பிரபலமான இடுகைகள்

புதன், 3 அக்டோபர், 2012

நிதிப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கான யோசனைகள்


தினமணி தலையங்கதில் இருந்து: 
நிதிப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கான யோசனைகளைக் கூறுவதற்காக மத்திய அரசினால் நியமிக்கப்பட்ட விஜய் கேல்கர் கமிட்டி அளித்துள்ள பரிந்துரைகளில் முதன்மையானவை என்று சொல்லத்தக்கவை ஆறு. அவை:
1. டீசல் விலையைக் குறைத்து விற்பனை செய்வதற்காக எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் மானியத்தைக் குறைக்க வேண்டும். முதல் கட்டமாக 2013 மார்ச் மாதத்திற்குள்ளாக டீசலுக்கு தற்போது வழங்கப்படும் மானியத்தைப் பாதியாகக் குறைக்க வேண்டும். மீதியை 2014 மார்ச் மாதத்துக்குள் முற்றிலுமாக இல்லாமல் செய்துவிட வேண்டும். நிகழாண்டில் டீசல் விலையைக் குறைந்தது லிட்டருக்கு ரூ.4 உயர்த்த வேண்டும்.
2. மண்ணெண்ணெய் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்த வேண்டும். இதற்கு, தற்போது ஒதுக்கப்படும் மானியத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைத்துவிட வேண்டும்.
3. அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள், சமையல் எரிவாயு உருளைகளுக்கு அளிக்கப்படும் மானியத்தைப் படிப்படியாகக் குறைத்து, முற்றிலும் இல்லாமல் செய்துவிட வேண்டும். முதல்கட்டமாக 2012-13 நிதியாண்டில் 25% மானியத்தை குறைத்துக்கொள்ள வேண்டும்.
4. தற்போது உணவு மானியமாக ரூ.85,000 கோடி செலவாகிறது. நெல், கோதுமை போன்ற உணவு தானியங்களுக்கு ஆதார விலை அறிவிக்கும் அதே வேளையில், நியாயவிலை கடைகளுக்காக மத்திய அரசு வழங்கும் விலையையும் உயர்த்த வேண்டும். அதேபோன்று, வறுமைக் கோட்டுக்கு மேலே வாழ்பவர்களுக்கு வழங்கப்படும் உணவு தானியங்களுக்கான மானியத்தை ரத்து செய்து, சந்தை விலையில் பொருள்களை விற்பனை செய்ய வேண்டும்.
5. உரங்களுக்கு அளிக்கப்படும் மானியத்தைப் படிப்படியாக குறைத்து, யூரியா, நைட்ரேட் பாஸ்பேட் உரங்களை அதன் சந்தை மதிப்புக்கேற்ப அரசே ஆண்டுதோறும் விலை நிர்ணயம் செய்யலாம்.
6. மானியத் தொகையைப் பொருளாக வழங்காமல், பணத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டால், அமலாக்கக் குறைபாடுகள் இல்லாமல் செய்துவிட முடியும்.
இந்தப் பரிந்துரைகளை அமல்படுத்தினால் நிதிப் பற்றாக்குறை அளவைப் பெருமளவு குறைத்துவிட முடியும் என்று பட்டியலிடுகிறது கேல்கர் கமிட்டி. இதுதவிர, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்றுப் பணம் பெறும் வழிமுறை, பயன்படாத, பயன்படுத்தப்படாத அரசு நிலங்களை விற்பனை செய்து பணம் பெருக்கும் வழிமுறை என்று பலவிதமான யோசனைகளும் இக்கமிட்டியின் பரிந்துரைகளில் அடங்கும்.
மேலும் சில யோசனைகள்
1. மானியங்களை நிறுத்தி விட்டால் மக்கள் பலர் பசி பட்டினியால் தொஉயிர் விடுவர். இது மக்கள் தொகையை வெகுவாக குறைக்கும். இதனால் அரசாங்கத்திற்கு இன்னும் செலவு குறையும்
2.அரசு மருத்துவமனைகளை முற்றிலுமாக மூடிவிடலாம். இதனால் மேலும் உயிர் இழப்புகள் எற்ப்பட்டு மக்கள் தொகை மேலும் குறையும். 
3. அரசு கல்விக்கு செய்யும் செலவுகளையும் நிறுத்திவிடலாம். பள்ளிகூடங்களை அரமூடிவிடலாம். படித்தால் தானே வேளை கேட்பார்கள். கேள்வியும் கேட்பார்கள்?
4. பொதுஇடத்தில் அரைமணி நேரத்திற்கு மேல் நின்றாலோ/கூடிபேசினாலோ மணி நேரத்திற்கு ருபாய் பத்து முதல் நூறு வறை வரி விதிக்கலாம்
5. பொது மக்கள் தங்களுக்கு தேவையான மின்சாரத்தை தாங்களே உற்பத்தி செய்து கொள்ளவேண்டும். வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இது பொறுந்தாது.
6. அரசு அதிகாரிகள்/ அரசியல்வாதிகலுக்கு இனி சம்பளம் கிடையாது. ஆனால் அவர் அவர் திறமைக்கு எற்ப பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கி கொள்ளலாம்.லஞ்சம் வருமானத்ற்கு எற்ப
வருமான வரி செலுத்திவிட வேண்டும். 
7. ஒரு குழந்தைக்கு மேல் பெற்றால் அரசுக்கு முதல் வருடம் ருபாய் இருபதாயிரம் செலுத்த வேண்டும். வயது கூட கூட வருடம் பத்தாயிரம் கூடுதலாக செலுத்தவேண்டும். அப்படி செலுத்த தவறினால் அரசே கருணை கொலை செய்துவிடும்.
8. விவசாயிகள் சாகுபடி செய்யும் பயிருக்கு வரி கட்ட வேண்டும். பயிறுக்கு தகுந்தவாறு வரி விதிக்கபடும்.
9. விடுகளில் பயன்படுத்தபடும் தண்ணிருக்கு லிட்டருக்கு ருபாய்உ ப்த்து ம்ட்டும் வசூலிக்க வேண்டும். நீர் அத்தியாவசிய பொருள் என்பதால் கூடுதல் பணம் வசூல் செய்ய கூடாது
10. விவசாயத்திற்கு 100 லிட்டறுக்கு மேல் போகும் ஒரு ஒரு லிட்டருக்கும் ருபாய் இரண்டு மட்டும் வசூலிக்கலாம். விவசாயம் நாட்டின் முதுகெலும்பு என்பதால் இந்த சலுகையை அளிக்கலாம்.

மேலும் பல யோசனைகள் என்னிடம் உள்ளது. மன் மோகன்சிங், சிதம்பரம், மோண்டேக் சிங் அலுவாலியா ஆகியோர் நேரடியாக தொடர்பு கொண்டால் ஒரு கணிசமான தொகை வாங்கிக்கொண்டு ஆலோசனை தருவேன். இல்லையென்றால் உலக வங்கி, அமெரிக்கா மற்றும் சோனியா காந்தி அனுமதியுடன் என்னையே நிதி அமைச்சர் ஆக்கலாம். மக்கள் கேள்வி கேட்டால் என் மீது பழி போட்டு நீங்கள் தப்பிக்க இது மேலும் உதவும்.


இப்படிக்கு

மன் மோகன்சிங், சிதம்பரம், மோண்டேக் சிங் அலுவாலியா, ராகுல்,மோடி, கருணாநிதி, அத்வானி,அம்மா, மம்தா, நமீதா, குஷ்பு, கனிமொழி, ராமதாசு, விஜயகாந்த்,விஜய், அன்புமணி, விஜய், டி.ராஜேந்தர்,அரவிந்  கெஜிரிவால், பாபா ராம் தேவ், , போல அரசியலுக்கு வந்து சேவை செய்ய ஆசை படும் ஒரு இந்திய குடிமகன். 

செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

எனக்கு பிடித்த தமிழ் படங்கள் -1

எனக்கு பிடித்த தமிழ் படங்கள் -1

1. அழகி - தங்கர்பச்சன்
2. ஆடுகளம் -வெற்றி மாறன்
3. கேளடி கண்மணி - வசந்த்
4. பாஸ் என்ற பாஸ்கரன் -ராஜேஷ்
5. சுப்ரமணியபுரம் - சசிகுமார்
6. முதல் மரியாதை - பாரதிராஜா
7. முள்ளும் மலரும் - மகேந்திரன்
8. எங்கேயும் எப்பொழுதும்
9. காதல் - பாலாஜி சக்திவேல்
10. தில்லு முள்ளு - பால சந்தர்
       

செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

நேர்மையாக வாழ முடியுமா?


நேர்மையாக வாழ முடியுமா?
பதவியை தந்து பார். மனிதனின் உண்மையான குணம் தெரியும் என்பார்கள். சர்வாதிகார மனபான்மையை பல நிர்வாக சுழலில் பார்க்க முடிகிறது. இதற்கு அறியாமை காரணமா இல்லை தலைகனம் காரணமா என்று பட்டிமன்றமே வைக்கலாம்.
தற்பொழுது உள்ள போட்டி நிறைந்த உலகில், பதவியும் பணமும் புகழையும் பெற எதை வேண்டுமென்றாலும் செய்யலாம் என்ற மனநிலை பலரிடம் உள்ளது. நேர்மை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் சுழல் உள்ளது. நேர்மையானவர்கள் கூட சில சமயத்தில் நேர்மை தவறி நடக்கும் படி நேர்கிறது. மகாபாரதத்தில் தர்மன் கூட கண்ணனின் அறிவுரைபடி அசுவதாமன் என்ற யானை இறந்த பிறகு, அசுவதாமன் என்ற தன் மகன் இறந்துவிட்டானா? என்று துரோணாசாரியார் கேட்ட பொழுது ஆம் என்று பொதுவாக, பதில் சொல்லி அவரை நிலைகுலயவைத்து அவர் தோல்வி பெற காரணமாக இருந்தான்.
எது தர்மம். தர்மம் என்பது நேர்மை, கடமை, நீதி, நன்மை போன்ற பல அர்த்தங்களை உடையது. யக்‌ஷனிடம் எது தர்மம் என்று யுதிஷ்ட்ரன் கூறும் பொழுது – காரணத்தை கொண்டு தர்மதை நிர்ணயம் செய்ய முடியாது. ஏன் என்றால் அந்த காரணமே அடிபடை இல்லாதது. புனித நூல்களும் தர்மத்திற்கு வெவ்வேறு அர்த்தங்களை சொல்கிறது. தர்மம் என்பது என்ன? என்று எந்த ஒரு ஞானி சொன்னதையும் இறுதியான கருத்தாக எடுத்துகொள்ள முடியாது. தர்மத்தின் உண்மை ஆழ்ந்த குகையோன்றில் புதைந்துள்ளது என்கிறார்.  
பிழைபதற்காக எதை வேண்டுமானாலும் செய்ய தனிமனிதன் மட்டும் அல்ல, பல நாடுகளும் கூட தன் வருமானதிற்காக எதையும் செய்ய தயாராக உள்ளன. தாய்லாந்து நாட்டில் சுற்றுலா பெருக, விபசாரம் ஒரு தொழிலாக அங்கீகரிக்க பட்டுள்ளது. சுவிசர்லாந்து நாட்டின் சட்டம், அந்த நாட்டு வங்கிகள், அதில் கணக்கு வைத்திருபவர் விபரத்தை ரகசியமாக பாதுகாக்க வழி செய்கிறது. சீனா அனைத்து பொருட்களுக்கும் போலிகளை தயாரித்து, பெரிய நிறுவனங்களையே ஆட்டம் கொள்ள செய்கிறது. நம் நாட்டில், பல மாநில அரசுகள் மது விற்பனை மூலம் வருமானம் ஈட்டுகிறது. பால் முதல் மீன் வரை கலப்படம் ( மீன்கள் கெடாமல் இருக்க ஃபொர்மால்டிகடு என்ற வேதிபொருள் (பிணங்களை பதபடுத்த பயன்படுத்தபடுவது, மயக்க மருந்தாக பயன்படுத்தபடுவது)
இது எல்லாம் எதை காட்டுகிறது? அடிப்படை சமுதாய நல்லொழுக்கமே மாறியுள்ளதை தான் காட்டுகிறது. தன் வலிமையை நிலைனாட்ட, வல்லரசுகள், வளரும் நாடுகளின் பொருளாதாரத்தை கடன் கொடுத்து, உலகமயமாக்கம், தனியார்மயமாக்கம் போன்ற கட்டுபாடுகளை விதித்து அந்த நாடுகளையே தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.
பதவியும் அதிகாரமும் நல்லதிற்கு பயன்படாமல் சுயநலதிற்காகவே பயன்படுத்தபடுகிறது. சமீபத்தில் சுயஉதவி குழு கூட்டமைப்பு ஒன்றில், நிர்வாகப்பொறுப்பை எற்றுள்ள ஒரு இளைங்கனின் செயலை பற்றி கேள்விபட நேர்ந்தது. அதுவும் தொண்டு நிறுவனம் என்ற வரையரைகுட்பட்ட சேவை மனபான்மை உள்ள நிறுவனம். இயல்பாகவே அவனிடம் சாதாரண விசயத்திற்கு கூட பொய் சொல்லும் குணம் அவனிடம் உள்ளதாக பலர் சொல்ல கெட்டு வருத்தபட்டேன். பணிபுரியும் இடத்தில் கருத்து வேறுபாட்டை வேண்டும் என்றே உருவாக்கி, பலரிடம் பிரிவினையை எற்படுத்தி, தான் என்ற அகந்தை மிக அதிகமாக செயல்படுத்தி தன் நிலை அறியாமல் ஆடும் அவன் மன நிலை அறிந்து மிகவும் வருத்தபட்டேன். அத்தகைய அவன் செயலை மேல் இடத்தின் கவனத்திற்கு எடுத்து சென்றாலும்  ’யாரும் உங்களை நம்ப மாட்டார்கள். அப்படியே நம்பினாலும் என் மீது நடவடிக்கை எடுக்கமாட்டார்கள். என் என்றால் என் தயவு அவர்களுக்கு தேவை” என்று வெளிபடையாகவே சவால் விடும் அளவிற்கு அவன் தலைகனம் உள்ளது. இத்தனைக்கும் அந்த கூட்டமைபின் சட்டபடி உண்மையான நிர்வாகிகள் அதன் தலைவிகளே (Board of Directors). செய்யாத பல விசயங்களை கொஞ்சமும் கூச்சமில்லாமல், பயமில்லாமல் செய்ததாக பொய் சொல்வதை பார்க்கும் பொழுதும், பொய் தான் உலகத்தில் செல்லுபடியாமோ என்று தோன்றுகிறது. இந்த இளைங்கன் இன்றைய உலகில் எது செல்லுபடியாகும் என்று தவறாக புரிந்துகொண்ட பல இளைங்கர்களின் மாதிரி. தர்மம் நேர்மை இவற்றின் மீது நம்பிக்கை இல்லாத சமூகத்தின் பிரதிபலிப்பு. இப்படி அவன் நடந்துகொள்வதர்கு யார் காரணம்? அவன் பெற்ற உலக அனுபவங்களே காரணமாக இருக்க முடியும். தவறான குடும்ப மற்றும் சமூக சுழல் ஒருவனை தவரான பாதைக்கு தள்ளி விடும். மேலும் அதன்படி நடந்து வெற்றியும் கிடைத்துவிட்டால், அத்தகயவன் நல்லவனாக மாறுவது சிரமம்.
தன் Difficulty of Being good புத்தகத்தில் குருசரன் தாஸ் ராமலிங்க ராஜு பற்றி சொல்லும் பொழுது, தன்னம்பிக்கை, புத்திசாலிதனம், உழைப்பு கொண்ட அவர் சத்யம் நிறுவனம், உலக அளவில் நல்ல பெயர் கொண்ட நிறுவனமாக செயல்படவைத்தார். பின்னாலில் ஐயாயிரம் கோடி ருபாய் அளவிற்கு பெரும் ஊழலை, ராமலிங்க ராஜு செய்ய வெரும் பேராசை மட்டும் காரணமாக இருக்காது என்கிறார். பணத்தை விட அது தந்த பெயரையும் புகழையும் எளிதில் விட யாருக்கும் மனம் இருக்காது. 89 வயதிலும் பதிவியை மகனுக்கு கூட விட்டுத்தர மனதிலாத மிக கேவலமான ஒரு அரசியல்வாதிக்கு இன்னமும் நம் நாட்டில் ஆதரவு இருக்கதான் செய்கிறது. 89 வயதிலும் பதவியை விட்டு தராமல் இருக்க எது காரணமாக இருகிறது ?. சாக்ரடிஸிடம் மன்னிப்பு கேட்டால் உயிர் பிச்சை தருவேன் என்று சொல்லபட்ட பொழுது, ”எனக்கு வயதாகிவிட்டது. எப்படியும் இன்னும் சில வருடத்தில் இறப்பேன். அதனால் என் கருத்தை மாற்றிகொள்ளமாட்டேன்” என்று சொன்ன அவர் எங்கே, இக்கால அரசியல்வாதி எங்கே.
நாடும் சமுதாயமும் எங்கே சென்று கொண்டிருக்கிறது? செல்லும் பாதை தவறு என்று புரிகிறது. திருத்தும் வழி தான் தெரியவில்லை. பிறரை திருத்த முடியவில்லை. நாமாவது நேர்மையாக இருக்கலாம் என்றால் அதற்கும் தடை வருகிறது. நேர்மையில்லாத சிலரின் நடவடிக்கைகள் நம் பாதையில் குறுக்கிடும் பொழுது, அதனை நேர்மையால் வெல்ல முடியாமல் போகலாம். பகவத்கீதை இதற்கு வழிகாட்டுகிறது. துரியோதனனர்கள் தலையெடுக்காமல் இருக்க, பாண்டவர்கள் சிறிது சுழ்ச்சி செய்தால் பரவாயில்லை என்பது கீதை உணர்த்தும் பாடம். தர்மம் வெல்லும்.. வெற்றி பெற மட்டும் அல்ல, நம்மை தற்காத்து கொள்ளவே நேர்மை தவறி நடக்க வேண்டிய கட்டாயத்திற்கு நம்மை காலசுழலை என்ன சொல்வது?
ஆனால் நேர்மையானவர்கள் சுயநலத்தின் காரணமாகவோ அல்லது பயத்தின் காரணமாகவோ அல்லது உலகை திருத்த முடியும் என்ற நம்பிக்கையை இழந்ததன் காரணமாகவோ அமைதியாக இருக்கும் காரணத்தினால், துரியோதனனர்கள் நாட்டில் அதிகம் ஆகிகொண்டே போகின்றனர். மீண்டும் கிருஷ்ண பரமாத்மா பிறக்க போவது இல்லை. பிறப்பாறா?
நேர்மையாக வாழ முடியுமா?

வியாழன், 26 ஜனவரி, 2012

இன்றைய காந்தி- ஜெயமோகன்

இன்றைய காந்தி

ஜெயமோகன் எழுதிய இன்றைய காந்தி புத்தகம் காந்தி யை பற்றிய விமர்சனகளுக்கு பதிலாக அமைந்துள்ளது. காந்தியை அவரது அத்தனைய  கிறுக்குதனங்களுடன் அப்படியே ஏற்றுகொள்கிறேன் என்று ஒரு இடத்தில ஜெயமோகன் சொல்லிருபது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது.

காந்திக்கு மகாத்மா என்ற பெயரை சூட்டியது கோண்டு என்ற மலைவாழ் மக்கள். பலரும் நினைப்பது போல ராபிந்தரநாத் தாகூர் அல்ல என்றும், காந்தி தான் மகாத்மா என்று அழைப்பதை விரும்பியதில்லை என்று ஜெயமோகன் குறிபிடுகிறார். காலில் விழும் கலாச்சாரத்தை அரசியலில் ஆரம்பித்துவைத்ததே காந்தி தான் என்ற குற்றசாட்டுக்கு பதில் அளிக்கையில் அவ்வாறு கூறுகிறார்.

காந்தியின் சாதியை குறிப்பிட்டு அவர் பனியா புத்தி உடையவர் என்ற கேள்விக்கு ஆம் அவர் பனியா புத்தி உடையவர் தான் என்று குறிபிடுகிறார். காந்தியின் வம்சம் சமண மதத்தை வழியாக கொண்டது. காந்தியின் 'புலன் ஒறுத்தல்' அதன் அடிப்படியிலேயே வந்தது. சமணர்கள் வியாபாரத்தில் சிறந்தவர்கள். நமது நாட்டுகோட்டை செட்டியார், வெள்ளாளர், சைவ முதலியார் போன்றவர்களும் சமணமததை ஒரு காலத்தில் பின்பற்றியவர்கள். பழங்காலத்தில் தொழிலை அடிப்படையாக கொண்டு சாதிகள் இயங்கதால், பல நெடுங்காலமாக ஒரு தொழிலை செய்து வந்தவர்களுக்கு அதற்குரிய அறிவும் திறமையும் இருப்பது இயற்கை தான். அந்த வகையில் காந்தி நிர்வாக திறமை மிக்கவராக , தலைமைத்துவ பண்பு உடையவராக இருந்தார். அனால் அவர் என்றும் தன சாதியை முதன்மைபடுத்தியது இல்லை என்கிறார் ஜெயமோகன்.    

காந்தியின் காமம் என்ற தலைப்பில் காந்தி காதலையும் காமத்தையும் அணுகிய விதம் ஒரு பிரேதத்தை அறுத்து பார்க்கும் சலனமற்ற முறையில் என்று ஜெயமோகன் சொல்கிறார். ஒரு முறை சபர்மதி ஆசிரமத்தில் காதல் வயப்பட்ட பெண்ணை பிராத்தனை கூடத்தில் அனைவர் முன்னிலையிலும் கேள்வி கேட்டு இரண்டு நாட்கள் உண்ணா விரதம் இருக்க செய்தார். அந்த பெண்ணின் மனம் பதிக்கப்படும் என்று அவர் எண்ணவில்லை ( அவள் காதலித்த ஆணுக்கு என்ன தண்டனை கொடுக்கபட்டது என்ற விவரம் நூலில் இல்லை). ஆனால் காந்தியே தன் 55  அவது வயதில் 47  வயது ஆனா சரளா தேவி என்ற பெண்மணியின் மேல் கொண்ட ஈர்பால் அவரை திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார். பின்னர் அனைவரது எதிர்ப்பால் குறிப்பாக அவரது மகன் இந்த முடிவால் கஸ்துரி பை மனவேதனை அடைந்துள்ளார் என்று பலமுறை எடுத்து குரிய பிறகு திருமணம் செய்யும் முடிவை கைவிடுகிறார். காந்தி பிறகு தாந்திரிக செயல்களில் ஈடுபட்டு நிர்வாணமாக பெண்களுடன் படுத்து உறங்கியதையும் பின்னர் தன் பேத்தியையே நிர்வாணமாக தன்னுடன் படுக்கவைத்து உறங்கியதையும், குறிப்பிடும் ஜெயமோகன் காந்தி இதற்கு கொடுத்த விளக்கத்தை ஆசிரமத்தில் உள்ள பலர் ஏற்கவில்லை என்கிறார். நம் இந்து சமயத்திலும் ஜென் புத்த மதத்திலும் இந்த தாந்த்ரிய முறைகள் கடைபிடிக்க பட்டதற்கு ஆதாரம் உள்ளதாக ஆசிரியர் கூறுகிறார்.( தற்காலத்தில் இதையே நித்தியானந்த செய்ததற்கு எவ்வளவு எதிர்ப்பு. காந்தி செய்தால் சரி. நித்தியானந்த செய்தால் தவறு. காந்தியின் மீது ஊடகங்களும் வரலாற்று பதிவுகளும் ஏற்படுத்தியுள்ள நம்பிக்கை அத்தகையது.)
காந்தியின் அகிம்சை மற்றும் சத்தியாக்ரகாம் ஹிட்லர் முன்னால் செளுபடியாகும என்ற கேள்விக்கு ஹிட்லர்ரின் பலம் ஜெர்மன் மக்கள் அவர் மீது வைத்த நம்பிக்கையால் ஏற்பட்டது என்றும், மக்கள் சக்த்தியே பின்னால் அவர் ராணுவ மற்றும் அதிகார பலம் ஏற்பட காரணமாக இருந்தது என்றும், காந்தியாலும் தன அஹிம்சை முறையால் மக்களின் நம்பிகையை வென்றெடுத்து வெற்றிபெற முடிந்திருக்கும் என்கிறார் ஜெயமோகன்
காந்தியின் மகன்கள் நால்வரில் ( ஹரிலால், மணிலால், ராமதாஸ் மற்றும் தேவதாஸ் ) ஆகிய நால்வரில் ஹரிலால் மட்டும் அனைத்து  கெட்ட குணங்களுடன் (குடி, சூது, விபச்சாரம், ஏமாற்றுதல் போன்ற காந்தி கு நேர்மாறான குணங்களுடன் இருந்தார் . மணிலால் தென்னாப்ரிக்கா அகிம்சா வழியில் விடுதலைக்கு போராட முக்கிய காரணமாக இருந்தார். நெல்சன் மண்டேலா காந்தியை அறிந்து கொண்டதே மணிலால் மூலமாக தான் என்று சொல்லிருகிரர். ராமதாஸ் காந்தி சேவாஷ்ரம் மூலம் தொண்டு செய்து வந்தார் என்றும் காந்தியுடன் கருத்து வேறுபாடு இருந்தாலும் நல்லவராக வாழ்தார். காந்தியின் பேரன்களும் நல்ல நிலையில் உள்ளனர். அறிவும் திறமையும் நல்ல பண்பும் கொண்டவர்களாக தான் பெரும்பாலவனர்கள் இருந்தனர் என்ற செய்தி, காந்தியின் வம்சா வழியினர் சாதனைகள் எதுவும் செய்ய வில்லை என்ற பொதுவான கருத்துக்கு எதிராக இருக்கிறது.

சே குவேரா புரட்சி வழியை தேர்ந்து எடுத்தாலும் அவரும் தநலம் இல்ல தலைவர் தானே. அவர் வழியும் கியூபா வில் வெற்றியை ஏற்படுத்தியுள்ளது. எனவே காந்திய அகிம்சா வழி மட்டும் தான் சிறந்தது என்று எப்படி கூற முடியம் என்ற கேள்விக்கு,  புரச்சியில் பெரும் வெற்றி ஒரு விபத்து போல எதிர்பாராமல் தான் நிகழும். அத்தகைய முறையில் வெற்றி பெற்றவர்கள் தங்கள் கருத்துகளை மக்கள் மீது திணிக்க முயல்வர். அது சரியான வெற்றி கிடையாது. சே தநலம் இல்லாதவர், தன்னமிக்கை, தைரியம் விடாமுயற்சி உள்ளவர். அனால் அவருக்கு அரசியல் அறிவு போதுமான அளவு இல்லை என்கிறார் ஜெயமோகன். காந்தியின் வழியே நிரந்தரமானது நன்மை தர கூடியது.
காந்தியின் மீதான பிற குறைகளாக சொல்லபடுவது
1. முதலாம் உலக போரின் பொது ஆங்கிலேயர்க்கு ஆதரவான நிலை எடுத்தது
2. கிலாபத் இயக்கத்திற்கு ஆதரவு தந்தது
3.இரண்டாம் உலக போரின் போது ஆங்கிலேயர்க்கு எதிரான நிலைபாடை எடுத்தது
3. சுபாஷ் சந்திர போஸ் காங்கிரஸ் தலைவராக விடாமல் தடுத்தது
4.  இரட்டை வாக்குரிமையை தலித் களுக்கு கிடைக்காமல் அம்பேத்கருக்கு எதிராக செயல்பட்டு பூனா ஒப்பந்தத்தை செயல்படுத்தியது
5.. சுதந்திரத்துக்கு பிறகு பாகிஸ்தானுக்கு தர வேண்டிய பணத்தை தர சொல்லி உண்ணாவிரதம் இருந்தது
 
இவை அனைத்திலும் காந்தியின் நிலைப்பாடு சரியே என்ற வாதத்தை ஜெயமோகன் எடுத்து வைக்கிறார்.
காந்தி- அம்பேத்கார் உறவை பற்றி சொல்லும் பொது இருவருமே பொதுநலம் மிக்கவர்கள், தங்கள் மக்களின் மேம்பாட்டிற்காக குரல் கொடுத்தவர்கள், ஒருவர் செய்ய தவறியதை மட்ட்றவர் செய்து இடைவெளியை நிரப்பியவர்கள், ஒருவரிடம் இருந்து மற்றவர் நல்ல விசயங்களை எடுத்துகொண்டவர்கள், தங்கள் முரண்களில் இருந்து நல்லது விளைவிக்க செய்தவர்கள். ஆங்கிலேயர்கள் காந்திக்கு எதிரான சக்தியாக அம்பேத்கரை பயன்படுத்தினர். அம்பேத்கர் ஆனிலேயே ஆதரவு நிலை கொண்டவர் என்று அருண் ஷோரி தன் Worshipping  false  Gods  என்ற புத்தகத்தில் ஆதரங்களுடன் பட்டியல் இடுகிறார். காஞ்சன் இல்லையா Why I am Not  a Hindu ? என்ற புத்தகத்தில் காந்தி ஆங்கிலேயருக்கு ஆதரவாக தலித் களுக்கு எதிராக செயல்பட்டதாக சொல்கிறார். ஆனால் இருவருமே மக்கள் நலனை முன்னிருத்தியே தங்கள் போராட்டத்தை செய்தனர் என்று ஜெயமோகன் குறிபிடுகிறார்               

தனக்கு தானே ஏறக்குறைய தினமும் எனிமா  கொடுத்து கொள்வது, தன மலத்தை தானே பரிசோதனை செய்வது, ஆடு பால் அருந்துவது போன்ற இயற்கை வைத்திய முறைகளில் காந்திக்கு இருந்த ஆர்வத்தை பற்றியும் நூலில் குரிபிடபட்டஉளது

காந்தியை பற்றிய சிறப்பான பல செய்திகளுக்காகவும் காந்தியை புரிந்து கொள்வதற்காகவும் இந்த புத்தகத்தை வாசிக்கலாம்.

ஜெயமோகன் சில இடங்களில் காந்தியை நியாய படுத்துவதாக தோன்றினாலும் அவரது இந்த முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது.

காந்தி மகாத்மா அல்ல ஒரு சராசரி மனிதன் தான் என்பது நூலை வாசித்தபிறகு எனக்கு தோன்றிய கருத்து.     

வியாழன், 5 ஜனவரி, 2012

ஏழாம் அறிவு



தமிழர்களை தமிழன் என்ற உணர்வை அரசியல் கட்சிகள் பயன்படுத்தி கொண்டு இருக்கின்றனர். ஒரு திரைப்படத்தின் வியாபாரத்திற்காக மிக கேவலமான முறையில் தமிழர்களை பயன்படுத்தியது ஏழாம் அறிவு படத்திற்காக தான் இருக்கும். போதிதர்மர் ஒரு தமிழர் என்பதை வியாபார பொருளாக மாற்றினர். கஜினி படம் ஏற்படுத்திய எதிர்பார்ப்பின் அடிப்படையிலேயே நான் அந்த படத்தை பார்த்தேன். போதிதர்மரை விடுங்கள் Genetics  பற்றிய எந்த அடிப்படை அறிவும் இல்லாமல் எடுக்கப்பட்ட படம் ஏழாம் அறிவு. புத்திசாலிதனமான ஒரு காட்சி கூட இல்லாத படம். படத்தின் திரைகதையை எப்படி எடுத்து செல்வது என்று குழம்பி வெறும் சூரியாவின் நடிப்பு மற்றும் பிரமாண்டத்தை நம்பி எடுக்கப்பட்ட படம். படத்தில் சரக்கு இல்லை என்பது முருகதாஸ் அண்ட் கோ விற்கு நன்றாகவே தெரியும். எனவே தான் தமிழ் உணர்வு வியாபாரத்திற்காக புத்திசாலிதனமாக பயன்படுத்த பட்டுள்ளது.

சைக்கிள் ஓட்ட தெரிந்தவனின் குழந்தை பழகாமல் தானும் சைக்கிள் ஓட்ட முடியாது. இந்த சின்ன லாஜிக் கூட இல்லாமல் Genetic  engineering  மூலம் தற்காப்பு கலையையும் மூலிகை மருத்துவ அறிவையும் ஒருவனுக்கு கிடைக்க செய்ய முடியும் என்பது முட்டாள்தனமானது. சரி சினிமா என்றாலே எதார்த்தத்தை எதிர்பார்க்க முடியாது என்றாலும் கஜினி யின் தரத்திற்கு இந்த படம் வரவே முடியாது. நோக்கு வர்மா காட்சிகள் சலிப்பை தான் தந்தது. வலிந்து திணிக்கப்பட்ட தமிழன் வசனங்கள் படத்துடன் ஒட்டவில்லை.
\
எந்திரன் படம் சுஜாதாவின் பக்கபலத்துடன் உருவாக்க பட்டது அதன் பலம். திரை உலகிற்கு சுஜாதாவை ஈடு செய்ய ஒருவர் வரும் வரை அறிவியல் சார்ந்த படங்களை திரையுலகம் தவிர்ப்பது நல்லது.

ஏழாம் அறிவு அடிப்படை அறிவில்லாமல் எடுத்த படம். குப்பை. ஆனந்த விகடனில் அதற்கு அளிக்கப்பட்ட மதிப்பெண் ஒரு தலைபட்சமானது