பிரபலமான இடுகைகள்

சனி, 16 ஏப்ரல், 2011

மக்கள் வரிபணத்தில் ஊதியம் வாங்கும் அரசாங்க அலுவலர்கள்

இந்த வருடம் தேர்தல் கமிசன் நடவடிக்கையை பாராட்டி தான் நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். தேர்தலும் அமைதியாகவே நடை பெற்றது. ஆனால் தேர்தல் பணிக்கு சென்ற சில ஆசிரியர்களின் நடவடிக்கை  எனக்கு வியப்பை தந்தது. 

என் மனைவி ஆசிரியராக பணி புரிகிறார். ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் ருபாய் 4000௦௦௦/  தொகுப்பு ஊதிய சம்பளத்தில் பணிநியமனம் செய்யப்பட்ட அவருக்கு, கருணாநிதியின் ஆட்சி காலத்தில் அவர் வந்த உடனேயே பணி நிரந்தரம் செய்யப்பட்டது. ஜெயலலிதா தொலைநோக்கு பார்வையோடு, அரசு பணியாலர்களின் நல்லதை பற்றி மட்டும் நினைக்காமல் ஒட்டு மொத்த தமிழ்நாட்டின் நலத்தை பற்றி சிந்தித்தார். தன்னை பற்றி மற்றும் நினைபவர்களுக்கு ஜெயலலிதாவின் செயல்பாடு பிடிக்காது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் நாம் பள்ளிக்கு காலதாமதமாக வர முடியாது. அரசாங்க சலுகைகள் ஊதிய உயர்வுகள் கிடைக்காது என்பது ஆசிரியர்கள் மட்டும் அல்லாமல் பல அரசு ஊழியர்களின் கருத்து. என் மனைவிக்கும் இதே கருத்து உண்டு.

என் மனைவிக்கு முதல்முதலாக தேர்தல் பணிக்கு செல்லும் வாய்ப்பு இந்த தேர்தலில் கிடைத்தது. இதனால் தன சக அசிரியர்களிடம் இந்த பணி குறித்து அவர்கள் அனுபவங்களை கேட்டார். அவர்களில் பலர் தேர்தல் பணி குறித்து கவலைப்பட தேவை இல்லை என்றும், பணி நேரத்தில் பிரியாணி மற்றும் பிற கவனிப்புகள் அரசியல் கட்சியினரால் தாராளமாக செய்யப்படும் என்று கருத்து கூறினார். முதல் நாள் இரவு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்கு சாவடி இருக்கும் ஊரில் தங்கவேண்டும் என்ற விதிமுறை இருந்தாலும், தங்க வசதி இல்லை என்றால் வீட்ட்க்கு சென்று விட்டு அதிகாலை வாக்கு சாவடிக்கு வரலாம் என்றும் கூறினர்.

இந்த எண்ணத்தில் தான் பலர் தேர்தல் பண்ணிக்கு சென்றனர். ஆனால் அவர்கள் நினைப்பில் தேர்தல் கமிசன் மண்ணை வாரி போட்டது. முதல் நாள் இரவு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஊரில் தங்காமல், வீட்டுக்கு சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டது (அது போலவே வாடிப்பட்டி தாலுகா வில் வீட்டுக்கு சென்றவர்கள் சிலருக்கு தேர்தல் கமிசன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது ) . மேலும் அரசியல் கட்சிகளை சார்ந்தவர்கள் யாரும் (பூத் agents )  முதல் நாள் வாக்கு சாவடிக்கு வரகூடாது என உத்தரவு இடப்பட்டது. இதனால் ஆசிரியர்கள் பலர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஊரில் தங்கவேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் அரசியில் கட்சிகள் மூலம் அவர்கள் எதிர்பார்த்த பிரியாணி உள்ளிட்ட கவனிப்பும் நடைபெறவில்லை. சில ஊர்களில் மட்டும் சாதாரண சாப்பாடு மற்றும் சிற்றுண்டி கிடைத்தது.

இதனால் வெறுப்படைந்த ஆசிரியர் ஒருவரின் புலம்பல் இது. தான் தங்க வைக்க பட்ட பள்ளியில் சரியான வசதிகள் இல்லை என்றும், பள்ளி மிகவும் குப்பையாக இருந்தது என்றும், கழிப்பறை சரியாகவே இல்லை என்றும் குறை கூறியுள்ளார். இவ்வாறு ஆசிரியர்களை  கொடுமைபடுத்திய தேர்தல் கமிசன் பற்றி ஆசிரியர்கள் அனைவரும் தின மலர் நாளிதழுக்கு எழுதி போடவேண்டும் என்று கூறியுள்ளார். இதை கேட்ட என் மனைவி என்னிடம் இந்த தகவலை கூறும் பொழுது " ஒரு நாள் ஏற்படும் ஒரு சின்ன பிரச்சனையை கூட தன் சக ஆசிரியரால் பொறுத்து கொள்ள முடியவில்லை என்றார்".

பள்ளியில் கழிப்பறை சரியில்லாமல் இருப்பதற்கும், பள்ளி சுத்தமாக இல்லாததற்கும் யார் காரணம்? பல பள்ளிகளில் கழிப்பறை வசதி ஆசிரியர்களுக்கு கூட இல்லை என்பது தான் வெட்ககேடான உண்மை. பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் நிலைமையை, குறிப்பாக பெண் குழந்தைகளின் நிலைமை இன்னும் மோசம். கழிப்பறை வசதியை ஏற்படுத்தி தரவோ அதனை பாரமரிக்கவோ பள்ளிகல்வி துறையும், அரசாங்கமும் தவறிவிட்டது என்பது தான் உண்மை. சுகாதாரத்தை பற்றி போதிக்க கூடிய பள்ளியின் நிலைமை இது என்றால் பின்னர் எப்படி சுகாதார பழக்கம் குழந்தைகளுக்கு வரும்?

என் மனைவி வேலை பார்க்கும் பள்ளியில் கழிப்பறை கதவு சரியில்லை என்பதால் ஊரில் இருக்கும் சமூக விரோதிகள் அதனை தவறாக பயன்படுத்தி, ஆசிரியர்கள் அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அங்கு இருந்த ஆரம்ப பள்ளிக்கும் உயர் நிலை பள்ளிக்கும் ஒரே கழிப்பறை தான். ஆரம்ப பள்ளியின் தலைமை ஆசிரியர், கழிப்பறை கதவை சரி செய்ய ஆரம்ப பள்ளி மற்றும் உயர் நிலை பள்ளி ஆசிரியர்களிடம் தலைக்கு ருபாய் நூறு கேட்டார். ஆனால் இதற்கு உயர் நிலை பள்ளி ஆசிரியர்கள் ஒத்து வரவில்லை. எனவே மீதம் உள்ள தொகையை ஆரம்ப பள்ளி ஆசிரியர்களே செலவு செய்து கழிப்பறை கதவை செய்து அதற்க்கு ஒரு பூட்டும் போட்டனர். தாங்கள் மட்டுமே அந்த கழிப்பறையை பயன்படுத்திக்கொண்டு உயர்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு கழிப்பறையை திறந்து விட மறுத்தனர். என்ன ஒரு தர்ம சிந்தனை ! இப்படி பட்ட ஆசிரியர்களால் குழந்தைகளுக்கு என்ன ஒழுக்கத்தை கற்று தர முடியும்? இவர்களுக்கு தான் அரசாங்கம் ஊதியத்தை வாரி வழங்குகிறது.

கிராமங்களில் ஆசிரியர் பணி பணி செய்யும் பலர் வட்டி தொழிலில் ஈடுபட்டு பணம் சம்பாதிப்பதும் நடக்கிறது. ஒரு ஆரம்ப பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒரு உணவகத்தை கிராமத்தில் நடத்திவருகிறார். சாப்பாடு பரிமாறுவது முதல் அனைத்து வேலையும் அவரே செய்வார். பற்றா குறைக்கு விவசாய வேலையையும் பார்த்துகொள்வர். இவர் எப்படி தன் ஆசிரியர் பணியை சிறப்பாக   செய்யமுடியும்?
ஒரு மலை கிராமத்தில் தனக்கு பத்தில் வெறும் ருபாய் ௧௫௦௦/ தந்து பினாமி ஆசிரியரை வைத்து பாடம் நடத்தபடுவதை நானே நேரில் கண்டுஇருக்கிறேன். செய்தித்தாளிலும் இதை பற்றி படித்திருக்கிறேன்.

இவர்களை விட மிக குறைந்த ஊதியம் வாங்கும் தனியார் பள்ளியின் ஆசிரியர்கள் இது போல செயல் பட முடியுமா? அவர்களுக்கு உள்ள கட்டுபாடுகள் எத்தனை எத்தனை. தங்களுக்கு உரிய தற்செயல் விடுப்பை கூட நிர்வாகம் அனுமதிக்காத காரணத்தினால் எடுக்க முடியாமல் தவிக்கும் ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளில் இருக்கிறார்கள்.

ஆசிரியர்கள் மட்டும் அல்ல மக்கள் வரிபணத்தில் தான், சம்பளம் வாங்கி தங்கள் வாழ்கையை நடத்துகிறோம் என்ற உணர்வே இல்லாமல் கடமையை செய்ய தவறுகிற, கடமையை செய்ய கையூட்டு பெறுகிற அரசாங்க       அலுவலர்களை நினைத்தால் இதயத்தில் வலி ஏற்படுகிறது

                  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக