பென்சிலும் மனிதனும் \
ஒரு பென்சில் தன செயலை சரியாக செய்வதற்கு அதனை இயக்கும் கை உதவியாக இருக்கிறது. அது போல மனிதன் தன செயல்களை சரியாக செய்ய கடவுளின் கை உதவி புரிகிறது.
பென்சிலால் எழுதும் பொழுது அதன் கூர் மழுங்கி சரியாக எழுத முடியாமல் போகும். அப்பொழுது அதனை கூர்மை படுத்தி மீண்டும் எழுதுவோம். அது போல நமக்கு ஏற்படும் துன்பங்களையும் கஷ்டங்களையும் நம்மை கூர்மை படுத்தி கொள்ள வந்தவையாக நினைத்து நம்மை பண்படுத்தி கொள்ள வேண்டும்.
பென்சிலால் எழுதும் பொழுது தவறு ஏற்பட்டால் அழித்து விட்டு மீண்டும் தவறு ஏற்படாமல் எழுதுவோம். அது போல வாழ்கையில் தவறு செய்தால் திருத்திக்கொண்டு மீண்டும் தவறு செய்யாமல் வாழவேண்டும்.
பென்சிலின் வெளியே உள்ள மரத்தை விட உள்ளே இருக்கும் கரி குச்சி தான் முக்கியம். அது போல நம் உள்ளே இருக்கும் ஆற்றல் தான் வாழ்வதற்கு உதவி செய்யும்
பென்சில் தான் எழுதியதற்கான அடையாளத்தை விட்டு செல்லும். நாமும் நாம் வாழ்த்தா தடத்தை விட்டு செல்ல வேண்டும்
பாலோ கேல்ஹோ என்ற எழுத்தாளர் எழுதிய நூலில் படித்த கருத்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக