பிரபலமான இடுகைகள்

வியாழன், 24 பிப்ரவரி, 2011

உதவியும் எதிர் பாராத நேரத்தில் வரும்.

ஒரு முறை நான் காரில் வீட்டை விட்டு சில கிலோமீட்டர் தூரம் சென்றதுமே கார் டயர் பன்ச்சர் ஆகி விட்டது. டிக்கியில் கூடுதல் டயர் இருந்தாலும் எனக்கு டயர் மாற்ற தெரியாது. எனவே மாருதி சர்வீஸ்கு செல்பேசியில் தொடர்புகொண்ட பொழுது, வேறு பணியில் இருப்பதால் வருவதற்கு இரண்டு மணி நேரம் ஆகும் என்று தகவல் தெரிவித்தனர். என்ன செய்வது என்று விழித்து கொண்டிருந்தபொழுது, எங்கள் வீட்டுக்கு அருகில் குடியிருக்கும் நண்பர் தன் இருசக்கர வாகனத்தில் வந்தார்.

அருகில் இருக்கும் பஞ்சர் பார்க்கும் கடையில் தகவல் சொல்லிவிட்டு போவதாக சொன்னார். சிறிது நேரம் சென்று பத்து நிமிடங்களில் பழுது பார்ப்பவர் வந்துவிடுவார் என்று தகவல் சொன்னார்.

சில நிமிடங்கள் சென்ற பிறகு ஒரு நபர் சைக்கிளில் வந்தார். நண்பர் சொல்லி வந்திருபரோ என்று நான் நினைத்தேன். ஆனால் வந்த நபரோ தான் அந்த வழியே சென்றதாகவும், திரும்பி வரும் பொழுதும் நான் நின்றுகொண்டிருபதை பார்த்து உதவி செய்ய வந்ததாகவும் தெரிவித்தார்.

பின்னர் என் பதிலை எதிர்பாராமல் கார் டிக்கியில் இருந்த டயரையும் ஜாக்கியையும் எடுத்தார். பின்னர் தரையில் படுத்து ஜாக்கியை பயன்படுத்தி   டயரை மாற்றினார்.

நான் அவரை பற்றி விசாரித்த பொழுது, தான் மீன் பண்ணை வைதிருபதாகவும், தந்தை ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாகவும் சொன்னார். தனக்கு பத்தொன்பது வயது தான் என்றும் அவர் சொன்னார். அருகில் உள்ள கிராமத்தில் தான் மீன் பண்ணை உள்ளதாகவும், தந்தையின் நண்பரின் ஆலோசனை படி மீன் பண்ணை வைத்ததாகவும் சொன்னார். வெறும் கைலியுடன் பார்பதற்கு முரட்டுதனமாக தோன்றிய அவர், டயர் மாற்றியவுடன் தான் கிளம்புவதாக கூறினார். டயர் மாற்றியதற்கு பணம் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். பின்னர் அருகில் இருந்த கடைக்கு சென்று, மிர்ரிண்டா பருகினோம். அவர் சிகரெட் ஒன்றையும் வாங்கி கொண்டார்.

நான் அவரின் செல்பேசி எண்ணை பெற்றுகொண்டேன். காசிராஜன் என்னும் அந்த நபரை ஒரு வாரம் சென்று, மாலை பொழுதில் செல்பேசியில் அழைத்தேன். தான் மீன் பிடித்து கொண்டிருபதாகவும், இரவு வண்டியில் ஏற்றி மார்க்கெட்டுக்கு அனுப்ப போவதாகவும் சொன்னார். மீன் வேண்டும் என்றால் உடனே வந்து பெற்றுக்கொள்ளும் படி சொன்னார்.

நான் தற்பொழுது மீன் தேவையில்லை எனவும், பிறிதொரு நாள் வந்து மீன் பண்ணையை பார்க்க வருவதாகவும் சொன்னேன். இந்த ஞாயிற்றுகிழமை செல்லலாம் என்று உள்ளேன்.

இந்த நிகழ்வு சில படிப்பினைகளை கற்று தந்தது.

1. டயர் மாற்ற உடனே கற்றுக்கொள்ளவேண்டும். மேலும் காரில் ஏற்படும் சின்ன சின்ன பிரச்சனைகளை நாமே சரிசெய்ய  கற்றுக்கொள்ளவேண்டும்.
2. உருவத்தை வைத்து யாரையும் எடைபோடகூடாது.

 கஷ்டம் மட்டும் அல்ல உதவியும் எதிர் பாராத நேரத்தில் எதிர் பாராத
 விதத்தில் வரும். 
                 

வாழ்கை என்னும் பூந்தோட்டம்


வாழ்கை என்னும் பூந்தோட்டம் 

நம் வாழ்கை என்னும் பூந்தோட்டத்தில் என்ன என்ன செடிகளை வைக்கவேண்டும், அதனை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது நாமாக தான் இருக்க வேண்டும். சில சமயம் நம் பக்கத்துக்கு வீட்டுக்காரர், நம் தோட்டத்தை எட்டி பார்த்து, நீ வைத்திருக்கும் சில செடிகள் சரியில்லை என்றும், எப்படி விதைக்கவேண்டும் என்றும், எப்படி நீர் பாய்ச்சவேண்டும் என்றும் என்ன உரங்கள் போட வேண்டும் என்றும் ஆலோசனை சொல்லுவார்.

அதனை கேட்டு நாம் மாற்றங்களை செய்தால் பின்னர் அது நம் தோட்டமாக இருக்காது. பக்கத்து வீடுகாரரின் தோட்டமாக தான் இருக்கும்.

நம் வாழ்கையை முடிவு செய்வது நாமாக தான் இருக்க வேண்டும். பிறர் சொல்லை கேட்டு வாழக்கூடாது. நமக்கு எது நல்லது எது கெடுதல் என்று நாம் தான் யோசனை செய்து முடிவெடுக்க வேண்டும். ஆலோசனை கேட்பது தவறில்லை. முடிவெடுப்பது நாமாக தான் இருக்க வேண்டும். மேலும் நம் வாழ்கை பூந்தோட்டத்தை நம்மால் சரியாக பராமரிக்க முடியாவிட்டால், அடுத்தவரின் தோட்டத்தை எட்டி பார்ப்பதே தவறு 

பாலோ கேல்ஹோ வின் புத்தகத்தில் படித்தது  

புதன், 23 பிப்ரவரி, 2011

பென்சிலும் மனிதனும்

 பென்சிலும் மனிதனும் \

ஒரு பென்சில் தன செயலை சரியாக செய்வதற்கு அதனை இயக்கும் கை உதவியாக இருக்கிறது. அது போல மனிதன் தன செயல்களை சரியாக செய்ய கடவுளின் கை உதவி புரிகிறது.

பென்சிலால் எழுதும் பொழுது அதன் கூர் மழுங்கி சரியாக எழுத முடியாமல் போகும். அப்பொழுது அதனை கூர்மை படுத்தி மீண்டும் எழுதுவோம். அது போல நமக்கு ஏற்படும் துன்பங்களையும் கஷ்டங்களையும் நம்மை கூர்மை படுத்தி கொள்ள வந்தவையாக நினைத்து நம்மை பண்படுத்தி கொள்ள வேண்டும்.

பென்சிலால் எழுதும் பொழுது தவறு ஏற்பட்டால் அழித்து விட்டு மீண்டும் தவறு ஏற்படாமல் எழுதுவோம். அது போல வாழ்கையில் தவறு செய்தால் திருத்திக்கொண்டு மீண்டும் தவறு செய்யாமல் வாழவேண்டும்.

பென்சிலின் வெளியே உள்ள மரத்தை விட உள்ளே இருக்கும் கரி குச்சி தான் முக்கியம். அது போல நம் உள்ளே இருக்கும் ஆற்றல் தான் வாழ்வதற்கு உதவி செய்யும்

பென்சில் தான் எழுதியதற்கான அடையாளத்தை விட்டு செல்லும். நாமும்  நாம்   வாழ்த்தா தடத்தை விட்டு செல்ல வேண்டும் 

பாலோ கேல்ஹோ என்ற எழுத்தாளர் எழுதிய நூலில் படித்த கருத்து  

                         

அழகும் அசிங்கமும்

ஒரு நாள் அழகும் அசிங்கமும் ஒரு குளத்தில் குளிக்க சென்றன. அப்பொழுது இருவருமே தங்களது ஆடைகளை கழற்றி குளத்தின் கரையில் வைத்துவிட்டு குளித்தன. சிறிது  நேரம் கழித்து அசிங்கம் குளித்துவிட்டு குளத்தை விட்டு வெளியில் வந்தது. பின்னர் குளக்கரையில் இருந்த அழகின் ஆடையை எடுத்து அணிந்து கொண்டு இடத்தை விட்டு சென்றுவிட்டது. 

சிறிது நேரம் சென்று அழகும் குளித்து விட்டு வந்தது. கரையில் தன ஆடையை காணமல் திகைத்து. ஆனால் அசிங்கத்தின் ஆடை அங்கு இருப்பதை பார்த்து என்ன நடந்திருக்கும்  என யூகித்து, வேறு வழி இல்லாமல் அசிங்கத்தின் ஆடையை அணிந்து கொண்டு சென்றது

அன்று முதல் நாம் அழ்கை அசிங்கம் என்றும் அசிங்கத்தை அழ்கு என்றும் நினைத்து கொண்டு இருக்கிறோம்.

கஹ்ளில் கிப்ரான் நின் கதை. அழ்கு புற தோற்றத்தில் இல்லை என்பதை உணர்த்தும் கதை.