பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

பணம் மற்றும் பதவி படுத்தும் பாடு


பணத்திற்காக உன் ஆன்மாவை இழக்க கூடாது
பணத்திற்காக உன் உறவுகளை இழக்ககூடாது 
பணத்திற்காக உன் சுயமரியாதையை இழக்ககூடாது 
பணத்திற்காக உன் உடல்நலத்தை இழக்ககூடாது
பணத்திற்காக உன் அறிவை இழக்ககூடாது 
பணத்திற்காக உன் மகிழ்ச்சியை இழக்ககூடாது  

பணம் ஒரு தவிர்க்கமுடியாத சக்தியாய் உருவாகிவிட்டது. சம்பளம் வாங்குபவர்களுக்கு மாத கடையில் பாக்கெட்டில் ஒரு நூறு ருபாய் பணம் கூட இல்லாமல் இருந்தால், அது நமக்கு பெரிய வேதனையை தருகிறது.   சம்பள நாளை எதிர்நோக்கியே மீதம் உள்ள நாட்களை தவிப்புடன் கழிப்பவர்கள் பலர். தின கூலி வேலை செய்பவர்களுக்கு மாதம் அல்லது வாரம் இவ்வளவு சம்பாதிக்கலாம் என்பதை உறுதி கூற முடியாது. விவசாய கூலிகள் அதிலும் குறிப்பாக விவசாய கூலியாக வேலை பார்க்கும் பெண்களின் நிலைமை இதைவிட மோசம். நிலத்தடி நீர் பற்றாகுறை, பருவம் தவறி பெய்யும் மழை. ஆற்று பாசனமும் கைவிட்ட நிலையில் விவசாயம் செய்வது மிககடினாமாகி விட்டது. முப்போகம் விளைந்த இடங்களில் இப்பொழுது ஒரு போகம் தான். காடாறு மாதம் வீடு ஆறு மாதம் என்பதுபோல் வருடத்தில் நான்கு அல்லது ஐந்து மாதங்களில் தான் சரியான கூலி வேலை கிடைக்கும் நூறு நாள் வேலை திட்டம் (NREGA ) விவசாயம் இல்லாத நேரத்தில் விவசாய கூலிகளுக்கு பணி உறுதி அளித்தாலும், சரியான திட்டமிடுதலை பஞ்சாயத்து அமைப்புகள் செய்ய தவறும் காரணத்தால் மற்றும் தவறான நடைமுறைகளினால் வேலை செய்யாமலையே கூலி என்ற நிலையை தான் ஏற்படுத்திஉள்ளது. தவிர விவசாய வேலை அதிகம் இருக்கும் மாதங்களிலேயே பெரும்பாலும் NREGA செயல்படுத்தபடுகிறது. இதனால் அதிக உழைப்பு தேவைப்படும் விவசாய கூலி வேலைக்கு செல்லாமல், நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் பணியை செய்யவே கிராம மக்கள் விரும்புகிறார்கள். ஒரே நேரத்தில் இரு வேலைகள் இருப்பதால் இதில் அதிக பணி நாட்கள் வேலை செய்யும் வாய்ப்பும் மாக்களுக்கு கிடைக்காமல் போகிறது. நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் பணிகளையும் மேம்போக்காக செய்யும் காரணத்தினால் பணம் விரயம் தான் நடக்கிறது. கண்மாய்கள் சரியாக தூர் வார படுவதில்லை. மர கன்றுகள் நடபட்டாலும், பின்னர் அவை சரிவர பராமரிக்கபடுவதிலை  இந்த திட்டத்தின் கீழ் செலவு செலவு செய்யபடும் பணதினால் கிராமத்திற்கும் பலன் இல்லை, விவசாயத்திற்கும் பலன் இல்லை. மக்களை சோம்பேறி ஆக்குவது தான் நடக்கிறது. பணம் விழலுக்கு இழைத்த நீர் போல ஆவது மட்டும் அல்லாமல், ஒரு சமுதாய சீர்கேடும் நடக்கிறது. திட்டத்தை என்னவோ நல்ல நோக்கத்தோடு தான் அரசாங்கம் செயல்படுத்துகிறது. ஆனால் அதனை நடைமுறை படுத்துவதில் தான் இத்தனை சீர்கேடும் நடக்கிறது. பல நல்ல திட்டங்களின் கதி இது தான்.


உண்ண உணவு, குடிக்க சுகாதாரமான நீர், இருக்க வீடு, உடுக்க உடை போன்ற அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்யாமல் வாழும் ஏழைகள் பலர். நகர் புற பெண்கள் குடும்பத்திற்காக படும் கஷ்டத்தை விட கிரமாபுற பெண்கள் குடும்பத்திற்காக படும் கஷ்டம் சொல்லிமாளது. சொல்லபோனால் பணம் ஈட்டுவது முதல் குடும்ப பாரம் முழுவதையும் தலையில் தாங்கும் பெண்கள் கிராமபுறத்தில் அதிகம்.  பல குடும்பங்களில் ஆண்கள் சம்பாதித்தாலும் அதில் பெரும் பகுதியை தண்ணி அடிப்பதில் செலவு பண்ணுவதை 70௦ % குடும்பங்களில் காணமுடியும். ஒரு பொறுப்புள்ள குடும்பதலைவிகளாக பெண்கள் செய்யல்படுவது உண்மை. குடும்ப தலைவன் என்ற அதிகாரம் மட்டும் வேண்டும். ஆனால் குடும்பத்தை கவனிக்கும் பொறுப்பை ஏற்கமாட்டேன் என்பது தான் பெரும்பாலான கிராமப்புற ஆண்களின் குணம். நகர்ப்புறங்களிலும் இது இருந்தாலும் , கிராமங்களில் இந்த போக்கு அதிகம்.   தங்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவே ஏழைகள் பெரும் பாடுபடவேண்டி இருக்கிறது. 


இத்தகைய சூழலில் அவர்களின் இயலாமையையும் ஆசைகளையும் பயன்படுத்தி, தங்கள் வியாபாரதிற்காகவும் அரசியல் லாபத்திற்காகவும் சுயநல நோக்கோடு  பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது.  இதனால் தங்கள் தகுதியை மேல் ஆசைபட்டு கடன் சூழலில் சிக்கும் நிலை உருவாகி உள்ளது. அடிப்படை தேவையான கழிப்பறை வசதி கூட பல வீடுகளில் இல்லை. அதற்க்கு இடமும் இல்லாத எழைகளுக்கு , பொது கழிப்பிட வசதியும் அனைத்து கிராமங்களிலும் எற்படுத்திதரவில்லை. அப்படியே இருந்தாலும் அவை சரிவர பராமரிக்க படுவதில்லை( பராமரிக்க நிதி ஒதிக்கீடு செய்யபட்டால் தானே )  


ஆனால் இலவச தொலைக்காட்சி, மிக்சி, க்ரிண்டேர் என்று கவர்சிகரமான வாக்குறுதிகள் அளிக்கபடுகின்றன. ஒரு கிராமம் முன்னேற எது தேவை ? ஒரு சமுதாயம் முன்னேரே எது தேவை ? தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்படும் மானாட மயிலாட, குத்து பாட்டு, கலாசார சீர்கேட்டை உண்டாகும் சீரியல் மற்றும் சினிமா வா ? அல்லது அடிப்படை சுகாதார வசதியா ? ஒரு சுயஉதவி குழுவில் உறுப்பினராக இருக்கும் 50௦ வயது பெண்மணி, குழுவில் ருபாய் 5000௦௦௦ கடன் கேட்டார். நான் எதற்கு கடன் என்று கேட்டதற்கு, தனக்கு இலவச தொலைக்காட்சி பெட்டி கிடைத்திருபதாகவும், ஆனால் வீட்டில் மின் இணைப்பு இல்லை என்றும், மின் இணைப்பு பெருவதார்காக கடன் வேண்டும் என்று கேட்டார். தன் பேரன்கள் தொலைக்காட்சி பார்க்க மின் இணைப்பு தருவதாகவும் சொன்னார். தன் பேரன்கள் படிப்பதற்காக வீட்டிற்கு மின் இணைப்பு தர நினைக்காதவர், தொலைக்காட்சி பார்க்க மின் இணைப்பு தர நினைத்தார். அடித்தட்டு மக்களை சினிமா மோகத்திலும் அறியாமையிலும் திளைதிருக்க வைத்து அதனேயே தன் ஒட்டு வங்கியாக மாற்றும் சாமர்த்தியம் இந்த அரசியல்வாதிகளுக்கு உண்டு. ஒட்டு மட்டும் அல்ல, தான் நடத்தும் தொலைகாட்சிகளுக்கும் வருமானம் பார்க்கும் செயல். மேலும் அதே ஊடகங்கள் மூலம் பல பொய்களை பரப்பி ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடிக்கும் திறன் இவர்களை விட்டால் யாருக்கு வரும்.


அடித்தட்டு மக்கள் தங்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மிக கஷ்ட்டப்பட்டு உழைத்து பணம் ஈட்டுகின்றனர். ஆனால் இவர்களை (அரசியல்வாதிகள்)  சுரண்டி தன் குடும்பத்தினர் பல தலைமுறைகளுக்கு சுகபோகமாக வாழ, தன் ஆன்மாவை இழந்து, சுயமரியாதையை இழந்து பணம் ஈட்டுகின்றனர். அத்தியாவசியமான தேவைகளை தாண்டி ஆடம்பர தேவைகளை பூர்த்தி செய்து கொண்ட பிறகும், பணத்தின் மீதான வெறி இவர்களுக்கு அடங்குவதில்லை.


தனக்கும் தன் குடும்பத்திற்கும் சொத்து சேர்க்க பயன்படுத்தின மூளையை, அதில் 10௦ % தை யாவது சமுதாய நலன் மற்றும் மக்கள் நலனுக்காக பயன்படுத்தியிருந்தால் நாடு நன்றாக இருந்திருக்கும். மக்களுக்கு மீன் பிடிக்க கற்று தராமல், மீனை மசாலா தடவி வறுத்து வாயில் ஊட்டிவிடும் வேலையை இந்த அரசு செய்ததாக ஆனந்த விகடன் பத்திரிகை தன் தலையங்கத்தில் எழுதியது. மக்களை பிச்சைகார்களாக, ஏழைகளாக, அறியாமையில் உழல்பவர்கலாக வைத்திரிந்தால் தானே இவர்கள் பிழைப்பு நடத்தமுடியும். 


பணத்தாசை, பதவியாசை, இதற்காக மானம் மரியாதை கொள்கை இவற்றை விற்றுவிடும் தைரியம், சகுனித்தனம், தன்னையும் தன் குடும்பத்தையும் தவிரா பிறரை பற்றி சிறிதும் கவலைபடாத இரக்கமற்ற குணம் ஆகியவற்றை கொண்ட எந்த ஆறறிவு பெற்ற மிருகமும் அரசியலில் மட்டும் அல்ல மற்ற துறைகளிலும்  பிரகாசிக்கலாம் என்பது தான் இன்றைய சூழல். ஆனால் இவர்கள் வாழ்வதினால் உலகிற்கு என்ன பயன்.  கெடுதலே அன்றி பயன் ஏதும் இல்லை 
       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக