பிரபலமான இடுகைகள்

திங்கள், 11 ஏப்ரல், 2011

முதல் அமைச்சர் விஜயகாந்த் -1

இந்த தேர்தலில் ஜெயித்து, ஜெயலலிதா காலில் விழுந்து  ஒரு பேச்சுக்கு விஜயகாந்த் தமிழக முதல் அமைச்சர் ஆகிவிட்டார் என்று வைத்து கொள்வோம். என்ன நடக்கும் ?


அதி காலை 10௦ மணி ( விஜயகாந்திற்கு அது தான் அதி காலை). போதை தெளிந்து எழுந்து மீண்டும் அரை (half )மயக்கத்தில் அமர்ந்து இருக்கிறார்.

விஜயகாந்த் P.A : சார் உங்களை பார்க்க மதுரை கலக்டர் வந்துருக்கார்  

விஜயகாந்த் : அங்.... வர சொல்லுங்க 

மதுரை கலக்டர் : வணக்கம் 

விஜயகாந்த் : சேலம் கலக்டர் ஆ வாங்க வாங்க 

மதுரை கலக்டர் : சார் நான் மதுரை கலக்டர் 

விஜயகாந்த் : நான் பேசும் பொழுது எதிர்த்தா பேசுறே ? ஒரு உதை விட்டேனா தெரியும். P.A. உடனே இவனுக்கு சேலத்துக்கு ட்ரான்ஸ்பர் ஆர்டர் ரெடி பண்ணு.

மதுரை கலக்டர் : நான் வந்த விஷயம் என்ன என்றால் ....

விஜயகாந்த் : சரி சரி ரொம்ப இழுக்காதே வந்த விசயத்தை சொல்லு...

மதுரை கலக்டர் : தேர்தல் நேரத்துல நான் ரொம்ப கெடு பிடியா நடந்துகிட்டதற்கு அழகிரி இப்ப ரொம்ப தொல்லை பண்றார். அடி ஆட்கள விட்டு என் ரூமுக்கு முன்னாடி 2 பாத்ரூம் போய்  வைக்குறார். காலைல கலக்டர் ஆபீஸ் ல அதை சுத்தம் பண்ணிட்டு தான் வேலைய ஆரம்பிக்க வேண்டிருக்கு.

விஜயகாந்த் : என்னையா ... இதை எல்லாம் ஒரு கம்ப்ளைன்ட் ன்னு CM கிட்ட  சொல்ல வந்துட்ட. காலைல வந்துருக்கும். போய் இருப்பானுங்க. பதிலுக்கு நீ வேனும்ன அவன் விட்டுக்கு போயேன்.

மதுரை கலக்டர் : என்ன சார் இப்படி பொறுப்பில்லாம பதில் சொல்றீங்க ? மதுரை போலீஸ் என்னடானா கலக்டர் கம்ப்ளைன்ட் கொடுத்தாலும், அந்த பேப்பர சுருட்டி காது கொடைறாங்க. காவல் துறையை கட்டுபடுத்தும் நீங்களும் பொறுப்பு இல்லாமல் இருக்கீங்க 

விஜயகாந்த் :  என்னடா நீ . சினிமாவுல நான் போலீஸ் வேஷம் போட்டத பார்த்து ரொம்ப எமாந்துட்ட போல. சரி சரி ரொம்ப கெஞ்சுற. CM ம ஒரு தடவ நேர பார்த்துட்டு சொல்லிடு போ 

மதுரை கலக்டர் : (ஜெர்காகி மெதுவான குரலில் ) நீங்க தானே சார் CM

விஜயகாந்த் : ஏன்டா உனக்கு ஒரு தடவ சொன்ன புரியாத ? எதிர்த்து பேசிக்கிட்டே இருக்க. நான் CM இல்ல டம்மி. மம்மி போய் பாரு 

மதுரை கலக்டர் : யாரு சார் நம்ம ஜெயலலிதா அம்மாவையா ?

விஜயகாந்த் : ஐயோ அடிச்ச போதையெல்லாம் போச்சே. இப்படி விவரம் எல்லாம இருக்கியே உன்னையெல்லாம் யார் கலக்டர் ஆக்குனது. மம்மி இன்ன   பிரேமலதா டா. அவ காதுல மட்டும் விழுந்துது ...... உன் சீட்டு கிழிஞ்சிடும். சரி சரி. அந்த Fridge இல் இருந்து VAT -69 எடுத்து கொடுத்துட்டு போ. நானும் அவ கிட்ட உன் பிரச்சனையை சொல்லறேன்.
பின் குறிப்பு 
விஜயகாந்த் P.A யாருன்னு கேட்கலையே. நம்ம வடிவேலு தான். விஜயகாந்த் CM ஆனதை  கேள்விபட்டதும் ஓடி வந்து விஜயகாந்த் காலில் விழுந்து, சில பல உதைகள் வாங்கி ( எவ்வளவு அடிச்சாலும் தாங்குறருயா )- சம்பளமே வாங்காமல் PA வேலை பார்த்துகொண்டிருக்கிறார்   


----------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக