நேற்று எங்க ஏரியாவில் பவர் Shut down . காலையில் ஒன்பது மணிக்கு போன கரண்ட் மாலை எட்டரைமணிக்கு தான் வந்தது. என் மகள் கரண்ட் வந்தவுடன் தொலைகாட்சியை போட்டு சுட்டி டிவி பார்க்க ஆரம்பித்தாள். நான் சிறிது நேரம் கழித்து என் பெண்ணிடம் ஜெயலலிதா பற்றி என்ன நியூஸ் என்று பார்த்துகொள்கிறேன். கொஞ்சம் சேனலை மாற்று என்றேன். அவள் உடனே " ஜெயலதிதா வந்ததில் இருந்து சுத்தமா கரண்டே வரலன்னு சொல்ல போறாங்க' என்று சொல்லிவிட்டு முந்தியாவது கொஞ்சம் கரண்ட் வந்தது அப்பா. இன்னைக்கு full லா கரண்ட் இல்லை என்றாள்.
நான் சிரித்துவிட்டேன். ஹ்ம்ம் ஆறு வயது மகளுக்கு கூட அரசியலை புரியவைத்து விட்டது இந்த கரண்ட் பிரச்சனை
1 கருத்து:
ஹாஹா குழந்தைக்கு கூட புரியுமளவுக்கு இருக்கு நம்ம நாட்டு நிலைமை..:)
கருத்துரையிடுக