பிரபலமான இடுகைகள்

புதன், 18 மே, 2011

இது தான் அந்த ஜோசியர் சொன்ன விபத்தா ? என்ன கொடுமை டா சாமி


சும்மா ஒரு விளக்கத்திற்கு இது என் படம் இல்லை 

பொதுவாக நான் ஜோசியத்தை நம்புவது இல்லை. ஒரு நாள் காலை நான் அலுவலகம் கிளம்பிகொண்டிருக்கும் பொழுது காழியூர் நாராயணன் ஏதோ ஒரு தொலைக்காட்சி சேனலில் ராசி பலன் சொல்லிகொண்டிருந்தார். எத்தேச்சையாக நான் அதை பார்த்த பொழுது என் ராசிக்கு அன்றைய தினம் வாகன விபத்து நடக்க வாய்ப்பு உள்ளது என்றும் வாகனத்தில் செல்லும் பொழுது கவனமாக செல்ல வேண்டும் என்றும் கூறினார். ஹ்ம்ம் எப்படி எல்லாம் சொல்றாங்கபா என்று எண்ணியபடி என் இருசக்கர வாகனத்தை எடுத்து கொண்டு கிளம்பினேன். நூறு மீட்டர் தூரம் வரை கூட சென்றிருக்க மாட்டேன். சாலை ஓர மரத்தில் இருந்து புறப்பட்டு வந்த ஒரு கரு வண்டு நேராக என் உதட்டை நோக்கி வந்தது. சற்று உரசி விட்டு போனது போல தான் இருந்தது. ஆனால் சிறிது நேரத்தில் என் மேல் உதட்டில் பயங்கரமான வலி. என்னையும் அறியாமல் என் கண்களில் நீர். உடனே வீட்டுக்கு திரும்பினேன். முக கண்ணாடியில் பார்த்த பொழுது மேல் உதடு வீங்கி இருந்தது தெரிந்தது. சிறிது நேரத்தில் பல மடங்கு வீங்கி மேல் உதடு மட்டும் முகத்தில் இருந்து தனியாக தொங்கியது போல இருந்தது.  அலுவலகத்திற்கு விடுமறை சொல்லிவிட்டு மருத்துவமனை சென்று ஒரு TT ஊசி போட்டுக்கொண்டேன். கிறுத்துவ மருத்துவமனை அது. அங்கு இருந்த மருத்துவர் இரண்டு நட்ட்களுக்கு மாத்திரைகளும் எழுதி தந்தார். ஒரு நாள் முழுவதும் இருந்த வீக்கம் மறு நாள் தான் சரியானது.

இது தான் அந்த ஜோசியர் சொன்ன விபத்தா ? என்ன கொடுமை டா சாமி 

               

2 கருத்துகள்:

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

அந்த கரு வண்டு என்னாச்சு .. அதுக்கு நேரம் சரியா இருந்ததா னு தெரியணுமே..

( ஜோசியத்தல்லாம் நம்பிகிட்டு .. குழம்பலாமா ?. )

Layman9788212602 சொன்னது…

அந்த கரு வண்டு கவலை இல்லாமல் பறந்து போச்சு . அது தான் ஜோசியம் பாக்குறது இல்லையே

கருத்துரையிடுக