பரதேசி. இன்னும் சில மாதங்களுக்கு ப்ல விவாதங்களை எழுப்ப போகும் படம். ரெட் டீ என்ற நாவலை அடிபடையாக வைத்து பின்னப்பட்ட இந்த படம் பாலா இயக்கதில் வந்ததிலேயே சிறந்த படம் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. படத்தின் முதல் அரை மணி நேரத்தை ஜாலியாக எடுக்கிறேன் என்ற பெயரில் பாலா செய்துகொண்ட வியாபார ரீதியான சமரசத்தை தவிர்த்து பார்தால் இது மிக அருமையான படம். மிக நுணுக்கமாக அமைக்க பட்ட பாத்திர அமைப்புகள் (வேதிகா மட்டும் திருஷ்டி), மனதை தொடும், பிசையும் காட்சிகள், அருமையான ஒளிப்பதிவு - மற்ற் பாலா படங்களில் உள்ள அனைத்து அம்சங்களும் இருந்தாலும், ஒரு உண்மை சம்பவத்தை இதை விட அழகாக யாரும் பதிவு செய்ய முடியாது( எனினும் ரெட் டி யின் தமிழ் வடிவம் எரியும் பனிக்காடு என்னுள் எற்படுத்திய பாதிப்பு இன்னும் அதிகம். படத்தின் முதல் அரை மணி நேர சமரசம் நாவலில் இல்லை). என் நண்பர் ஜானகிராமன் அவர்கள் முதல் அரை மணி நேரம் நாஞ்சில் நாடான் எழுதிய ”இடாலாக்குடி ராசா” என்ற கதையை தழுவியே எடுக்கப்பட்டது. அந்த கதையை படித்தவர்களுக்கு முதல் அரை மணி நேரமும் பிடித்தது என்ற தகவலை கூறினார். இன்னொரு நண்பர் ரெட் டீ அப்படியே எடுத்திருந்தால் முற்றிலும் அழுகாச்சியாக இருந்திருகும் என்று கூறினார். படம் பார்க்கும் நமக்கே அப்படி என்றால்....தேயிலை தோட்டத்தில் கொத்தடிமைகலாக உண்மையில் வாழ்ந்த மக்களுக்கு?.
படத்தின் பலம்
பாலாவின் இயக்கம், அதர்வாவின் நடிப்பு, செழியனின் ஒளிப்பதிவு, சிறு சிறு நடிகர்களின் நடிப்பு பாத்திர தேர்வு (அதர்வாவின் பாட்டி யின் எதார்த்த நடிப்பு மிக சிறப்பு)
இடைவேளையின் பொழுது சாக கிடக்கும் தருவாயில் தன்னை விட்டு முன்னேரும் கூட்டத்தை நோக்கி நீளும் கை...அதை காட்சி அமைத்த விதம்
மதமாற்றம் செய்ய கிருத்துவர்கள் செய்யும் தந்திரத்தை நக்கல் அடித்த விதம்
வசனம் குறைவாக இருந்தும் காட்சிகள் மூலமே சொல்ல வந்ததை மிக அழுத்தமாக சொல்லியது
மிக உருக்கமானா முடிவும், அப்போழுது அத்ர்வாவின் நடிப்பும், காட்சிஅமைப்பும்
படத்தின் குறை
பட ஆரம்பிக்கும் பொழுது Steady cam shot சரியாக எடுக்கபடவில்லை. மேலும் சாலுர் கிராமத்து மக்கள் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டே இருந்தது எதார்தமாக இல்லை
வேதிகாவின் நடிப்பு
பின்னனி இசை..... மிக மோசம். இளையராஜா இல்லாத குறை நன்றாக தெரிந்தது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக