பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 17 மே, 2011

வழிகாட்டும் புத்தகம்



Tao Te Ching என்பது சீனாவில் 2500 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட எண்பத்தி ஒரு பாடல்களை கொண்ட ஒரு தொகுப்பு.  இதில் சொல்லப்பட்ட கருத்துகள் "Taoism " என்ற பெயரில் வழங்கபடுகிறது. TAOஎன்பது " The Way" என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்கபட்டுள்ளது. இந்த வழி என்பதை, நாம் கடவுளின் வழி என்றும், இயற்கையின்  வழி என்றும் வாழ்வதற்கான வழி என்றும் எப்படி வேண்டும் என்றாலும் நம் விருப்பபடி அர்த்தம் கொள்ளலாம்.அத்தனையும் இதில் கூறப்பட்டுள்ள கருத்துகளுக்கு  பொருந்தும். The Book Of The Way and Virtue" என்று ஆங்கிலத்தில் நாம் அர்த்தம் கொள்ளலாம். Virtue என்பதற்கு நல்லொழுக்கம், இரக்கம், பொறுமை, அன்பு மற்றும் ஆற்றல் என்று பல அர்த்தங்கள் உண்டு. இது அனைத்தும் கூட இதில் சொல்லப்பட்டுள கருத்துகளுக்கு பொருந்தும். TAO Te Ching என்ற புத்தகம் ஒன்று Rupa publishing company ஆல் ஆங்கிலத்தில் வெளியிடபட்டுளது. இதனை எழுதியவர் Derek Lin. சீன மொழியின் மூல நூலின் சாரம் குறையாமல் அதன் பாடல்களை அப்படியே தகுந்த அர்த்தத்துடன் மொழிபெயர்கப்பட்டு வெளிவந்துள்ளது. பெரும்பாலும் கடினமான, பல பொருட்களை தரும் ஆன்மீக நூல்களை மொழிபெயர்க்கும் பொழுது மொழிபெயர்ப்பு என்ற பெயரில் தான் புரிந்துகொண்ட அர்த்தங்களை தெரிவிப்பது பலரது வழக்கம் என்று ஆசிரியர் கூறுகிறார்.   ஆனால் இந்த நூலில் பாடல்கள் அப்படியே மொழிபெயர்க்கப்பட்டு அதன் எதிரே உள்ள  பக்கத்தில் அதன் விளக்கம் தரபட்டுள்ளது. அதனால் நாம் குழப்பம் இல்லாமல்  படிக்கலாம்.

எந்த மதத்தையும் சாராமல் பொருள் சார்ந்த புற உலகத்தின் தன்மையையும் மனிதனின் அக உலகத்தின் தன்மையையும் எடுத்து சொல்கின்றன இந்த பாடல்கள்.  
இதனை இயற்றியவர் யார் என்று சரியாக தெரியாத காரணத்தினால் இது பலர் எழுதிய பாடல்களின் தொகுப்பு என்று ஒரு சிலரும் LAO TZU என்பவர் தான் இதனை முதலில் எழுதினார் என்றும் இரு வேறு கருத்துகள் நிலவினாலும் 2500 ஆண்டுகள் தாண்டி யாரும் இதனை விளம்பரபடுத்தாமல் நிலைத்து நிற்கின்றது இந்த பாடல்கள். இதற்கு காரணம் இந்த கவிதைகளின் பொதுவான அம்சம்,அனைவருக்கும் பொருந்தும் என்பதே. உலக பொதுமறையாம் திருக்குறளுக்கும் இந்த பெருமை உண்டு. 

இந்த புத்தகத்தில் உள்ள கருத்துகளை கேட்டோ படித்தோ புரிந்துகொள்வதை விட நம் வாழ்வோடு பொருத்தி உணர்துகொண்டால் அதிக பலனை அடையலாம் என்று இதன் முதல் பாடலிலேயே சொல்லப்பட்டுள்ளது.

வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த பாடல்களை படித்து வாழ்வோடு பொருத்தி பார்த்தல் ஒவ்வொரு முறையும் புதிய அர்த்தத்தை உணரலாம். 

ஒரு பாடல் 

ஒரு கோப்பையை அது நிரம்பி வழியும் வரை நிரப்புவதை விட 

வழியாதவாறு சிறிது இடம் விட்டு நிரப்புவது சிறந்தது 

ஒரு கூர்மையான ஆயுதத்தை தொடர்ந்து பட்டை தீட்டி கொண்டே இருக்கமுடியாது 

தங்கமும் பவழமும் நிறைந்த அறையை 

எப்பொழுதும் பாதுகாத்து கொண்டே இருக்க முடியாது 

ஒருவனுக்கு அகந்தையை ஏற்படுத்தும் பணமும் பதவியும் 

பின்னர் அவனுக்கு பேரழிவை ஏற்படுத்தும்  

செயலை முடித்து வெற்றியும் புகழும்  அடைந்தபின் விலகி நில் 

இது தான் சொர்கத்தை அடையும் வழி 

போதும் என்ற மனம் இல்லாமல் நம் வாழ்கை என்னும் கோப்பையை இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்ற ஆசையால் நிரப்பிக்கொண்டு இருந்தால் வாழ்கை சிறக்காது. ஒரு தேநீர் கோப்பையில் தேநீரை வழிய வழிய ஊற்றினால், தேநீர் வழிந்து கோப்பையும் அந்த இடமும் அசுத்தமாகிவிடும். மேலும் விளிம்பு வரை நிற்கும் தேநீர் கோப்பையை தூக்கி நாம் தேநீரை அருந்த நினைத்தால் நம் மீதே ஊற்றிகொள்வோம். அதன் சுவை உணர்து பருக முடியாது. வாழ்கையின் சுவையையும் அது போல பேராசைபட்டால் நம்மால் உணரமுடியாது. இது முதல் வரிக்கு என் மனதில் தோன்றிய விளக்கம்.

நாம் எதையாவது சாதித்தால் அதன் வெற்றியும் பெருமையும் புகழும் நம்மை பாதிக்காமல் அதில் இருந்து விலகி நிற்க வேண்டும். புகழுக்கு அடிமையான ஒருவன் சொர்கத்தை அடைய முடியாது  

ஒரு சிறந்த நிர்வாகத்தை எப்படி செய்யவேண்டும் என்று மற்றும் ஒரு பாடல் சொல்கிறது  

சாதனையாளர்களை புகழ்துகொண்டே இருக்காதீர்கள் 
அவர்கள் தடம் புரள நேரிடும் 
அரிதில் கிடைக்கும் பொருட்களை பொக்கிஷமாக நினைக்காதீர்கள் 
மக்கள் திருடர்களாக மாறமாட்டார்கள் 
இது தான் சிறந்தது என்று எதனையும் சுட்டி காட்ட வேண்டாம் 
அவர்கள் மனது குழம்பி விடும் 

புனித  தன்மை வாய்ந்தவர்கள் தங்கள் நிர்வாகத்தின் கீழ் உள்ள மக்களின் 
இதயத்தை வெறுமையாகவும் 
வயற்றை நிரப்பியும் 
தேவைகளை  குறைத்தும்
எலும்புகளை வலிமையாகவும் வைத்திருப்பர் 
மக்கள் சகுனிதனமும் பேராசையும் இல்லாமல் இருக்கட்டும் 
அப்படியிருந்தால் திட்டங்களுக்கு இடையூறு ஏற்படாது 

சூழ்ச்சி இல்லாமல் செயல்படுங்கள் 
எதுவும் கட்டுப்பாட்டை மீறி போகாது  

விளக்கம் :

சாதனையாளர்களை புகழ்ந்து கொண்டே இருந்தால் அவர்கள் தங்கள் சுய கட்டுபாட்டை இழப்பர். அவர்களை உயர்ந்த இடத்தில வைத்து போற்றினால் அவர்கள் தலைகனம் பிடித்து அடுத்தவர்களை பற்றி கவலை படாமல் அவர்களை ஏறி மிதித்து முரட்டுத்தனமாக செயல்படுவர்  

இதயத்தை  வெறுமையாக என்றால் - ஆசைகள் இல்லாமல் 

வயிற்றை நிரப்பியும்  என்றால்   - மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்தும் 

என் தமிழாக்கத்தில் பிழை இருந்தால் பொறுத்து கொள்ளவும்.  

படித்து உணர மிக அருமையான புத்தகம் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக