பிரபலமான இடுகைகள்

வியாழன், 17 ஜனவரி, 2013

தானம் அறக்கட்டளையின் 8ஆவது குறும்பட விழா போட்டி

தானம் அறக்கட்டளையின் 8ஆவது குறும்பட விழா போட்டி


'மேம்பாட்டு குறும்பட விழா' எனும் தலைப்பில் ஒவ்வொரு ஆண்டும் தானம் அறக்கட்டளை குறும்படம் மற்றும் ஆவணப்படங்களுக்கான போட்டிகளை நடத்தி வருகிறது. 1.வறுமை (2005), 2.தண்ணீரும் வாழ்க்கையும் (2006), 3.தண்ணீரும் மக்களும் (2007), 4.கலாச்சாரமும், பாரம்பரியமும் (2008), 5.வறுமைக்கு எதிரான ஆயிரமாண்டு வளர்ச்சி இலக்கு (2009) 6.மக்கள் ஜனநாயகமும், மேம்பாடும் (2010) 7.வாழ்வாதாரம் (2011) என்ற தலைப்புகளில் கடந்த ஏழாண்டுகளாக தானம் அறக்கட்டளையின் மேம்பாட்டு குறும்பட விழாக்கள் நடைபெற்றன. அதன் தொடர்ச்சியாக இவ்வாண்டு 'உணவுப்பாதுகாப்பும் பருவநிலைமாற்றமும்' எனும் தலைப்பில் ஜனவரி 28-30, 2013 தேதிகளில் நடைபெறவுள்ளது. சுற்றுச்சூழல், உணவு, பருவநிலை, நீர்நிலைமேம்பாடு, வேளாண்மை, வறுமை போன்ற கருத்தமைவுகளில் உள்ள குறும்படம் மற்றும் ஆவணப்படங்களை இப்போட்டிக்கு அனுப்பலாம். சிக்கலுக்கான தீர்வினை முன்மொழிவது அவசியம்.

உலகின் எந்த மொழிகளில் தயாரானதாக இருப்பினும், உரையாடல்கள் ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். கடந்த ஐந்தாண்டுகளுக்குள் வெளியாகியிருப்பதோடு, படைப்பாளியின் தனிப்பட்ட சிந்தனையின் வெளிப்பாடாக இருப்பது மிக அவசியம். போட்டிக்கு அனுப்பப்படும் படங்கள் ஏதேனும் விருதுகளோ, பாராட்டுகளோ பெற்றிருக்கும் பட்சத்தில் அவை குறித்த விபரங்களையும் இணைத்தல் வேண்டும். இயக்குநர், தயாரிப்பாளர் அல்லது தயாரிப்பு நிறுவனங்கள் படைப்புகளை அனுப்பலாம். விசிடி, டிவிடி அல்லது வி.ஹெச்.எஸ் வடிவங்களில்தான் அனுப்ப வேண்டும். ஒருவர் எத்தனை படைப்புகள் வேண்டுமானாலும் அனுப்பலாம். தாங்கள் அனுப்பும் படங்கள், எக்காரணத்தை முன்னிட்டும் திரும்ப அனுப்ப இயலாது. படைப்புகள் 45 நிமிடங்களுக்கு மிகாமலிருப்பது சிறப்பு. ஒவ்வொரு படைப்பையும் தனித்தனி விண்ணப்பங்களோடுதான் அனுப்ப வேண்டும். விண்ணப்பம் மற்றும் போட்டி குறித்த விரிவான விளக்க அறிக்கைகள் http://www.dhan.org/dff என்ற இணைய தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது. தங்களது படங்கள் (இரண்டு பிரதிகள்) மற்றும் விண்ணப்பத்தையும் ஒருங்கிணைப்பாளர், 8ஆவது மேம்பாட்டுக் குறும்பட விழா (2012), தானம் அறக்கட்டளை, மேம்பாட்டிற்கான தொடர்பியல் மையம், 7இ, வால்மீகி தெரு, சோமசுந்தரம் காலனி, மதுரை - 16 என்ற முகவரிக்கு வருகின்ற ஜனவரி 22, 2013ஆம் நாளுக்குள் எங்களுக்குக் கிடைக்குமாறு அனுப்ப வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம். கூடுதல் விபரங்களுக்கு 0452 4353983 / 9443572724 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

முதல் கட்டமாகத் தேர்வு செய்யப்படும் ஒன்பது படங்கள் பொதுமக்கள் மத்தியிலும், கல்லூரிகளிலும் திரையிடப்படுவதுடன், இறுதியாக வெற்றி பெறும் முதல் மூன்று படைப்புகளுக்கு பரிசுத்தொகையும், சான்றிதழும் வழங்கப்படும். படங்களுக்கான தேர்வுகளில் குறும்பட மற்றும் திரைப்பட இயக்குநர்கள், பேராசிரியர்கள், இதழாளர்கள் என பல்துறை விற்பன்னர்கள் பங்கேற்கின்றனர்.