மின்சார சிக்கனம் விட்டுக்கும் நாட்டுக்கும் அவசியம். நம் தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக நாம் மின் தட்டுபாடால் அவதியுற்று வருகிறோம். வீட்டில் இரவில் மின்விசிறி சுழலவில்லை என்றாலோ AC நின்றுவிட்டாலோ நாம் தூக்கமும் அதனுடன் போய்விடுகிறது. இன்னொரு பக்கம் மின்கட்டணமும் எகிறியுள்ளது. எனவே மின்சாரத்தை வீணாகாமல் சிக்கனமாக பயன்படுத்தும் சில முறைகள் இங்கு தரபட்டுள்ளது. இது பலருக்கு தெரியும் என்றாலும் இதனை பின்பற்றினால் மிகவும் நல்லது.
கணினி : பெரும்பாலும் கணினியை பயன்படுத்திய பிறகு CPU வை மட்டும் அனைத்து விட்டு மானிட்டரை அணைக்காமல் விடுவது பலரது வழக்கம். வேறு வேலை பார்த்து கொண்டிருந்தாலும் அரகில் இருக்கும் கணினியை அணைக்க மனசு வராது. இதனை தவிர்கவேண்டும். மேலும் Tube Monitor ரை விட LCD monitor நான்கில் ஒரு பங்கு தான் மின்சாரத்தை பயன் படுத்தும் என்பதால் லகத் கு மாறிவிடுவது நல்லது
மின்விளக்குகள் : குண்டு பல்புகளை முற்றிலுமாக பயன்படுத்த வேண்டாம். சற்று விலை அதிகம் என்றாலும் கபில் பல்புகளை ( Compact fluorescent bulbs) பயன்படுத்துங்கள். வீட்டில் பகல் நேரத்தில் தேவை இல்லாமல் மின்விளக்கை போடா வேண்டாம். இருட்டாக இருந்தால் ஜன்னலை திறந்து வைக்கவும். மாலை நேரத்திலும் ஆள் இல்லாத அறைகளில் விளக்கு எரியவேண்டாம். பூஜை அறையில் கூட zero watts பல்பு போதும். CFL பல்புகளை பயன்படுத்தினால் மின்சிக்கணம் வெகுவாக ஏற்படும்.
AC :அதிக குளிர் ஊட்டும் நிலையிலோ அல்லது மிக குறைந்த குளிர் ஊட்டும் நிலையிலோ AC யை பயன்படுத்தவேண்டாம். மின் சிக்கனம் தரும் ஐது நாட்சதிரம் கொண்ட AC யை அதன் தயாரிப்பாளர்கள் தரும் சிக்கன பரிந்துரையை பின்பற்றி இயக்கலாம். அரை குளிர்தவுடன் இனி அச தேவை படாது என்ற நிலையில் AC யை அனைத்தும் விடலாம் . உங்கள் அறைக்கு தகுந்தவாறு சரியான AC (1.0.௦ டன், 1.5 டன் ) யை நிறுவவேண்டும். அறை AC பயன்பாட்டிற்கு ஏற்றவாறு முழுமையாக மூடப்பட்டு இருக்க வேண்டும் . AC யை மறைக்குமாறு எந்த பொருளையும் வைக்க வேண்டாம்
துணி துவைக்கும் இயந்திரம் :அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்கவும். கூடுமானவரை முழு load உடன் இயக்கவும். Hot Mode இல் இயக்கினால் அதிகஅளவு மின்சாரம் செலவாகும். ஓர் இரண்டு துணிகள் இருந்தால் கைகளால் துவைத்து விடவும். துணியில் உள்ள அழுக்குக்கு தகுந்தவாறு துவைக்கும் நேரத்தை குறைத்து வைத்து கொள்ளவும். நல்ல இயந்திரமாக பார்த்து வாங்கவும்
தொலைக்காட்சி : தொலைக்காட்சி பெட்டிக்கு செல்லும் மின் இணைப்பையே பயன்படுத்தத பொழுது எடுத்து விடவும் . இது மிக கஷ்டமான காரியமாக தோன்றும். பழக்கபட்டால் சரியாகிவிடும். இரவில் Cable Wire ரையும் ஒரு பாதுகாபிர்காக எடுத்துவிடுங்கள்
வாட்டர் ஹீட்டர் : தேவையான அளவு மட்டும் தண்ணீரை சூடாக்கி கொள்ளவும். அஹிகமாக கொதிக்கும் நிலைக்கு சூடாக வேண்டாம். அடுத்தவர் குளிக்க செல்லும் வரை ஹீட்டர் ரை ON செய்து வைக்க வேண்டாம். Theromostat உள்ள ஹீட்டர் ராக வாங்கவும்
குளிர்சாதன பெட்டி : சூடான பால், சூடான சமைத்த பொருட்களை சற்று ஆரிய பிறகே Fridge இல் வைக்க வேண்டும்
நீர் மோட்டார் : தண்ணீர் மேல் நிலை தொட்டி இருந்தால் தண்ணீரை மிக சிக்கனமாக பயன்படுத்தவும். அதனை நீர் விரயத்தை தடுபதுடன் அடிக்கடி மோட்டார் பயன்படுத்துவதையும் தடுக்கலாம்
மின்விசிறி : தேவையான பொழுது மட்டும் பயன்படுத்தவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக