பிரபலமான இடுகைகள்

வியாழன், 3 அக்டோபர், 2013

விஷமாகி போன சமூகம்

காந்தி ஜெயந்தி ...மது மூலம் கூடுதல் வருமானம் பார்க்கும் வாய்பை சிலருக்கு எற்படுத்தி தருகிறது...நம் நாட்டு குடிமகன்கள் மேல் அபார நம்பிக்கை வைத்து , முன் கூட்டியே மதுபானங்களை அதிகம் வாங்கி பதுக்கி வைத்து, குவார்டர் 150 முதல் 200 ருபாய் வரை விற்று...கொள்ளை லாபம் பார்த்து...இதில் போலிஸ் கும் பங்கு மற்றும் சரக்கு கொடுத்து.....காற்றுல்ல போதே தூற்றிக்கொள்ளும் இவர்கள்...சமூக விரோதிகளா? கை தேர்ந்த வியாபாரிகளா? நாம் காந்திக்கு கொடுக்கும் உண்மையான மதிப்பு இது தான். போலி அரசியல் வாதிகள், போலி வியாபாரிகள், போலி சமூதாய சேவகர்கள் காந்தியின் பெயரை அவர் பிறந்த நாள் அன்று தங்கள் பிழைப்பிற்காக பயன்படுத்திக்கொள்கிறனர்...உணமையாக காந்தியின் வழியில் நடக்க விழைபர்களுக்கு தடைக்கல்லாக இந்த சமூகமே இருப்பது அதனிலும் கொடுமை.காந்தியின் அறவழிபோராட்ட முறை தற்கால்த்திற்கு பொருந்தாத முறையாகவே தோன்றுகிறது. சமூகத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்ற உறுதிகொண்டவர்கள் கூட சகுனித்தன யுக்திகளை கையாண்டால் மட்டுமே ஒரளவு வெற்றி பெற முடியும். நல்லவர்களாகவே இருந்தால் காணாமல் போய்விடுவார்கள்.

என் மனதும் சிறிது சிறிதாக கெட்டுக்கொண்டு வருவதை உணருகிறேன். யாருக்கும் கெடுதல் செய்யாமல் வாழநினைத்தால், இளிச்சவாயன் என்று நினைத்து காலைவாரிவிட்ட நபர்கள் , காலைவாரிவிட முயர்ச்சி செய்யும் நபர்களிடம் தோற்றுப்போவதை விட, அவர்களுக்கு கெடுதல் செய்தால் என்ன என்று தோன்றுகிறது. நான் மாறுவதும் மாறாததும் என்னை சுற்றியுள்ள சமூகத்தின் கையில் தான் இருக்கிறது. இப்படி தான் பலர் மாறி சமூகமே சீர்க்கெட்டு போயுள்ளது என்பதையும் உணர்கிறேன். டார்வினின் " Survival of the fittest" தத்துவத்தில் ‘Fittest" என்பதற்கு தற்கால உலகத்தில் உள்ள அர்த்த்ம் “ எய்த்து பிழை” என்பதாகவே உணர்கிறேன். வெளிப்படையாக திருட்டு தொழிலை செய்பவர்களை விட "white collar criminals" தான் இந்த சமூகத்தை அதிகம் சீர்குலைய செய்பவர்களாக இருக்கின்றனர். இந்த சமூகதில் நல்லவர்களாக வாழ்பவர்களை விட நல்லவர்களாக வேஷம் போடுகிறவர்களே நிறைந்து காணப்படுகின்றனர். பணமும் பதவியையும் பெற்றுவிட்டால்...பிறகு தெரிந்தே கூட தவறு செய்யலாம். எவராலும் அவர்களை எதுவும் செய்ய்முடியாது.இன்றைய அரசியல்வாதிகள் நமக்கு உணர்த்தும் பாடம் இது. ரவுடிகள் அரசியலுக்கு வரும் உளவியல் காரணமும் இது தான்.

அநியாத்தைக்கண்டு பல தடவை பொங்கி இருக்கிறேன். ஒங்கி கதரினாலும், போராடினாலும் ஒருவரும் உதவ வரமாட்டார்கள் என்பதை உண்ர்திருக்கிறேன். தங்களை தற்காத்துக்கொண்டு சமூகம் எப்படி போனால் என்ன என்று வாழ்பவர்களே அதிகம் என பல சம்பவங்கள் உணர்த்திருக்கின்றன. நான் குடியிருக்கும் நகரின் நலசங்கத்தை கைபற்றும் நோக்கில் நடந்த பிரச்சனையில் நான் தலையிட்டதால் எனக்கு அடியும் உதையும் விழுந்தது. இப்பொழுது பலமாதங்களாக நிர்வாக செலவிற்கு வாங்கிய பணத்திற்கு கணக்கு காட்டாமல் அவர்களுக்கு உள்ளேயே அடிதடி பிரச்சனை நடந்து வருகிறது. அன்று ரவுடியிசத்திற்கு பயந்து வாய் திறக்காத குடியிருப்பை சார்ந்தவர்கள் இன்று என் உதவியை கேட்கின்றனர். தனிபட்டமுறையில் நான் போராடிக்கொண்டுயிருந்த நான் இப்பொழுது போராட விருப்பம் இல்லாமல் இருக்கிறேன்.

என் மாமனார் எனக்கு அடிக்கடி தரும் ஆலோசனை “ பாம்பு திங்கற ஊருக்கு போனால் நடுத்துண்டு எனக்கு” என்று இருக்கவேண்டும் என்பதே. எல்லோரும் நடுத்துண்டிற்காக தான் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறோம். சமூகமே விஷம் ஆகிக்கொண்டிருப்பதை உணராமல்

3 கருத்துகள்:

F Xavier சொன்னது…

நான் நினைத்து கொண்டிருந்ததை அப்படியே எழுதிருக்கிரீர்கள் ; பாராட்டுக்கள்

Layman9788212602 சொன்னது…

நன்றி xavier

Ramesh Ramar சொன்னது…

அருமையான பதிவு.
மிகவும் நன்று ...
Tamil News

கருத்துரையிடுக