மலர்கள் என்றால் அவற்றின் அழகு மற்றும் நறுமணம் தான் நினைவிற்கு வரும். பெண்களை மலர்களோடு ஒப்பிட்டு சங்க கால இலக்கியம் முதல் இக்கால சினிமா வரை பல பாடல்கள் இயற்றபட்டுளன. ஆனால் சில பெண்கள் மலர்களை போல நறுமணத்தை பரப்பாமல், இந்த சமூகத்தையே நாற்றமடிக்க செய்கிறார்கள் (கனிமொழி உங்களுக்கு நினைவில் வந்தால் அதற்கு நான் பொறுப்பில்லை). ஆனால் அழுகிய மாமிசத்தின் நாற்றத்தை கொண்ட மிக பெரிய பூ ஒன்று இயற்கையிலேயே இருக்கிறது. இந்தோனேசியாவின் சுமத்திர தீவை தாயகமாக கொண்ட Amorphophallus titanum என்ற செடியின் மலர் தான் அது . இந்த செடி " பிண செடி " என்றும் அழைக்கபடுகிறது . Araceae குடும்பத்தை செடி இது. நாம் அழகிற்காக வீட்டில் வளர்க்கும் Anthurium , Dieffenbachia and பிலோதேன்றோன்ஸ் போன்ற செடிகள் இந்த வகையை சார்ந்தது. அது சரி. ஏன் இந்த பிண செடி நாற்றத்தை வெளிபடுத்துகிறது ? சில வகை வண்டுகள் (carrion beetles), ஈக்கள் ( Flesh flies and sweat bees) ஆகியவற்றை தன்பால் ஈர்த்து, மகரந்த சேர்கை மூலம் இனபெருக்கம் செய்வதர்காக தான் இந்த நாற்றத்தை வெளிபடுத்துகிறது. இதற்காக அதிக சக்தியை செலவிட்டு பூவின் காம்பு பகுதியில் உள்ள சல்பர்ரை (Sulfur) அடிப்படையாக கொண்ட ஒரு வேதி பொருளை சூடு படுத்துகிறது. நன்கு வளர்ந்த பூங்கொத்து 7-12 அடி உயரமும் 3-4 அடி அகலமும் உடையதாக இருக்கும். இந்த பூ மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும். அழுகிய நாற்றம் பூ மலர்ந்த முதல் 8 மணி நேரம் மட்டுமே இருக்கும்.
பிரபலமான இடுகைகள்
-
மகளிர் சுய உதவி குழுக்களும் அதனை பற்றி ஊடகங்களில் வரும் செய்திகளை படிக்கும் பொழுது. ஊடகங்கள் சுய உதவி குழுக்களின் உண்மை நிலையை உணராமல் செய்த...
-
கலைஞர் குடும்பம் எப்படி எல்லாம் சம்பாதிக்கிறது என்பதற்கு என்னும் ஒரு உதாரணம் ( இட்லி வடையில் படித்தது ) திரு வி.சந்தானம் இந்த பேரை பலர் ...
-
Paulo Coelho வின் பொன்மொழிகள் -1 நீங்கள் வேண்டியதை அடைவதற்கு உறுதியாக முயற்சித்தால் இந்த அண்டமே துணையாக இருக்கும். கனவு காணும் வாய்ப்...
புதன், 22 ஜூன், 2011
நாற்றம் அடிக்கும் மலர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)