பிரபலமான இடுகைகள்

வியாழன், 24 பிப்ரவரி, 2011

உதவியும் எதிர் பாராத நேரத்தில் வரும்.

ஒரு முறை நான் காரில் வீட்டை விட்டு சில கிலோமீட்டர் தூரம் சென்றதுமே கார் டயர் பன்ச்சர் ஆகி விட்டது. டிக்கியில் கூடுதல் டயர் இருந்தாலும் எனக்கு டயர் மாற்ற தெரியாது. எனவே மாருதி சர்வீஸ்கு செல்பேசியில் தொடர்புகொண்ட பொழுது, வேறு பணியில் இருப்பதால் வருவதற்கு இரண்டு மணி நேரம் ஆகும் என்று தகவல் தெரிவித்தனர். என்ன செய்வது என்று விழித்து கொண்டிருந்தபொழுது, எங்கள் வீட்டுக்கு அருகில் குடியிருக்கும் நண்பர் தன் இருசக்கர வாகனத்தில் வந்தார்.

அருகில் இருக்கும் பஞ்சர் பார்க்கும் கடையில் தகவல் சொல்லிவிட்டு போவதாக சொன்னார். சிறிது நேரம் சென்று பத்து நிமிடங்களில் பழுது பார்ப்பவர் வந்துவிடுவார் என்று தகவல் சொன்னார்.

சில நிமிடங்கள் சென்ற பிறகு ஒரு நபர் சைக்கிளில் வந்தார். நண்பர் சொல்லி வந்திருபரோ என்று நான் நினைத்தேன். ஆனால் வந்த நபரோ தான் அந்த வழியே சென்றதாகவும், திரும்பி வரும் பொழுதும் நான் நின்றுகொண்டிருபதை பார்த்து உதவி செய்ய வந்ததாகவும் தெரிவித்தார்.

பின்னர் என் பதிலை எதிர்பாராமல் கார் டிக்கியில் இருந்த டயரையும் ஜாக்கியையும் எடுத்தார். பின்னர் தரையில் படுத்து ஜாக்கியை பயன்படுத்தி   டயரை மாற்றினார்.

நான் அவரை பற்றி விசாரித்த பொழுது, தான் மீன் பண்ணை வைதிருபதாகவும், தந்தை ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாகவும் சொன்னார். தனக்கு பத்தொன்பது வயது தான் என்றும் அவர் சொன்னார். அருகில் உள்ள கிராமத்தில் தான் மீன் பண்ணை உள்ளதாகவும், தந்தையின் நண்பரின் ஆலோசனை படி மீன் பண்ணை வைத்ததாகவும் சொன்னார். வெறும் கைலியுடன் பார்பதற்கு முரட்டுதனமாக தோன்றிய அவர், டயர் மாற்றியவுடன் தான் கிளம்புவதாக கூறினார். டயர் மாற்றியதற்கு பணம் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். பின்னர் அருகில் இருந்த கடைக்கு சென்று, மிர்ரிண்டா பருகினோம். அவர் சிகரெட் ஒன்றையும் வாங்கி கொண்டார்.

நான் அவரின் செல்பேசி எண்ணை பெற்றுகொண்டேன். காசிராஜன் என்னும் அந்த நபரை ஒரு வாரம் சென்று, மாலை பொழுதில் செல்பேசியில் அழைத்தேன். தான் மீன் பிடித்து கொண்டிருபதாகவும், இரவு வண்டியில் ஏற்றி மார்க்கெட்டுக்கு அனுப்ப போவதாகவும் சொன்னார். மீன் வேண்டும் என்றால் உடனே வந்து பெற்றுக்கொள்ளும் படி சொன்னார்.

நான் தற்பொழுது மீன் தேவையில்லை எனவும், பிறிதொரு நாள் வந்து மீன் பண்ணையை பார்க்க வருவதாகவும் சொன்னேன். இந்த ஞாயிற்றுகிழமை செல்லலாம் என்று உள்ளேன்.

இந்த நிகழ்வு சில படிப்பினைகளை கற்று தந்தது.

1. டயர் மாற்ற உடனே கற்றுக்கொள்ளவேண்டும். மேலும் காரில் ஏற்படும் சின்ன சின்ன பிரச்சனைகளை நாமே சரிசெய்ய  கற்றுக்கொள்ளவேண்டும்.
2. உருவத்தை வைத்து யாரையும் எடைபோடகூடாது.

 கஷ்டம் மட்டும் அல்ல உதவியும் எதிர் பாராத நேரத்தில் எதிர் பாராத
 விதத்தில் வரும். 
                 

1 கருத்து:

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

1. டயர் மாற்ற உடனே கற்றுக்கொள்ளவேண்டும். //

நானும் நினைப்பதுண்டு.. ஆனால் நேரம் வரலை..

கருத்துரையிடுக