பிரபலமான இடுகைகள்

வியாழன், 5 ஜனவரி, 2012

ஏழாம் அறிவுதமிழர்களை தமிழன் என்ற உணர்வை அரசியல் கட்சிகள் பயன்படுத்தி கொண்டு இருக்கின்றனர். ஒரு திரைப்படத்தின் வியாபாரத்திற்காக மிக கேவலமான முறையில் தமிழர்களை பயன்படுத்தியது ஏழாம் அறிவு படத்திற்காக தான் இருக்கும். போதிதர்மர் ஒரு தமிழர் என்பதை வியாபார பொருளாக மாற்றினர். கஜினி படம் ஏற்படுத்திய எதிர்பார்ப்பின் அடிப்படையிலேயே நான் அந்த படத்தை பார்த்தேன். போதிதர்மரை விடுங்கள் Genetics  பற்றிய எந்த அடிப்படை அறிவும் இல்லாமல் எடுக்கப்பட்ட படம் ஏழாம் அறிவு. புத்திசாலிதனமான ஒரு காட்சி கூட இல்லாத படம். படத்தின் திரைகதையை எப்படி எடுத்து செல்வது என்று குழம்பி வெறும் சூரியாவின் நடிப்பு மற்றும் பிரமாண்டத்தை நம்பி எடுக்கப்பட்ட படம். படத்தில் சரக்கு இல்லை என்பது முருகதாஸ் அண்ட் கோ விற்கு நன்றாகவே தெரியும். எனவே தான் தமிழ் உணர்வு வியாபாரத்திற்காக புத்திசாலிதனமாக பயன்படுத்த பட்டுள்ளது.

சைக்கிள் ஓட்ட தெரிந்தவனின் குழந்தை பழகாமல் தானும் சைக்கிள் ஓட்ட முடியாது. இந்த சின்ன லாஜிக் கூட இல்லாமல் Genetic  engineering  மூலம் தற்காப்பு கலையையும் மூலிகை மருத்துவ அறிவையும் ஒருவனுக்கு கிடைக்க செய்ய முடியும் என்பது முட்டாள்தனமானது. சரி சினிமா என்றாலே எதார்த்தத்தை எதிர்பார்க்க முடியாது என்றாலும் கஜினி யின் தரத்திற்கு இந்த படம் வரவே முடியாது. நோக்கு வர்மா காட்சிகள் சலிப்பை தான் தந்தது. வலிந்து திணிக்கப்பட்ட தமிழன் வசனங்கள் படத்துடன் ஒட்டவில்லை.
\
எந்திரன் படம் சுஜாதாவின் பக்கபலத்துடன் உருவாக்க பட்டது அதன் பலம். திரை உலகிற்கு சுஜாதாவை ஈடு செய்ய ஒருவர் வரும் வரை அறிவியல் சார்ந்த படங்களை திரையுலகம் தவிர்ப்பது நல்லது.

ஏழாம் அறிவு அடிப்படை அறிவில்லாமல் எடுத்த படம். குப்பை. ஆனந்த விகடனில் அதற்கு அளிக்கப்பட்ட மதிப்பெண் ஒரு தலைபட்சமானது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக