பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

வதந்தி

தத்துவ மேதை சாக்ரடீஸ் அவர்களின் சீடர் ஒருவர் சாக்ரடீசிடம் "உங்கள் நண்பரை பற்றிய தகவல் ஒன்றை தெரிவிக்கவேண்டும் என்று ஓடோடி வந்தேன் என்றார். உடனே சாக்ரடீஸ் " நீ சொல்வதற்கு முன் நான் கேட்கும் கேள்விகளுக்கு  பதில் சொல்" என்றார்.

நீ சொல்லபோகும் தகவல் உண்மையானது தான் என்பது உனக்கு உறுதியாக தெரியுமா? என்று கேட்டார்.

அதற்கு சீடன் அது எந்த அளவிற்கு உண்மை என்று எனக்கு தெரியாது. கேள்விபட்டது தான் என்றார்.

உணமையானது தான் என்று உனக்கே உறுதியாக படாத தகவலை என்னிடம் ஏன் நீ சொல்லவேண்டும் ? என்று கேட்டுவிட்டு சரி பரவாயில்லை. என் நண்பனை பற்றி உயர்வானதாக நல்லதாக ஏதேனும் சொல்ல விரும்புகிறாயா? என்று கேட்டார்.

சீடன் நான் கேள்விபட்டது நல்ல செய்தி இல்லை என்றார்     

உண்மையா என்று தெரியாத, ஒருவர் பேருக்கு கேடு விளைவிக்கும் செய்தியை நான் கேட்பதால் என்ன பயன். நீ சொல்ல போகும் செய்தியினால் ஏதேனும் பயன் உண்டா என்றார் ?

அப்படி பயன் ஏதும் இல்லை என்றார் சீடர் 

செய்தி உண்மை இல்லை. அது நல்ல விசயமும் இல்லை. அதை நான் கேட்பதால் பயனும் இல்லை. பிறகு ஏன் அதை என்னிடம் நீ சொல்ல வேண்டும் ? என்றார்

சீடன் வெட்கி தலை குனிந்தான் 

பெரும்பாலும் வதந்தி இப்படி தான் பரவுகிறது. நமக்கு அடுத்த விட்டு கழிப்பறையை எட்டி பார்ப்பது தான் சந்தோஷம்.

ஆனால் நமக்கு நன்றாக தெரிந்த தீயசெயல்களை பற்றி பேசாமலும் கண்டுகொள்ளாமலும் இருந்தால் தீய்மை வெல்லும். தவறு நடக்கிறது என்றால் அது உறுதியாக தெரியும் என்றால் அதனை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க கூடாது. அதை தடுக்க நம்மால் ஆனா முயற்சிகளை செய்து கொண்டே இருக்கவேண்டும். வதந்தியை பரப்புவது எவ்வளவு குற்றமோ அதை போல தவறை கண்டுகொள்ளாமல் இருபதும் குற்றம்.

இந்த உலகம் துன்பமயமாக ஆவது கெட்டவர்களால் அல்ல. அதனை வேடிக்கை மட்டும் பார்த்துகொண்டிருக்கும் நல்லவர்களால் - நெப்போலியன்  

எனவே தவறை என்று உறுதியாக தெரிந்தால் தைரியமாக தட்டி கேளுங்கள். இதனால் உங்களுக்கு தைபட்ட முறையில் பாதிப்பு உண்டாகும் என்று தெரிந்தாலும் " நமக்கு ஏன் வம்பு என்று இருக்க வேண்டாம்" ஆனால் பெரும்பாலானோர் இப்படி தான் இருக்கிறார்கள். ஆனால் உறுதியாக தெரியாத விசயத்தை பற்றி பேசுவார்கள். 

   
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக