பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

நேர்மையாக வாழ முடியுமா?


நேர்மையாக வாழ முடியுமா?
பதவியை தந்து பார். மனிதனின் உண்மையான குணம் தெரியும் என்பார்கள். சர்வாதிகார மனபான்மையை பல நிர்வாக சுழலில் பார்க்க முடிகிறது. இதற்கு அறியாமை காரணமா இல்லை தலைகனம் காரணமா என்று பட்டிமன்றமே வைக்கலாம்.
தற்பொழுது உள்ள போட்டி நிறைந்த உலகில், பதவியும் பணமும் புகழையும் பெற எதை வேண்டுமென்றாலும் செய்யலாம் என்ற மனநிலை பலரிடம் உள்ளது. நேர்மை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் சுழல் உள்ளது. நேர்மையானவர்கள் கூட சில சமயத்தில் நேர்மை தவறி நடக்கும் படி நேர்கிறது. மகாபாரதத்தில் தர்மன் கூட கண்ணனின் அறிவுரைபடி அசுவதாமன் என்ற யானை இறந்த பிறகு, அசுவதாமன் என்ற தன் மகன் இறந்துவிட்டானா? என்று துரோணாசாரியார் கேட்ட பொழுது ஆம் என்று பொதுவாக, பதில் சொல்லி அவரை நிலைகுலயவைத்து அவர் தோல்வி பெற காரணமாக இருந்தான்.
எது தர்மம். தர்மம் என்பது நேர்மை, கடமை, நீதி, நன்மை போன்ற பல அர்த்தங்களை உடையது. யக்‌ஷனிடம் எது தர்மம் என்று யுதிஷ்ட்ரன் கூறும் பொழுது – காரணத்தை கொண்டு தர்மதை நிர்ணயம் செய்ய முடியாது. ஏன் என்றால் அந்த காரணமே அடிபடை இல்லாதது. புனித நூல்களும் தர்மத்திற்கு வெவ்வேறு அர்த்தங்களை சொல்கிறது. தர்மம் என்பது என்ன? என்று எந்த ஒரு ஞானி சொன்னதையும் இறுதியான கருத்தாக எடுத்துகொள்ள முடியாது. தர்மத்தின் உண்மை ஆழ்ந்த குகையோன்றில் புதைந்துள்ளது என்கிறார்.  
பிழைபதற்காக எதை வேண்டுமானாலும் செய்ய தனிமனிதன் மட்டும் அல்ல, பல நாடுகளும் கூட தன் வருமானதிற்காக எதையும் செய்ய தயாராக உள்ளன. தாய்லாந்து நாட்டில் சுற்றுலா பெருக, விபசாரம் ஒரு தொழிலாக அங்கீகரிக்க பட்டுள்ளது. சுவிசர்லாந்து நாட்டின் சட்டம், அந்த நாட்டு வங்கிகள், அதில் கணக்கு வைத்திருபவர் விபரத்தை ரகசியமாக பாதுகாக்க வழி செய்கிறது. சீனா அனைத்து பொருட்களுக்கும் போலிகளை தயாரித்து, பெரிய நிறுவனங்களையே ஆட்டம் கொள்ள செய்கிறது. நம் நாட்டில், பல மாநில அரசுகள் மது விற்பனை மூலம் வருமானம் ஈட்டுகிறது. பால் முதல் மீன் வரை கலப்படம் ( மீன்கள் கெடாமல் இருக்க ஃபொர்மால்டிகடு என்ற வேதிபொருள் (பிணங்களை பதபடுத்த பயன்படுத்தபடுவது, மயக்க மருந்தாக பயன்படுத்தபடுவது)
இது எல்லாம் எதை காட்டுகிறது? அடிப்படை சமுதாய நல்லொழுக்கமே மாறியுள்ளதை தான் காட்டுகிறது. தன் வலிமையை நிலைனாட்ட, வல்லரசுகள், வளரும் நாடுகளின் பொருளாதாரத்தை கடன் கொடுத்து, உலகமயமாக்கம், தனியார்மயமாக்கம் போன்ற கட்டுபாடுகளை விதித்து அந்த நாடுகளையே தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.
பதவியும் அதிகாரமும் நல்லதிற்கு பயன்படாமல் சுயநலதிற்காகவே பயன்படுத்தபடுகிறது. சமீபத்தில் சுயஉதவி குழு கூட்டமைப்பு ஒன்றில், நிர்வாகப்பொறுப்பை எற்றுள்ள ஒரு இளைங்கனின் செயலை பற்றி கேள்விபட நேர்ந்தது. அதுவும் தொண்டு நிறுவனம் என்ற வரையரைகுட்பட்ட சேவை மனபான்மை உள்ள நிறுவனம். இயல்பாகவே அவனிடம் சாதாரண விசயத்திற்கு கூட பொய் சொல்லும் குணம் அவனிடம் உள்ளதாக பலர் சொல்ல கெட்டு வருத்தபட்டேன். பணிபுரியும் இடத்தில் கருத்து வேறுபாட்டை வேண்டும் என்றே உருவாக்கி, பலரிடம் பிரிவினையை எற்படுத்தி, தான் என்ற அகந்தை மிக அதிகமாக செயல்படுத்தி தன் நிலை அறியாமல் ஆடும் அவன் மன நிலை அறிந்து மிகவும் வருத்தபட்டேன். அத்தகைய அவன் செயலை மேல் இடத்தின் கவனத்திற்கு எடுத்து சென்றாலும்  ’யாரும் உங்களை நம்ப மாட்டார்கள். அப்படியே நம்பினாலும் என் மீது நடவடிக்கை எடுக்கமாட்டார்கள். என் என்றால் என் தயவு அவர்களுக்கு தேவை” என்று வெளிபடையாகவே சவால் விடும் அளவிற்கு அவன் தலைகனம் உள்ளது. இத்தனைக்கும் அந்த கூட்டமைபின் சட்டபடி உண்மையான நிர்வாகிகள் அதன் தலைவிகளே (Board of Directors). செய்யாத பல விசயங்களை கொஞ்சமும் கூச்சமில்லாமல், பயமில்லாமல் செய்ததாக பொய் சொல்வதை பார்க்கும் பொழுதும், பொய் தான் உலகத்தில் செல்லுபடியாமோ என்று தோன்றுகிறது. இந்த இளைங்கன் இன்றைய உலகில் எது செல்லுபடியாகும் என்று தவறாக புரிந்துகொண்ட பல இளைங்கர்களின் மாதிரி. தர்மம் நேர்மை இவற்றின் மீது நம்பிக்கை இல்லாத சமூகத்தின் பிரதிபலிப்பு. இப்படி அவன் நடந்துகொள்வதர்கு யார் காரணம்? அவன் பெற்ற உலக அனுபவங்களே காரணமாக இருக்க முடியும். தவறான குடும்ப மற்றும் சமூக சுழல் ஒருவனை தவரான பாதைக்கு தள்ளி விடும். மேலும் அதன்படி நடந்து வெற்றியும் கிடைத்துவிட்டால், அத்தகயவன் நல்லவனாக மாறுவது சிரமம்.
தன் Difficulty of Being good புத்தகத்தில் குருசரன் தாஸ் ராமலிங்க ராஜு பற்றி சொல்லும் பொழுது, தன்னம்பிக்கை, புத்திசாலிதனம், உழைப்பு கொண்ட அவர் சத்யம் நிறுவனம், உலக அளவில் நல்ல பெயர் கொண்ட நிறுவனமாக செயல்படவைத்தார். பின்னாலில் ஐயாயிரம் கோடி ருபாய் அளவிற்கு பெரும் ஊழலை, ராமலிங்க ராஜு செய்ய வெரும் பேராசை மட்டும் காரணமாக இருக்காது என்கிறார். பணத்தை விட அது தந்த பெயரையும் புகழையும் எளிதில் விட யாருக்கும் மனம் இருக்காது. 89 வயதிலும் பதிவியை மகனுக்கு கூட விட்டுத்தர மனதிலாத மிக கேவலமான ஒரு அரசியல்வாதிக்கு இன்னமும் நம் நாட்டில் ஆதரவு இருக்கதான் செய்கிறது. 89 வயதிலும் பதவியை விட்டு தராமல் இருக்க எது காரணமாக இருகிறது ?. சாக்ரடிஸிடம் மன்னிப்பு கேட்டால் உயிர் பிச்சை தருவேன் என்று சொல்லபட்ட பொழுது, ”எனக்கு வயதாகிவிட்டது. எப்படியும் இன்னும் சில வருடத்தில் இறப்பேன். அதனால் என் கருத்தை மாற்றிகொள்ளமாட்டேன்” என்று சொன்ன அவர் எங்கே, இக்கால அரசியல்வாதி எங்கே.
நாடும் சமுதாயமும் எங்கே சென்று கொண்டிருக்கிறது? செல்லும் பாதை தவறு என்று புரிகிறது. திருத்தும் வழி தான் தெரியவில்லை. பிறரை திருத்த முடியவில்லை. நாமாவது நேர்மையாக இருக்கலாம் என்றால் அதற்கும் தடை வருகிறது. நேர்மையில்லாத சிலரின் நடவடிக்கைகள் நம் பாதையில் குறுக்கிடும் பொழுது, அதனை நேர்மையால் வெல்ல முடியாமல் போகலாம். பகவத்கீதை இதற்கு வழிகாட்டுகிறது. துரியோதனனர்கள் தலையெடுக்காமல் இருக்க, பாண்டவர்கள் சிறிது சுழ்ச்சி செய்தால் பரவாயில்லை என்பது கீதை உணர்த்தும் பாடம். தர்மம் வெல்லும்.. வெற்றி பெற மட்டும் அல்ல, நம்மை தற்காத்து கொள்ளவே நேர்மை தவறி நடக்க வேண்டிய கட்டாயத்திற்கு நம்மை காலசுழலை என்ன சொல்வது?
ஆனால் நேர்மையானவர்கள் சுயநலத்தின் காரணமாகவோ அல்லது பயத்தின் காரணமாகவோ அல்லது உலகை திருத்த முடியும் என்ற நம்பிக்கையை இழந்ததன் காரணமாகவோ அமைதியாக இருக்கும் காரணத்தினால், துரியோதனனர்கள் நாட்டில் அதிகம் ஆகிகொண்டே போகின்றனர். மீண்டும் கிருஷ்ண பரமாத்மா பிறக்க போவது இல்லை. பிறப்பாறா?
நேர்மையாக வாழ முடியுமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக