இன்றைய காந்தி
ஜெயமோகன் எழுதிய இன்றைய காந்தி புத்தகம் காந்தி யை பற்றிய விமர்சனகளுக்கு பதிலாக அமைந்துள்ளது. காந்தியை அவரது அத்தனைய கிறுக்குதனங்களுடன் அப்படியே ஏற்றுகொள்கிறேன் என்று ஒரு இடத்தில ஜெயமோகன் சொல்லிருபது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது.
காந்திக்கு மகாத்மா என்ற பெயரை சூட்டியது கோண்டு என்ற மலைவாழ் மக்கள். பலரும் நினைப்பது போல ராபிந்தரநாத் தாகூர் அல்ல என்றும், காந்தி தான் மகாத்மா என்று அழைப்பதை விரும்பியதில்லை என்று ஜெயமோகன் குறிபிடுகிறார். காலில் விழும் கலாச்சாரத்தை அரசியலில் ஆரம்பித்துவைத்ததே காந்தி தான் என்ற குற்றசாட்டுக்கு பதில் அளிக்கையில் அவ்வாறு கூறுகிறார்.
காந்தியின் சாதியை குறிப்பிட்டு அவர் பனியா புத்தி உடையவர் என்ற கேள்விக்கு ஆம் அவர் பனியா புத்தி உடையவர் தான் என்று குறிபிடுகிறார். காந்தியின் வம்சம் சமண மதத்தை வழியாக கொண்டது. காந்தியின் 'புலன் ஒறுத்தல்' அதன் அடிப்படியிலேயே வந்தது. சமணர்கள் வியாபாரத்தில் சிறந்தவர்கள். நமது நாட்டுகோட்டை செட்டியார், வெள்ளாளர், சைவ முதலியார் போன்றவர்களும் சமணமததை ஒரு காலத்தில் பின்பற்றியவர்கள். பழங்காலத்தில் தொழிலை அடிப்படையாக கொண்டு சாதிகள் இயங்கதால், பல நெடுங்காலமாக ஒரு தொழிலை செய்து வந்தவர்களுக்கு அதற்குரிய அறிவும் திறமையும் இருப்பது இயற்கை தான். அந்த வகையில் காந்தி நிர்வாக திறமை மிக்கவராக , தலைமைத்துவ பண்பு உடையவராக இருந்தார். அனால் அவர் என்றும் தன சாதியை முதன்மைபடுத்தியது இல்லை என்கிறார் ஜெயமோகன்.
காந்தியின் காமம் என்ற தலைப்பில் காந்தி காதலையும் காமத்தையும் அணுகிய விதம் ஒரு பிரேதத்தை அறுத்து பார்க்கும் சலனமற்ற முறையில் என்று ஜெயமோகன் சொல்கிறார். ஒரு முறை சபர்மதி ஆசிரமத்தில் காதல் வயப்பட்ட பெண்ணை பிராத்தனை கூடத்தில் அனைவர் முன்னிலையிலும் கேள்வி கேட்டு இரண்டு நாட்கள் உண்ணா விரதம் இருக்க செய்தார். அந்த பெண்ணின் மனம் பதிக்கப்படும் என்று அவர் எண்ணவில்லை ( அவள் காதலித்த ஆணுக்கு என்ன தண்டனை கொடுக்கபட்டது என்ற விவரம் நூலில் இல்லை). ஆனால் காந்தியே தன் 55 அவது வயதில் 47 வயது ஆனா சரளா தேவி என்ற பெண்மணியின் மேல் கொண்ட ஈர்பால் அவரை திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார். பின்னர் அனைவரது எதிர்ப்பால் குறிப்பாக அவரது மகன் இந்த முடிவால் கஸ்துரி பை மனவேதனை அடைந்துள்ளார் என்று பலமுறை எடுத்து குரிய பிறகு திருமணம் செய்யும் முடிவை கைவிடுகிறார். காந்தி பிறகு தாந்திரிக செயல்களில் ஈடுபட்டு நிர்வாணமாக பெண்களுடன் படுத்து உறங்கியதையும் பின்னர் தன் பேத்தியையே நிர்வாணமாக தன்னுடன் படுக்கவைத்து உறங்கியதையும், குறிப்பிடும் ஜெயமோகன் காந்தி இதற்கு கொடுத்த விளக்கத்தை ஆசிரமத்தில் உள்ள பலர் ஏற்கவில்லை என்கிறார். நம் இந்து சமயத்திலும் ஜென் புத்த மதத்திலும் இந்த தாந்த்ரிய முறைகள் கடைபிடிக்க பட்டதற்கு ஆதாரம் உள்ளதாக ஆசிரியர் கூறுகிறார்.( தற்காலத்தில் இதையே நித்தியானந்த செய்ததற்கு எவ்வளவு எதிர்ப்பு. காந்தி செய்தால் சரி. நித்தியானந்த செய்தால் தவறு. காந்தியின் மீது ஊடகங்களும் வரலாற்று பதிவுகளும் ஏற்படுத்தியுள்ள நம்பிக்கை அத்தகையது.)
காந்தியின் அகிம்சை மற்றும் சத்தியாக்ரகாம் ஹிட்லர் முன்னால் செளுபடியாகும என்ற கேள்விக்கு ஹிட்லர்ரின் பலம் ஜெர்மன் மக்கள் அவர் மீது வைத்த நம்பிக்கையால் ஏற்பட்டது என்றும், மக்கள் சக்த்தியே பின்னால் அவர் ராணுவ மற்றும் அதிகார பலம் ஏற்பட காரணமாக இருந்தது என்றும், காந்தியாலும் தன அஹிம்சை முறையால் மக்களின் நம்பிகையை வென்றெடுத்து வெற்றிபெற முடிந்திருக்கும் என்கிறார் ஜெயமோகன்
காந்தியின் மகன்கள் நால்வரில் ( ஹரிலால், மணிலால், ராமதாஸ் மற்றும் தேவதாஸ் ) ஆகிய நால்வரில் ஹரிலால் மட்டும் அனைத்து கெட்ட குணங்களுடன் (குடி, சூது, விபச்சாரம், ஏமாற்றுதல் போன்ற காந்தி கு நேர்மாறான குணங்களுடன் இருந்தார் . மணிலால் தென்னாப்ரிக்கா அகிம்சா வழியில் விடுதலைக்கு போராட முக்கிய காரணமாக இருந்தார். நெல்சன் மண்டேலா காந்தியை அறிந்து கொண்டதே மணிலால் மூலமாக தான் என்று சொல்லிருகிரர். ராமதாஸ் காந்தி சேவாஷ்ரம் மூலம் தொண்டு செய்து வந்தார் என்றும் காந்தியுடன் கருத்து வேறுபாடு இருந்தாலும் நல்லவராக வாழ்தார். காந்தியின் பேரன்களும் நல்ல நிலையில் உள்ளனர். அறிவும் திறமையும் நல்ல பண்பும் கொண்டவர்களாக தான் பெரும்பாலவனர்கள் இருந்தனர் என்ற செய்தி, காந்தியின் வம்சா வழியினர் சாதனைகள் எதுவும் செய்ய வில்லை என்ற பொதுவான கருத்துக்கு எதிராக இருக்கிறது.
சே குவேரா புரட்சி வழியை தேர்ந்து எடுத்தாலும் அவரும் தநலம் இல்ல தலைவர் தானே. அவர் வழியும் கியூபா வில் வெற்றியை ஏற்படுத்தியுள்ளது. எனவே காந்திய அகிம்சா வழி மட்டும் தான் சிறந்தது என்று எப்படி கூற முடியம் என்ற கேள்விக்கு, புரச்சியில் பெரும் வெற்றி ஒரு விபத்து போல எதிர்பாராமல் தான் நிகழும். அத்தகைய முறையில் வெற்றி பெற்றவர்கள் தங்கள் கருத்துகளை மக்கள் மீது திணிக்க முயல்வர். அது சரியான வெற்றி கிடையாது. சே தநலம் இல்லாதவர், தன்னமிக்கை, தைரியம் விடாமுயற்சி உள்ளவர். அனால் அவருக்கு அரசியல் அறிவு போதுமான அளவு இல்லை என்கிறார் ஜெயமோகன். காந்தியின் வழியே நிரந்தரமானது நன்மை தர கூடியது.
காந்தியின் மீதான பிற குறைகளாக சொல்லபடுவது
1. முதலாம் உலக போரின் பொது ஆங்கிலேயர்க்கு ஆதரவான நிலை எடுத்தது
2. கிலாபத் இயக்கத்திற்கு ஆதரவு தந்தது
3.இரண்டாம் உலக போரின் போது ஆங்கிலேயர்க்கு எதிரான நிலைபாடை எடுத்தது
3. சுபாஷ் சந்திர போஸ் காங்கிரஸ் தலைவராக விடாமல் தடுத்தது
4. இரட்டை வாக்குரிமையை தலித் களுக்கு கிடைக்காமல் அம்பேத்கருக்கு எதிராக செயல்பட்டு பூனா ஒப்பந்தத்தை செயல்படுத்தியது
5.. சுதந்திரத்துக்கு பிறகு பாகிஸ்தானுக்கு தர வேண்டிய பணத்தை தர சொல்லி உண்ணாவிரதம் இருந்தது
இவை அனைத்திலும் காந்தியின் நிலைப்பாடு சரியே என்ற வாதத்தை ஜெயமோகன் எடுத்து வைக்கிறார்.
காந்தி- அம்பேத்கார் உறவை பற்றி சொல்லும் பொது இருவருமே பொதுநலம் மிக்கவர்கள், தங்கள் மக்களின் மேம்பாட்டிற்காக குரல் கொடுத்தவர்கள், ஒருவர் செய்ய தவறியதை மட்ட்றவர் செய்து இடைவெளியை நிரப்பியவர்கள், ஒருவரிடம் இருந்து மற்றவர் நல்ல விசயங்களை எடுத்துகொண்டவர்கள், தங்கள் முரண்களில் இருந்து நல்லது விளைவிக்க செய்தவர்கள். ஆங்கிலேயர்கள் காந்திக்கு எதிரான சக்தியாக அம்பேத்கரை பயன்படுத்தினர். அம்பேத்கர் ஆனிலேயே ஆதரவு நிலை கொண்டவர் என்று அருண் ஷோரி தன் Worshipping false Gods என்ற புத்தகத்தில் ஆதரங்களுடன் பட்டியல் இடுகிறார். காஞ்சன் இல்லையா Why I am Not a Hindu ? என்ற புத்தகத்தில் காந்தி ஆங்கிலேயருக்கு ஆதரவாக தலித் களுக்கு எதிராக செயல்பட்டதாக சொல்கிறார். ஆனால் இருவருமே மக்கள் நலனை முன்னிருத்தியே தங்கள் போராட்டத்தை செய்தனர் என்று ஜெயமோகன் குறிபிடுகிறார்
தனக்கு தானே ஏறக்குறைய தினமும் எனிமா கொடுத்து கொள்வது, தன மலத்தை தானே பரிசோதனை செய்வது, ஆடு பால் அருந்துவது போன்ற இயற்கை வைத்திய முறைகளில் காந்திக்கு இருந்த ஆர்வத்தை பற்றியும் நூலில் குரிபிடபட்டஉளது
காந்தியை பற்றிய சிறப்பான பல செய்திகளுக்காகவும் காந்தியை புரிந்து கொள்வதற்காகவும் இந்த புத்தகத்தை வாசிக்கலாம்.
ஜெயமோகன் சில இடங்களில் காந்தியை நியாய படுத்துவதாக தோன்றினாலும் அவரது இந்த முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது.
காந்தி மகாத்மா அல்ல ஒரு சராசரி மனிதன் தான் என்பது நூலை வாசித்தபிறகு எனக்கு தோன்றிய கருத்து.