேண்டும் என்று கேட்பர். அதில் Rs1000 உதவி திட்ட அலுவலர், Rs1000 வட்டார வளர்ச்சி அலுவலர் ( BDO or A-BDO ) மற்றும் Rs1000 / தங்களுக்கு என்று நேரடியாக கூறியே கேட்பார். ஒருவரின் திறமையை பொருத்து இது கூடும் குறையும். அரசு சார நிறுவங்கள் மற்றும் மகளிர் குழுக்களிடம் பணம் வாங்கிகொண்டு வங்கி இணைப்பு தரும் வங்கி மேளார்களும் உண்டு.
தற்பொழுது நிலைமை என்னவென்றால், தங்களுக்குள் போட்டி இருக்கும் காரணத்தால், ஒரு கிராமத்தில் பத்து ௦ குழ இருந்தால். ஒரு குழுவிற்கு இருவர் அல்லது மூவர் என்று எடுத்து அதனை புதிய குழுவாக பதிவது மிக பெரிய மோசடியாக நடக்கிறது. முன்பு ஒரு குழு மூலம் சுழல் நிதி பெற்ற உறுப்பினரே, வேறு ஒரு குழு வேறு ஒரு NGO மூலம் மீண்டும் சுழல் நிதி பெறுவார். நான்கு ஐந்து குழுக்களில் உறுபினராக இருக்கும் பெண்களும் உண்டு.
தொண்டு நிறுவனம் செய்யும் இந்த தவறை மகளிர் திட்டம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகம் கண்டுகொள்வதில்லை. ஆனால் வங்கியில் எப்படி கடன் கிடைக்கும்? ஒரு தொண்டு நிறுவனம் பெரும்பாலும் ஒரு வங்கியின் நன்மதிப்பை பெற்று இருக்கும். இவ்வாறு ஏற்கனவே சுழல் நிதி பெற்ற உறுபினர்களே மீண்டும் மீண்டும் சுழல் நிதி பெறுவது ஒரு வழக்கமாகவே ஆகிவிட்டது.
மகளிர் சுய உதவி குழு தவிர சில தனியார் குறு நிதி நிறுவங்களும் பெண்களை குழுவாக அமைத்து தங்கள் சொந்த பணதையோ அல்லது வங்கியில் மொத்தமாக கடன் பெற்று அதை அதிக வட்டிக்கு கடன் கொடுப்பதும் அதிகரித்து வருகிற0து. ஆந்திர மாநிலத்தில்Micro Finance Institutions எனப்படும் இத்தகைய நிறுவனங்களுக்கும் ஆந்திர அரசாங்கம் செயல்படுத்தும் வெளுகு (Velugu )- என்ற மகளிர் திட்ட குழுக்களுக்கும் பெரிய போராட்டமே நடக்கிறது. ஆந்திராவின் ஹெலிகாப்ட்டர் விபத்தில் பலியான முன்னால் முதலமைச்சர் திரு. ராஜசேகர ரெட்டி அவர்கள், மகளிர் சுய உதவி குழுக்களை சரியாக பயன்படுத்தினால் அதனை மிக பெரிய ஒட்டு வங்கியாக மாற்றலாம் என்பதை தெரிந்து கொண்டு இந்த திட்டத்தை பல வகைகளில் முறைபடுத்தினார். இக்குழுக்களுக்கு 4 % வட்டியில் கடன் தரும் திட்டத்தையும் செய்தார். ஏழை மக்கள் சுய உதவி குழு மூலம் மட்டும் கடன் வாங்காமல் பல MFI மூலமும் கடன் வாங்கியதால் கடன் சுமை எகிறியது. MFI கடன் வசூலிக்கும் முறை கிட்டத்தட்ட கந்து வட்டிகாரகள் செயல்பாடுகள் போலவே இருக்கும். அதிக கடன் சுமை காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலையும் ஏற்பட்டது. இதற்கு MFI கள் தான் காரணம் என்று ஒரு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. இது சட்டசபையில் பெரிய அமளியை ஏற்படுத்தியது. இதன் வெளிப்பாடாக ஆந்திராவில் MFI யை முறைபடுத்தும் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதில் கடுமையாக விதிமுறைகள் இருந்தன. இதையே சாக்காக கொண்டு MFI போன்ற குறு நிதி நிறுவனங்கள் மூலம் வாங்கிய கடனை திருப்பி கட்டாதீர்கள் என்று கிராமங்களில் சுயநல நோக்கோடு சில அரசியல்வாதிகள் செய்தி பரப்பினர். இதனால் MFI நிறுவனங்களின் பிரதிநிதிகளை அடித்து விரட்டுவதும் அதிக அளவில் நடந்தது. MFI நிறுவனங்கள் இதனால் பெரும் பாதிப்பு அடைந்தன. அரசியல்வாதிகள் பொதுமக்களுக்கு நன்மை செய்வதற்காக இதை செய்யவில்லை. ஏழை பெண்களை தங்கள் ஒட்டு வங்கியாக்கும் செயலே இது.
தமிழ்நாட்டிலும் குறு நிதி நிறுவனங்கள் பல செயல்பட்டுவருகின்றது. ஏழை மக்களுக்கு சுயஉதவி குழுக்கள் மூலமும் MFI க்கள் மூலமும் கடன் கிடைப்பது எளிதாகி உள்ளது. இந்த கடன் எதற்காக பயன்படுத்தபடுகிறது, இந்த கடனால் அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய முடியுமா அல்லது தகுதிக்கு மீறி கடன் வாங்கி மீள துயரில் ஆழ்ந்துவிட போகிறார்களா என்பதற்கு ஆந்திராவில் நடந்ததே சாட்சி.
தமிழ்நாட்டில் மகளிர் சுய உதவி குழுவை வைத்து பல ஏமாற்று வேலைகளை அரசு செய்துகொண்டு வருகிறது. குறிப்பாக தி.மு.க ஆட்சியில் மகளிர் சுயஉதவி குழுவிற்கு சுழல் நிதி வழங்கும் விழா ஒரு ஏமாற்று விழாவாகவே பெரும்பாலும் நடத்தப்பட்டது. 1000௦௦௦ குழுக்களுக்கு சுழல் நிதி அளிக்க ஸ்டாலின் வருகிறார் என்று அறிவிப்பு வெளியாகும். உண்மையில் 100 குழக்கள் கூட அந்த கால கட்டத்தில் சுழல் நிதி பெற்று இருக்காது.
ஆனால் 1000௦௦௦ குழுக்களின் தலைவிகள் கையில் கடன் புத்தகம் வழங்க வேண்டும். அந்த மாவட்டத்தை சேர்ந்த மகளிர் திட்ட அலுவலர்கள் இரவு பகல் பாராமல் ஆள் சேர்க்க உழைப்பர். வட்டார வளர்ச்சி அலுவலகமும் சுறு சுறுப்பாக இயங்கும் . அந்த மாவட்டத்தில் இயங்கும் அனைத்து அரசு சார தொண்டு நிறுவனங்களுக்கும் தகவல் பறக்கும். 1000௦௦௦ குழுக்கள் வேண்டுமே ? எதற்கு ஒரு ஆண்டு இரண்டு ஆண்டுக்கு முன்பே கடன் பெற்ற குழுக்களின் கடன் அட்டை சேகரிக்கப்படும். வங்கியின் உதவியோடு போலி கடன் அட்டைகள் தயாரிக்கபடுவதும் உண்டு. மகளிர் சுய உதவி குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் தலைவிகளை விழா நடத்தும் இடத்திற்கு அழைத்து செல்ல வசதி, உணவு வசதி ஆகியவை செய்து தரப்படும்.
செய்தித்தாள்களில் 1000௦௦௦ மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ஸ்டாலின் இன்று சுழல் நிதி வழங்கினார் என்று செய்தி வரும். இதை பார்த்து அழுவாத சிரிப்பதா என்று தோன்றும். சில சமயம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் குழுக்களுக்கு சுழல் நிதி கொடுத்து ( குழு ஆரம்பித்து ஆறு மாதத்தில் கொடுக்கவேண்டியது ) அந்த வருட திட்டத்தின் படி கடன் கொடுத்ததாக கணக்கில் காட்டப்படும். உண்மையான பயிற்சி கொடுக்காமலே பயிற்சி கொடுத்ததாக கணக்கு காடும் நிறுவங்களும் உண்டு.
இதில் பெண்கள் எவ்வாறு சமூக பொருளாதார ரீதியாக முன்னேரே முடியும் ? ஆனால் விதிவிலக்குகளும் உண்டு. இந்த திட்டத்தை சரியாக பயன்படுத்தி தனியாகவோ கூட்டாகவோ தொழில் செய்து முன்னேறிய பெண்கள் பல உண்டு . ஆனால் குறுக்கு புத்தி கொண்ட சில பெண்கள் இவ்வாறு சுய உதவி குழுவில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தமாட்டார்கள். வங்கியிலும் பெரிதாக நடவடிக்கை எடுக்க முடியாது. சில சமயம் இந்த பணத்தை அரசு சார நிறுவனமோ இல்லை அதன் பிரதிநிதியோ சுறையாடிவிடுவது உண்டு.
MFI மற்றும் மகளிர் சுய உதவி குழுவின் மூலம் வங்கியிலிருந்து நேரடி கடன் இரண்டையும் வாங்கிய உறுப்பினர் கடன் கட்ட முடியாத சுழல் வரும் பொழுது வங்கியில் பெற்ற கடனை தான் கட்ட மாட்டார்.
நிறைய பொது துறை வங்கிகள் சுயஉதவி குழு களுக்கு கடன் தர யோசிக்கும் நிலை உருவாகிஉள்ளது. எனக்கு தெரிந்து மதுரையில் உள்ள கனரா வங்கியின் கிராமப்புற கிளை ஒன்றில் சுயஉதவி குழுவிற்கு கடன் கொடுத்து வாராகடனாக நிற்கும் தொகை அதிகம். அதிலும் ஒரு குறிப்பிட்ட தொண்டு நிறுவனத்தின் மூலம் வங்கி இணைப்பு செய்யப்பட்ட குழுக்களில் வாரா கடனாக இருக்கும் தொகை ஒரு கோடியை தாண்டும்.
அலங்காநல்லூர் ஒன்றியத்தில் நடந்த சம்பவம் ஒன்று. நகர பஞ்சாயதில் சுயஉதவி குழுக்களின் உறுப்பினர் ஒருவருக்கு ருபாய் ஆயிரம் மானியம் ஒதுக்கீடு செய்யபட்டிருந்தது. இதனை வாய்பாக கருதிய வார்டு கவுன்சிலர்கள், தங்கள் கிராமத்தில் ஒரு தொண்டு நிறுவனம் உருவாகிய குழுக்களை தாங்களாவே அணுகி, நான் மானியம் பெற்று தருகிறேன் என்று கூறினர். அனால் குழு பெரும் மானிய பணத்தில் பாதியை எனக்கு தரவேண்டும் என்று ஒப்பந்தம் போட்டனர். ஒரு குழுவிற்கு Rs12000 திலேருந்து Rs14000 திலேருந்து வரை மானியம் என்றால் கவுன்சிலற்கு Rs6000 முதல் Rs7000 / கமிசன். ஒவ்வொரு கவுன்சிலரும் Rs30000 முதல் Rs40000 வரை லாபம் பார்த்தனர். ௦௦௦
இப்பொழுது தேர்தல் அறிக்கையில் மகளிர் குழுகளுக்கு ஐந்து லட்சம் கடன் பத்து லட்சம் கடன் மற்றும் ஒரு லட்சம் முதல் இரண்டரை லட்சம் மானியம் என்று அறிவித்து பொது துறை வங்கிகளின் வயற்றில் புளியை கரைத்துள்ளனர்.
இவ்வாறு மக்களுக்கு கடன் கொடுப்பதில் உளவியல் பின்னணி ஒன்றும் உண்டு. கடன் வாங்கிய ஏழை மக்கள் கடன் கொடுத்தவனுக்கு அடிமை. ஏதோ தாங்கள் தான் கடன் கொடுப்பதாக அரசியல்வாதிகள் செய்யும் மாயத்தால், அவர்கள் தவறு செய்தாலும் தட்டி கேட்க பொதுமக்கள் தயங்குவர். போதாகுறைக்கு இலவசங்கள் ஓட்டுக்கு பணம் கொடுத்து ஊழலில் பங்குதார்கலாக மக்களை ஆக்குகின்றனர்.
இதில் உலக அரசியலும் உண்டு. உலக வங்கி, IFAD போன்ற நிறுவனங்கள் தான் இந்தியாவில் செயல்படுத்தபடும் அரசு திட்டங்களுக்கு நிதி உதவியும் கடனும் அளிகின்றன.
நம் நாட்டு அடிப்படை பொருளாதார கொள்கைகளை
மேலை நாடுகள் தான் முடிவு செய்கின்றன (விரிவான தகவலுக்கு ப்ளாக் பார்க்கவும் ). இத்தகைய சுழலில் தவறான பொருளாதார கொள்கையால் பொது மக்கள் பாதிக்கப்பட்டு, அவர்கள் கொந்தளித்தால் என்ன ஆவது ? அவர்கள் கொந்தளிகாமல் இருக்க என்ன செய்வது ? அவர்களை திருப்தி படுத்த ஒரு திட்டம் தேவை. அதே சமயம் அந்த திட்டத்தினாலும் நமக்கு பயன் கிடைக்க வேண்டும் என்று உலக நாடுகள் யோசித்ததினால் முஹம்மது யூனுஸ் கண்டுபிடித்த இந்த திட்டத்தை பிரபலபடுத்தி வளரும் நாடுகள் அனைத்தையும் கடைபிடிக்க வைத்தனர். இதில் செலவு செய்யும் பண்ணும் பெரும்பாலும் விழலுக்கு இறைத்த நீராக தான் போகிறது.