பிரபலமான இடுகைகள்

திங்கள், 18 ஏப்ரல், 2011

கடவுளுக்கு எழுதிய கடிதம்

ஒரு தபால் நிலையத்திற்கு பெறுனர்: கடவுள் என்று முகவரியிட்டு ஒரு கடிதம் வந்தது. ஆச்சிரியம் அடைந்த தபால் நிலைய ஊழியர் அந்த கடிதத்தில் என்ன தான் எழுதபட்டுள்ளது என்பதை அறிய அந்த கடிதத்தை பிரித்து படித்தார். அந்த கடிதத்தில் " நான் மாதம் ருபாய் 300௦௦/ பென்ஷன் வாங்கி காலத்தை தள்ளும் மூதாட்டி. இந்த மாத பென்ஷன் னை வாங்கி எடுத்துவரும் பொழுது பேருந்தில் அந்த பணம் திருடுபோய் விட்டது. இந்த பணம் இல்லையென்றால் நான் இந்த மாதம் முழுவதும் செலவுக்கு பணம் இல்லாமல் கஷ்டப்பட வேண்டீருக்கும். மேலும் பட்டினி கிடக்கவும் நேரிடும். எனவே அந்த பணம் என்னக்கு திரும்ப கிடைக்க நீ தான் உதவ வேண்டும் என மிக உருக்கமாக அந்த மூதாட்டி எழுதி இருந்தாள்.   

கடிதத்தை படித்து பரிதாபப்பட்ட தபால் நிலைய ஊழியர் தன நண்பர்களிடம் அந்த கடிதத்தை காட்டி அந்த மூதாட்டிக்கு உதவ அவர்களிடம் பணம் திரட்டும் வேலையில் ஈடுபட்டார். ருபாய் 270௦/ பணம் திரட்டபட்டது. கடவுளின் பெயரிலேயே அந்த பணம் மூதாட்டிக்கு அனுப்பப்பட்டது.

இரண்டு வாரம் கழித்து மூதாட்டியிடம் இருந்து கடவுளுக்கு மற்றும் ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் " பணம் கொடுத்து உதவிய கடவுளுக்கு நன்றி. இதனால் என் கஷ்டம் தீர்ந்தது. ஆனால் நீ அனுப்பிய பணம் முழுவதுமாய் என்னை வந்து சேரவில்லை. ருபாய் 270௦/ மட்டும் வந்தது. இந்த கேடு கேட்ட தபால் நிலைய ஊழியர்கள் தான் பணத்தை கையாடல் செய்திருக்க வேண்டும் என்று எழுதி இருந்தது "    கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக